• Sunrise At: 5:58 AM
  • Sunset At: 6:01 PM
info@ulama.in +91 99414 14275

முஸ்லிம்களின் ஓட்டுகள் சிதறி விடக்கூடாது


Download Pdf

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. சங்பரிவார் சார்பு ஆட்சி மீண்டும் தலைதூக்காமல் இருக்க நம் கைவசம் உள்ள வலிமையான ஆயுதங்கள் உள்ளன. அதை சரியாக பயன்படுத்துவதில்தான் இந்த உம்மத் பலவீனப்பட்டுள்ளது.

1.உறுதியான ஈமானுடன் கூடிய நல்ல அமல்

2.முறையாக (ஹராமான வருவாயைத் தவிர்த்து, உறவைத் துண்டிப்பதற்காக அன்றி) செய்யப்படும் துஆ

3.ஒன்றாக ஒரே அணிக்கு வாக்களித்தல்

முதல் ஆயுதமான நல்ல அமல் என்பதை சரியாகப் பயன்படுத்த வேண்டும்

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (139)ال عمران – كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ (249)البقرة

وهو على أنطاكية لما قدمت منهزمة الروم‏:‏ ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم‏؟ قالوا‏:‏ بلى‏. قال‏:‏ فأنتم أكثر أم هم‏؟ قالوا‏:‏ بل نحن أكثر منهم أضعافاً في كل موطن‏. قال‏:‏ فما بالكم تنهزمون‏؟‏ فقال شيخ من عظمائهم‏:‏ من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض‏.‏ فقال‏:‏ أنت صدقتني‏.‏ (البداية والنهاية      

ஹிஜ்ரி 15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின்ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில்ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போதுஅவர்களின் அரசர் ஹிர்கல் கேட்பான் உங்களைப்போன்றுஅவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள்அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள்தோற்றுவருகிறீர்கள் உங்கள் தோல்விக்கு காரணம் என்னஎன்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர்சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்றுவணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள்.நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தைநிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மதுஅருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தைமீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன்சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்குவெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலானவாழ்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7 பக்கம்.20

நிறைந்த ஈமானுடைய சஹாபாக்களின் காலத்தில் கூட அவர்களின் சிறிய சருகுதலால் அல்லாஹ் ஆரம்பத்தில் வெற்றியைத் தந்து பிறகு தோல்வியைக் கொடுத்தான்

وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ (152) إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُونَ عَلَى أَحَدٍ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِكَيْلَا تَحْزَنُوا عَلَى مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ-ال عمران

கருத்து- நீங்கள் விரும்பியது போல் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான் அதாவது ஆரம்பத்தில் வெற்றியைத் தந்தான் எனினும் நீங்கள் மலை உச்சியின் நிற்க வேண்டுமென்ற நபியின் உத்தரவை நிறைவேற்றுவதில் கருத்து வேறுபாடு கொண்டீர்கள். சிலர் போர் தான் முடிந்து விட்டதே இனி நாம் கீழே இறங்கி கனீமத்தை எடுக்கலாம் என்றும், வேறு சிலர் என்ன நடந்தாலும் நபிகளார் இங்கு தான் நிற்கும்படி கூறினார்கள் என்று உறுதியாக இருந்தீர்கள். இப்படி கருத்து வேறுபாடு கொண்டதால் உங்களுக்கு நாம் தோல்வியைக் கொடுத்தோம். ஏற்பட்டு சிலர் கீழே இறங்கி வந்தவுடன் அபூசுஃப்யான் தலைமையில் எதிரிகள் வந்து தாக்க முஸ்லிம்கள் நிலை குலைந்து போனார்கள்.படிப்பினை- சிறிய சருகுதலுக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் அதிலும் குறிப்பாக எல்லோரும் அந்த தவறை செய்யவில்லை. சிலர் மட்டுமே அந்தத் தவறைச் செய்தார்கள். அப்படியிருந்தும் அந்த சஹாபாக்களுக்கே அத்தகைய சோதனை என்றால் நாம் எம்மாத்திரம்.

