• Sunrise At: 6:15 AM
  • Sunset At: 5:40 PM

இறுதிப் பேருரையும் அதன் படிப்பினைகளும்

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (3)المائدة

நபி ஸல் அவர்கள் தமக்குப் பின்னால் இந்த  சமுதாயம் வழி தவறி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து மிக மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உபதேசித்தார்கள். குறிப்பாக சகோதரத்துவம், வட்டி, கொலை, குலப்பெருமை, பெண்களின் நலம் நாடுதல், கடன், வாரிசுரிமையின் சட்டங்களைப் பேணுதல், நமபிக்கை மோசடி, அமானிதம், தஜ்ஜால் வருகை ஆகிய பல விஷயங்களைக் குறித்து பேசினார்கள்  அவற்றில் சிலவற்றை விரிவாக காண்போம்.         

ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் உரிமைகளை பேணுவது பற்றி..

عَنْ أَبِي بَكْرَةَ رَض قَالَ خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ قَالَ أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِاسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ ذُو الْحَجَّةِ قُلْنَا بَلَى قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ قَالَ أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الْحَرَامِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ أَلَا هَلْ بَلَّغْتُ قَالُوا نَعَمْ قَالَ اللَّهُمَّ اشْهَدْ فَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ فَلَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ(بخاري- باب الْخُطْبَةِ أَيَّامَ مِنًى-كتاب الحج

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நபி ஸல் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள்.  அப்போது இது என்ன நான் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த ஹஜ்ஜுப் பெருநாளுக்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது (கண்ணியமான) ஹஜ்ஜுப் பெருநாள் அல்லவா என்றார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம்.  பிறகு இது என்ன மாதம் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். அப்போதும் நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த மாதத்திற்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது  (கண்ணியமான) துல்ஹஜ் மாதம் அல்லவா என்றார்கள்.  நாங்கள் ஆம் என்று கூறினோம்.  பிறகு இது என்ன ஊர் தெரியுமா என்று எங்களிடம் கேட்டார்கள். அதை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நன்கு அறிவார்கள் என்று நாங்கள் பதில் கூறினோம். அப்போதும் நபி ஸல் அமைதியாக இருப்பதைப் பார்த்து இந்த ஊருக்கு நபி ஸல் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று மனதில் நினைத்தோம். ஆனால் நபி ஸல் அவர்கள் இது கண்ணியமான ஊர் அல்லவா என்றார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம்.   பின்பு நபி ஸல் அவர்கள் இந்த நாள் எவ்வளவு கண்ணியமானதோ, இந்த மாதம் எவ்வளவு கண்ணியமானதோ, இந்த ஊர் எவ்வளவு கண்ணியமானதோ அதேபோன்று ரப்பை சந்திக்கும் நாள் வரையிலும்  (நீங்கள் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து கொள்ள வேண்டும். )  உங்களுக்கிடையில் ஒருவருடைய உயிரையும் உடைமையையும் மற்றவர் கண்ணியமாக கருத வேண்டும்.  என்று கூறி விட்டு நான் எனக்கு ஏவப்பட்டதை உங்களுக்கு அறிவித்து விட்டேனா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம். அதன் பிறகு யாஅல்லாஹ் நீயே இதற்கு சாட்சி என்று கூறி, இங்கு வந்திருப்பவர் வராதவருக்கு இதை அறிவிக்கட்டும். சில நேரங்களில் இந்த உபதேசத்தை என்னிடம் நேரடியாக கேட்டவரை விட  யாருக்கு இது சொல்லப்பட்டதோ அவர் மிகவும் பேணி நடப்பவராக இருக்கலாம். எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு காஃபிர்களாக ஆகி விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.

وَمَنَاط التَّشْبِيه فِي قَوْله :كَحُرْمَةِ يَوْمكُمْ  وَمَا بَعْده ظُهُوره عِنْد السَّامِعِينَ لِأَنَّ تَحْرِيم الْبَلَد وَالشَّهْر وَالْيَوْم كَانَ ثَابِتًا فِي نُفُوسهمْ مُقَرَّرًا عِنْدهمْ  بِخِلَافِ الْأَنْفُس وَالْأَمْوَال وَالْأَعْرَاض فَكَانُوا فِي الْجَاهِلِيَّة يَسْتَبِيحُونَهَا فَطَرَأَ الشَّرْع عَلَيْهِمْ بِأَنَّ تَحْرِيم دَم الْمُسْلِم وَمَاله وَعِرْضه أَعْظَم مِنْ تَحْرِيم الْبَلَد وَالشَّهْر وَالْيَوْم (فتح الباري)

ஹஜ்ஜுப் பெருநாள், முஹர்ரம் மாதம், மக்கா நகரம் ஆகியவற்றின் கண்ணியமும், உயர்வும் முற்காலத்தில் இருந்தே மக்கள் மனதில் நன்கு பதிந்திருந்தது. ஆனால் அவற்றின் கண்ணியத்தை விளங்கி வைத்திருந்த அளவுக்கு மக்களின் மனதைப் புரியாதவர்களாக அன்றைய மக்கள் இருந்தார்கள். அதனால் தான் நபி ஸல் அவர்கள் அதை ஒப்பிட்டு நபி ஸல்  ஒரு முஃமினின் கண்ணியமும், உயிரும், உடைமையும் இந்த நாளின் கண்ணியத்தை விட உயர்வானது என்றார்கள்.

மனித உயிரின் மதிப்பைப் பற்றி மேலும் விரிவாகப் புரிய வைப்பதற்காக அதே நாளில் நபி ஸல் கூறிய அறிவுரை

وفي رواية لمسلم “قال “أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ كَانَ مُسْتَرْضِعًا فِي بَنِي سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ… (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كِتَاب الْحَجِّ-2334

وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ (أي متروكة لا قصاص ولا دية ولا كفارة) وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ كَانَ مُسْتَرْضِعًا فِى بَنِى سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ (مسلم) فَقَالَ الْمُحَقِّقُونَ وَالْجُمْهُور اِسْم هَذَا الِابْن إِيَاس بْن رَبِيعَة بْن الْحَارِث بْن عَبْد الْمُطَّلِب . قَالُوا : وَكَانَ هَذَا الِابْنُ الْمَقْتُولُ طِفْلًا صَغِيرًا يَحْبُو بَيْن الْبُيُوت ، فَأَصَابَهُ حَجَر فِي حَرْب كَانَتْ بَيْن بَنِي سَعْد وَبَنِي لَيْث بْن بَكْر ، قال الولي العراقي : ظاهره أنها تعمدت قتله (شرح النووي)

(கொலை, வன்முறை எண்ணம், பழிவாங்குதல் போன்ற) அறியாமைக் காலத்தின் அத்தனை மடமைகளையும் என் காலுக்குக் கீழ் அடக்கி விட்டேன்.  அறியாமைக் காலத்தின் பழிவாங்குதலும் என் இரண்டு பாதங்களுக்கு அடியில் நசுக்கப்பட்டு விட்டது முதலாவதாக ரபீஆ இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் உடைய கொலைக்கு பழிவாங்குவதை இல்லாமல் ஆக்கி விட்டேன் இவர் பனூஹுதைல் கோத்திரத்தில் பால்அருந்திக் கொண்டிருந்த குழந்தை…. இவரை ஹுதைல் என்பவர் கொலை செய்தார்.

விளக்கம்- அறியாமைக் காலத்தில் கோபம், பொறாமை போன்ற சிறுசிறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருந்தார்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டால் 10 தலைமுறை கடந்தாலும் கூட அந்த கொலைக்காக பழிவாங்கும் படலம் தொடரந்து கொண்டேயிருக்கும். அத்தகைய வன்முறை எண்ணத்தை முற்றிலுமாக கைவிடும் விதத்தில் நபி ஸல் அவர்கள் பேசினார்கள். பழிவாங்குதல் கிடையாது என்பதை முதலில் தன் குடும்பத்தில் இருந்தே ஆரம்பித்து வைக்கும் விதமாக ரபீஆ இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் உடைய கொலைக்கு பழிவாங்குவதை இல்லாமல் ஆக்கி விட்டேன் என்றார்கள். நபி ஸல் அவர்களின் குடும்பமான ஹாரிஸ் கோத்திரத்தைச் சார்ந்த இவர் பனூஹுதைல் கோத்திரத்தில் உள்ள தாய்மார்களிடம் பால் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்த கோஷ்டி மோதலில் அந்தக் குழந்தை மீது ஒரு கல் பட்டு அக்குழந்தை இறந்து விட்டது. சரியாக கூற்றின் படி  ஹுதைல் என்பவர் வேண்டுமென்றே கல்லை வீசினார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கொலையால் இரு குடும்பத்தாருக்குமிடையே பெரும் பகை நீடித்தது. அதை நபி ஸல் முடித்து வைக்கும் விதமாக என்னுடைய குடும்பத்தைச் சாரந்த அந்தக் குழந்தை கொல்லப்பட்டதை நாங்களே மன்னித்து விடுகிறோம். இனி யாருடைய மனதிலும் அதற்குப் பழி வாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது என்றார்கள்.    

எப்போதோ உள்ள பகையை இப்போதும் மனதில் வைத்துக் கொண்டு சிலர் இருப்பார்கள்

عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ (بخاري) والهجر لا يجوز مطلقاً في الأمور الدنيوية ، أما لأجل الدين فيجوز إذا كان لمصلحة وفيه منفعة وقد هجر النبي صلى الله عليه وسلم الثلاثة الذين خلفوا، وأمر بهجرهم -وقال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَفْكِ دَمِهِ (ابوداود)

மூன்று நாட்களுக்கு ஒரு முஃமின் இன்னொரு முஃமினை வெறு(த்து பேசாமல் இரு)ப்பது கூடாது. குறைந்த பட்சம் இருவரும் சந்தித்து இவரோ அல்லது அவரோ முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அவர்களில் சிறந்தவர் யார் முதலில் ஸலாம் கூறிப் பேச்சைத் துவங்குகிறாரோ அவர் தான் சிறந்தவர்.   அதே நேரத்தில் ஒருவரை தீன் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வெறுத்தால் அது தவறல்ல. போருக்கு வராமல் சிலரிடம் நபி ஸல் அவர்கள் பல நாட்கள் பேசாமல் இருந்துள்ளார்கள்.

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல

أنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري) مُكَافِئِ أي المجازي غيره بمثل فعله

அவர் பேசினால் தான் நானும் பேசுவேன் என்று பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுபவர் அல்ல. மாறாக வெட்டிப்போன உறவுகளையும் வலியச் சென்று மீண்டும் சேர்த்துக் கொள்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

عَنْ حُذَيْفَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)

மக்கள் எனக்கு நல்லது செய்தால் நானும் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தால் நானும் அவர்களுக்கு  கெடுதல் செய்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக நீங்கள் இருக்காதீர்கள். மாறாக உங்களில் உள்ளத்தில் பின்வருமாறு பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் எனக்கு நல்லது செய்தாலும்  நான் அவர்களுக்கு நல்லது செய்வேன். மக்கள் எனக்கு கெடுதல் செய்தாலும் நான் அவர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டேன்.

ஒருவர் நமக்குச் செய்த தீங்கை அவர் திருந்திய பின்பும் நம் மனதில் மறக்காமல் வைத்திருப்பது கூடாது.

