தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

வினோதமான தீர்ப்புக்கள்

05-10 -2018

முஹர்ரம்- 24

 

     بسم الله الرحمن الرحيم  

வினோதமான தீர்ப்புகள்

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

நமது இந்திய நாடு மிகச் சிறந்த பாரம்பரியம் கொண்ட பண்பாடு மிக்க  நாடாகும். இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியேவணிகர்களாக  தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர். அதற்கு முன்பே அதாவது நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டதுமேலும்         

 என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பானخير الله

பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம்.

இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்

 

  இவ்வளவு சிறந்த இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் இன்றைய நிலை

முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சதிகளை தொடர்ந்து மத்திய அரசுசெய்து வருகிறது. நாட்டின் அனைத்து துறைகளிலும் பாசிசம் பரவி விட்ட இந்த சூழ்நிலையில் உச்ச நீதி மன்றம் சமீபத்தில் வழங்கிய சில தீர்ப்புகள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்களை அழிப்பதற்கான முன்னோட்ட மாகவும், நம்முடைய சொத்துகளை முழுமையாக அழிப்பதற்கான முயற்சியாகவும், முஸ்லிம்கள் உயர்வாக மதிக்கும் கற்பை கேலிக்கூத்தாக்கும் வகையிலும் அமைந்துள்ளன. 1. முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் என்பது கட்டாயமல்ல 2.கள்ளத்தொடர்புகள் கிரிமில் குற்றமல்ல. இந்த இரண்டு தீர்ப்புகளின் பிண்ணணியையும் நாம் ஆராய்ந்து விழிப்புணர்வு பெற கடமைப் பட்டுள்ளோம்.                                     

மஸ்ஜித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பு

عن عائشة أن النبي صلى الله عليه وسلم أمر ببناء المسجد في الدور (صحيح ابن خزيمة) وفي رواية ابي يعلي أمر ببناء المسجد في الدور أن تنظف وتطيب

முஸ்லிம்கள் வசிக்கும் இடமெல்லாம் மஸ்ஜிதை கட்ட வேண்டுமெனவும் அந்த மஸ்ஜிதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், நறுமணம் கமழச் செய்ய வேண்டுமெனவும் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்         

عن أبي عثمان قال كتب سلمان إلى أبي الدرداء يا أخي عليك بالمسجد فالزمه فإني سمعت رسول الله يقول المسجد بيت كل تقي (مسند البزار) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ أَحَبُّ الْبِلاَدِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلاَدِ إِلَى اللَّهِ أَسْوَاقُها

நபி ஸல் ஓரிடத்தில் சில நாட்கள் தங்கினாலும் அங்கு மஸ்ஜிதை கட்டுவார்கள்.நமக்கும் அவ்வாறே ஏவினார்கள்

நபி (ஸல் அவர்கள் மதீனாவிற்குள் நுழைவதற்கு முன்பு குபாவில் செவ்வாய்  புதன்  வியாழன் மூன்று நாட்கள் குபாவில் தங்கியிருந்தார்கள். அமைதி கிடைத்த சொற்பகாலத்திற்குள் 

அங்கு இஸ்லாமின் முதல் பள்ளிவாசலைகட்டினார்கள் என்பதும்மதீனாவிற்கு சென்றதும் முதலாவதாக அவர்கள் மஸ்ஜிதுன்நபவிக்காக இடத்தை வாங்கிபள்ளிவாசலின் கட்டிடப்பணியை கவனித்தார்கள்என்பதும் குறிப்பிடத்தக்கது

وكان النبي صلى الله عليه وسلم إذا نزل منزلاً في سفر أو حرب وبقي فيه مدة اتخذ فيه مسجداً يصلي فيه بأصحابه رضي الله عنهم، كما فعل في خيبر. (وفاء الوفا بأخبار المصطفى).عن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم :" إن الله ينادى يوم القيامة أين جيراني أين جيراني فتقول الملائكة ربنا من ينبغي له أن يجاورك فيقول أين عُمَّارُ المساجد \". أخرجه الحارث

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ:( مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ ، أَعَدَّ اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلاً كُلَّمَا غَدَا او راح  (مسند احمد )

وعَنْ بُرَيْدَةَ , عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم , قَالَ:بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ ، إِلَى الْمَسَاجِدِ ، بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَة.أخرجه أبو داود

عَنْ أَبِي رَزِينٍ ، عَنِ ابْنِ أُمِّ مَكْتُومٍ ، قَالَ:جِئْتُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ ، كُنْتُ ضَرِيرًا ، شَاسِعَ الدَّارِ ، وَلِي قَائِدٌ لاَ يُلاَئِمُنِي ، فَهَلْ تَجِدُ لِي رُخْصَةً أَنْ أُصَلِّيَ فِي بَيْتِي ؟ قَالَ : أَتَسْمَعُ النِّدَاءَ ؟ قَالَ : قُلْتُ : نَعَمْ ، قَالَ : مَا أَجِدُ لَكَ رُخْصَةً. أخرجه أحمد 

கடைசி காலத்தில் கியாமத்திற்குப் பின் மஸ்ஜித்கள் அனைத்தும் சுவனத்திற்கு உயர்த்தப்பட்டு சுவனத்தின் அங்கங்களாக ஆக்கப்படும் என்ற குறிப்பும் சில தஃப்ஸீர்களில் காணப்படிகின்றன

முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் தேவையில்லை. என்ற வாதத்திற்கு நீதி மன்றம் கூறிய காரணம்

فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ

இந்த வசனத்தை மேற்கோள் காட்டி முஸ்லிம்களுக்கு பூமி முழுவதும் தொழுமிடம் என்று தானே அவர்களின் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு பள்ளிவாசல் அவசியமில்லை என்ற வாதத்தை நம்முடைய வேதத்தில் இருந்து இத்தீர்ப்பை இந்த அதி மேதாவிகள் வழங்கியிருக்கிறார்கள் ஆனால் உண்மையில் அந்த வசனம் பிரயாணத்தில் தொழுவது பற்றி வந்துள்ள வசனமாகும்.

عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُصَلِّى وَهُوَ مُقْبِلٌ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ - قَالَ - وَفِيهِ نَزَلَتْ (فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّه (مسلم) باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِى السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ.

இந்த தீர்ப்பின் மூலம் மத்திய அரசின் உள்நோக்கம் என்ன?

இந்த தீர்ப்பின் மூலம் இனி வரும் காலத்தில் பள்ளிவாசல்களை போக்குவரத்துக்கு இடையூறு போன்ற சின்னச் சின்ன காரணங்களைக் காட்டி இடிக்கலாம். குறிப்பாக அடுத்து வரவிருக்கும் பாபரி மஸ்ஜித் –இராம ஜென்ம பூமி குறித்த தீர்ப்புக்கு இத்தீர்ப்பு மிகவும் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற உள்நோக்கத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

மஸ்ஜித்களுக்கு எதிராக செயல்பட்ட எத்தனையோ பேருக்கு ஏற்பட்ட கெட்ட முடிவை உலகம் பார்த்துள்ளது

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا ......لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (114)البقرة

نزَلَتْ إخْبَارًا عَنْ الرُّوم الَّذِينَ خَرَّبُوا بَيْت الْمَقْدِس أَوْ فِي الْمُشْرِكِينَ لَمَّا صَدُّوا النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَام الْحُدَيْبِيَة عَنْ الْبَيْت

நபி ஸல் அவர்களை உம்ரா செய்வதற்கு கூட விடாமல் தடுத்த காஃபிர்களுக்கு அல்லாஹ் தகுந்த பாடம் கற்பித்தான்

கள்ளக்காதல் தவறில்லை என்ற தீர்ப்பு பற்றி

பத்திரிக்கைகளை திறந்தாலே கள்ளக்காதல் பற்றிய செய்திகளும், அதனால் நிகழும் கொலைகளும் நிறைந்துள்ள இந்த சூழ்நிலையில் அந்த வாசலை மேலும் திறந்து விடும் வகையில் சமீபத்தில் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்கு முன்பு ஓரினச் சேர்க்கைக்கும் ஆதரவாகவும் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதை விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ கருதாமல் இதிலும் உள்நோக்கம் இருப்பதை நாம் புரிய வேண்டும். இஸ்லாம் எதை எதிர்க்கிறதோ அதை ஆதரிக்க வேண்டும் என்பது பாசிச ஆட்சியின் நிலைப்பாடு. அதற்காக எந்தச்சட்டத்தையும் கொண்டு வருவார்கள் மேலும் தற்போதைய மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் பலர் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவர்களையெல்லாம் காப்பாற்றுகின்ற முயற்சியாகவும் இந்த வினோத தீர்ப்பு கணிக்கப்படுகின்றது   

மற்றொரு புறத்தில் நாம் சிந்தித்தால் முஸ்லிம்களின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதிப்பதுடன் நின்று விடாமல் நாட்டு மக்கள் அனைவரின் எதிர்ப்பையும் இவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நடுநிலையான மக்களுக்கு எதிரான சட்டங்களை இவர்களாலேயே இயற்ற வைத்து இவர்களை கேவலப்படுத்த அல்லாஹ் செய்யும் சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம்                                                              

ومكروا ومكر الله والله خير الماكرين

நீதி மன்றத்தின் இத்தகைய தீர்ப்புகள் பற்றி சமீபத்தில் தமிழகத்தின் பிரபலமான பட்டிமன்ற நடுவர் எழுதிய கண்டன வரிகள்

வயது வந்தோர் யாரும் யாருடனும் உறவு கொள்ளலாம் என்றால் அது அவர்களின் உரிமை என்பது சட்டமானால் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு அவர்களை தட்டிக் கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது தன் மகனோ மகளோ எவனோடும், எவளோடும் சுற்றி விட்டு வந்து வந்தாலும் தாய் தகப்பன் வாயைப் பொத்திக்கொண்டு  இருக்க வேண்டும் என நீதி மன்றம் கூறுகிறதா ? இதை பெற்றோர்கள் ஏற்கப் போகிறார்களாபடிக்கும் வயதில் சாட்டிங் டேட்டிங் என இளம் தலைமுறை சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் உங்களுக்குத் தேவைப்பட்டால் உடலுறவே கொள்ளலாம் என்று சட்டம் இயற்றுவது எந்த வகையில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும். தினமும் ஒருவனைப் பிடித்திருக்கிறது என்று மனைவியோ அல்லது தினமும் ஒருத்தியைப் பிடித்திருக்கிறது என்று கணவனோ தகாத உறவில் ஈடுபடலாம் அது தவறில்லை. அதை தட்டிக் கேட்க க்கூடாது என்றால் அதென்ன வீடா.. அல்லது விப... விடுதியா.. இந்த தீர்ப்பையும் ஏதோ புதுமை என்றும் எதுவும் தப்பாக சொல்லவில்லை என்றும் நுணுக்கமாக பார்க்க வேண்டும் என்றும் ஆதரவளிப்போர் வேண்டுமானால் தன்னுடைய மனைவியையும், சகோதரிகளையும்........

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُفِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ   - سنن ابن ماجه -    عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ غَيْرِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَكْثُرَ الْجَهْلُ وَيَكْثُرَ الزِّنَاوَيَكْثُرَ شُرْبُ الْخَمْرِ وَيَقِلَّ الرِّجَالُ وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ (بخاري

ஓரினச்சேர்க்கையில்ஈடுபட்டதற்காகலூத் (அலை) உடையசமூகம்நெருப்புமழையால்அழிக்கப்பட்டதுقَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمٍ مُجْرِمِينَ (32) لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِنْ طِينٍ (33) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ (34) فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ (35) فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ (36) وَتَرَكْنَا فِيهَا آَيَةً لِلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ (37)سورة الذاريات

அத்தாட்சியாகநாம்விட்டுவைத்துள்ளோம்என்றஇறைவசனத்திற்கேற்பஜோர்டானில்உள்ளஅந்தஇடம்கடல்சூழ்ந்துஇன்றுமரணக்கடல் (DEAD SEA) என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில்மட்டும்எந்தகடல்உயிரினங்களும்வசிப்பதில்லை. இங்குள்ளகடல்நீர்பலமடங்குஉப்புத்தன்மைகொண்டதும், அடர்த்தியானதுமாகும். காரணம் அந்த சமூகத்தினர் மீது பெய்த அமில மழை அப்பகுதி முழுவதும் பரவியது. பின்பு அப்பகுதியை கடல் சூழ்ந்து கொண்டது.  இந்தநீரின்மேற்பரப்பில்யாரேனும்படுத்தாலும்மிதப்பார்களேதவிர, மூழ்குவதில்லை. அந்த அளவுக்கு உப்புத் தன்மை அதிகம் கொண்ட பகுதியாக இருக்கிறது. அல்லாஹ் இதை அத்தாட்சியாக இன்றும் விட்டு வைத்திருப்பது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பெரும் எச்சரிக்கையாகும். எய்ட்ஸ் என்ற ஒரு நோயே 100 வருடங்களுக்கு முன்பு அறியப்படாத நிலையில் தற்போது உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகள் பல கோடிப் பேர் உள்ளனர். 2013 கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 21 இலட்சம் பேர். ஆப்பிரிக்காவில் 48 இலட்சம் பேர். எய்ட்ஸ் நோயில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இப்போது நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகளால் கூடிய சீக்கிரம் முதலிடத்திலும் வரலாம். ஆக இவை அனைத்திற்கும் காரணம். மேற்படி ஹதீஸில் உள்ள படி எந்த சமூகத்தில் இத்தகைய இழி செயல்கள் அதிகரித்து விடுமோ அந்த சமூகத்தை விதவிதமான நோய்களைக் கொண்டு அல்லாஹ் சோதிப்பான் என்ற நபிமொழியின் பிரதி பலிப்பாகும்.        

© 2018 All Rights Reserved.
http://ulama.in/