அடுத்த ஆயுதமான துஆ எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியது

எவ்வாறு நபி ஸல் அவர்கள் தாயிஃபில்  எதிரிகளுடைய கடுமையான சூழ்ச்சிகளையும் தனது இயலாமையையும் முறையிட்டார்களோ அது போன்ற நிலையில் நாமும் துஆ கேட்பது கடமை

فلما رأى عليه الصلاة والسلام استهانة قريش به أراد أن يتوجه إلى ثقيف بالطائف يرجو منهم نصرته على قومه ومساعدته حتى يتمّم أمر ربه، لأنهم أقرب الناس إلى مكة وله فيهم خؤولة، فإن أم هاشم بن عبد مناف عاتكة السلمية من بني سُلَيمبن منصور وهم حلفاء ثقيف، فلما توجه إليهم ومعه مولاه زيدبن حارثة قابل رؤساءهم وكانوا ثلاثةً: عبد يالِيْل ومسعود وحَبيب أولاد عمروبن عمير الثقفي، فعرض عليهم نصرته حتى يؤدي دعوته، فردّوا عليه رداً قبيحاً، ولم يرَ منهم خيراً، وحينذاك طلب منهم أن لا يُشيعوا ذلك عنه كيلا تعلم قريش فيشتدّ أذاهم لأنه استعان عليهم بأعدائهم، فلم تفعل ثقيف ما رجاه منهم عليه الصلاة والسلام، بل أرسلوا سفهاءهم وغلمانهم يقفون في وجهه في الطريق ويرمونه بالحجارة، حتى أدموا عقبه، وكان زيدبن حارثة يدرأ عنه إلى أن انتهى إلى شجرة كرْم واستظلّ بها، وكانت بجوار بستان لعُتبة وشَيبة ابني ربيعة وهما من أعدائه وكانا في البستان، فكره رسول الله صلى الله عليه وسلم مكانهما فدعا الله قائلاً: “اللهمّ إني أشكو إليكَ ضعفَ قُوَّتي وقِلَّةَ حيلتي وهَواني على الناس، يا أرحم الراحمين أنت ربُّ المستضعفين، وأنت ربي، إلى من تكلني، إلى بعيد يتجهَّمني، أم إلى عدوَ ملكته أمري؟ إن لم يكن بك غضب عليّ فلا أبالي” فلما رآه ابنا ربيعة رَقَّا له وأرسلا إليه بِقِطْفٍ من العنب مع مولى لهما نصراني اسمه عَدَّاس. فلما ابتدأ رسول الله صلى الله عليه وسلم يأكل قال: “بسم الله الرحمان الرحيم” فقال عَدَّاس: هذا الكلام ما يقوله أهل هذه البلاد، فقال له عليه الصلاة والسلام: “من أيّ البلاد أنت وما دينك؟” فقال: نصراني من نِيْنَوى، فقال له عليه الصلاة والسلام: “من قرية الرجل الصالح يُونُس بن متَّى؟” قال: وما علمك بيونس؟ فقرأ له من القرآن ما فيه قصة يونس، فلما سمع ذلك عداس أسلم، (نور اليقين فى سيرة سيد المرسلين- محمد رسول الله صلى الله عليه وسلم)

