எந்த ஒரு நற்செயலுக்கும் அல்லாஹ் தவ்ஃபீக் செய்தாலே தவிர அது முடியாது என்பதை உள்ளடக்கிய தலைப்பு
وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ (88) هود
ரமழானுக்காக பள்ளிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.ஹாஃபிழ்களும்தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வருட ரமழானில் மஸ்ஜிதில் தொழும் பாக்கியம் அமையுமா என்ற கவலையும் பலருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவைக் காரணம் காட்டி மீண்டும் லாக்டவுன் ஏற்படுத்த நினைப்பது சதியா அல்லது விதியா என்ற சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த வருடமாவது லாக்டவுன் இல்லாத ரமழான் அமைய அல்லாஹ்விடம் துஆச் செய்ய நாம் கடமைப் பட்டுள்ளோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
எல்லாமே சதி என்று பழியை முழுவதுமாக எதிரிகளின் மீது சுமத்துவது சிறந்த முஃமினுக்கு அழகல்ல. நற்காரியங்களுக்கான வாய்ப்புகள் தவறிப் போனால் தம்மிடம் குறை உள்ளது என ஒரு முஃமின் சிந்திப்பார்
قال ابن عبد البر في بهجة المجالس: وقد وفد على عمر بن الخطاب بفتح، فقال: متى لقيتم عدوكم؟ قالوا: أول النهار. قال: فمتى انهزموا؟ قالوا: آخر النهار. فقال: إناّ لله! وأقام الشرك للإيمان من أول النهار إلى آخره!! والله إن كان هذا إلاّ عن ذنب بعدي، أو أحدثته بعدكم، (بهجة المجالس)
ஷாம் தேசத்திற்கு உமர் ரழி அவர்கள் அனுப்பியிருந்த படைப் பிரிவுகளில் ஓர் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த தூதுவர் ஒருவர் உமர் ரழி அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்று விட்டது. அல்லாஹ் நமது படைப் பிரிவுக்கு வெற்றியை நல்கினான் என்று கூறியபோது உமர் ரழி அவர்கள் எப்போது நமது படை வீரர்கள் எதிரிப்ப்படையுடன் போரிட ஆரம்பித்தார்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் லுஹா நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். மீண்டும் உமர் ரழி அவர்கள் எப்போது முஸ்லிம் படையினருக்கு வெற்றி கிடைத்த து என்று கேட்டார்கள். அதற்கு அவர் மஃரிப் நேரத்திற்கு சற்று முன்னதாக என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டதும் உமர் ரழி அவர்கள் இன்னா லில்லாஹ்.. சொல்லி அழ ஆரம்பித்தார்கள். (மற்றொரு அறிவிப்பில் அழுகையின் உச்ச கட்டமாக தாடி முழுவதும் நனைய தேம்பித் தேம்பி அழுதார்கள். சபையில் இருந்தவர்கள் உமர் ரழி அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் உமர் ரழி அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை.) அப்போது சபையில் இருந்தவர்கள் அமீருல் முஃமினீன் அவர்களே அவர் இப்போது என்ன சொல்லி விட்டார் என்று நீங்கள் அழுகிறீர்கள் அவர் நல்ல செய்தியைத்தானே சொல்லியுள்ளார். நமது படை வெற்றி பெற்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி தானே என்று கேட்டனர். அதற்கு உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அசத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் சத்தியத்தின் வெற்றி இவ்வளவு வநேரம் வரை தாமதம்ஆகாது. அப்படியானால் நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.அல்லது மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்.
நல்ல அமலை செய்வதற்கான கொடுப்பினை அல்லாஹ் நாடினாலே தவிர முடியாது என்பதற்கு சான்று
துல்பிகார் சாஹிப் அவர்கள் தங்களுடைய கிதாபில் ஒரு அருமையான சம்பவத்தை எழுதுவார்கள். ஒரு முஸ்லிமான செல்வந்தர் இருந்தார். அவரிடம் பயபக்தி என்பது மிகவும் குறைவு. அவர் ஒரு தடவை மீன் மார்க்கெட்டில் நிறைய மீன் வாங்கினார். அதை சுமந்து கொண்டு வருவதற்கு ஒரு கூலிக்கார ரைத் தேடினார். அப்போது தக்வாதாரியான ஒரு கூலிக்காரர் வந்தார். அவர் அக்கூடைய சுமந்து வர சம்மதித்தார். ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்தார். செல்லும் வழியில் தொழுகை நேரம் வந்தால் நான் தொழச் சென்று விடுவேன். தொழுகை முடிந்து கூடையை சுமந்து வருவேன் எனக் கூறினார். வேறு வழியின்றி செல்வந்தர் சம்மதித்தார். சொன்னது போல நடுவில் தொழுகை நேரம் வந் த து. அவர் கூடையை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு மஸ்ஜிதுக்குள் சென்று விட்டார். ஆனால் இந்த செல்வந்தர் வெளியே காத்துக் கிடந்தாரே தவிர உள்ளே செல்ல மனம் வரவில்லை. தொழுகை முடிந்து ஒவ்வொருவராக திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கூலிக்காரர் இன்னும் வரவில்லை. இவர் வெளியே இருந்த படி சப்தமிட்டார். இவ்வளவு நேரம் உள்ளே உன்னை யார் பிடித்து வைத்துள்ளார்களே தெரியவில்லை என்ற போது அதைக் கேட்ட அந்த கூலிக்காரர் வெளியே வந்தபடி அந்த செல்வந்தரிடம் உங்களை எந்த இறைவன் உள்ளே வர விடாமல் தடுத்து வைத்துள்ளானோ அந்த இறைவன்தான் என்னை வெளியே வர விடாமல் தடுத்து வைத்துள்ளான் என்று கூறினார். அந்த செல்வந்தரால் எந்த பதிலும் பேச முடியவில்லை. பாவம் செய்யும் மனிதர்களுக்கு பல பாக்கியங்கள் தவறிப்போகும். சில அறிவிப்புகளில் அத்தகைய மனிதர்கள் அதிகாலையில் எழுந்து தொழ நினைத்தாலும் அல்லாஹ் மலக்குகளிடம் இவனை எழுப்பாதீர்கள் இவன் தொழுது என்ன ஆகப் போகிறது என்று கூறுவானாம்.
ஹஜ் உம்ரா போன்ற பாக்கியங்களும் அவ்வாறு தான்.அல்லாஹ் தவ்ஃபீக் செய்தாலே தவிர சாத்தியமில்லை
ஹஜ்ஜுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஒருவர் செய்தாலும் கடைசி நேரத்தில் அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிட்டும். விமானத்தில் ஏறி அமர்ந்து விட்ட ஹாஜி கூட எப்படியோ ஏதோ ஒரு காரணத்தால் இறக்கி விடப்பட்டு இன்று வரை அந்த வாய்ப்பு கிட்டாமலேயே இருக்கின்ற வரலாறுகள் உண்டு.
அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை நாடவில்லையென்றால் அமல் செய்யும் வாசலை அடைத்து விடுகிறான்
قال ابن القيم رحمه الله: “إذا أراد الله بعبده خيراً فتح له أبواب التوبة، والندم، والانكسار، والذل، والافتقار، والاستعانة به، وصدق اللجأ إليه، ودوام التضرع والدعاء، والتقرب إليه بما أمكنه من الحسنات، ورؤية عيوب نفسه، ومشاهدة فضل ربه، وإحسانه، ورحمته، وجوده وبره”. قال معروف رحمه الله: “إذا أراد الله بعبد خيراً فتح له باب العمل، وأغلق عليه باب الجدل، وإذا أراد بعبد شراً أغلق عليه باب العمل وفتح عليه باب الجدل“.
அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை நாடவில்லையென்றால் அமல் செய்யும் வாசலை அடைத்து விடுகிறான். தர்க்கம் செய்யும் வாசலைத் திறந்து விடுவான். மாறாக அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை நாடி விட்டால் அமல் செய்யும் வாசலைத் திறந்து, தர்க்கம் செய்யும் வாசலை அடைத்து விடுவான். மற்றொரு அறிவிப்பில் அல்லாஹ் நல்லதை நாடி விட்டால் தவ்பாவின் வாசலை, பாவத்தை நினைத்து கைசேதப்படும் வாசலை, மேலும் பணிவு, அடக்கம், அல்லாஹ்வின் பால் தேவையாகுதல். அவனிடமே உதவி தேடுதல், துஆ, அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைக்கும் அமல்கள் புரிதல், தன்னிடமுள்ள குறைகதளை முதலில் உற்று நோக்குதல், அல்லாஹ் கருணை புரிவதைக் கண்கூடாகப் பார்த்தல் ஆகியவற்றின் வாசல்களை அல்லாஹ் திறந்து விடுவான். (யாருக்கு நலவை நாடவில்லையோ அவருக்கு இந்த வாசல்கள் அனைத்தும் அடைக்கப்படும்.)
இஜ்திஹாத் செய்யும்போது நல்ல முடிவுகள் ஏற்படுவது கூட அல்லாஹ்வின் தவ்ஃபீக் இல்லாமல் இயலாது என்பதை நபித்தோழர்கள் உறுதியாக விளங்கி வைத்திருந்தார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بن مسعود رضي الله عنه أَنَّهُ أَتَاهُ قَوْمٌ فَقَالُوا إِنَّ رَجُلًا مِنَّا تَزَوَّجَ امْرَأَةً وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ يَجْمَعْهَا إِلَيْهِ حَتَّى مَاتَ فَقَالَ عَبْدُ اللَّهِ مَا سُئِلْتُ مُنْذُ فَارَقْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشَدَّ عَلَيَّ مِنْ هَذِهِ فَأْتُوا غَيْرِي فَاخْتَلَفُوا إِلَيْهِ فِيهَا شَهْرًا ثُمَّ قَالُوا لَهُ فِي آخِرِ ذَلِكَ مَنْ نَسْأَلُ إِنْ لَمْ نَسْأَلْكَ وَأَنْتَ مِنْ جِلَّةِ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْبَلَدِ وَلَا نَجِدُ غَيْرَكَ قَالَ سَأَقُولُ فِيهَا بِجَهْدِ رَأْيِي فَإِنْ كَانَ صَوَابًا فَمِنْ اللَّهِ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَإِنْ كَانَ خَطَأً فَمِنِّي وَمِنْ الشَّيْطَانِ وَاللَّهُ وَرَسُولُهُ مِنْهُ بُرَآءُ أُرَى أَنْ أَجْعَلَ لَهَا صَدَاقَ نِسَائِهَا لَا وَكْسَ وَلَا شَطَطَ وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا قَالَ وَذَلِكَ بِسَمْعِ أُنَاسٍ مَنْ أَشْجَعَ فَقَامُوا فَقَالُوا نَشْهَدُ أَنَّكَ قَضَيْتَ بِمَا قَضَى بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي امْرَأَةٍ مِنَّا يُقَالُ لَهَا بَرْوَعُ بِنْتُ وَاشِقٍ قَالَ فَمَا رُئِيَ عَبْدُ اللَّهِ فَرِحَ فَرْحَةً يَوْمَئِذٍ إِلَّا بِإِسْلَامِهِ (نسائ – باب إِبَاحَةِ التَّزَوُّجِ بِغَيْرِ صَدَاقٍ- كتاب النكاح
وفي رواية عَنْ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ قَالَا أُتِيَ عَبْدُ اللَّهِ فِي رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً وَلَمْ يَفْرِضْ لَهَا فَتُوُفِّيَ قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا فَقَالَ عَبْدُ اللَّهِ سَلُوا هَلْ تَجِدُونَ فِيهَا أَثَرًا قَالُوا يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا نَجِدُ فِيهَا يَعْنِي أَثَرًا قَالَ أَقُولُ بِرَأْيِي فَإِنْ كَانَ صَوَابًا فَمِنْ اللَّهِ لَهَا كَمَهْرِ نِسَائِهَا لَا وَكْسَ وَلَا شَطَطَ وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ فَقَامَ رَجُلٌ مَنْ أَشْجَعَ فَقَالَ فِي مِثْلِ هَذَا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا فِي امْرَأَةٍ يُقَالُ لَهَا بَرْوَعُ بِنْتُ وَاشِقٍ تَزَوَّجَتْ رَجُلًا فَمَاتَ قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا فَقَضَى لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ صَدَاقِ نِسَائِهَا وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ فَرَفَعَ عَبْدُ اللَّهِ يَدَيْهِ وَكَبَّرَ (نسائ
இப்னு மஸ்ஊத் ரழி அவர்களிடம் ஒரு வழக்கு வந்தது. ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்தார். திருமணம் செய்யும்போது மஹரைக் குறிப்பிடவில்லை. (மஹர் குறிப்பிடா விட்டாலும் மஹர் கடமை.) மேலும் அவர் மனைவியுடன் உடலுறவும் கொள்ளவில்லை இந்த நிலையில் அவர் இறந்து விட்டால் அப்பெண்ணுக்கான மஹரை கணவனின் வாரிசுகள் எந்த அடிப்படையில் தர வேண்டும் என்று கேட்க, அதற்கு இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களின் மறைவுக்குப் பின் இதுபோன்ற கடினமான மஸ்அலாவை நான் கேட்கப்படவில்லை. நீங்கள் யாரிடமாவது விசாரித்துப் பார்த்து இது சம்பந்தமாக ஹதீஸ் உள்ளதா என்று கேளுங்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் யாரிடமும் கிடைக்கவில்லை என்றார்கள். (மற்றொரு அறிவிப்பில் இப்னு மஸ்ஊத் ரழி ஒரு மாதம் அவகாசம் கேட்டார்கள். ஒரு மாதம் நபித்தோழர்களிடம் இது பற்றிய சர்ச்சை நீடித்தது) பிறகு இப்னு மஸ்ஊத் அவர்கள் (தீர்ப்பு வழங்கும் சபையைக் கூட்டி) இது விஷயமாக எனது இஜ்திஹாதை நான் கூறுகிறேன். இது சரியானதாக இருக்கும் என்றால் அல்லாஹ் எனக்கு தவ்ஃபீக் செய்துள்ளான் என்று ஆகி விடும். அவ்வாறில்லையென்றால் அது எனது தவறு என்று கூறி விட்டு, அந்தப் பெண்ணுக்கு மஹர் மிஸ்ல் அந்தப் பெண்ணின் குடும்பத்தில் என்ன மஹர் வழமையில் பெறப்படுமோ அந்த மஹர் தர வேண்டும். அதில் கூடுதல், குறைவு கூடாது. அந்தப் பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பங்கும் உண்டு. அவள் இத்தாவும் இருக்க வேண்டும் என்று ஃபத்வா அளித்தார்கள். இதைக் கேட்டவுடன் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்து இதே போன்று என் விஷயத்தில் நபி ஸல் அவர்கள் தீர்ப்பளித்தார்கள். என் கணவர் என்னைத் திருமணம் செய்து என்னிடம் உடலுறவு கொள்ளாத நிலையில் இறந்து விட்டார். பிறகு நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் நீங்கள் தீர்ப்பு வழங்கியது போன்றே தீர்ப்பு வழங்கினார்கள் என்று கூறியவுடன் மகிழ்ச்சியில் கையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது அடைந்த சந்தோஷத்திற்கு அடுத்து அன்றுதான் மிகவும் சந்தோஷப்பட்டதைப் பார்க்க முடிந்தது. (ஹனஃபீ மத்ஹபின் சட்டங்கள் பெரும்பாலும் இப்னு மஸ்ஊத் ரழி அவர்களின் கருத்தைத் தழுவி இருக்கும் என்பது குறிப்படத்தக்கது.)
நிறைய அமல் செய்தாலும் சுவனத்தில் நுழைய அல்லாஹ்வின் தவ்ஃபீக் வேண்டும்.
عن أَبي هُرَيْرَةَ رض قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ….(بخاري
உங்களில் எவரையும் அவரது அமல் சுவனத்தில் நுழைத்து விடாது என நபி ஸல் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் நானும் சரி அல்லாஹ் தனது அருளைக் கொண்டு சூழ்ந்து கொண்டாலே தவிர சுவனத்தில் நுழைய முடியாது என பதில் கூறினார்கள்.
அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியம் மறுமையில் கிடைக்கும் போது அல்லாஹ்வுக்கு சஜ்தா செய்ய வேண்டுமானால் அதற்கும் கொடுப்பினை வேண்டும்.
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَكْشِفُ رَبُّنَا عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ فَيَبْقَى كُلُّ مَنْ كَانَ يَسْجُدُ فِي الدُّنْيَا رِيَاءً وَسُمْعَةً فَيَذْهَبُ لِيَسْجُدَ فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا (بخاري
அல்லாஹ் மறுமையில் தன்னை வெளிப்படுத்தும் நாளில் ஒவ்வொரு முஃமினான ஆணும் பெண்ணும் சஜ்தாவில் விழுவார்கள். ஆனால் இந்த உலகில் யார் பெருமைக்காக, முகஸ்துதிக்காக சஜ்தா செய்தார்களோ அவர்கள் சஜ்தா செய்ய நினைத்தாலும் அவர்களின் முதுகு வளையாது. சமமான பலகை போல அவர்களின் முதுகு வளையாத நிலைக்கு மாறி விடும்.
முஃமின்களிடம் ஏற்கெனவே அல்லாஹ் தந்தவைகளுக்கு நன்றி செலுத்தும் நிலை இல்லாமல் போனதால் அடுத்தடுத்து பல பாக்கியங்கள் தவறிப் போகிறது.
78 வயதான ஒருவர் சோர்வில் கீழே விழுந்து சவுதி அரேபியாவில் (ரியாத்) ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆக்ஸிஜன் குறைவு என்று கூறி மருத்துவர் அவருக்கு 24 மணிநேரத்திற்கு ஒரு gas ஆக்ஸிஜனைப் பொருத்தினார். பல மணி நேரம் கழித்து, அவர் குணமடைந்தார், மருத்துவர் அவருக்கு SR.600. பில் கொடுத்தார். அவர் பில்லைக் கண்டதும் அழ ஆரம்பித்தார். அதிக பில் காரணமாக அழுகிறீர்களா என்று மருத்துவர் கேட்டார். அதற்கு அந்த நபர் பதிலளித்தார், ” பில்லில் உள்ள தொகை காரணமாக நான் அழவில்லை, இந்த பணத்தை என்னால் செலுத்த முடியும். ஆனால் நான் ஏன் அழுகிறேன் என்றால் 24 மணிநேரம் மட்டுமே நான் பயன்படுத்திய ஆக்ஸிஜனுக்கு SR.600(Saudi riyal) செலுத்த வேண்டும் என்றால் நான் 78 ஆண்டுகளாக அல்லாஹ் கொடுத்த ஆக்ஸிஜனை (காற்றை) நான் சுவாசிக்கிறேன், நான் ஒருபோதும் பணம் செலுத்தவில்லை. நான் அவனுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரும் தலையைக் குனிந்து அழத் தொடங்கினார். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தாமல் எத்தனை ஆண்டுகளாக அவன் கொடுத்த ஆக்ஸிஜனை பயன்படுத்தி இருக்கிறோம்.
قال حكيم بن عمير: “من فتح له باب خير فلينتهزه، فإنه لا يدري متى يغلق عنه
அல்லாஹ்வின் கிருபையால் ரமழானில் மஸ்ஜிதில் தொழும் பாக்கியம் கிடைத்தாலும் அதற்குள் நம்முடைய மனம் மாறி விடாமல் இருக்க துஆ செய்ய வேண்டும். சிலருக்கு இப்போது ஆர்வம் இருக்கும்.
ஆனால் ரமழான் வந்த பின் அவருடைய ஆர்வம் குன்றி விடும்.
عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رض يَقُول أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ (بخاري
ஒரு குச்சி ஒருவர் தனது இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருந்தால் அதை அப்படியும திருப்ப வாய்ப்புண்டு. இப்படியும் திருப்ப வாய்ப்புண்டு. அதுபோல அடியார்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரு விரல்களுக்கு மத்தியிலுள்ளது. அதை அல்லாஹ் நாடியபடி திருப்புவான். எனவே பின்வரும் துஆவை அதிகம் ஓத வேண்டும்.
عَنْ عُقْبَةَ قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري 851
உக்பா ரழி அறிவித்துள்ளார்கள் நபி ஸல் அவர்களுக்குப் பின்னால் நான் அசர் தொழுதேன். ஸலாம் கொடுத்த பின் மனிதர்களின் பிடரிகளைத் தாண்டி மிக வேகமாக தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார்கள். நபி ஸல் அவர்களின் இந்த வேகத்தைக் கண்டு மக்கள் அஞ்சினார்கள். பிறகு வெளியே வந்த பின்பு மக்களின் ஆச்சரியத்தைக் கண்டு நபி ஸல் அவர்கள் (நான் மற்றவருக்குத் தர வேண்டும் என்று நினைத்திருந்த) ஒரு தங்கக்கட்டி (அது ஒப்படைக்கப்படாமல்) எங்களிடம் இருந்தது.அது நினைவுக்கு வந்தது. அது இன்னும் என்னிடம் இருப்பதை வெறுத்தேன். உடனே சென்று அதைப் பங்கிட்டுக் கொடுக்கும்படி கூறி விட்டு வந்தேன் என்றார்கள்.
இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களிடம் பள்ளிவாசல் கட்டிட நன்கொடைக்காக சிலர் வந்த போது இமாம் அவர்கள் தன் இடது கைக்கு அருகில் இருந்து ஒரு பண முடிப்பை அப்படியே கொடுத்து விட்டார்கள். வந்தவர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் மறுபுறம் இடது கையால் கொடுத்து விட்டார்களே என்ற கவலை தென்பட்டது. அதைப் புரிந்து கொண்ட இமாம் அவர்கள் நான் என்னுடைய இடது கையில் இருந்து வலது கைக்கு மாற்றும் முன்பு என்னுடைய மனம் மாறி விடக்கூடாதல்லவா அதனால் தான் இவ்வாறு தந்தேன் என்றார்கள்.