தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

மாற்றவோ, அழிக்கவோ முடியாத மதீனாவின் நினைவுச் சின்னங்கள்

 

27-07 -2018

துல் கஃதா -

 

بسم الله الرحمن الرحيم

மாற்றவோ, அழிக்கவோ முடியாத

மதீனாவின் நினைவுச் சின்னங்கள்

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)الحج

மதீனாவில் நபி ஸல் அவர்களின் நினைவுச் சின்னங்களாக எதுவெல்லாம் இருக்கிறதோ அவை இன்று வரை நீடிக்கின்றன. அதை மாற்றவோ அழிக்கவோ யாராலும் முடியவில்லை

நபி ஸல் அவர்கள் தம் சிறிய தந்தைக்கு அமைத்துக் கொடுத்த முகட்டின் அடையாளம் இன்றும் உள்ளது

உமர் ரழி அவர்களின் ஆட்சிக் காலத்தில் மஸ்ஜிதுன் நபவிக்கு வரும் வழியில் அப்பாஸ் ரழி அவர்களின் வீடு இருந்தது. அதில் ஒரு முகடு இருந்தது. அது நபி ஸல் அவர்கள் தங்கள் கரங்களால் தம் சிறிய தந்தைக்கு வைத்துக் கொடுத்த முகடு. (அல்லது குழாய்) அது சற்று நீட்டிக் கொண்டிருந்தது. உமர் ரழி அவர்களின் ஆட்சிக் காலத்தில் அது மஸ்ஜிதுன் நபவிக்குள் வருபவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி உமர் ரழி அவர்கள் அதை உருவிப் போட்டார்கள். அதை தெரிந்து அப்பாஸ் ரழி அவர்கள் காழீ உபய்யுப்னு கஃபு ரழி அவர்களிடம் சென்று நீதம் கேட்க, உபய்யுப்னு கஃபு ரழி அவர்கள் உமர் ரழி அவர்களிடம் ஏன் அதை உருவினீர்கள் என்று கேட்க, அது மஸ்ஜிதுக்குள் நுழைபவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூற அதை உபய்யுப்னு கஃப் ரழி அவர்கள் ஏற்கவில்லை என்ன இருந்தாலும் நீங்கள் அதை உருவியது தவறு. அது நபி ஸல் அவர்கள் வைத்துக் கொடுத்தது. எனவே அதை இருந்த இடத்திலேயே வைத்து விடுங்கள் என்று கூற, அதை உடனே உமர் ரழி ஏற்றுக் கொண்டதுடன் தன் முதுகின் மீது அப்பாஸ் ரழி அவர்களை ஏறச் சொல்லி அதை மீண்டும் பொருத்தும் படி கூறினார்கள். இன்றைக்கும் அதன் அடையாளம் இருப்பதாக கூறப்படுகிறது அதாவது ஸலாம் சொல்வதற்காக உள்ளே நுழையும்போது நிறைய ஆயத்துக்கள் எழுதப்பட்டிருக்கும் அதில்

وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (197)البقرة

என்ற ஆயத்தில் உள்ள நூனுக்கு நடுவில் ஒரு துவாரம் இருப்பதாகவும் அந்த துவாரம் தான் அதன் அடையாளம் என்றும் கூறப்படுகிறது

நபி ஸல் அவர்களின் கப்ரை திருட முயன்றவர்களின் சதி முறியடிக்கப்பட்ட சம்பவம்

ஹிஜ்ரி 650 ல் எகிப்தை தலைமையாக கொண்டு அரபுலகை ஆட்சி செய்து நீதமானவராகவும், இரவில் நீண்ட நேரம் நின்று தொழும் பழக்கம் உடைய மன்னராகிய சுல்தான் நூருத்தீன் என்ற மன்னருடைய கனவில் நபி(ஸல்)தோன்றி, இந்த இரண்டு நபர்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள் என்று கூறி, பயங்கர கண்களுடைய இரு வரைக் காட்டி  விட்டு மறைந்து விட்டார்கள்.

உடனே திடுக்கிட்டு கண் விழித்து எழுந்த  மன்னர் அவர்கள் உளூச் செய்து தொழுது விட்டு தூங்கினார். அப்போதும் ஏதே கனவு தோன்றியது. இவ்வாறு மூன்று தடவை ஏற்பட்ட பிறகு இனியும் தாமதிக்கக் கூடாது என்றெண்ணி நற்குணம் கொண்ட தன் மந்திரி ஜலாலுதீனிடம் கூற, அதைக் கேட்ட அவர் நாம் இனியும் தாமதிக்காமல் உடனே மதீனாவுக்கு புறப்பட வேண்டும்.மேலும் இத்தகவலை நாம் யாரிடமும் சொல்லக் கூடாது என்றார். மன்னர் அன்று இரவிலேயே மதீனா செல்லும் ஏற்பாடுகளைச் செய்து, வேகமாகச் செல்லும் வாகனத்தில் பல செல்வங்களை ஏற்றிக் கொண்டு இருபதுவேலையாட்களையும் அழைத்துக்கொண்டு இரவு பகலாக பயணம் செய்து பதினாறு நாட்களில் மிஸ்ரில் (எகிப்து) இருந்து மதீனாவந்தடைந்தார்கள்.

பிறகு மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று ரவ்ழாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, மிகவும் கவலையுடன் அங்கு அமர்ந்திருந்திருந்தார். அப்போது மந்திரி மதீனாவாசிகளிடம் மக்களே! மன்னர் உங்களுக்காக நிறைய அன்பளிப்புகளை தர காத்திருக்கிறார். உங்களுக்காக மாபெரும் விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் அனைவரும் வாருங்கள் என்று அறிவிப்புச் செய்தார். மன்னர் அவர்கள் விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கும்போது அனைவரையும் கூர்மையாக பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனால் கனவில் கண்ட அந்த இருவர் அங்கே காணப் படவில்லை . அப்போது மன்னர் மதீனாவாசிகளை நோக்கி இன்னும் யாரேனும் இங்கே வராமல் விடுபட்டுள்ளார்களா?என விசாரித்தார். அப்போது மக்கள் “ஆம்! மொராக்கோ  நாட்டைச் சார்ந்த இரு  நபர்கள் விடுபட்டுள்ளனர். அவர்கள் இங்கு வரவில்லை” என்றார்கள். உடனே மன்னர்  அந்த இருவரையும் அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அங்கே வந்தவுடன் கனவில் கண்ட அவ்விருவர் இவர்கள் தான் என்று  உணர்ந்து கொண்டார்.

உடனே மன்னர் அவ்விருவரை.ம் நோக்கி  நீங்கள் யார்? என விசாரித்தார். அதற்கு அவர்கள் நாங்கள் மொராக்கோ நாட்டைச் சார்ந்தவர்கள். ஹஜ்ஜை முடித்து விட்டு ஜியாரத்திற்காக நாங்கள் இங்கு வந்தோம். பிறகு எங்களுக்கு நபியவர்களின் அருகாமையிலேயே இருக்க ஆசை ஏற்பட்டது. ஆகையால் இங்கேயே தங்கி விட்டோம் என்றார்கள்

மன்னர் அவ்விருவரை நோக்கி உண்மையைக் கூறி விடுங்கள் என்று கடுமையாக கேட்ட பின்பும்,  அவர்கள் முன்பு சொன்னதையே உறுதிப் படுத்தினார்கள். மன்னர் அவர்கள் அடுத்த படியாக அவர்கள் தங்குமிடத்திற்குச் சென்று மிக நுட்பமாக ஆராய்ந்தார்கள். ஆனால்  அங்கே எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதனால் மன்னர் அவர்கள் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. அங்கு அவ்விருவரின் முஸல்லாக்கள் ஒரு பாயின் மீது விரிக்கப் பட்டிருந்தது. அதை எடுத்துப் பார்த்த போது அங்கு ஒரு கல் போடப் பட்டிருந்தது. அந்தக் கல்லை நீக்கிப் பார்த்த போது அங்கே ஒரு ஆழமான குழி வெட்டப் பட்டிருந்தது. அதை ஆராய்ந்து பார்த்த போது  அது நபி (ஸல்)  அவர்களின் கப்ரு ஷரீஃபின் அருகாமை வரை சென்றிருந்தது. அதைக் கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

பிறகு மன்னர் கடும் கோபத்துடன் அந்த இருவரிடமும் உண்மையை கூறும்படி நையப் புடைத்த போது அப்போது அவ்விருவரும் நாங்கள் முஸ்லிம்கள் அல்ல. நாங்கள் கிறிஸ்துவர்கள். எங்களுக்கு கிறிஸ்துவ அரசர்கள் அதிகமான பணத்தைக் கொடுத்து இன்னும் அதிகமாக தருவதாகக் கூறி ஆசை காட்டி எங்களை இந்த உடலை எடுத்து வர ஏவினர். எனவே நாங்கள் ஹாஜிகளின் கோலத்தில் இங்கு வந்தோம். இரவு நேரங்களில் சுரங்கம் தோண்டுவோம். தோண்டிய மண்ணை இரவோடு இரவாக பகீஃ கப்ருஸ்தானில் கொட்டி விடுவோம் என்றனர். 

மன்னர் தம் மீது சுமத்தப்பட்ட  மிகப் பெரும் கடமையை நிறைவற்றியதாக உணர்ந்தார் அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் இந்த விஷயத்தை கண்டு பிடிக்க தம்மைத் தேர்ந்தெடுத்ததற்காக  நன்றி செலுத்தினார். பிறகு அந்த இரு கிறிஸ்துவர்களையும் வெட்டும்படி உத்தரவிட்டார்கள். பிறகு ரவ்ழாவைச் சுற்றி நீர் மட்டம் வரை அகலமான அகழ் வெட்டச் செய்து அதில் இரும்பையும், ஈயத்தையும் காய்ச்சி ஊற்றி நபி (ஸல்) அவர்களின் உடல் வரை யாரும் செல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு அமைத்தார். நூல் – வஃபாஉல் அவ்வல்

அதேபோன்று மஸ்ஜிதுன் நபவியின் காதிமீன்களின் தலைவராக இருந்த ஷேக் ஷம்சுத்தீன் ஸுவாப் ரஹ் அவர்களுக்கு  ஆப்தா என்ற ஒரு நண்பர் இருந்தார் அவர் மதீனாவின் அமீருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்.  அந்த நண்பர் ஒரு முறை ஸுவாப் ரஹ் அவர்களிடம் இன்று இரவு ஒரு பயங்கர விஷயம் நடக்கப் போகிறது.  அமீர் எனது நண்பராக இருந்தாலும் அவர் செய்யப்போகும் தவறு என் மனதை உறுத்துகிறது. அதனால் இதை நான் மஸ்ஜிதுன் நபிவியின் பணியாளரான உங்களிடம் கூறுகிறேன். அதாவது ஹலப் நகரவாசிகளில் ஒரு கூட்டத்தினர் அமீரிடம் வந்து ஏராளமான பணத்தை இலஞ்சமாக கொடுத்து ஹழ்ரத் அபூபக்கர் ஹழ்ரத் உமர் ரழி ஆகிய இரு சஹாபாக்களின் புனித உடலை இங்கிருந்து எடுத்துச் செல்ல உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதை அமீரும் ஏற்றுக் கொண்டார் என்று  தகவல் கூறினார். இதனைக் கேட்ட ஸுவாப் (ரஹ்) கூறும்போது எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அமீரின் பணியாள் என்னை அழைக்க வந்தான். நான் அமீரிடம் சென்றேன். அமீர் என்னிடம் இன்று இரவு சில மனிதர்கள் வருவார்கள். அவர்கள் என்ன செய்தாலும் விட்டு விட வேண்டும். அவர்களைத் தடுக்கக்கூடாது என்றார். நான் சரி என்று கூறி விட்டு அங்கிருந்து வந்து விட்டேன். அதன் பின்பு எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டு நபி (ஸல்) அவர்களின் அறைக்குப் பின்னால் அமர்ந்து அழ ஆரம்பித்தேன் அன்று அழுதழுதே பகல் முழுவதையும் கழித்தேன் அன்று இரவு  இஷா தொழுகை முடிந்து மக்கள் அனைவரும் சென்று விட்டனர். நான் மஸ்ஜிதின் அனைத்துக் கதவுகளையும் தாழிட்டு மூடினேன். அப்போது அமீருடைய வீட்டுக்கு அருகில் உள்ள பாபுஸ்ஸலாம் கதவை தட்டி திறக்கச் சொன்னார்கள்அப்போது அமீருடன் ஒரு சிறிய கூட்டம் உள்ளே வந்தது. அதில் நாற்பது நபர்கள் இருந்தனர். அவர்களின் கைகளில் பூமியைத் தோண்டும் மண்வெட்டி, கூடை ஆகியவை இருந்தன. இந்த சம்பவத்தைக் கூறும்  ஸூவாப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் மிம்பருக்கு அருகில் கூட செல்லவில்லை. அவர்கள் அனைவரையும் ஒரு அடையாளம் கூட இல்லாமல் பூமி விழுங்கி விட்டது. அல்லாஹ் தனது பேர ருளால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித உடலையும், அவர்களின் உற்ற தோழர்களின் உடலையும் எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து பாதுகாத்தான் 

நபி ஸல் அவர்களின் மிம்பரைக் கூட நல்லெண்ணத்தில் அடிப்படையில் அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற நினைத்த போது அல்லாஹ் அதை விரும்பாததால் பூகம்பத்தை ஏற்படுத்தி எச்சரித்து அந்த முயற்சியை தடுத்தான்

عن أبن الزناد أن النبي صلى الله عليه وسلم كان يجلس على المجلس ويضع رجليه على الدرجة الثانية فلما ولى أبو بكر رضي الله عنه قام على الدرجة الثانية ووضع رجليه على الدرجة السفلى فلما ولى عمر رضي الله عنه قام على الدرجة السفلى ووضع رجليه على الأرض إذا قعد فلما ولى عثمان رضي الله عنه فعل ذلك ست سنين من خلافته ثم علا إلى موضع النبيّ صلى الله عليه وسلم قالوا فلما أستخلف معاوية زاد في المنبر فجعل له ست درجات وكان عثمان أوّل من كسا المنبر قبطية قالوا فلما قدم معاوية عام حج حرك المنبر وأراد أن يخرجه إلى الشام فكسفت الشمس يومئذ حتى رؤيت النجوم فاعتذر معاوية رضي الله عنه إلى الناس وقال أردت أنظر إلى ما تحته وخشيت عليه من الأرضة وفي رواية له إن معاوية كتب إلى مروان بذلك فقلعه فأصابتهم ريح مظلمة بدت فيها النجوم نهارا فقال مروان إنما كتب إلى أن أرفعه من الأرض فدعا النجاجرة فعمل هذه الدرجات ورفعوه عليها وهي يعني الدرجات التي زادها ست درجات ولم يزد فيه أحد قبله ولا بعده-الكتاب:خلاصة الوفا بأخبار دار المصطفى

 

© 2019 All Rights Reserved.
http://ulama.in/