நபி ஸல் அவர்கள் மக்காவாசிகளிடம் கடும் தொல்லைகளை சகித்து வந்த நிலையில் தாயிபுக்குச் சென்றேனும் மார்க்கத்தை எடுத்துக் கூறலாம் என தாயிப் புறப்பட்டார்கள். ஸகீஃப் கூட்டத்தின் தலைவரிடம் சென்றார்கள். நபி ஸல் அவர்களின் முப்பாட்டனார் ஹாஷிம் அவர்களின் தாயார் ஆதிகா என்பவர் ஸகீஃப் கிளையாருக்கு நெருங்கிய கூட்டாளிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அங்கு ஆதரவு கிடைக்கலாம் என்று நினைத்தார்கள். தாயிப் பயணத்தில் நபி ஸல் அவர்களின் வளர்ப்பு மகன் ஜைதுப்னு ஹாரிஸா ரழி அவர்கள் உடன் இருந்தார்கள். ஸகீஃப் கூட்டத்தின் மூன்று முக்கியத் தலைவர்களிடம் சென்று ஆதரவு தேடியபோது அவர்கள் மிகவும் அவமானப் படுத்தினார்கள். அவர்களில்ஒருவன் உன்னை விட்டால் நபியாக அனுப்ப உன் ரப்புக்கு யாரும் கிடைக்கவில்லையா என்றான். மற்றொருவன் உன்னிடத்தில் பேசுவதே பாவம் என்றான். இதனால் மிகவும் மனம் உடைந்த நபி ஸல் அவர்கள் இவர்கள் அவமானப்படுத்திய விஷயம் வெளியே தெரியாமல் இருந்தால் நல்லது என்று நினைத்தார்கள். குறிப்பாக மக்காவாசிகளுக்குத் தெரிந்தால்இவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்வார்கள் என்று கருதினார்கள். ஆனால் அந்த எண்ணத்திற்கு மாற்றமாக நபி ஸல் அவர்களை தனிப்பட்ட முறையிலும் அவமானப் படுத்தியதுடன் எல்லோருக்கும் முன்னிலையில் அவமானப் படுத்துவதற்கு சிறுவர்களையும்    அடிமைகளையும் ஏவி கற்களால் எறிந்த போது நபி ஸல் அவர்களின் கெண்டைக்கால் முழுக்க இரத்தமானது. ஒரு திராட்சைத் தோட்டத்தைச் சென்றடையும் வரை அவ்வாறு துரத்தினர். அது உத்பா, ஷைபாவின் தோட்டத்திற்கு அருகில் இருந்தது. அவ்விருவரும் எதிரிகள் என்பதால் அந்த இடத்தில் வசிப்பதையும் நபி ஸல் வெறுத்தார்கள். யாருடைய ஆதரவை நாடினார்களோ அவர்களும் விரட்டியடித்த நிலையில் ஒதுங்க வந்த இடமும் எதிரியின் இடமாக ஆகி விட்டதே என்ற கவலையில் நபி ஸல் அவர்கள் பின்வரும் துஆவை ஓதினார்கள். யாஅல்லாஹ் என்னுடைய இயலாமையை உன்னிடமே முறையிடுகிறேன். எதிரிகளின் சூழ்ச்சிக்கு முன்னால் என் சாமர்த்தியம் தோற்றுப் போனதையும், நான் பட்ட அவமானத்தையும் உன்னிடமே முறையிடுகிறேன். என்னை தூரமாக்குபவரிடம்  அல்லது எனது எதிரியிடம் என்னை சாட்ட நாடுகிறாயா அவ்வாறு எதிரிகளை என் மீது சாட்டுவது என் மீதுள்ள பொருத்தத்தின் அடிப்படையில் அமைந்தால் (எத்தனை பேர் என்னை அடித்துக் காயமாக்கினாலும்)நான் கவலைப் பட மாட்டேன். உன் பொருத்தம் எனக்குப்போதும். என துஆ செய்தார்கள். சற்று நேரத்தில் நபி ஸல் அவர்கள் மீது இரக்கப்பட்டு உத்பா, ஷைபா இருவரும் ஒரு திராட்சைக் குலையை தங்களின் அடிமை அதாஸ் என்பவரிடம் கொடுத்தனுப்பினார்கள். அதைச் சாப்பிட ஆரம்பிக்கும்போது நபி ஸல் அவர்கள் பிஸ்மி சொன்னவுடன் அதைக் கண்ட அதாஸ் இந்த வார்த்தை எங்கள் ஊர் வாசிகள் சொல்வது போல் உள்ளதே என்றவுடன் நீங்கள் யார் உமக்கு எந்த ஊர் என நபி ஸல் அவர்கள் கேட்க, நான் நீனவா என்ற ஊரைச் சேர்ந்த கிறிஸ்தவன் என்று அவர் கூறினார் அதற்கு நபி ஸல் அவர்கள் அந்த ஊர் யூனுஸ் என்ற நல்லடியாரின் ஊராயிற்றே என்றார்கள். அவர் வியப்புடன் யூனுஸைப் பற்றி உங்களுக்கும் தெரியுமா என்று கேட்க உடன் நபி ஸல் அவர்கள் யூனுஸ் அலை அவர்கள் பற்றிய குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டியவுடன் அவர் முஸ்லிமாகி விட்டார்.

படிப்பினை- எதிரிகள் சூழ்ச்சிகளும் அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களும் மிக பலமாக உள்ளன. அவர்கள் ஜெட் வேகத்தில் வேலை செய்கிறார்கள். நாம் ஆமை வேகத்தில் தான் ஒற்றுமைப் பிரச்சாரம் செய்கிறோம். இத்தகைய தருணத்தில் நபி ஸல் அவர்கள் கேட்ட துஆ நமக்கும் மிக பொருத்தமானது.

وَكَتَبَ إلَى كِسْرَى : بِسْمِ اللّهِ الرّحْمَنِ الرّحِيمِ مِنْ مُحَمّدٍ رَسُولِ اللّهِ إلَى كِسْرَى عَظِيمِ فَارِسَ سَلَامٌ عَلَى مَنْ اتّبَعَ الْهُدَى وَآمَنَ بِاَللّهِ وَرَسُولِهِ وَشَهِدَ أَنْ لَا إلَهَ إلّا اللّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنّ مُحَمّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَدْعُوكَ بِدِعَايَةِ اللّهِ فَإِنّي أَنَا رَسُولُ اللّهِ إلَى النّاسِ كَافّةً لِيُنْذِرَ مَنْ كَانَ حَيّا وَيَحِقّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ أَسْلِمْ تَسْلَمْ فَإِنْ أَبَيْت فَعَلَيْكَ إثْمُ الْمَجُوسِ ” فَلَمّا قُرِئَ عَلَيْهِ الْكِتَابُ مَزّقَهُ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقَالَ ” مَزّقَ اللّهُ مُلْكَهُ  (زاد المعاد)

 ஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபி அவர்கள் எல்லா நாட்டின்மன்னர்களுக்கும் தூதுவர்கள் மூலம் இஸ்லாமிய  அழைப்புக் கடிதம் அனுப்பிய போது வல்லரசு நாடாக இருந்தபாரசீகத்தின் கிஸ்ரா மன்னனுக்கும் கடிதத்தை  ஷுஜாஃ இப்னு வஹப் ரழி என்ற சஹாபியின் மூலம் கொடுத்தனுப்பினார்கள்.

அவன்வாங்கிய கடிதத்தை கிழித்து போட்டான். இதனைக்கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் .அல்லாஹ் கிஸ்ராவின்ஆட்சியை கிழித்து எறிவானாக.என்றுசொன்னார்கள்.நபியின் துஆவை அல்லாஹ் செயல்படுத்தினான்.பதவி வெறிகொண்ட அவனுடைய மகனானசீரவைஹி என்பவன் தனது தந்தையையே கொலைசெய்துவிட்டு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு பிறகு ஒரு நாள்அரண்மனையில் உள்ள மருந்துகள் வைக்கப்படும்இடத்தில் ஆண்மைக்கு பலன் தரும் என்றுஎழுதப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தை கண்டான். அதில்இருந்ததோ கொடிய விஷம் .அது அவனின் தந்தை கிஸ்ராதன்னுடைய ஆட்சியை யாராவது கைப்பற்றினால் அவர்கள்விஷத்தால் சாகவேண்டும் என்று திட்டமிட்டு வைக்கப்பட்டவிஷம். அதை அறியாமல் அதை சாப்பிட்டு இறந்தான்.இதுநடந்தது ஆறு மாதத்திற்குள். இவர்களுக்கு எதிராக நபிகேட்ட துஆ. அவர்களையும் அவர்களின் ஆட்சியையும்அழித்தது. பிறகு ஹழ்ரத் உமர்(ரலி) காலத்தில் பாரசீகம்இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது

அடுத்த ஆயுதமான வாக்குரிமை. இதை மிகச்சரியாக பயன்படுத்தினால் வெற்றி நமக்குத் தான்

தற்போதைய சூழ்நிலையில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதே முக்கியம். அதற்காகவே நாம் வாக்களிக்க வேண்டிய நிர்பந்த த்தில் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தற்போது இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றனர். தமிழக மக்களின் பெரும்பாலானவர்களின் மனோநிலை இந்த இரண்டுக்குள் தான் புதைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு உள்ளது. சிலர் இந்த இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி நமக்கு அநியாயம் செய்யவில்லை என்று வாதம் பேசி மூன்றாவதாக ஒரு அணிக்கு ஆதரவு என்ற நிலையை எடுக்கின்றனர். இது நமக்கு நாமே அநியாயம் செய்து கொள்வதாகும்.இந்த இரண்டு கட்சிகளில் நமக்கு அநியாயம் செய்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் இந்த இருவரில் நமக்கு அநியாயம் செய்வதில் முதலிடத்தில் இருப்பவனை வர விடாமல் தடுப்பதற்காக இரண்டாம் இடத்தில் இருப்பவனுக்கு வாக்களிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இது தவிர வேறு எந்த மாற்று வழியை நாம் சிந்தித்தாலும் அது நம்மை நாமே அழித்துக் கொள்வதாகும். ஓட்டுக்கள் பிரிவதால் யாருக்கு இலாபம் என்பதை நாம் நன்கு அறிவோம்.   

பெரிய எதிரியை வீழ்த்துவதற்காக கொள்கையில் மாறு பட்டவர்களுடன் கூட்டணி நபிகளாரின் சுன்னத்

وسار رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا من مكة مكث بحِرَاء، وبعث رجلًا من خزاعة إلى الأخنس بن شَرِيق ليجيره، فقال : أنا حليف، والحليف لا يجير ، فبعث إلى سهيل بن عمرو، فقال سهيل : إن بني عامر لا تجير على بني كعب، فبعث إلى المطعم بن عدى، فقال المطعم : نعم ، ثم تسلح ودعا بنيه وقومه ، فقال : البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرت محمدًا، ثم بعث إلى رسول الله صلى الله عليه وسلم : أن ادخل، فدخل رسول الله صلى الله عليه وسلم ومعه زيد بن حارثة حتى انتهي إلى المسجد الحرام، فقام المطعم بن عدى على راحلته فنادى : يا معشر قريش، إني قد أجرت محمدًا فلا يهجه أحد منكم، وانتهي رسول الله صلى الله عليه وسلم إلى الركن فاستلمه، وطاف بالبيت، وصلى ركعتين، وانصرف إلى بيته، ومطعم بن عدى وولده محدقون به بالسلاح حتى دخل بيته . وقيل : إن أبا جهل سأل مطعمًا : أمجير أنت أم متابع ـ مسلم ؟ . قال : بل مجير . قال : قد أجرنا من أجرت . وقد حفظ رسول الله صلى الله عليه وسلم للمطعم هذا الصنيع، فقال في أسارى بدر : ( لو كان المطعم بن عدى حيًا ثم كلمنى في هؤلاء النتنى لتركتهم له ) .(الرحيق المختوم)

நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம்பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வால்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலே வந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா? அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா? எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு {ஸல்} பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.

முஸ்லிம்களின் நலனுக்காக காஃபிர்களுடன் நபிகளார் ஒப்பந்தம் செய்த சம்பவங்கள் இதுபோல் நிறைய உள்ளன ஹபஷாவில் நஜ்ஜாஷியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அதுபோன்ற சமூக சேவைக்காக இன்று அழைக்கப்பட்டாலும் நிச்சயமாக பதில் அளிப்பேன் என்றார்கள். இவ்வாறு உலக விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் தேச நலன் கருதி அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள்

இவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான வழிகாட்டல்களாகும்.

முதலாவது எதிரி தோற்க வேண்டும் என்பதற்காக இரண்டாவது எதிரி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது சஹாபாக்களின் நடைமுறையாகவும் இருந்துள்ளது

الم (1) غُلِبَتِ الرُّومُ (2) فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ (3) فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ

عن عبد الله بن مسعود رضي الله عنه قال: كان فارس ظاهراً على الروم, وكان المشركون يحبون أن تظهر فارس على الروم. وكان المسلمون يحبون أن تظهر الروم على فارس, لأنهم أهل كتاب وهم أقرب إلى دينهم, فلما نزلت {آلمَ غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين} قالوا: يا أبا بكر إن صاحبك يقول إن الروم تظهر على فارس في ضع سنين ؟ قال: صدق. قالوا: هل لك أن نقامرك ؟ فبايعوه على أربع قلائص إلى سبع سنين, فمضت السبع ولم يكن شيء, ففرح المشركون بذلك, وشق على المسلمين, فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال: “ما بضع سنين عندكم ؟” قالوا: دون العشر. قال: “اذهب فزايدهم, وازدد سنتين في الأجل” قال: فما مضت السنتان حتى جاءت الركبان بظهور الروم على فارس, ففرح المؤمنون بذلك, (تفسير ابن كثير)

அக்காலத்தில் இரண்டு பெரிய சாம்ராஜ்யங்கள் இருந்தன. 1. ரோமானியப் பேரரசு கிறிஸ்தவர்கள் 2.பாரசீகப் பேர ரசு நெருப்பு வணங்கிகள். இவ்விருவருக்கும் பெரும் சண்டை அவ்வப்போது நடைபெறும். அவ்வாறு சண்டை நடக்கும்போது ரோமானியப் பேரரசு வெற்றி பெற்ற வேண்டும் என முஸ்லிம்கள் நினைப்பார்கள். பாரசீகப் பேரரசு வெற்றி பெற வேண்டுமென முஷ்ரிக்கீன்கள் நினைப்பார்கள். இந்நிலையில் ரோமர்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) வெற்றி கிடைக்கும். அதனால் முஸ்லிம்கள் சந்தோஷமடைவார்கள்  என்ற மேற்படி வசனம் இறங்கியவுடன் முஷ்ரிக்கீன்கள் ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்களிடம் வந்து உம்முடைய நண்பர்  ரோமர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறாரே என்றவுடன் அவர் சொன்னது நிச்சயம் நடக்கும் என அபூபக்கர் ரழி கூறினார்கள். பந்தயம் வைத்துக் கொள்ளலாமா என முஷ்ரிக்கீன்கள் கேட்க அதற்கு அபூபக்கர் ரழி சம்மதித்தார்கள். (பந்தயம் வைப்பது அப்போது ஹராமாக இருக்கவில்லை. பின்பு ஹராமாக்கப்பட்டது.) எத்தனை வருடம் என முஷ்ரிக்கீன்கள் கேட்க, ஏழு வருடத்திற்குள் வெற்றி கிடைக்கலாம் என அபூபக்கர் ரழி கூறினார்கள். ஏழு வருடம் ஆகி விட்டது. எதுவும் நடக்கவில்லை. முஸ்லிம்கள் கவலைப்பட்டார்கள். சில ரிவாயத்தில் இது குறித்து நபி ஸல் அவர்கள் கேள்விப்பட்ட போது அபூபக்கரே ஏன் அவ்வாறு பந்தயம் போட்டீர்கள் என்று கேட்க அல்லாஹ் ரஸூலின் வாக்கு உண்மையாகும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு பந்தயம் போட்டேன் என்றார்கள்)  பிறகு நபி ஸல் அவர்கள் முஷ்ரிக்கீன்களிடம் பிழ்உ ஸினீன என்றால் எத்தனை வருடங்களைக் குறிக்கும் என்று கேட்டார்கள். பத்துக்கும் குறைவான வருடங்களைக் குறிக்கும் என்று முஷ்ரிக்கீன்கள்  பதில் கூறினார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் வசனம் இறங்கி ஏழு வருடங்கள் தானே ஆகிறது. இன்னும் இரண்டு வருடங்களைக் கூட்டிக் கொள்ளுங்கள் என்றார்கள் சொல்லி முடித்த அடுத்த வருடமே ரோமர்கள் வெற்றியடைந்த செய்தி முஸ்லிம்களுக்கு கிடைத்து முஸ்லிம்கள் சந்தோஷமடைந்தார்கள்.

படிப்பினை- முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் எவ்வளவோ சண்டைகள் நடந்துள்ளது. கிறிஸ்தவர்களால் முஸலிம்கள் தாக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ உண்டு. அப்படியிருந்தும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஓட்டுக்கள் பிரிந்தால் யாருக்கு இலாபம்?

கடந்த தேர்தலில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளில் கூட சங்பரிவார் கட்சி ஜெயிப்பதற்குக் காரணம்-அங்கு முஸ்லிம் வேட்பாளர் மூன்று நான்கு கட்சிகளில் தனித் தனியாக போட்டியிட்டார்கள் அது எதிரிகளுக்கே சாதகமாக அமைந்தது. சங்பரிவார் வேட்பாளர் பெற்ற வாக்குளை விட அம்மூன்று முஸ்லிம்களும் சேர்ந்து பெற்ற வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் பல மடங்கு அதிகம். எனினும் வாக்குகள் சிதறியதால் எந்த முஸ்லிமும் வெற்றி பெற முடியவில்லை. உபி.யில் முஸ்லிம்கள் நிறைந்த தேவ்பந்த் பகுதியிலும், கேரளாவில் பல இடங்களிலும் இதே தான் நடந்தது. சங்பரிவார் கட்சியைச் சார்ந்த முக்கியப் புள்ளியிடம் இந்த தேர்தலில் நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது முஸ்லிம் அமைப்புகளை ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்வோம் அதுவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு என்று கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறக்காரணம் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் இணைந்து எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்கள்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலை இந்தியாவில் பெரும்பாலும் உள்ளது.அந்த நிலை உருவாக விடக் கூடாதுஎன்பதற்காக இத்தகைய சூழ்ச்சி நடைபெறுகிறது.அல்லாஹ் சூழ்ச்சிகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக

முஸ்லிம்களிடம் ஒற்றுமை பற்றிய கோஷம் மட்டும் இருக்கிறது.அதை செயல்படுத்தும் செயல் திட்டம் இல்லை

ஒரு விடுமுறை நாளில் முல்லா நஸ்ருத்தீன் இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக் கிலோ ஆட்டுக்கறி வாங்கினார். அருகிலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து “ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி” என்றொரு செய்முறை புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக்கொண்டு ஓடியது தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரும் பதறினார்கள். நாயைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். முல்லா மட்டும் பதறவுமில்லை. ஓடவுமில்லை. குறுக்கே வந்த ஒருவர் ஏன்ம்பா.. “நாய் உன் இறைச்சிப் பையை தூக்கிக் கொண்டு போகிறது. நீ பதறாமல் நிற்கிறாயே..? என்று கேட்டார். முல்லா சொன்னாராம். “நாய் கறியைக் கொண்டு போனாலும் செய்முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.” இதுபோல் இன்று முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களின் அவல நிலையை, குறிப்பாக அரசியலில் உரிய பங்களிப்பு இல்லாததை மேடை தோறும் பேசுகிறார்களே தவிர அதை சீர்படுத்த ஒரே அணியில் ஒன்றாக இணைவது தான் ஒரே வழி என்பதை சிந்திப்பதில்லை.                                      

பதவி ஆசையும். பண ஆசையும் தான் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் ஒன்றிணைவதை தடுக்கிறது

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى5 عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا6 فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ7 وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ رواه أبوداود

ஓட்டுக்குப் பணம் வாங்குவது ஹராமாகும்.

அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஊழல்வாதிகள் தான். என்றாலும் பெரிய அநியாயக்காரனின் தீமையை விட்டும் தற்காத்துக் கொள்ளவே,குறைந்த அநியாயக்காரனுக்கு நாம் ஓட்டுப் போடுகிறோம். அவ்வாறிருக்க நாம் அவர்களிடம் பணம் பெறுகிறோம் என்றால் அவர்கள் செய்யும் ஊழலுக்கு நாமும் உடந்தை என்று அர்த்தம். அப்பாவத்தில் நமக்கும் பங்கு உண்டு. பாசிச அரசுக்கு எதிராக, மழைக்காக நாம் செய்யும் துஆக்கள் ஏற்கப்படாததற்கு இதுவும் காரணமாக அமையலாம்.   

18 Sha’aban 1442

02-04-2021

                                            


Download Pdf

Lorem Ipsum

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *