• Sunrise At: 5:58 AM
  • Sunset At: 6:01 PM
info@ulama.in +91 99414 14275

கொரோனா கற்றுத் தந்த பாடங்கள்

jummah-bayan
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155)البقرة

கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கி இருந்தாலும் பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது

1.மஸ்ஜித்கள் திறக்கப்பட்டிருந்த போது அதன் மதிப்பை உணராத பலர் மஸ்ஜித்கள் பூட்டப்பட்ட நேரத்தில் அதன் மதிப்பை உணர்ந்து மஸ்ஜித் எப்போது திறக்கப்படும் என்று ஏங்கும் நிலை உருவானது                                      

2. மவத் எப்போது வரலாம் என ஆலிம்கள் உரையாற்றினாலும் அதை உள் வாங்காத மக்கள் மவ்த் என்பது அறுபது வயதைக் கடந்து தான் வரும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கொரோனா அந்த எண்ணத்தை மாற்றியுள்ளது     

3. ஆடம்பரமாக திருமணம் நடத்தி பழக்கப்பட்ட எத்தனையோ செல்வந்தர்கள் இந்த லாக்டவுன் நேரத்தில் அவர்கள் விரும்பாமலேயே சுன்னத்தான முறையில் திருமணம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.                         

4. உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் என்ற நபிமொழியின்படி சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவது நல்லது என இருந்தும் உள் வாங்காத மக்கள் தற்போது வேறு வழியின்றி குடும்பத்துடன் வீட்டில் தொழுதனர்.  ஒவ்வொரு வீடுகளும் மஸ்ஜித்களாக மாறின.                                                                

5.கொரோனாவில் இறந்தவருக்கு அருகில் கூட வராமல் சொந்தங்கள் ஒதுங்கி நிற்கும்போது சம்பந்தமில்லாத நல்ல உள்ளங்கள் குறிப்பாக  முஸ்லிம்கள் வைரஸ் பற்றியெல்லாம் கவலைப் படாமல் சேவை உள்ளத்தோடு செயல்பட்டார்கள்.  இவ்விஷயத்தில் அன்றே நம் முன்னோர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளார்கள். வைரஸ் நோய்களால் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகளை கடந்த காலத்தில் இதுபோன்ற வைரஸ் நோய்கள் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்போதெல்லாம் நம் முன்னோர்கள் தன்னலம் பாராமல் சேவை செய்தார்கள். அவர்கள் தான் இன்றைய சேவையாளர்களின் முன்னோடிகள்.  

وفي سنة تسع وستين الطاعون وكان معظم ذلك بالبصرة، وكان ذلك في ثلاثة أيام، فمات في أول يوم من الثلاثة من أهل سبعون ألفا وفي اليوم الثاني منها إحدى وسبعون ألفا وفي اليوم الثالث منها ثلاثة وسبعون ألفا، وأصبح الناس في اليوم الرابع موتي إلا قليل من آحاد الناس حتى ذكر أن أم الامير بها ماتت فلم يوجد لها من يحملها، حتى استأجروا لها أربعة أنفس.(بداية والنهاية

ஹிஜ்ரி 69-ம் ஆண்டு பஸரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகப்பெரும் வைரஸ் நோய் தாக்கியது. அதன் தாக்கம் பஸராவில் அதிகமாக இருந்தது.  முதல் நாளில் மட்டும் 70 ஆயிரம் பேர் இறந்தனர். இரண்டாம் நாளில் 71 ஆயிரம் பேர் இறந்தனர். மூன்றாம் நாளில் 73 ஆயிரம் பேர் இறந்தனர். எந்த அளவுக்கென்றால்  பஸராவின் அமீரும் இந்த நோயில் இறந்து விட அவரை சுமந்து செல்ல ஆளில்லை என்ற நிலை உருவானது.

وقال الحافظ أبو نعيم الاصبهاني: حدثنا عبيد الله ثنا أحمد بن عصام، حدثني معدى، عن رجل، يكنى أبا النفيد، وكان قد أدرك من هذا الطاعون، قال: كنا نطوف بالقبائل وندفن الموتى، فلما كثروا لم نقو على الدفن، فكنا ندخل الدار وقد مات أهلها فنسد بابها عليهم. قال فدخلنا دارا ففتشناها فلم نجد فيها أحدا حيا فسددنا بابها، فلما مضت الطواعين كنا نطوف فنفتح تلك السدد عن الابواب، ففتحنا سدة الباب الذي كنا فتشناه - أو قال الدار التي كنا سددناها - وفتشناها فإذا نحن بغلام في وسط الدار طري دهين، كأنما أخذ ساعتئذ من حجر أمه، قال: فبينما نحن وقوف على الغلام نتعجب منه إذ دخلت كلبة من شق في الحائط فجعلت تلوذ بالغلام والغلام يحبها إليها حتى مص من لبنها، .(بداية والنهاية