وَكَانَ من الَّذِينَ يَتَكَلَّم فِي افك عائشة مِسْطَح  بْن أُثَاثَة فَإِنَّهُ كَانَ اِبْن خَالَة الصِّدِّيق وَكَانَ مِسْكِينًا لَا مَال لَهُ إِلَّا مَا يُنْفِق عَلَيْهِ أَبُو بَكْر رَضِيَ اللَّه عَنْهُ وَكَانَ مِنْ الْمُهَاجِرِينَ فِي سَبِيل اللَّه وَقَدْ زَلِقَ زَلِقَة تَابَ اللَّه عَلَيْهِ مِنْهَا وَضُرِبَ الْحَدّ عَلَيْهَا فَحَلَفَ أَبُو بَكْر أَنْ لَا يَنْفَع مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّه تَعَالَى :وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْل مِنْكُمْ ” يَعْنِي أَبَا بَكْر” وَالسَّعَة أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِين” يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْله ” أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِر اللَّه لَكُمْ وَاَللَّه غَفُور رَحِيم (22النور)فَقَالَ أَبُو بَكْر : بَلَى وَاَللَّه يَا رَبّنَا إِنَّا لَنُحِبّ أَنْ تَغْفِر لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَع (تفسير ابن كثير)

மிஸ்தஹ் என்பவர் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களின் ஏழை உறவினர் ஆவார். அவருக்கு ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வந்தார்கள். அதைத் தவிர வேறு வசதி வாய்ப்பு அவருக்கு இல்லை. இந்நிலையில் ஆயிஷா ரழி உடைய அவதூறு விஷயத்தில் இவரும் சம்பந்தப்பட்டு விட்டார். ஆனால் பிறகு தவ்பா செய்து விட்டார். அதற்காக தண்டனை அவருக்குத் தரப்பட்டு விட்டது. எனினும் அபூபக்கர் ரழி அவர்கள் மனச் சங்கடம் காரணமாக இனிமேல் நான் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் மேற்படி ஆயத்தை இறக்கினான். நீங்கள் ஒரு தவறு செய்த பின் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதை விரும்ப மாட்டீர்களா அதுபோல் நீங்களும் அவரை மன்னித்து விடுங்கள் என்ற ஆயத் இறங்கியவுடன் அவரை மன்னித்து எப்போதும் போல உதவித்தொகை வழங்க ஆரம்பித்தார்கள்

இன்னா செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவர் சொன்னது போல தீமை செய்பவருக்கும் நன்மையே செய்வதால் பகைமை நீங்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ(مسلم)معناه كأنما تطعمهم الرماد الحار

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு ஒரு உறவினர் உள்ளனர். நான் அவர்களுடன் சேர்ந்து வாழ நினைக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை வெட்டி வாழுகின்றனர். நான் அவர்களுக்கு நல்லது செய்தாலும் அவர்கள் எனக்கு கெடுதலே செய்கின்றனர். இந்நிலையில் நான் என்ன செய்யட்டும் என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் நீ செய்வதை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதே அவர்களின் வாயில் சூடான மண்ணைப் போடுவதற்குச் சமம். அதாவது அவர்களை வாயடைப்பதற்குச் சமம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் புறக்கணித்தாலும் நீ அவர்களுடன் பேசுவதே அவர்களின் தவறுக்கு ஒவ்வொரு தடவையும் தண்டனை கொடுத்ததற்குச் சமம். அவ்வாறு நீ செய்வது உனக்குத் தான் நல்லதாக அமையும். அவர்களுக்கு தீமையாகவே அமையும். நீ அவ்வாறு செய்யும் வரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியாளர் உனக்கு இருந்து கொண்டிருப்பார்.        

அடுத்தவர்களின் விஷயத்தில் அவசியமில்லாமல் தலையிடுவதை தவிர்த்தாலே பகைமை உணர்வு குறையும்

عن أَنَس رضي الله عنه قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ إِنِّي لَاحَيْتُ أَبِي فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ قَالَ نَعَمْ قَالَ أَنَسٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي الثَّلَاثَ فَلَمْ يَرَهُ يَقُومُ مِنْ اللَّيْلِ شَيْئًا غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ قَالَ عَبْدُ اللَّهِ غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا فَلَمَّا مَضَتْ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ مِرَارٍ فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ بِهِ فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ قَالَ فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنْ الْمُسْلِمِينَ غِشًّا وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ وَهِيَ الَّتِي لَا نُطِيقُ (احمد)

பெண்களின் நலன் பேணுவது பற்றி இறுதிப்பேருரையில் அறிவுரை

وفي رواية لمسلم  (في خطبة حجة الوداع) …فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ.. (مسلم) بَاب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَكِتَاب الْحَجِّ-2334 قال الزرقاني (بِأَمَانِ اللَّهِ) أي بأن الله ائتمنكم عليهن فيجب حفظ الأمانة وصيانتها بمراعاة حقوقها والقيام بمصالحها الدينية والدنيوية – بِكَلِمَةِ اللَّهِ أي الصيغ التي ينعقد بها النكاح من الإيجاب والقبول (مرعاة)

 பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் அவர்களை உங்களிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளான். (அவர்களின் உலகியல் ரீதியான நலவுகளுக்கும் நீங்கள் வழியமைத்துத் தர வேண்டும். மறுமை சார்ந்த நலவுகளுக்கும் நீங்கள் வழியமைத்துத் தர வேண்டும். அவர்களின் உரிமைகளைப் பேண வேண்டும்.) மேலும் கலிமாவுடன் (இணைந்த ஈஜாப் கபூல் மூலமாக) அந்தப் பெண்களை நீங்கள் அந்தப் பெண்களை கரம் பற்றுகிறீர்கள். உங்கள் மீது அவர்களுக்குள்ள கடமையாகிறது நீங்கள் வெறுக்கும்படியாக அந்நிய ஆண்களுடன் படுக்கையை அவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்களை காயம் படாமல் அடிக்கலாம். அவர்கள் மீது உங்களுக்குள்ள கடமையாகிறது நல்ல முறையில் அவர்களுக்கான உணவு, உடைகளைத் தர வேண்டும்.                    

மனைவியிடம் சில கெட்ட குணங்கள் இருந்தாலும் வேறு சில நல்ல குணங்களைப் பொருந்திக் கொண்டு வாழ்வது

روي أن رجلا جاء إلى [عمر رضى الله عنه ليشكو سوء خلق زوجته فوقف على بابه ينتظر خروجه فسمع هذا الرجل امرأة عمر تستطيل عليه بلسانها وتخاصمه وعمر ساكت لا يرد عليها. فانصرف الرجل راجعا وقال: إن كان هذا حال عمر مع شدته وصلابته وهو أمير المؤمنين فكيف حالي؟ وخرج عمر فرآه موليا عن بابه فناداه وقال: ما حاجتك أيها الرجل؟فقال: يا أمير المؤمنين جئت أشكو إليك سوء خلق امرأتي واستطالتها عَلَيّ فسمعت زوجتك كذلك فرجعت وقلت: إذا كان هذا حال أمير المؤمنين مع زوجته فكيف حالي ؟قال عمر ـ يا أخي اسمع لمواقفهم رضوان الله تعالى عليهم ـ يا أخي إني أحتملها لحقوق لها عليّ إنها لطباخة لطعامي، خبازة لخبزي، غسالة لثيابي، مرضعة لولدي وليس ذلك كله بواجب عليها ويسكن قلبي بها عن الحرام فأنا أحتملها لذلك ، فقال الرجل: يا أمير المؤمنين وكذلك زوجتي قال عمر: فاحتملها يا أخي فإنما هي مدة يسيرة (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا)  (عشرة النساء للنسائي)

 உமர் ரழி அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் ரழி அவர்கள் வெளியே வருவதை எதிர் பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் ரழி அவர்களின் மனைவி உமர் ரழி அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் ரழி அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதையும் கண்டு உமர் ரழி அவர்களின் நிலையே இது என்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரைப் பார்த்து விட்டார்கள். அவரை அழைத்து எதற்காக வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவர் என் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால் இங்கு வந்ததும் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினேன் என்றும் கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் அவரிடம் சகோதரரே நன்றாக நான் சொல்வதைக் கேளுங்கள். மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் அடிப்படையில் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கிறாள். துணி துவைக்கிறாள். என் குழந்தைக்கு பாலூட்டுகிறாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லாமலேயே அவள் செய்கிறாள் இத்தனைக்கும் மேலாக அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது ஹராமான முறையில் அலைபாயாமல் நிலை பெறுகிறது. இத்தனை விஷயங்களுக்காக நான் நான் அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு அந்த மனிதர் என் மனைவியும் அவ்வாறே எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள் எனினும் வாய் அதிகம் என்று கூற அதற்கு உமர் ரழி நீர் சற்று பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் துன்யாவுடைய கொஞ்ச கால வாழ்க்கை தான் என்றார்கள். பிறகு அந்தப் பெண்களின் சில குணங்களை நீங்கள் வெறுத்தாலும் வேறு சில நல்ல குணங்களை வைத்து பொருந்திக் கொள்ள வேண்டும். எனவும் அறிவுரை கூறினார்கள்.                                  

கணவனின் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு கணவனும் தன்னை அழகாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.                                                    

அதற்காக அழகு என்பதை தவறாகப் புரிந்த பெண்களில் யாரேனும் தாடி வைக்க வேண்டாம் என்று சொன்னால் அதை ஏற்கக் கூடாது. தாடியை அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைப்பது நல்லது

قال [ابن عباس]: إني لأتزين لامرأتي كما تتزين لى وما أحب أن أستطف كل حقي الذي لي عليها فتستوجب حقها الذي لها عليَّ لأن الله تعالى يقول: (ولهن مثل الذي عليهن بالمعروف) وقد دخل على الخليفة عمر زوج أشعت أغبر ومعه امرأته وهي تقول: لا أنا ولا هذا لا تريده .. ، فعرف كراهية المرأة لزوجها فأرسل الزوج ليستحم ويأخذ من شعر رأسه ويقلم أظافره فلما حضر أمره أن يتقدم من زوجته فاستغربته ونفرت منه ثم عرفته فقَبِلَتْ به ورجعت عن دعواها رجعت تراجعت إذن عن طلب الطلاق فقال عمر: وهكذا فاصنعوا لهن فوالله إنهن ليحببن أن تتزينوا لهن كما تحبون أن يتزين لكم  (الكتاب : عشرة النساء للنسائي)

இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் எனக்காக என் மனைவி அலங்காரம் செய்வது போன்று நான் என் மனைவிக்காக அலங்கரித்துக் கொள்வதை விரும்புகிறேன். என் மீது மட்டும் அவளுக்குக் கடமைகள் உள்ளது. அவள் மீது எனக்குக் கடமைகள் எதுவும் இல்லை என்பதை நான் விரும்பவில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் அந்தப் பெண்களின் மீது உங்களுக்கும் சில கடமைகள் உள்ளது என்று கூறுகிறான். உமர் ரழி அவர்களிடம் தலைவிரி கேலமாக அழுக்கான ஆடையுடன் ஒருவர் மனைவியுடன் வந்தார். அவரிடமிருந்து அப்பெண் விவாகரத்துக் கேட்கிறார் என்பதையும் எதற்காக விவாகரத்துக் கெட்கிறார் என்பதையும் புரிந்து கொண்ட உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம் முதலில் உன்னை நீ நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு வரும்படியும், அழகான ஆடையை அணிந்து வர வேண்டும் என்றும் தலைமுடியை நன்றாக வாரி வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே செய்தார். அவர் திரும்பி வந்த பின் அவரை மனைவிக்கு முன்னால் வந்து நிற்கச் சொன்னார்கள். அந்த மனைவி அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த பின்பு முதலில் மறுத்தாலும் சற்று நேரத்தில் மனம் மாறி விவாகரத்துக் கேட்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அப்போது தான் உமர் ரழி அவர்கள் அந்தக் கணவரிடம். உங்கள் கண்ணுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது போன்று மனைவியின் கண்ணுக்கு நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் என்று கூறினார்கள்.           

பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்பது அவர்கள் பக்கம் முழுமையாக சாய்ந்து விடக்கூடாது என்பதையும் குறிக்கும்.

பெண்களிடம் ஆலோசனை கேட்கலாம். நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்தலாம். நபி ஸல் அவர்கள் ஹுதைபிய்யா சம்பவத்தின் போது துணைவியார் உம்முஸல்மா ரழி அவர்களின் ஆலோசனைப்படி தலைமுடியை இறக்கியதால் அதுவரை காஃபிர்களுக்கு இவ்வளவு தூரம் நாம் பணிய வேண்டுமா என்ற ஆதங்கத்தில் நபி ஸல் அவர்கள் சொல்லியும் இஹ்ராமைக் களையாமல் இருந்த சஹாபாக்கள், நபி ஸல் அவர்களே இஹ்ராமைக் களைந்ததால் தாங்களும் இஹ்ராமைக் களைந்தார்கள். இதற்குக் காரணம் உம்முஸல்மா ரழி அவர்களின் ஆலோசனை தான். ஆனால் எல்லா முடிவுகளையும் அவர்களிடமே விட்டு விட்டு வெறும் பொம்மை மாதிரி இருந்து விடக்கூடாது.                                                                          

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا (ترمذي

எதுவரை உங்களில் தலைவர்கள் நல்லவர்களாகவும், உங்களில் செல்வந்தர்கள் தர்ம ம் செய்பவர்களாகவும், உங்களின் காரியங்கள் உங்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படுவதாவும் அமையுமோ அதுவரை இந்த பூமியின் மேற்பரப்பு அதன் கீழ்பரப்பை விட நல்லது. நீங்கள் இந்த பூமியில் வாழ்வது ஆனால் எப்போது உங்களில் தலைவர்கள் தீயவர்களாகவும், உங்களில் செல்வந்தர்கள் கஞ்சத்தனம் உள்ளவர்களாகவும், உங்களின் ஆலோசனைகள் பெண்களிடமே ஒப்படைக்கப் படுவதாகவும் ஆகி விடுமோ அப்போது இந்த பூமியின் கீழ்பரப்பு அதன் மேல்பரப்பை விட நல்லது. இந்த பூமியில் வாழ்வது நல்லதல்ல (எனும் அளவுக்கு இந்த பூமிக்கு சுனாமி, கொரோனா போன்ற பல சோதனைகள் வந்து கொண்டேயிருக்கும்.)                        

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ (مسلم)  كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ (فإن أول فتنة بني إسرائيل) يريد قتل النفس التي أُمِر بنو إسرائيل فيها بذبح البقرة واسم المقتول عاميل قتله ابن أخيه أو عمه ليتزوج ابنته أو زوجته وقال في المطامح يحتمل كونه أشار إلى قصة هاروت وماروت لأنهما فتنا بسبب امرأة من بني إسرائيل ، ويحتمل أنه أشار إلى قضية بلعام بن باعوراء لأنه إنما هلك بمطاوعة زوجته وبسببهن هلك كثير من العلماء (فيض القدير)

பனீ இஸ்ராயீல் சமூகத்தில் முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது என்பது பகரா சூராவில் வரும் சம்பவத்தையும் குறிக்கும். தனது மகளை திருமணம் செய்து தராத சித்தப்பாவைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எதிர் கோஷ்டியினர் வசிக்கும் பகுதியில் வீசியதால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இறை உத்தரவுப்படி மாட்டை அறுத்து அதன் வாலை சித்தப்பாவின் கப்ரு மீது அடித்த தில் அவர் எழுந்து என்னைக் கொன்றது என்னுடைய சகோதர ர் மகன் தான் என்று கூறி விட்டு மீண்டும் கப்ருக்குள் சென்றதால் பிரச்சினை ஓய்ந்தது.

முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது பகரா சூராவில் வரும் ஹாரூத் மாரூத் சம்பவத்தையும் குறிக்கும்.

முதல் சோதனை பெண்ணால் ஏற்பட்டது என்பது பல்அம் இப்னு பாஹூராவின் சம்பவத்தையும் குறிக்கும்.

பல்அம் இப்னு பாஹூரா விஷயமாக கூறப்படும் பல்வேறு செய்திகளில் ஒன்று

عَنْ اِبْن عَبَّاس”وَاتْلُ عَلَيْهِمْ نَبَأ الَّذِي آتَيْنَاهُ آيَاتنَا فَانْسَلَخَ مِنْهَا ” قَالَ هُوَ رَجُل أُعْطِيَ ثَلَاث دَعَوَات يُسْتَجَاب لَهُ فِيهِنَّ وَكَانَتْ لَهُ اِمْرَأَة لَهُ مِنْهَا وَلَد فَقَالَتْ اِجْعَلْ لِي مِنْهَا وَاحِدَة قَالَ فَلَك وَاحِدَة فَمَا الَّذِي تُرِيدِينَ ؟ قَالَتْ اُدْعُ اللَّه أَنْ يَجْعَلنِي أَجْمَل اِمْرَأَة فِي بَنِي إِسْرَائِيل فَدَعَا اللَّه فَجَعَلَهَا أَجْمَل اِمْرَأَة فِي بَنِي إِسْرَائِيل فَلَمَّا عَلِمَتْ أَنَّ لَيْسَ فِيهِمْ مِثْلهَا رَغِبَتْ عَنْهُ وَأَرَادَتْ شَيْئًا آخَر فَدَعَا اللَّه أَنْ يَجْعَلهَا كَلْبَة فَصَارَتْ كَلْبَة فَذَهَبَتْ دَعْوَتَانِ فَجَاءَ بَنُوهَا فَقَالُوا لَيْسَ بِنَا عَلَى هَذَا قَرَار قَدْ صَارَتْ أُمّنَا كَلْبَة يُعَيِّرنَا النَّاس بِهَا فَادْعُ اللَّه أَنْ يَرُدّهَا إِلَى الْحَال الَّتِي كَانَتْ عَلَيْهَا فَدَعَا اللَّه فَعَادَتْ كَمَا كَانَتْ وَذَهَبَتْ الدَّعَوَات الثَّلَاث (تفسير ابن كثير

இவருடைய வணக்க வழிபாட்டின் காரணமாக மூன்று பிரத்தியேக துஆக்கள் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன அதன் மூலம் பெரிய கோரிக்கையை அல்லாஹ்விடம் கேட்டிருக்கலாம் ஆனால் இந்த மனிதர் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு அதை வீணாக்கினார் அந்த மனைவியின் மூலமாக இவருக்கு ஆண்மக்கள் இருந்தனர் அதாவது முதலில் அவர் மனைவி அவரிடம் ஒரு துஆவை எனக்காக பயன்படுத்துங்கள் என்று கேட்க, சரி உனக்கு என்ன வேண்டும் கேள் என்று இவர் கூற, பனீ இஸ்ராயீல் சமூகத்தில் மாபெரும் அழகியாக நான் மாற வேண்டும் என்றாள் இவர் துஆ செய்த போது அவ்வாறே மாபெரும் அழகியாக மாறினாள் ஆனால் அழகு வந்தவுடன் இவரை உதாசீனம் செய்து வேறொரு அழகிய ஆண்மகனை நாடி அவள் சென்று விட்டாள் இவருக்கு கோபம் வந்து மற்றொரு 2ம் துஆவைப் பயன்படுத்தி அவளை நாயாக ஆக்கும்படி பிரார்த்திக்க, அவ்வாறே அவள் நாயாக உருமாறினாள் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவளுடைய ஆண்மக்கள் இவரிடம் வந்து தம் தாயை மீண்டும் மனுஷியாக மாற்றும்படி துஆ செய்யக் கூறியபோது அவ்வாறே மூன்றாவது துஆவைப் பயன்படுத்தி பிரார்த்தித்தார் அவள் மனுஷியாக மாறினாள் இவ்வாறு மனைவிக்காகவே மூன்று பிரத்தியேக துஆக்களையும் அவர் வீணாக்கினார்.                 

மனித உரிமை மீறல் தொடர்பான பல்வேறு நபிமொழிகள்

عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ….وَمَنْ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ (بخاري 7042 

எவர் ஒரு சமூகத்தாரின் பேச்சுக்களை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்கிறாரோ மறுமை நாளில் அவருடைய காதில் ஈயத்தை நரக நெருப்பில் காய்ச்சி ஊற்றப்படும்.                                

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *