செல்வம் என்பது செல்வந்தர்களுக்கு மத்தியில் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது என இஸ்லாம்…
مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ (7) الحشر
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى الْيَمَنِ فَقَالَ ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدْ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ .(بخاري
முஆத்ரழி அவர்களை நபி ஸல் யமனுக்கு ஆளுனராக அனுப்பியபோது பல அறிவுரைகள் கூறி அனுப்பினார்கள். அவற்றில் முக்கியமானது நீர் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும் அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் மீது ஐந்து நேர தொழுகை கடமை என்பதை அறிவிக்க வேண்டும். அதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் மீது ஜகாத் கடமை என்பதை அறிவிக்க வேண்டும். அந்த ஜகாத் என்பது செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை அறிவிக்க வேண்டும்.
நபியின் உத்தரவை சரியாக செயல்படுத்தியதால் விரைவில் அந்த நாட்டில் வறுமை ஒழிந்தது
عن عمرو بن شعيب: أن معاذ بن جبل لم يزل بالجند – إذ بعثه رسول الله صلى الله عليه وسلم – حتى مات النبي صلى الله عليه وسلم ثم قدم على عمر، فرده على ما كان عليه، فبعث إليه بثلث صدقة الناس، فأنكر ذلك عمر، وقال: لم أبعثك جابيا ولا آخذ جزية، ولكن بعثتك لتأخذ من أغنياء الناس، فترد على فقرائهم، فقال معاذ: ما بعثت اليك بشئ وأنا أجد أحدا يأخذه مني. فلما كان العام الثاني بعث إليه بشطر الصدقة، فتراجعا بمثل ذلك، فلما كان العام الثالث بعث إليه بها كلها، فراجعه عمر بمثل ما راجعه، فقال معاذ: ما وجدت أحدا يأخذ مني شيئا. رواه أبو عبيد. (فقه السنة) (المغني)
கருத்து- முஆத் ரளி அவர்கள் படை வீரராக இருந்தாலும் அவர்களை நபி ஸல் அவர்கள் யமன் நாட்டின் ஆளுனராக அனுப்பினார்கள். நபி ஸல் அவர்கள் மறைந்த பின் முஆத் ரளி அவர்கள் திரும்பி வந்த போது உமர் ரழி அவர்கள் மீண்டும்அதே பொறுப்புக்கே முஆத் ரழி அவர்களை திருப்பி அனுப்பினார்கள். (காரணம் இவரை ஆளுனராக நபி ஸல் அவர்கள் அனுப்பியதிலிருந்து மிக சிறப்பாக தன் பொறுப்பை முஆத் ரழி நிறைவேற்றினார்கள். ஜகாத்தை வசூலிப்பதில், வினியோகிப்பதில் நபி ஸல் இருக்கும் வரையிலும், பின்பு அபூபக்கர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலும், பின்பு உமர்ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டார்கள். ஒரு முறை யமன் நாட்டிலிருந்து ஜகாத் தொகையின் மூன்றில் ஒரு பகுதியை உமர் ரளி அவர்களுக்கு அதாவது மத்திய அரசுக்கு அனுப்புகிறார்கள். உமர் ரளி அவர்கள் அதை வாங்க மறுத்து நான் உங்களை ஜகாத், ஜிஸ்யா வசூலித்து இங்கு அனுப்பச் சொல்லவில்லை. அங்குள்ள ஏழை மக்களிடம் விநியோகம் செய்யவே கூறினேன் என்றார்கள். அதற்கு முஆத் (ரளி) அவர்கள் இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்தது போக மீதியைத் தான் அனுப்பினேன் என்றார்கள். அடுத்த ஆண்டு முஆத் (ரளி) அவர்கள் யமனில் வசூலான ஜகாத்தில் பாதியை உமர் ரளி அவர்களுக்கு அனுப்புகிறார்கள். மீண்டும் உமர் ரளி ஆட்சேபிக்க, முஆத் ரளி அவர்கள் முன்பு சொன்ன பதிலையே இப்போதும் கூறினார்கள். மூன்றாவது ஆண்டிலோ யமனில் வசூலான ஜகாத் முழுவதையும் உமர் ரளி அவர்களுக்கு அனுப்புகிறார்கள். இம்முறை உமர் ரளி ஆட்சேபித்த போது முஆத் ரளி அவர்கள் எழுதிய பதில் – இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் எவரும் இல்லை.
முறையாக ஜகாத் கொடுத்து விட்டால் அவருடைய மீதமுள்ள சொத்துக்கள் பாதுகாக்கப்படும்
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (103)التوبة
قال رسول الله صلى الله عليه وسلم ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة (طبراني)
கடலிலும் கரையிலும் பொருளாதார சரிவுகள் நஷ்டங்கள் ஏற்படக் காரணம் ஜகாத்தை தடுத்து வைத்துக் கொள்வது தான். (கடலில் நஷ்டம் என்பது கப்பலில் கொண்டு செல்லப்படும் சரக்குகள் நஷ்டத்திற்கு உள்ளாவதையும் குறிக்கும்.மொத்தத்தில் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமே ஜகாத் முறையாக கொடுக்கப்படாதது தான்)
ஜகாத் எதில் கலக்குமோ அதை அழிக்காமல் விடுவதில்லை
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما خالطت الصدقة أو قال:الزكاة مالا إلا أفسدته رواه البزار والبيهقي-وهذا الحديث يحتمل معنيين:أحدهما أن الصدقة ما تركت في مال ولم تخرج منه إلا أهلكته، ويشهد لهذا حديث عمر المتقدم:ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة والثاني: أن الرجل يأخذ الزكاة وهو غني عنها فيضعها مع ماله فتهلكه، وبهذا فسره الإمام أحمد
இதற்கு இரு பொருள்கள் உண்டு. 1.தர வேண்டிய ஜகாத்தை தராமல் தடுத்தால் இந்த தண்டனை 2. ஜகாத் வாங்கத் தகுதியில்லாமல் ஒருவர் வாங்கினால் அது அவருடைய மீதமுள்ள சொத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்
யார் ஜகாத் தராமல் கஞ்சத்தனம் செய்கிறாரோ, யாருக்கும் தராமல் சேமித்து வைக்கிறாரோ அதை நல்லது என எண்ணிக் கொள்ள வேண்டாம். மாறாக அது அவரின் கழுத்தைச் சுற்றும் தீமையாகும்
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ (180)ال عمران
கஞ்சத்தனத்தை விட்டும் தொழுகையிலேயே நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு கேட்டுள்ளார்கள்
عن أَنَس كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ(بخاري
கஞ்சனுக்கு தினமும் மலக்குகளின் சாபம் உண்டு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَيَقُولُ الْآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا (بخاري)كتاب الزكاة
கஞ்சன் வணக்கசாலியாக இருந்தாலும் ஷைத்தானுக்கு மிக நெருங்கிய நண்பன்.
أن يحيى بن زكريا عليهما السلام لقي إبليس في صورته فقال له : يا إبليس أخبرني بأحب الناس إليك وأبغض الناس إليك فقال : أحب الناس إلي المؤمن البخيل وأبغضهم إلي الفاسق السخي قال يحيى : وكيف ذلك؟ قال : لأن البخيل قد كفاني بخله والفاسق السخي أتخوف أن يطلع الله عليه في سخاه فيقبله ثم ولى وهو يقول : لولا أنك يحيى لم أخبرك حكايات البخلاء (روح البيان
ஒரு முறை யஹ்யா (அலை) அவர்கள் இப்லீஸை சந்தித்து மனிதர்களில் உனக்குப் பிரியமானவர்கள் யார்? என்று கேட்க, அதற்கு இப்லீஸ் வணக்கசாலியாக இருந்தும் கஞ்சனாக இருக்கிறானே அவனைத் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். பாவியாக இருந்தும் வாரி வழங்குபவனாக இருக்கிறானே அவனை எனக்கு அறவே பிடிக்காது என்று கூறினான். அதற்கான காரணதை யஹ்யா அலை கேட்டபோது கஞ்சனை வழி கெடுக்க அவனுடைய கஞ்சத்தனமே எனக்குப் போதும். அதை வைத்தே அவனுடைய வணக்கங்களை வெகு சீக்கிரம் இல்லாமல் ஆக்கி விடுவேன். ஆனால் தர்மம் செய்பவன் விஷயத்தில் எப்போதும் எனக்கு அச்சம் உண்டு. ஏனெனில் அவனது தர்ம சிந்தனையால் எப்போது வேண்டுமானாலும் அவன் மனதை அல்லாஹ் மாற்றி திருந்த வைத்து விடலாம் என்றானாம்
கஞ்சன் கொடுக்கும் விருந்தை சாப்பிட்டால் வயிற்றுக்கு கெடுதி ஏற்படும் என எச்சரித்த நபி ஸல்
عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طعام البخيل داء وطعام السخي شفاء (جامع الصغير) شرح:طعام البخيل داء :لكونه يطعم الضيف مع ثقل وتفجر وعدم طيب نفس ولهذا قال الخواص : إنه يظلم القلب فينبغي الإجابة إلى طعام السخي دون البخيل
விளக்கம்- தர்மசாலியின் விருந்து நோய் நிவாரணம். ஆனால் கஞ்சனின் விருந்து வயிற்றுக்குக் கெடுதியை உண்டாக்கலாம். காரணம் அவன் மனம் விரும்பி விருந்து தர மாட்டான். அதையும் தாண்டி அவன் தருகிறான் என்றால் அது பெருமைக்காக இருக்கலாம். அவன் மனம் விரும்பாமல் தருவது உணவிலும் எதிரொலிக்கும்.
الزكاة هي فريضة محكمة وركن من أركان الإسلام الخمسة و فرضها الله في السنة الثانية من الهجرة على الأغنياء للفقراء (نور الايضاح)
ஜகாத்தின் சட்டங்கள் – 1. எந்தெந்த பொருட்களில் ஜகாத் கடமையாகும்
تجب الزكاة في الأجناس الآتية وهي1 السوائم(هي الإبل والبقر والغنم) 2 الذهب والفضة 3 عروض التجارة 4 الزروع والثمار 5 المعدن والركاز
குறிப்பு – தங்கம் 871/2 கிராம் இருந்தால் ஜகாத் கடமையாகும். வெள்ளி 6121/2 கிராம் இருந்தால் ஜகாத் கடமையாகும். வியாபார பொருட்களில் வெள்ளியின் அளவை கணக்கிட்டு 6121/2 கிராம் வெள்ளி அளவுக்கு இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும்.
شروط وجوبها الإسلام والبلوغ والعقل والحرية وملك نصاب حولي فارغ عن الدين وحاجته الأصلية نام ولو تقديرا وَالْحَاجَةُ الْأَصْلِيَّةُ كَثِيَابِ الْبَدَنِ وَأَثَاثِ الْمَنْزِلِ وَدَوَابِّ الرُّكُوبِ وَعَبِيدِ الْخِدْمَةِ وَكُتُبِ الْعِلْمِ لِأَهْلِهِ وَآلَاتِ الْمُحْتَرِفِينَ (فلا تجب فيها الزكاة)
வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகள், கார்கள் பாத்திரங்கள், கடைகள் எத்தனை இருந்தாலும் அவைகள் மீது ஜகாத் கடமையாகாது. அவற்றின் மூலம் பெறப்படும் வருமானங்களின் மீது ஜகாத் கடமையாகும். ஒருவர் காலி மனையை வாங்கி அதை விற்கும் நோக்கத்தில் வைத்திருந்தால் அது விற்பனைப் பொருளாக கருதப்படும். அதில் ஜகாத் கடமையாகும். வீடு கட்டும் நோக்கத்தில் வைத்திருந்தால் அதில் ஜகாத் கடமையாகாது
ஜகாத் கடமையாகுவதற்குரிய நிபந்தனைகள்- குறைந்த பட்ச நிஸாபுக்கு ஒரு வருடம் பூர்த்தி…
شروط وجوب ادائها: حولان الحول القمري على النصاب الأصلي بحيث يوجد في طرفي الحول ولونقص في وسطه لحديث ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال:لا زكاة في مال حتى يحول عليه الحول (ترمذي)
ஜகாத் நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகள்
ويشترط لصحة أداء الزكاة أحد ثلاثة أمور 1 نية مقارنة للأداء 2 أو نية مصاحبة لعزل المقدار الواجب 3 أو التصدق بجميع ماله ولو من غير نية الزكاة ولا يشترط أن يعلم الفقير أنها زكاة على الأصح حتى لو أعطاه شيئا وسماه هبة أو قرضا ونوى به الزكاة صحت
1.கொடுக்கும்போதே நிய்யத் 2.அல்லது ஒதுக்கி வைக்கும்போது நிய்யத் 3.சொத்து முழுவதையும் தர்மம் செய்து விட்டால் நிய்யத் இல்லாமலும் ஜகாத் நிறைவேறும். நாம் யாருக்குத் தருகிறோமோ அவருக்கு அது ஜகாத் என்று தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
ஜகாத் யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றி…
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ التوبة: 60
عَنْ زِيَاد بْن الْحَارِث الصُّدَائِيّ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : أَتَيْت النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْته فَأَتَى رَجُل فَقَالَ أَعْطِنِي مِنْ الصَّدَقَة فَقَالَ لَهُ إِنَّ اللَّه لَمْ يَرْضَ بِحُكْمِ نَبِيّ وَلَا غَيْره فِي الصَّدَقَات حَتَّى حَكَمَ فِيهَا هُوَ فَجَزَّأَهَا ثَمَانِيَة أَصْنَاف فَإِنْ كُنْت مِنْ تِلْكَ الْأَجْزَاء أَعْطَيْتُك(ابوداود)
கருத்து-ஜய்யாத் என்பவர் நபி ஸல் அவர்களிடம் வந்து ஜகாத் கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் அல்லாஹ் யார் யாருக்கு என விதித்துள்ளான். அதில் நபியாக இருந்தாலும் மாற்றம் செய்வதை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். நீ ஜகாத்துக்கு தகுதி உள்ளராக இருந்தால் மட்டுமே தருவேன் என்றார்கள்.
لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ: عَنْ اِبْن عَبَّاس وَمُجَاهِد وَالْحَسَن الْبَصْرِيّ وَابْن زَيْد وَاخْتَارَ اِبْن جَرِير وَغَيْر وَاحِد أَنَّ الْفَقِير هُوَ الْمُتَعَفِّف الَّذِي لَا يَسْأَل النَّاس شَيْئًا وَالْمِسْكِين هُوَ الَّذِي يَسْأَل وَيَطُوف وَيَتْبَع النَّاس (تفسير ابن كثير)
ஃபகீர், மிஸ்கீன் வேறுபாடு விஷயமாக பல கருத்துக்கள் உள்ளன. இதில் உள்ளபடி ஃபகீர் என்பவர் யாசகம் கேட்கும் பழக்கம் இல்லாதவர், மிஸ்கீன் ஃபகீர் என்பவர் யாசகம் கேட்கும் பழக்கம் உள்ளவர். இருவருக்கும் தரலாம் என்பது கருத்து
وَالْعَامِلِينَ عَلَيْهَا: وهم الذين يُنَصِّبهم ولاة الأمور لجباية الزكاة من أهلها وحفظها وتصريفها فيُعْطَوْن منها بقدر عملهم وإن كانوا أغنياء
குறிப்பு-மதரஸா, மற்றும் பள்ளி வாசலுக்காக வசூல் செய்பவர்கள் ஆமில் என்ற வகையில் சேர மாட்டார்கள்
وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ:من يُرْجى إسلامهم وحسن حالهم إذا أعطوا من المال أو من كان جديد الدخول بالإسلام وفي إسلامه شيء ويرجى حسن حاله بإعطائه இந்தப் பிரிவினர் இப்போது கிடையாது என்பது பல இமாம்களின் கூற்றாகும்
وَفِي الرِّقَابِ :وهم الْأَرِقَّاء المكاتَبون الذين اشتروا أنفسهم من أسيادهم فيعطون من الزكاة ما يوفون به أسيادهم ليحرِّروا بذلك أنفسهم وَالْغَارِمِينَ:الذين يتحملون غرامة وهم نوعان أحدهما من تحمل حمالة لإصلاح ذات البين وإطفاء الفتنة فيعطى من الزكاة بقدر حمالته تشجيعا له على هذا العمل النبيل الذي به تأليف المسلمين وإصلاح ذات بينهم وإطفاء الفتنة عَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلَالِيِّ قَالَ تَحَمَّلْتُ حَمَالَةً فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْأَلُهُ فِيهَا فَقَالَ أَقِمْ حَتَّى تَأْتِيَنَا الصَّدَقَةُ فَنَأْمُرَ لَكَ بِهَا قَالَ ثُمَّ قَالَ يَا قَبِيصَةُ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِأَحَدِ ثَلَاثَةٍ رَجُلٍ تَحَمَّلَ حَمَالَةً فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا ثُمَّ يُمْسِكُ وَرَجُلٌ أَصَابَتْهُ جَائِحَةٌ اجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ وَرَجُلٌ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُومَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ لَقَدْ أَصَابَتْ فُلَانًا فَاقَةٌ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ فَمَا سِوَاهُنَّ مِنْ الْمَسْأَلَةِ يَا قَبِيصَةُ سُحْتًا يَأْكُلُهَا صَاحِبُهَا سُحْتًا(مسلم)
الثاني : من تحمل حمالة في ذمته لنفسه وليس عنده وفاء فيُعْطَى من الزكاة ما يُوَفِّي به دينه وإن كثر وفي سبيل الله: وهو الجهاد في سبيل الله الذي يُقْصَد به أن تكون كلمة الله هي العليا لا لحمية ولا لعصبية فيُعْطَى المجاهد بهذه النية ما يكفيه لجهاده من الزكاة أو يُشْتَرَى بها سلاح وعتاد للمجاهدين في سبيل الله لحماية الإسلام والذود عنه وإعلاء كلمة الله سبحانه وابن السبيل وهو المسافر الذي انقطع به السفر ونفد ما في يده فيُعْطَى من الزكاة ما يوصله إلى بلده وإن كان غنيا فيها ووجد من يقرضه
ஜகாத்தை உறவினர்களுக்கு தருவது சிறந்தது. அது ஜகாத்தாகவும் ஆகுவதுடன் உறவைப் பேணிய நன்மையும் கிடைக்கும்.
عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ (نسائ)
ஜகாத்தை யார் யாருக்கு கொடுக்கக் கூடாது என்பது பற்றி…
ولا يجوز دفعها لبني هاشم أو مواليهم ولا لأصله كأبيه وجده وإن علا ولا لفرعه كابنه وابن ابنه وإن سفل ولا الى زوجته ولا الى ذمي ولا الى جهة ليس فيها تمليك الزكاة لمستحقها كبناء مسجد أو مدرسة لما أن التمليك ركنها ويجوز دفعها الى ولد الغني الكبير الفقير وكذلك يجوز دفعها الى امرأة الغني الفقيرة والى الأب المعسر وإن كان ابنه موسرا-ويكره نقلها الى بلد آخر إلا الى قرابته أو من هو أحوج من أهل بلده لكن اذا عجلها قبل وجوبها فلا باس لنقل (نور الايضاح
நபிகளாரின் குடும்பத்தாருக்கு தரக்கூடாது. 2.பெற்றோர் அல்லது பெற்றோரின் பெற்றோர் என்ற வரிசையில் உள்ளவர் 3. பிள்ளை அல்லது பிள்ளையின் பிள்ளை என்ற வரிசையில் உள்ளவர் 4.கணவன் அல்லது மனைவி 5.காஃபிர் 6.மஸ்ஜித் மதரஸா போன்ற பொதுக் காரியங்களுக்கு தரக்கூடாது. ஜகாத்தில் ஒரு ஏழைக்கு சொந்தமாக்கித் தர வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் மஸ்ஜித் மதரஸா ஆகியவற்றில் சாத்தியமில்லை. 7.தந்தை பணக்காரராக இருந்தும் மகன் ஏழையாக இருந்தால் அவருக்குத் தரலாம். 8. கணவன் பணக்காரராக இருந்தும் மனைவி ஏழையாக இருந்தால் மனைவிக்குத் தரலாம். செலவுக்கு பணம் தராமல் கொடுமைப்படுத்தும் கணவன்மார்களின் மனைவிக்கு இது பொருந்தும். 9உள்ளூரில் தேவை உள்ளவர்கள் இருக்க .தகுந்த காரணம் இல்லாமல் வெளியூருக்கு எடுத்துச் செல்வது மக்ரூஹ். உறவினர்கள் வெளியூரில் இருந்தால் மக்ரூஹ் அல்ல.
தனக்கு ஜகாத் தரும்படி கேட்பவர் வசதியுள்ளவர் என்று நன்றாக தெரிந்தால் அவருக்கு ஜகாத் தரக்கூடாது அவருக்கு பின்வரும் அறிவுரையை கூற வேண்டும்
وأما من كان له كفاية فلا يجوز إعطاؤه من الزكاة وإن سألها بل الواجب نصحه وتحذيره من سؤال ما لا يحل له – عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رضي الله عنهم أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزَالُ الْمَسْأَلَةُ بِأَحَدِكُمْ حَتَّى يَلْقَى اللَّهَ وَلَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ(مسلم)
யாசகம் கேட்பவர் மறுமை நாளில் முகத்தில் அறவே சதை இல்லாதவராக எலும்பும் தோலுமாக அல்லாஹ்வை சந்திப்பார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ(مسلم
தன் பாக்கெட்டை நிரப்பிக் கொள்ள எவர் யாசகம் கேட்பாரோ அவர் நிரப்பிக் கொள்வதெல்லாம் நரகத்தின் எரி கொல்லிகளைத் தான். கொஞ்சமாக யாசகம் கேட்பவர் கொஞ்சமாக நிரப்புகிறார். அதிகமாக யாசகம் கேட்பவர் அந்த எரி கொல்லிகளைத் அதிகமாக நிரப்புகிறார்.
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه و سلم قال لا يفتح إنسان على نفسه باب مسألة إلا فتح الله عليه باب فقر لأن يعمد الرجل حبلا إلى جبل فيحتطب على ظهره ويأكل منه خير من أن يسأل الناس معطى أو ممنوعا (ابن حبان)
யாசகம் (பிறரிடம் கேட்டுப் பெறுதல்) எனும் வாசலை யார் திறப்பாரோ அவருக்கு வறுமையின் வாசலை அல்லாஹ் திறப்பான். யாசகம் கேட்பதை விட விறகு பொறுக்கி அதை விற்று சம்பாதிப்பது எவ்வளவோ மேல். அவ்வாறு விற்றால் அல்லாஹ் நிச்சயம் ஏதேனும் தருவான். யாசகம் கேட்டால் சிலர் தரலாம். சிலர் தராமலும் போகலாம்.
ஜகாத் தரும்படி கேட்பவர் பார்ப்பதற்கு வசதியுள்ளவரைப் போல் தெரிந்தால் சந்தேகத்துடன் அவருக்கு ஜகாத் கொடுக்கலாமா
وإن سأل الزكاة شخص وعليه علامة الغنى عنها وهو مجهول الحال جاز إعطاؤه منها بعد إعلامه أنه لا حظ فيها لغني ولا لقوي مكتسب عن عُبَيْد اللَّهِ بْن عَدِيِّ بْنِ الْخِيَارِ أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنْ الصَّدَقَةِ فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ فَرَآهُمَا جَلْدَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ شِئْتُمَا وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ(نسائ) الجلد: القوى
وفي معرفة السنن والاثار “أنهما يقولان: أعطنا فإنا ذوا حظ بأنا لسنا غنيين ولا مكتسبين كسبا (معرفة السنن والاثار)
இரு நபர்கள் நபிஸல்அவர்களிடம் வந்து யாசகம் கேட்டார்கள். அவர்களை கூர்ந்து பார்த்த நபி ஸல் அவர்களைப் பார்த்தால் வசதியுள்ளவர்களைப் போன்று தெரிந்ததால் நபி ஸல் அவர்களுக்கு புத்தி மதி கூறினார்கள். பிறகு அவ்விருவரும் நாங்கள் உண்மையாக ஏழைகள் என்று கூறினர்.
ஏழை என்று எண்ணி ஒருவருக்கு ஜகாத்தை கொடுத்த பின் அவர் செல்வந்தர் என தெரிய வந்தால் அந்த ஜகாத் கூடுமா
وإذا اجتهد صاحب الزكاة فدفعها لمن يظن أنه من أهلها فتبين بخلافه فإنها تجزئه لأنه اتقى الله ما استطاع ولا يكلف الله نفسا إلا وسعها
யாருக்கும் தெரியாமல் இரவில் பண முடிப்பை எடுத்துச் சென்றவரின் சம்பவம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَأَتَصَدَّقَنَّ اللَّيْلَةَ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ قَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ قَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى غَنِيٍّ لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ وَعَلَى سَارِقٍ فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا تَسْتَعِفُّ بِهَا عَنْ زِنَاهَا وَلَعَلَّ الْغَنِيَّ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ وَلَعَلَّ السَّارِقَ يَسْتَعِفُّ بِهَا عَنْ سَرِقَتِهِ (مسلم)
தெரியாமல் அவ்வாறு தந்தால் கூடும் என மேற்படி ஹதீஸ் கூறுகிறது. எனினும் முடிந்த வரை இதை கவனித்துத் தர வேண்டும். தகுதியுள்ள ஏழைகளைக் கண்டறிவதற்காக நேரங்களை செலவிடுவது இப்போது குறைந்து விட்டது. முன்பெல்லாம் ஏழைகள் மறைந்திருந்தார்கள். செல்வந்தர்கள் அந்த ஏழைகளைத்தேடிச் சென்று கொடுத்தார்கள். சிறு வயதில் கண்ணா மூச்சி விளையாட்டு போல. கண்ணைக் கட்டிக் கொண்டு கையை வைத்து அந்த சிறுவன் தேடுவான்.மற்ற பிள்ளைகள் மறைந்து கொள்வார்கள். தங்களை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் இன்று ஏழைகள் பள்ளிவாசல் பள்ளிவாசலாக அலைகிறார்கள். ஆனால் செல்வந்தர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் மறைந்து கொள்கிறார்கள்.
ஜகாத் பற்றிய மேலும் சில சட்டங்கள்
يجوز دفع الزكاة لمن يملك أقل من النصاب ولو كان صحيحا مكتسبا – المقدار الواجب تعتبر قيمته يوم الوجوب وهو تمام الحول ولا ينظر الى القيمة قبل ذلك لا تؤخذ الزكاة من تركة الميت إلا اذا أوصى فتكون من ثلث ماله – اذا قبض مال الضمار لا تجب فيه الزكاة عن الماضي- المال المستفاد في أثناء الحول يضم إلى مجانسة ويزكى بتمام الحول الأصلي سواء استفيد بتجارة أم ميراث ام غيرها – المال الذي وجبت فيه الزكاة ثم هلك تسقط زكاته -من له دين على فقير ثم أبرأه عنه بنية الزكاة لا يجزئه ذلك يحب تمليك مال الزكاة للفقير فلو أطعم المزكي يتيما أو فقيرا ناويا الزكاة لا يجزئه ذلك لأنه إباحة وليس تمليكا وكذلك لو أسكنه داره سنة بنية الزكاة لا يجزئه(نور الايضاح
கடன் வாங்கியவர் திருப்பித் தராதபோது அதை ஜகாத் கணக்கில் கழிப்பது கூடாது. ஏனெனில் கொடுக்கும்போது ஜகாத் நிய்யத் இல்லை. இறந்தவரின் சொத்துக்களில் அவர் வஸிய்யத் செய்தால் மட்டுமே ஜகாத் தரலாம். அதுவும் மூன்றில் ஒரு பங்கில் தான். கடந்த வருடம் 40,000 ரூபாய் இருந்த து ஜகாத் கொடுத்தார். நடுவில் அது 60000 ஆக அதிகரித்து விட்டால் அடுத்த வருடம் 60,000 க்கும் ஜகாத் தர வேண்டும். போன வருடம் கொடுத்ததை கழித்து விட்டுத் தருவது கூடாது.
ஜகாத் முறையாக தரப்படாததால் உலகெங்கும் பொருளாதார சரிவு
عن عبادة بن الصامت رضي الله عنه قال : أتي رسول الله صلى الله عليه وسلم وهو قاعد في ظل الحطيم بمكة فقيل : يا رسول الله أتي على مال أبي فلان بسيف البحر فذهب به ، فقال رسول الله صلى الله عليه وسلم : ما تلف مال في بر ولا بحر إلا بمنع الزكاة فحرزوا أموالكم بالزكاة وداووا مرضاكم بالصدقة وادفعوا عنكم طوارق البلاء بالدعاء ، فان الدعاء ينفع مما نزل ومما لم ينزل ، ما نزل يكشفه وما لم ينزل يحبسه وكان رسول الله صلى الله عليه وسلم يقول : إن الله إذا أراد بقوم بقاء أو نماء رزقهم السماحة والعفاف وإذا أراد بقوم اقتطاعا فتح عليهم باب خيانة ، ثم قرأ { حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون }. (كنز العمال) புயலால் நஷ்டமடைந்து விட்டது