அபுன் நுஃபைத் எனப்படும் ஒருவர் அறிவித்துள்ளார்கள்  நாங்கள் அந்த நேரத்தில் மய்யித்துக்களை அடக்கம் செய்வது மட்டுமே அன்றைய நாட்களில் முழு வேலையாக இருந்த து.  ஒவ்வொரு தெருக்களுக்கும் சென்று மய்யித்துகளை அடக்கம் செய்து கொண்டிருந்தோம். எங்களால் அந்த மய்யித்துகளுக்கு சரியாக கஃபன் போட முடியாத அளவுக்கு நிலை உருவானது. ஒரு வீட்டுக்குள் நுழைந்தோம் அங்குள்ளவர்கள் அனைவரும் இறந்து கிடக்க நாங்கள் அந்த வீட்டை அப்படியே மூடி  விட்டோம். இப்படி சில நாட்கள் வரை நேரத்தில் மய்யித்துக்களை அடக்கம் செய்வது மட்டுமே எங்களின் வேலையாக இருந்த து. ஒருவழியாக வைரஸ் நோயின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பிய போது நாங்கள் ஒரு குழந்தை உயிருடன் இருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தோம் அக்குழந்தையைக் காப்பாற்றினோம்.                    

படிப்பினை  அல்லாஹ் இத்தகைய மரணங்களுக்கு மத்தியிலும் பச்சிளம் குழந்தையைக்காப்பற்றியுள்ளான். அல்லாஹ் யாருக்கு இந்த வைரஸ் நோய் மூலம் மரணத்தைத் தர நாடுகிறானோ அவர்கள் தான் இறப்பார்கள் என்பதற்கு இது சான்றாகும். கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த எத்தனையோ பேருக்கு கொரோனா வந்த து. ஆனால் கொரோனாவில் இறநதவர்களை குளிப்பாட்டி கஃபனிட்ட பலருக்கு எந்த நோயும் வரவில்லை. எல்லாம்அல்லாஹ்வின் நாட்டம்.

வைரஸ் நோய்க்கு பயந்து ஊரைக் காலி செய்து வேறு பகுதிக்குச் சென்றவர்களை அல்லாஹ் மவ்த்தாக்கிய சம்பவம்

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ (243) البقرة
عَنْ اِبْن عَبَّاس " أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارهمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْت " قَالَ : كَانُوا أَرْبَعَة آلَاف خَرَجُوا فِرَارًا مِنْ الطَّاعُون قَالُوا : نَأْتِي أَرْضًا لَيْسَ بِهَا مَوْت حَتَّى إِذَا كَانُوا بِمَوْضِعِ كَذَا وَكَذَا قَالَ اللَّه لَهُمْ" مُوتُوا " فَمَاتُوا فَمَرَّ عَلَيْهِمْ نَبِيّ مِنْ الْأَنْبِيَاء فَدَعَا رَبّه أَنْ يُحْيِيَهُمْ فَأَحْيَاهُمْ فَذَلِكَ قَوْله عَزَّ وَجَلَّ " أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارهمْ وَهُمْ أُلُوف حَذَرَ الْمَوْت " الْآيَة ذَكَرَ غَيْر وَاحِد مِنْ السَّلَف أَنَّ هَؤُلَاءِ الْقَوْم كَانُوا أَهْل بَلْدَة فِي زَمَان بَنِي إِسْرَائِيل اِسْتَوْخَمُوا أَرْضهمْ وَأَصَابَهُمْ بِهَا وَبَاء شَدِيد فَخَرَجُوا فِرَارًا مِنْ الْمَوْت هَارِبِينَ إِلَى الْبَرِّيَّة فَنَزَلُوا وَادِيًا أَفْيَح فَمَلَئُوا مَا بَيْن عُدْوَتَيْهِ فَأَرْسَلَ اللَّه إِلَيْهِمْ مَلَكَيْنِ أَحَدهمَا مِنْ أَسْفَل الْوَادِي وَالْآخَر مِنْ أَعْلَاهُ فَصَاحَا بِهِمْ صَيْحَة وَاحِدَة فَمَاتُوا عَنْ آخِرهمْ مَوْتَة رَجُل وَاحِد (تفسير ابن كثير)
قال الحسن : أماتهم الله قبل آجالهم عقوبة لهم ثم بعثهم إلى بقية آجالهم وقيل : إنما فعل ذلك بهم معجزة لنبي من أنبيائهم قيل : كان اسمه شمعون -  قال مجاهد: إنهم لما أحيوا رجعوا إلى قومهم يعرفون أنهم كانوا موتى ولكن سحنة الموت على وجوههم، ولا يلبس أحد منهم ثوبا إلا عاد كفنا حتى ماتوا لآجالهم التي كتبت لهم. (قرطبي)

பனீ இஸ்ராயீல் சந்ததிகளில் 4000 பேர் கொண்ட ஒரு சமூகம் அவர்களின் ஊரில் ஏற்பட்ட காலரா நோயை விட்டும் தப்பிக்க வேறு ஊருக்கு கூட்டமாக இடம் பெயர்ந்தார்கள். அந்த ஊருக்குச் சென்றவுடன் அல்லாஹ் அங்கு வைத்து அவர்களை மொத்தமாக மவ்த்தாக்கினான். மற்றொரு அறிவிப்பில் அவர்கள் ஒரு பள்ளத்தாக்கை அடைந்து அங்கு வசிப்பிட்டத்தை ஆக்கியவுடன் அங்கு இரு மலக்குகளை அல்லாஹ் நியமித்தான். ஒருவர் அந்த பள்ளத்தாக்கின் மேல் பகுதியிலுருந்தும் மற்றொருவர் அதன் கீழ் பகுதியிலிருந்தும் சப்தமிட்டனர். அவ்வாறு சப்தமிட்டவுடன் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். குர்துபீ தஃப்ஸீரில் அவர்கள் தங்களுடைய மவ்த்துக்கான தவணை வரும் முன்பே தண்டனை என்ற அடிப்படையில் இறந்தனர். பிறகு சில காலங்கள் கழித்து அந்த வழியாகச் சென்ற நபி ஷம்ஊன் அலை அந்த மனித்ரகளை மறுபடியும் உயிராக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார். அல்லாஹ் உயிராக்கினான். அந்த நபியின் மூலம் இத்தகைய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டவே அல்லாஹ் அந்த மக்களின் ஆயுட்காலம் முடியும் முன்பே மவ்த்தாக்கி பிறகு எழுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிராக்கப்பட்ட அவர்கள் அவர்களின் உண்மையான ஆயுட்காலம் முடியும் வரை வாழ்ந்தாலும் மவ்த்தின் அடையாளம் அவர்கள் மீது இருக்கும் நிலையில் தான் வாழ்ந்தார்கள். பிண வாடையும் அவர்கள் மீது இலேசாக இருந்தது. அவர்கள் எத்தகைய சிறந்த உடை அணிந்தாலும் அது உடனே கஃபனாக மாறி விடும். – குர்துபீ    

படிப்பினை 6. அது நல்லவர்களையும் தாக்கும் ஆனால் அந்த நல்லவர்களுக்கு அதற்குத் தகுந்த நற்கூலி கிடைக்கும்

உமர் ரழி ஆட்சியில் ஹிஜ்ரி 18 ல் ஏற்பட்ட வைரஸ் நோயால் சஹாபாக்கள் 25 ஆயிரம் பேர் இறந்தார்கள். அவர்கள் மட்டும் இருந்திருந்தால் பாதி உலகத்தை இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்திருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது

وهو طاعون عمواس سنة ثماني عشرة، ومات بسببه جماعات من سادات الصحابة، منهم معاذ بن جبل، وأبو عبيدة، ويزيد بن أبي سفيان، وشرحبيل بن حسنة، وأبو جندل سهل بن عمر وأبوه، والفضل بن العباس بن عبد المطلب، رضي الله عنهم أجمعين –  بداية

உமர் ரழி அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 18 (கி.பி.639) ல் இறை அருள் பெற்ற பிரதேசமான ஷாம் தேச நகரங்கள் மற்றும் ஈராக்கிய நகரங்களிலும் தாவூன் என்ற கொடிய நோய் மக்களை மிகக் கொடூரமாகப் பாதிப்பிற்குள்ளாகி இறந்தார்கள். இந்த நோய் பாலஸ்தீன நகரமான அம்வாஸ் நகரில் ஆரம்பித்ததன் காரணமாக இஸ்லாமிய வரலாற்றில் தாவூன் அம்வாஸ் என இந்நோய் அழைக்கப்படுகின்றது.இந்த நோய் பாலஸ்தீன அம்வாஸ் மண்ணில் தொடங்கி எகிப்து, சிரியா, கூஃபா, பஸரா எனப் பல பகுதிகளிலூம் அசுர வேகத்தில் பரவி, சுமார் 27 ஆயிரம் முஸ்லிம்களின் உயிர் போகக் காரணமாக இருந்தது.ஒரு சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின் படி மூன்று தினங்களில் மாத்திரம் எழுபதாயிரம் பேர் மரணித்தனர் என்றும்; அவர்களில் முஸ்லிம்கள்தாம் 27ஏழாயிரம் பேர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுகின்றது.இதில் சிறந்த நபித்தோழர்கள் எனப் போற்றப்பட்ட அபூஉபைதா, பிலால் பின் ரபாஹ், மூஆத் பின் ஜபல், யஸீத் பின் அபீ சுஃப்யான் (ரழி), மற்றும் பல முக்கிய நபித்தோழர்கள், தாபியீன்கள் பலர் ஷஹீத்களாக மரணித்தார்கள்.அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரழி) அவர்களின் மக்கள் நாற்பது பேரும், அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் பிள்ளைகள் என்பது பேரும் இந்த தாஊனில் மரணமானார்கள் என இஸ்லாமிய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. தினமும் ஆயிரம் ஜனாஸாக்கள் வரை தொழுகை நடத்தப்பட்டதாவும் கூறப்பட்டுள்ளது.

الموسوعة التاريخية  الدرر السنية

அனஸ் ரழி  அவர்களுக்கு அல்லாஹ் நபி ஸல் துஆ செய்த தால் அவர்களின் பொருளாதாரத்திலும் சந்த தியிலும் அல்லாஹ் பரக்கத் செய்தான். சுமார் 100 வருடங்களுக்கு மேல் வாழ்ந்த அனஸ் ரழி அவர்களுக்கு பிற்காலத்தில் நிறைய செல்வங்கள் இருந்தன. நிறைய வாரிசுகள் இருந்தனர் அவர்களில் 80 பேர் இந்த நோயில் இறந்தனர்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ-بخاري

عَنْ أَبِي قِلَابَةَ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَنَا أَيَّتُهَا الْأُمَّةُ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ-بخاري

படிப்பினை- 7. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றாலும்  தற்காப்பு செய்வதும் தவறல்ல.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் வைரஸ் நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவக்குல் எனும் இறை நம்பிக்கைக்கு முரணாக ஒருபோதும் ஆகாது. அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்றாலும் அல்லாஹ் சில விதிகளுக்கு சில காரணங்களை வைத்துள்ளான். உதாரணமாக விஷம் குடித்தால் இறந்து விடுவோம் என்பது அல்லாஹ்வின் விதியாகும். அவ்வாறிருக்க ஒருவன் விஷம் குடித்தான்.  அதனால் இறந்து போனான். இச்சமயத்தில் அல்லாஹ் தானே இவனின் உயிரைக் கைப்பற்றினான் இந்த மனிதன் மீது என்ன தவறு இருக்கிறது என்ற வாதம் நியாயமல்ல. விஷம் குடித்தால் இறந்து விடுவான் என்று அல்லாஹ்வின் நியதி இருக்கும்போது அந்த விதியை நோக்கி இவனாகச் சென்றது இவன் மீதுள்ள தவறாகும். அதுபோல வைரஸ் நோய் என்பது பரவக்கூடியது தான். ஆனால் அல்லாஹ்வின் விதி  அடிப்படையில் தான் பரவும். அந்த விதியை நோக்கி நாமே செல்வது கூடாது. எனவே தான் நபி ஸல் அவர்கள் வைரஸ் நோய் பரவியுள்ள ஒரு ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றார்கள்.

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رض قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذَا الْوَبَاءَ رِجْزٌ أَهْلَكَ اللَّهُ بِهِ الْأُمَمَ قَبْلَكُمْ وَقَدْ بَقِيَ مِنْهُ فِي الْأَرْضِ شَيْءٌ يَجِيءُ أَحْيَانًا وَيَذْهَبُ أَحْيَانًا فَإِذَا وَقَعَ بِأَرْضٍ فَلَا تَخْرُجُوا مِنْهَا وَإِذَا سَمِعْتُمْ بِهِ فِي أَرْضٍ فَلَا تَأْتُوهَا(أحمد) حَدِيثُ أُسَامَةَ بْنِ زَيْدٍ

முதன் முதலில் பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஏற்பட்ட பாவத்துக்க்காக இந்த நோய் இறக்கப்பட்டது

அது என்ன பாவம் என்பதை இப்னு கஸீரில் கூறப்பட்ட பின்வரும் சம்பவம் விபரிக்கிறது

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأ الَّذِي آتَيْنَاهُ آيَاتنَا “(الاعراف 175 فَحَدَّثَ عَنْ سَيَّار أَنَّهُ كَانَ رَجُلًا يُقَال لَهُ بَلْعَام وَكَانَ مُجَاب الدَّعْوَة قَالَ وَإِنَّ مُوسَى أَقْبَلَ فِي بَنِي إِسْرَائِيل يُرِيد الْأَرْض الَّتِي فِيهَا بَلْعَام أَوْ قَالَ الشَّام قَالَ فَرُعِبَ النَّاس مِنْهُ رُعْبًا شَدِيدًا فَأَتَوْا بَلْعَام فَقَالُوا اُدْعُ اللَّه عَلَى هَذَا الرَّجُل وَجَيْشه قَالَ حَتَّى أُؤَامِر رَبِّي أَوْ حَتَّى أُؤَامَر قَالَ فَآمَرَ فِي الدُّعَاء عَلَيْهِمْ فَقِيلَ لَهُ لَا تَدْعُ عَلَيْهِمْ فَإِنَّهُمْ عِبَادِي وَفِيهِمْ نَبِيّهمْ قَالَ فَقَالَ لِقَوْمِهِ إِنِّي قَدْ آمَرْت رَبِّي فِي الدُّعَاء عَلَيْهِمْ وَإِنِّي قَدْ نُهِيت فَأَهْدَوْا لَهُ هَدِيَّة فَقَبِلَهَا ثُمَّ رَاجَعُوهُ فَقَالُوا اُدْعُ عَلَيْهِمْ فَقَالَ حَتَّى أُؤَامِر رَبِّي فَآمَرَ فَلَمْ يَأْمُرهُ بِشَيْءٍ فَقَالَ قَدْ وَامَرْت فَلَمْ يَأْمُرنِي بِشَيْءٍ فَقَالُوا لَوْ كَرِهَ رَبّك أَنْ تَدْعُو عَلَيْهِمْ لَنَهَاك كَمَا نَهَاك الْمَرَّة الْأُولَى قَالَ فَأَخَذَ يَدْعُو عَلَيْهِمْ فَإِذَا دَعَا عَلَيْهِمْ جَرَى عَلَى لِسَانه الدُّعَاء عَلَى قَوْمه وَإِذَا أَرَادَ أَنْ يَدْعُو أَنْ يَفْتَح لِقَوْمِهِ دَعَا أَنْ يَفْتَح لِمُوسَى وَجَيْشه أَوْ نَحْوًا مِنْ ذَلِكَ إِنْ شَاءَ اللَّه قَالَ فَقَالُوا مَا نَرَاك تَدْعُو إِلَّا عَلَيْنَا قَالَ مَا يَجْرِي عَلَى لِسَانِي إِلَّا هَكَذَا وَلَوْ دَعَوْت عَلَيْهِ أَيْضًا مَا اُسْتُجِيبَ لِي وَلَكِنْ سَأَدُلُّكُمْ عَلَى أَمْر عَسَى أَنْ يَكُون فِيهِ هَلَاكهمْ إِنَّ اللَّه يُبْغِض الزِّنَا وَإِنَّهُمْ إِنْ وَقَعُوا فِي الزِّنَا هَلَكُوا وَرَجَوْت أَنْ يُهْلِكهُمْ اللَّه فَأَخْرِجُوا النِّسَاء تَسْتَقْبِلهُمْ فَإِنَّهُمْ قَوْم مُسَافِرُونَ فَعَسَى أَنْ يَزْنُوا فَيَهْلِكُوا قَالَ فَفَعَلُوا فَأَخْرَجُوا النِّسَاء تَسْتَقْبِلهُمْ قَالَ وَكَانَ لِلْمَلِكِ اِبْنَة فَذَكَرَ مِنْ عِظَمهَا مَا اللَّه أَعْلَم بِهِ قَالَ فَقَالَ أَبُوهَا أَوْ بَلْعَام لَا تُمَكِّنِي نَفْسك إِلَّا مِنْ مُوسَى قَالَ وَوَقَعُوا فِي الزِّنَا قَالَ فَأَتَاهَا رَأْس سِبْط مِنْ أَسْبَاط بَنِي إِسْرَائِيل فَأَرَادَهَا عَلَى نَفْسهَا فَقَالَتْ مَا أَنَا بِمُمَكِّنَةٍ نَفْسِي إِلَّا مِنْ مُوسَى فَقَالَ إِنَّ مَنْزِلَتِي كَذَا وَكَذَا وَإِنَّ مِنْ حَالِي كَذَا وَكَذَا فَأَرْسَلَتْ إِلَى أَبِيهَا تَسْتَأْمِرهُ قَالَ فَقَالَ لَهَا مَكِّنِيهِ قَالَ وَيَأْتِيهِمَا رَجُل مِنْ بَنِي هَارُون وَمَعَهُ الرُّمْح فَيَطْعَنهُمَا قَالَ وَأَيَّدَهُ اللَّه بِقُوَّةٍ فَانْتَظَمَهُمَا جَمِيعًا وَرَفَعَهُمَا عَلَى رُمْحه فَرَآهُمَا النَّاس – أَوْ كَمَا حَدَّثَ – قَالَ وَسَلَّطَ اللَّه عَلَيْهِمْ الطَّاعُون فَمَاتَ مِنْهُمْ سَبْعُونَ أَلْفًا . (تفسير ابن كثير

சுருக்கம்- பல்ஆம் இப்னு பாஊரா என்பவர் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் இருந்தார். மூஸா அலை அவர்களைப் பிடிக்காத ஒரு பனீ இஸ்ராயீலில் ஒரு சமூகம் மூஸா நபிக்கு எதிராக  துஆ செய்ய பல்ஆம் இப்னு பாஊராவிடம் கேட்டனர். முதலில் மறுத்த அவர் பின்பு பணத்துக்கு ஆசைப்பட்டு மூஸா அலை அவர்களுக்கு எதிராக துஆச் செய்யத் துணிந்தார். ஆனால் அவரது நாவு அவனது எண்ணத்துக்கு ஒத்துழைக்கவில்லை. மூஸா அலை அவர்களுக்கு துஆ செய்ய வேண்டிய நாவு அவ்வாறு துஆ செய்யச் சொன்ன அந்த சமூகத்திற்கு எதிராக துஆ செய்தது. இறுதியில் பல்ஆம் பல்ஆம் ஒரு ஆலோசனை சொன்னார். மூஸா அலை அவர்களின் மீது அல்லாஹ் கோப ப்பட வேண்டுமானால் அவரது படை வீர ர்களிடம் உங்களுடைய சமுதாயப் பெண்கள் மூலம் ஆசை காட்டி விபச்சாரம் செய்ய வையுங்கள். அந்த தவறை செய்தால் அவர்கள் மீது தண்டனை இறங்கி விடும் என்று கூற, அவ்வாறே செய்ய அவர்கள் முற்பட்டனர். அவர்களுடைய பெண்களை அலங்கரித்தனர். அவர்களில் அரசனின் மகளும் இந்த இழி செயலை செய்யத் துணிந்தாள். அவள் சபதம் செய்தாள் நான் மூஸா வை என் வலையில் விழச் செய்வேன் என்று கூறியவளாக பனீ இஸ்ராயில் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அப்போது அவர்களில் ஒருவர் அவளது அழகில் மயங்கி தன்னோடு இணங்கக் கூறியபோது அவள் நான் முதலில் மூஸாவை நான் வீழ்த்துவேன் என்றாள். ஆனால் அந்த நபர் நானும் இக்கூட்டத்தில் பெரிய மனிதன் தான் என்று கூறினார். பிறகு ஒருவழியாக அவருடன் அவள் அந்த இழி செயலில் ஈடுபட்ட போது ஹாரூன் அலை அவர்களின் குடும்பத்தில் ஒருவர் ஈட்டியுடன் வந்து அவ்விருவரையும் குத்தி விட்டார்.  அதை மக்கள் பார்க்கும்படியும் வைத்தார். இறுதியில் அல்லாஹ் இத்தகைய இழி செயலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் அவர்களின் கூட்டத்தினர் மீது தொற்று நோயை அனுப்பினான். சுமார் 70,000 பேர் இறந்தார்கள்.         

19 Dhul-Qi’dah 1442

02-07-2021


								

Lorem Ipsum

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *