தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

பாவங்களால் பாழாகும் உலக வாழ்க்கை -தொடர் 2

19-10 -2018

சஃபர்

 

     بسم الله الرحمن الرحيم  

பாவங்களால் பாழாகும் உலக வாழ்க்கை -தொடர் 2

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

 

الذنوب تنقسم إلى قسمين: صغائر وكبائر، ولقد سمى نبينا الكبائر بالموبقات والمهلكات، وكل ذنب تَوَعَّدَ الله مرتكبه بعذاب أو لَعْنِ أوْ حَدِّ في الدنيا.

أما الصغائر فقد حذَّر منها نبينا إذ يقول (إياكم ومُحَقّرات الذنوب، فإنما مثل محقّرات الذنوب كمثل قوم نزلوا بطن واد، فجاء ذا بعود وذا بعود، حتى حملوا ما أنضجوا به خبزهم، وإن محقّرات الذنوب متى يُؤخذ بها صاحبها تهلكه

சிறு பாவங்களை அற்பமாக கருதக் கூடாது. சிறு பாவங்களுக்கு உதாரணம் ஒரு பள்ளத்தாக்கில் தங்கும் கூட்டம் அடுப்பெரிக்க ஒரு குச்சி கூட அங்கு இல்லாத நிலையில்  அவர்களில் பலரும் பல திசைகளில் சென்று ஆளாளுக்கு ஒரு சிறு குச்சியை எடுத்து வந்தார்கள். எல்லாம் சேர்ந்து பெரும் கட்டாக ஆகி விட்டது. அதுபோல் சிறு பாவம் தானே என்று நினைக்கிறோம். ஆனால் அவைகள் மொத்தமாக சேர்ந்தால் அவைகளின் நிலை வேறு தான். மேலும் சில இமாம்கள் கூறும்போது சிறு பாவங்கள் கூட அதை செய்பவர்களின் துணிச்சலை, மனோ நிலையை கவனித்து பெரும்பாவமாக மாறும். 

كان السلف الصالح يتعاملون مع المعصية بحذر شديد، فعن عبد الله بن مسعود : إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذُبَابِ مَرَّ على أنفه فقال به هكذا -أي بيده - فذبه عنه أما المعصية والعياذ بالله فهى شؤم على صاحبها

கெட்டவன் தன் பெரும்பாவத்தையும் தன் மூக்கின் மீது வந்து அமரும் ஈயைப் போன்று இலேசாக கருதுவான் என்று கூறிய இப்னு மஸ்ஊத் ரழி ஈயை தன் கையால் இலேசாக தட்டி விடுவது போல் சைகை காட்டினார்கள்

وعن أنس بن مالك رضي الله عنه قال: (إنكم تعملون أعمالاً هي أدق في أعينكم من الشعر، وإن كنا لنعدها على زمن رسول الله من الموبقات

ولذلك روي أن الإمام الشافعي رحمه الله لما جلس بين يدي إمام دار الهجرة الإمام مالك رحمه الله ورأى عليه مخايل النجابة والذكاء بادية، وأعجبه وفورُ عقله وكمال حفظه قال له ناصحا: إني أرى الله قد ألقى على قلبك نوراً فلا تطفئه بظلمة المعصية

பாவத்தினால்இரணம்தடைபடும்என்பதற்கு இன்னும் சிலஉதாரணங்கள்- கடந்த வாரத் தொடர்

قال علي بن أبي طالب رضى الله عنه: "ما نزلت عقوبة إلا بذنب وما رُفعت إلا بتوبة - وقال أبو سليمان الدارني رحمه الله: "أني أعصي الله فأعرف ذلك في خُلق دابتي وزوجتي (ترغيب

قال جعفر بن محمد بن علي بن الحسين يا سفيان إذا أنعم الله عليك بنعمة فأحببت بقائها ودوامها فأكثر من الحمد والشكر عليها ، فإن الله عز وجل قال في كتابه : ( لئن شكرتم لأزيدنكم )وإذا استبطأت الرزق فأكثر من الاستغفار ، فإن الله تعالى قال في كتابه : ( استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا

பாவங்களின் காரணமாக ஆயுள் குறையும்

இதற்குஇரு வித விளக்கங்கள் 1.உண்மையாகவே ஆயுள் குறைந்து விடுவது. நன்மை செய்திருந்தால் 90 வயது வரை வாழ்ந்திருப்பான். ஆனால் பாவங்களின் காரணமாக எழுபது வயது வரை மட்டுமே வாழ்வான்.

சதகா ஆயுளை நீளமாக்கும்.   பாவங்கள் ஆயுளைக்குறைக்கும்

 2.உண்மையிலேய ஆயுள் குறையாது மாறாக ஆரோக்கியமான வாழ்வு சென்று விடும். எண்பது வயதில் வர வேண்டிய நோய்கள் 40 வயதிலேயே வந்து விடும். உம். நாற்பது வயதிலேயே இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற வியாதிகள் வந்து விடும் அவனால் ஓடியாடி உழைக்க முடியாது.

பாவத்தின் காரணமாக முகத்தில் இருள் ஏற்படும்

وفي هذا يقول ابن عباس رضي الله عنهما: (إن للحسنة ضياء في الوجه ونوراً في القلب وسعة في الرزق وقوة في البدن ومحبة في قلوب الناس. وإن للسيئة سواداً في الوجه وظلمة في القلب ووهناً في البدن ونقصاً في الرزق وبغضاً في قلوب الناس﴿ وَمَن لَّمْ يَجْعَلِ ٱللَّهُ لَهُ نُوراً فَمَا لَهُ مِن نُورٍ ﴾النور

பாவங்களின் காரணமாக வணக்க வழிபாட்டில் படிப்படியாக தடை ஏற்படும்.

. وقال وهيب بن الورد رحمه الله: "لا يجد طعم العبادة من عصى الله ولا من همّ بمعصيته". (الترغيبوالترهيب)

இன்று ஒரு பாவம் செய்தால் இன்று ஒரு வணக்கம் தடைபடும். நாளை ஒரு பாவம் செய்தால் நாளை ஒரு வணக்கம் தடைபடும். உதாரணமாகமுதலில் நஃபிலான வணக்கம் தடைபடும். பின்பு சுன்னத்தான வணக்கங்கள் தடைபடும். அப்போது தான் இது பாவத்தின் பாதிப்புகள் என்பது புரியும். யாரேனும் ஷைகுமார்களிடம் பைஅத் வாங்கியிருந்தால் ஷைகுடனான தொடர்பு துண்டித்து விடும். பின்பு அன்றாட திக்ருகள் விடுபடும். பின்பு தஹஜ்ஜுத் விடுபடும். அதற்குப் பின்பு வெளிப்படையான அமல்களும் தடைபட்டு விடும்.

பாவங்களின் காரணமாக உள்ளம் இறுகி விடும்

الران هو الذنوب والمعاصي- : المطَّففين:14]{كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ}- قسوة القلب وجفاء العين:

عن ابي هريرة عن النبي صلي لله عليه وسلم ان المؤمن اذا اذنب كانت نكتة سوداء في قلبه ...... (ترمذي

மனிதன் செய்யும் பாவங்களால் மரங்கள் செடிகள் என அனைத்துக்கும் பாதிப்பு

பாவிகள் நிறைந்த உலகத்தில் வாழ்வதால் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் பாவிகளால் இந்த பூமிக்கு வரும் ஆபத்துகள் நல்லவர்களுக்கும் ஏற்படும். அவ்வப்போது ஏற்படும் பூகம்பம், சுனாமி, எரிமலை சீற்றம், புயல், பொருளாதார தட்டுப்பாடு, காய்கறி உற்பத்திக் குறைவு, மழை இல்லாத வறட்சி  ஆகிய அனைத்துக்கும் பாவிகளே காரணம்.ஆனால் அவர்களுடன் வாழ்வதால் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு கெட்டவனுக்கு முறைப்படி தண்டனை வழங்கப்பட்டு அவன் செத்து விடுகிறான்  என்றால் அதனால் ஏற்படும் பரக்கத், செழிப்பாகிறது நாற்பது நாட்கள் மழை பெய்வதால் ஏற்படும் செழிப்பை விட அதிகமாகும் என்று கூறினார்கள் அதாவது  அந்த  கெட்டவன் உயிரோடு நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த வரை அவனுடைய பாவங்கள் அளவுக்கு இந்த பூமியில் செழிப்பு கொஞ்சம் குறைந்திருந்தது அவன் இறந்த பின்பு அந்த செழிப்பு மீண்டும் ஏற்படுகிறது இதனால் தான் ஒரு கெட்டவன் செத்துப் போனால் இந்த பூமியில் உள்ள மலைகள்,மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் நிம்மதி அடைகின்றன. அது மட்டுமல்லாமல் இறை நல்லடியார்களும் நிம்மதி அடைகிறார்கள் ஆக எந்த அளவுக்கு இந்த பூமியில் கெட்டவர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இந்த பூமி பாதிக்கப்படும் ஆனால் கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வரும்போது கெட்டவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள் அப்போது இந்த பூமியைப் பார்த்து அல்லாஹ் பூமியே நீ உன்னுடைய பரக்கத்தை முழுமையாக வெளிப்படுத்து என்று கூறுவான் அப்போது இந்த பூமி மிகவும் செழிப்பாக இருக்கும். எந்த அளவுக்கென்றால் இந்த பூமியில் விளையும் ஒரு மாதுளையை ஒரு கூட்டமே உட்கார்ந்து சாப்பிடும்பின்பு  அதன் தோலை மக்கள் மழைக்கு குடையாக பயன்படுத்துவார்கள் அந்த அளவுக்கு மாதுளம் பழம் பெரிதாக இருக்கும். ஒரு மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் ஒரு மாபெரும் கூட்டத்தினருக்கே போதுமானதாக இருக்கும்

 

நபி ஸல் அவர்கள் கூறும்போது கடைசி காலத்தில் கஃபத்துல்லாவை இடிப்பதற்காக ஒரு தீவிரவாத கும்பல் புறப்படுவார்கள் அவர்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் வழியிலேயே ஒரு மைதானத்தை கடக்கும்போது பூகம்பத்தால் அழிக்கப்படுவார்கள் அவர்கள் அழிக்கப்படும்போது அந்த இடத்தில் வசித்துக் கொண்டிருக்கும் நல்ல மக்கள் உட்பட அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறிய போதுஆயிஷா ரழி அவர்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே கஃபாவை இடிக்க வருபவர்களை அல்லாஹ் அழிப்பது நியாயம் ஆனால் அவர்களுடன் சேர்ந்து நல்லவர்களும் அந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களும் சேர்ந்து  ஏன் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்டதற்கு நபி ஸல் அவர்கள் அல்லாஹ் கெட்டவர்களை அழிக்கும்போது அவர்களுடன் இருக்கும் நல்லவர்களும் அழிக்கப்படுவது இயல்பு ஆனால் அந்த நல்லவர்கள் மறுமை நாளில்  அவர்களுடைய எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் நல்ல நிலையில் எழுப்ப ப்படுவார்கள் என்றார்கள்  இருக்கும்–

தஃப்ஸீர் இப்னு கஸீர்

பாவங்களை விட்டும் விலகி அந்தப் பாவங்களுக்காக இஸ்திஃபார் செய்வதின் பலனை விளக்கும் அற்புத சம்பவம்

كان الإمام أحمد بن حنبل في مدينة غريبة لا يعرفه أهلها وقرر بعد أن بلغ به التعب مبلغه أن ينام في المسجد فرآه حارس المسجد فرفض أن يمكث فيهفقال الإمام سوف أنام موضع قدمي فقط ونام الإمام موضع قدمه فقام الحارس بسحبه من قدميه وأخرجه من المسجدوكان الإمام أحمد شيخا وقورا تبدو على وجهه ملامح التقوى والصلاح، فلما رآه خباز بهذه الهيئة عرض عليه أن يحضر لينام في منزله،فذهب معه ولاحظ الإمام أحمد أن الخباز وهو يقوم بعمله في عجن العجين وخبز الخبز أنه يستغفر ويستغفر ويستغفر،فلما رأى الإمام حال هذا الخباز مع الاستغفار استأذنه أن يسأله سؤالاً، وكان الإمام يعرف أن للاستغفار فوائد عظيمةفقال له هل وجدت لاستغفارك هذا ثمرة،فأجابه الخباز: نعم.. أنا والله كلما دعوت الله دعوة استجابها لي ما عدا دعوة واحدة،قال له الإمام أحمد وما هي هذه الدعوة التي لم تستجب؟قال الخباز: دعوت الله أن يريني الإمام أحمد بن حنبلفقال الإمام: أنا الإمام أحمد بن حنبل، والله إني جررت إليك جراً؟

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் தெரியாத ஊருக்குச் சென்ற போது மிகவும் சோர்வு ஏற்பட்டதால் ஒரு மஸ்ஜிதில் சற்று நேரம் ஓய்வெடுக்க முற்பட்ட போது அங்குள்ள காவலாளி இமாம் அவர்களை யார் என்று தெரியாத தால் இங்கெல்லாம் தங்கக் கூடாது என விரட்டினார்.  இமாம் அவர்கள் ஒரு கால் வைக்கும் அளவுக்கு இடம் இருந்தால் போதும் என்றெண்ணி மிகவும் குறுகிய இடத்தில் ஓய்வெடுக்க, அந்த காவலாளி கால்களைப் பிடித்து இழுத்து வெளியேற்றி விட்டார். அந்த நிலையிலும் தான் யார் என்பதை தெரியப் படுத்தாமல் இருந்தது அவர்களின் பணிவை காட்டுகிறது. பின்பு இமாம் அவர்கள் மிகவும் சோர்வுடன் நடந்து வந்து கொண்டிருந்த போது அவர்களின் நிலை கண்டு, ரொட்டி சுட்டு விற்கும் ஏழையான நல்ல மனிதர் ஒருவர் வாருங்கள் என் வீட்டில் நான் உங்களுக்கு இடம் தருகிறேன் என்று அழைத்துச் சென்றார். அவருக்கும் இமாம் அவர்களை யாரென்று தெரியாது இந்நிலையில் இமாம் அவர்கள் அவரின் செயல்பாடுகளை கவனித்த போது அவர் தனது ஒவ்வொரு வேலையிலும் இஸ்திஃபாரை அதிகம் மொழிபவராக இருந்தார். அவரிடம் இமாம் அவர்கள் நீங்கள் இவ்வளவு அதிகமாக இஸ்திஃபார் செய்கிறீர்களே இதன் பலனை நீங்கள் அனுபவித்துள்ளீர்களா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் பல தடவை அனுபவித்துளலேன். நான் என்ன துஆ கேட்டாலும் அல்லாஹ் கபூல் செய்துள்ளான் என்று கூறினார் பின்பு கவலையுடன் ஆனால் ஒரே ஒரு துஆவை  மட்டும் நான் பல வருடங்களாக கேட்டும் அல்லாஹ் இதுவரை கபூல் செய்யவில்லை என்று வருத்தப்பட்ட போது உடனே இமாம் அவர்கள் அது என்ன துஆ என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் யாஅல்லாஹ் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களை என் கண்ணில் காட்டுவாயாக அவர்களின் சந்திப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என பல முறை நான் துஆ செய்தேன் அதுதான் இன்னும் நிறைவேறவில்லை என்று கூற, உடனே இமாம் அவர்கள் நான் தான் அஹ்மதுப்னு ஹன்பல். இங்கு நானாக வரவில்லை. அல்லாஹ்வின் மூலம் நான் உங்களிடம் இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்றார்கள்

© 2018 All Rights Reserved.
http://ulama.in/