தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

ஹாஜிகளுக்கு ஆர்வமூட்டல்

 

بسم الله الرحمن الرحيم

 ஹாஜிகளுக்கு ஆர்வமூட்டல்

 13-07-2018     -      28 Shawwal  28    

 

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ (96)ال عمران

கஃபா எனும் வார்த்தை திருக்குர்ஆனில் இரு இடங்களில் இடம் பெறுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَقْتُلُواْ الصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ وَمَن قَتَلَهُ مِنكُم مُّتَعَمِّدًا فَجَزَاء مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِينَ........... [2] (سورة المائدة، الآية 95).

 جَعَلَ اللّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلاَئِدَ (سورة المائدة، الآية 97

இதை தவிர கஃபாவுக்கு திருக்குர்ஆன் பலசிறப்பு பெயர்களை கூறுகிறது. பைத்துல் அதீக், அவ்வல பைத், மஸ்ஜித் ஹராம் போன்ற பல சிறப்பு பெயர்களை கூறுகிறது.அல்லாஹுத்தஆலா அந்த கஃபாவை பூமியின் மையப்பகுதியில் அமைத்திருப்  பதாக ஹதீஸில் வருகிறது.

கஃபா கட்டப்பட்ட வரலாறு

கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது. 1.ஆதம் அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்களின் கரத்தால் கட்டவைத்தான்.2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள்.  3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாயீல் அலை அவர்கள் கட்டினார்கள்.இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது.4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள்.  இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள்.நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித கஃபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: கஃபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் –கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஃபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. கஃபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கத் தயாராகினர்.”குறைஷிகளே! கஃபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ,மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாது” என்று சொல்லிக்கொண்டு,  ஒவ்வொருகுறைஷிக் குலத்தாரும் தங்களுக்கிடையே அப் பணியைப் பிரித்துக் கொண்டு அப்பணியை செய்துமுடித்தனர்.ஆனால் குரைஷிகள் ஹலாலான பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் இன்றைக்கு உள்ள ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர்..

கஃபாவை புதுப்பித்துக் கட்டியபோது நபி இப்றாஹீம் அலை கட்டிய அமைப்பை விட ஆறு அடி உயரத்தை குறைத்து விட்டனர். நபி ஸல் அதை மாற்றி, கஃபாவுக்கு இரு வாசல்கள் அமைத்து, அந்த வாசல்படி உயரத்தை மிகவும் குறைக்க நினைத்தாலும் மக்கள் தவறாக எண்ணி விடக் கூடாது என்பதற்காக அத்திட்டத்தை கை விட்டார்கள்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ لَمَّا بَنَوْا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلَا تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ قَالَ لَوْلَا حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَفَعَلْتُ (بخاري) عن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ لَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِشِرْكٍ لَهَدَمْتُ الْكَعْبَةَ فَأَلْزَقْتُهَا بِالْأَرْضِ وَجَعَلْتُ لَهَا بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا وَزِدْتُ فِيهَا سِتَّةَ أَذْرُعٍ مِنْ الْحِجْرِ فَإِنَّ قُرَيْشًا اقْتَصَرَتْهَا حَيْثُ بَنَتْ الْكَعْبَةَ (مسلم)2588 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْجَدْرِ7 أَمِنَ الْبَيْتِ هُوَ قَالَ نَعَمْ قُلْتُ فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي الْبَيْتِ قَالَ إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمْ النَّفَقَةُ قُلْتُ فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا قَالَ فَعَلَ ذَلِكَ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا وَلَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ أَنْ أُدْخِلَ الْجَدْرَ فِي الْبَيْتِ وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالْأَرْضِ8 (بخاري)1584

 

  1. யஜீத் ஆட்சிக்காலத்தில் அப்துல்லாஹிப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் ஆளுநராக இருந்த போது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பிய படி கஃபாவை சீரமைத்தார்கள்.
  2. அப்துல்லாஹிப்னு ஜுபைர்  ரழிஅவர்களை கொலை செய்ததும் ஹஜ்ஜாஜ் தான். அவர் தன் காலத்தில் மீண்டும் பழையபடியே ஹதீமை கஃபாவுடன் சேர்க்காமல் தனியாக விட்டு கட்டினார்.இப்னு ஜுபைர் ரழி அவர்கள் கட்டியதை ஹஜ்ஜாஜ் இடித்தது யாருக்கும் பிடிக்கவில்லை மீண்டும் அதை மாற்ற ஆலோசனை நடந்த போது கஃபா மன்னர்களின் விளையாட்டு மைதானமாக ஆகி விடக்கூடாது எனக்கூறி இமாம் மாலிக் ரஹ்அதை தடுத்து விட்டார்கள்

فَدَلَّ هَذَا عَلَى صَوَاب مَا فَعَلَهُ ابْن الزُّبَيْر فَلَوْ تُرِكَ لَكَانَ جَيِّدًا وَلَكِنْ بَعْد مَا رَجَعَ الْأَمْر إِلَى هَذَا الْحَال فَقَدْ كَرِهَ بَعْض الْعُلَمَاء أَنْ يُغَيَّر عَنْ حَاله كَمَا ذُكِرَ عَنْ أَمِير الْمُؤْمِنِينَ هَارُون الرَّشِيد أَوْ أَبِيهِ الْمَهْدِيّ أَنَّهُ سَأَلَ الْإِمَام مَالِكًا عَنْ هَدْم الْكَعْبَة وَرَدّهَا إِلَى مَا فَعَلَهُ ابْنُ الزُّبَيْر فَقَالَ لَهُ مَالِك يَا أَمِير الْمُؤْمِنِينَ لَا تَجْعَل كَعْبَة اللَّه مَلْعَبَة لِلْمُلُوكِ لَا يَشَاء أَحَد أَنْ يَهْدِمهَا إِلَّا هَدَمَهَا فَتَرَكَ ذَلِكَ الرَّشِيد (تفسير ابن كثير    

அதற்குப்பின்னர் வாழ்ந்த புகஹாக்கள் இனி எந்த ஆட்சியாளரும் இந்த அமைப்பை மாற்றக்கூடாது என பத்வா வழங்கிவிட்டார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அதே அமைப்பே பாதுகாக்கப்பட்டு வருகிறது.அந்த இல்லத்தை அல்லாஹ்வின் இல்லம் என்று அல்லாஹ் கூறுகிறான். காரணம் அல்லாஹ்வின் அர்ஷிலிருந்து வெளிப்படும் நூர் நேரடியாக அந்த இல்லத்தில் இறங்குவதால் அவ்வாறு கூறப்படுகிறது.

 

நான்கு பொருட்களை மனிதன் எத்தனை முறை  பயன்படுத்தினாலும் அவனது உள்ளத்தின் ஆசை தீராது என உலமாக்கள் கூறுகிறார்கள்.முதலாவது:வானம்- அதன் நிறம்,அதில் தோன்றும் சூரியன் சந்திரன் நட்சத்திரம் போன்றவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் ஆசை தீராது. மேலும் ஒவ்வொரு தடவை காணும்போதும் புதிய தோற்றம் தரும்.2.தண்ணீர்.  ஆயுள் பூராவும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் கடும் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்கும் போது அதன் சுகமே தனிதான்.மூன்றாவது:கஃபதுல்லாஹ்வை பார்ப்பது-எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.மேலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது தோற்றம் தரும்.அல்லாஹ் மனிதனுக்கு பார்வையை வழங்கியதின் பயன் அந்த இல்லத்தை பார்க்கும் போதே பூர்த்தியாகிறது என ஒரு கவிஞர் கூறுகிறார்.இப்பூமியின் மையத்தில் புள்ளி வைக்கவேண்டுமானால் அது கஃபாவின் மீது வைக்கவேண்டும் என்று காரி தய்யிப் ரஹ் கூறுகிறார்கள்.

ஹரம் எல்லைகள் அமைக்கப்பட்ட வரலாறு

ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் கஃபாவை கட்டிக்கொண்டிருக்கும்போது அல்லாஹ் ஒரு மேகத்தை அனுப்பினான். அந்த மேகம் அவர்களுக்கு நிழல் கொடுத்தது.அப்போது அல்லாஹ் தஆலா-  இப்ராஹீமே! எந்த இடம் வரை இந்த மேகம் நிழல் கொடுக்கிறதோ அதுவே என் ஹரம் பூமியாகும் என கூறினான்.அந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளைகண்ணியப்படுத்தவேண்டும்.இந்த இடங்களில் நபிமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு முஃமினின் உள்ளமும் அந்த இல்லத்தை நாடுகிறது.அந்த புனித இடத்தில் நின்று இப்ராஹீம் அலை அவர்கள் ஹஜ்ஜுக்காக அழைப்பு கொடுத்தபோது அந்த சப்தத்தை அல்லாஹ் தஆலா அனைத்து ரூஹ்களுக்கும் கேட்கச்செய்தான்.எத்தனை தடவை பதில் சொன்னார்களோ அத்தனை தடவை ஹஜ் நஸீப் பெற்றார்கள்

، "نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضاً من اللبن فسودته خطايا بني آدمرواه الترمذي وأحمد وغيرهما

 "இது சொர்க்கத்திலிருந்து உலகுக்கு இறக்கப்பட்டது என்றும்,மனிதர்களின் பாவங்கள் அதனை கருப்பாக்கிவிட்டது" என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஜ்ருல் அஸ்வத்துக்கு அருகில் கஃபாவின் வாசல் உள்ளது. ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி "முல்தஜிம்" ஆகும். கஃபத்துல்லாஹ "கிஸ்வா" என்னும் கருப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டுத்துணியில் திருக்குர்ஆன் வசனங்கள் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் எழுதப்பட்டுள்ளன. ஓவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் பிறை 10 இல் புதிய போர்வை போர்த்தப்படுகிறது. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது. "மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபா அமைந்திருக்கும் பள்ளி) தொழுதால் 1 லட்சம் தொழுகையின் நன்மை கிடைக்கும் என்றும், அல்லாஹ்வின் 120 ரஹ்மத்துகள் தினமும் இவ்வீட்டின் மீது இறங்குகின்றன. 60 ரஹ்மத்துகள் ஃதவாபு செய்பவர்கள் மீதும், 40 ரஹ்மத்துகள் அங்கு தொழுபவர்கள் மீதும் இன்னும் 20 ரஹ்மத்துகள் கஃபாவை பார்ப்பவர்கள் மீதும் இறங்குகின்றன" என்று நபிகளார் ஸல்அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலி  அவர்கள் அறிவிக்கிறார்கள்-             தொடரும்    

 

 

 

عَنْ عَطَاءٍ قَالَ لَمَّا احْتَرَقَ الْبَيْتُ زَمَنَ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ حِينَ غَزَاهَا أَهْلُ الشَّامِ فَكَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ تَرَكَهُ ابْنُ الزُّبَيْرِ حَتَّى قَدِمَ النَّاسُ الْمَوْسِمَ9 يُرِيدُ أَنْ يُجَرِّئَهُمْ أَوْ يُحَرِّبَهُمْ عَلَى أَهْلِ الشَّامِ فَلَمَّا صَدَرَ النَّاسُ قَالَ يَا أَيُّهَا النَّاسُ أَشِيرُوا عَلَيَّ فِي الْكَعْبَةِ أَنْقُضُهَا ثُمَّ أَبْنِي بِنَاءَهَا أَوْ أُصْلِحُ مَا وَهَى مِنْهَا قَالَ ابْنُ عَبَّاسٍ رضي اله عنه فَإِنِّي قَدْ فُرِقَ لِي رَأْيٌ فِيهَا أَرَى أَنْ تُصْلِحَ مَا وَهَى مِنْهَا وَتَدَعَ بَيْتًا أَسْلَمَ النَّاسُ عَلَيْهِ وَأَحْجَارًا أَسْلَمَ النَّاسُ عَلَيْهَا وَبُعِثَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ابْنُ الزُّبَيْرِ لَوْ كَانَ أَحَدُكُمْ احْتَرَقَ بَيْتُهُ مَا رَضِيَ حَتَّى يُجِدَّهُ10 فَكَيْفَ بَيْتُ رَبِّكُمْ إِنِّي مُسْتَخِيرٌ رَبِّي ثَلَاثًا ثُمَّ عَازِمٌ عَلَى أَمْرِي فَلَمَّا مَضَى الثَّلَاثُ أَجْمَعَ رَأْيَهُ عَلَى أَنْ يَنْقُضَهَا فَتَحَامَاهُ النَّاسُ أَنْ يَنْزِلَ بِأَوَّلِ النَّاسِ يَصْعَدُ فِيهِ أَمْرٌ مِنْ السَّمَاءِ حَتَّى صَعِدَهُ رَجُلٌ فَأَلْقَى مِنْهُ حِجَارَةً فَلَمَّا لَمْ يَرَهُ النَّاسُ أَصَابَهُ شَيْءٌ تَتَابَعُوا فَنَقَضُوهُ حَتَّى بَلَغُوا بِهِ الْأَرْضَ فَجَعَلَ ابْنُ الزُّبَيْرِ أَعْمِدَةً فَسَتَّرَ عَلَيْهَا السُّتُورَ حَتَّى ارْتَفَعَ بِنَاؤُهُ وَقَالَ ابْنُ الزُّبَيْرِ إِنِّي سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلَا أَنَّ النَّاسَ حَدِيثٌ عَهْدُهُمْ بِكُفْرٍ وَلَيْسَ عِنْدِي مِنْ النَّفَقَةِ مَا يُقَوِّي عَلَى بِنَائِهِ لَكُنْتُ أَدْخَلْتُ فِيهِ مِنْ الْحِجْرِ خَمْسَ أَذْرُعٍ وَلَجَعَلْتُ لَهَا بَابًا يَدْخُلُ النَّاسُ مِنْهُ وَبَابًا يَخْرُجُونَ مِنْهُ قَالَ فَأَنَا الْيَوْمَ أَجِدُ مَا أُنْفِقُ وَلَسْتُ أَخَافُ النَّاسَ قَالَ فَزَادَ فِيهِ خَمْسَ أَذْرُعٍ مِنْ الْحِجْرِ حَتَّى أَبْدَى أُسًّا نَظَرَ النَّاسُ إِلَيْهِ فَبَنَى عَلَيْهِ الْبِنَاءَ وَكَانَ طُولُ الْكَعْبَةِ ثَمَانِيَ عَشْرَةَ ذِرَاعًا فَلَمَّا زَادَ فِيهِ اسْتَقْصَرَهُ فَزَادَ فِي طُولِهِ عَشْرَ أَذْرُعٍ وَجَعَلَ لَهُ بَابَيْنِ أَحَدُهُمَا يُدْخَلُ مِنْهُ وَالْآخَرُ يُخْرَجُ مِنْهُ فَلَمَّا قُتِلَ ابْنُ الزُّبَيْرِ كَتَبَ الْحَجَّاجُ إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ يُخْبِرُهُ بِذَلِكَ وَيُخْبِرُهُ أَنَّ ابْنَ الزُّبَيْرِ قَدْ وَضَعَ الْبِنَاءَ عَلَى أُسٍّ11 نَظَرَ إِلَيْهِ الْعُدُولُ مِنْ أَهْلِ مَكَّةَ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ الْمَلِكِ إِنَّا لَسْنَا مِنْ تَلْطِيخِ ابْنِ الزُّبَيْرِ فِي شَيْءٍ12 أَمَّا مَا زَادَ فِي طُولِهِ فَأَقِرَّهُ وَأَمَّا مَا زَادَ فِيهِ مِنْ الْحِجْرِ فَرُدَّهُ إِلَى بِنَائِهِ وَسُدَّ الْبَابَ الَّذِي فَتَحَهُ فَنَقَضَهُ وَأَعَادَهُ إِلَى بِنَائِهِ (مسلم)2589

 

கஃபா ஆண்டுக்கு மூன்று முறை திறக்கப்பட்டு ஸம்ஸமால் கழுகி சுத்தம் செய்யப்படும்

ஆண்டுக்கு ஒரு தடவை கஃபாவின் மீது ஏறி ஆடை போர்த்தப்படும்.”ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா?என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

 

”அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)”(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)கஃபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

 

”யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)யஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!

 

 

 

 

 

© 2018 All Rights Reserved.
http://ulama.in/