தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

உலக அளவில் இந்தியாவை தலைகுனிய வைத்த ஆசிஃபாவின் மரணம்

 

20– 04 -2018

ஷஃபான்

 

     بسم الله الرحمن الرحيم   

உலக அளவில் இந்தியாவை தலைகுனிய வைத்த ஆசிஃபாவின் மரணம்

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

முஸ்லிம்கள் என்றாலே கொடூரமாக கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதும், முஸ்லிம் பெண்களின் கற்புகளை எப்படி வேண்டுமானாலும் சூறையாடலாம் என்பதும் இந்துத்துவாவின் கொள்கையாக உள்ளது. அதை இன்றைக்கு செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவையே தலை குனிய வைத்துள்ளது. கோவிலுக்குள் வ்வைத்து அந்த சிறுமி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு கூட்டு முறையில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் . இமயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்த ஆசிஃபா பானு,சமீபத்தில் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள கத்துவா நகரத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.இது தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் பதினெட்டு வயதை அடையாத சிறுவர் ஒருவர் உள்ளிட்ட எட்டு ஆண்களை போலீசார் இந்த குற்றம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.

ஆசிஃபாவை மிகவும் கொடூரமாக கொலை செய்த விதம்

ஆசிபா குறித்த மருத்துவ அறிக்கையும், போலீஸ் அறிக்கையும் நம் நரம்பின் இரத்த நாளங்களை உறைய வைக்கும் அளவுக்கு உள்ளன.  பாலிதீன் பையை விரித்து இரத்தம் கோவில் தரையில் சிந்தாத அளவுக்கு முதலில் விரிப்பை ஏற்படுத்தி  கற்பழிக்க தொடங்கி உள்ளனர். அவள் கத்தி விடக்கூடாது என்று தொடர்ந்து போதை மருந்தை கொடுத்துள்ளனர். ஒருவேளை மயக்கம் தெளிந்தாலும் எழுந்து ஓடி விடக்கூடாது என்பதற்காக கால்களை வளைத்து உடைத்துள்ளனர். அதே நிலையில் வைத்தே கடைசி வரை அந்தப் பிஞ்சு சிதைக்கப்பட்டுள்ளார். மரணத்தைக் கூட வலியில்லாமல் தரக்கூடாது என  முதலில் கழுத்தை நெறித்துள்ளனர்.  அப்போதும் மூச்சு இருந்த தால் பின்பக்கமாய் முட்டுக் கொடுத்து நெஞ்சு எலும்பை உடைத்துள்ளனர். அப்போதும் அவளது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க.. இறுதியாக கற்களை எடுத்து மண்டையை உடைத்து  தலை எலும்புகளை உடைத்து அவளின் மூச்சை நிறுத்தியுள்ளனர். ஆசிபாவை எங்கல்லாமோ தேடிய அவளது கோவிலுக்குல் மட்டும் தேடவில்லை அதற்கு அவர் காரணம் கூறும்போது கோவில் இந்துக்களுக்கு புனிதமான இடம் அங்கெல்லாம் அவளை அடைத்து வைக்க சாத்தியமில்லை என்று நாங்கள் கருதினோம் என்பதை அழுதபடி கூறியுள்ளார்

நாட்டின் தற்போதைய நிலை பற்றி பரவலாக வேதனையுடன் பல  கருத்துகள்  உலா வருகின்றன

பாரதி இப்போது இருந்திருந்தால் ஓடி விளையாடு பாப்பா என்று பாடியிருக்க மாட்டார் மாறாக ஓடி ஒளிந்து விடு பாப்பா காவி காம நாய்கள் உன்னைக் குதறி விடும் பாப்பா என்று பாடியிருப்பார்

ஒரு பெண் மருத்துவருக்கு ஒருவர் போன் செய்து என்னுடைய மனைவி கர்ப்பணியாக இருக்கிறாள் அது பெண் குழந்தை என்று தெரிந்து விட்டது அதனால் அதை அபார்ஷன் செய்ய வேண்டும் போன் செய்கிறார். உடனே மறுமுனையில் அந்த டாக்டர் கோபத்துடன் அபார்ஷன் செய்ய வேண்டும் என்று பெண் டாக்டரிடமே கேட்கிறாயா... எல்லோரையும் போல வரதட்சனைக்கு பயப்படுகிறாயா  என்று கோபப்பட அப்போது அந்த நபர் வருத்தத்துடன் “இல்லை நான் வறுமைக்கோ, வரதட்சனைக்கோ பயந்து இந்த முடிவை எடுக்கவில்லை. எனக்கு பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதால் இப்படிப் பேசுகிறேன் என்று பதில் கூறினாரானாம்                

குற்றங்கள் குறைய ஒரே வழி இஸ்லாமிய நாடுகளைப் போல் தண்டனைகள் கடுமையாக வேண்டும்

இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் குற்றவியல் தண்டனைகளை காட்டு மிராண்டித்தனம் என்று சிலர் புரியாமல் பேசுவார்கள். ஆனால் உண்மையான இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் குற்றங்கள் கற்பழிப்பு, கொலை, திருட்டு போன்ற குற்றங்கள் மிகவும் குறைவு. ஒரு கொலைகாரனை பழிக்குப்பழியாக இஸ்லாமிய அடிப்படையில் கொலை செய்யப்படும்போது அங்கே ஒரு உயிர் போக்கப்பட்டாலும் பல உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. கற்பழிப்பு விஷயத்திலும் அவ்வாறு தான். 

பாலியல்பலாத்காரத்துக்குஎதிராகஎவ்வளவோசட்டங்களைஅரசாங்கம்கொண்டுவந்தபோதிலும்அதுதொடர்ந்துகொண்டேஇருக்கின்றன. 2011 முதல் 2017 வரைம.பியில்மட்டும் 15 ஆயிரத்துக்கும்அதிகமானபாலியல்பலாத்காரவழக்குகள்பதிவாகியுள்ளன.

இந்தியசட்டம்சொல்வதுஎன்ன-இந்தியதண்டனைச்சட்டம் 375, 375 இன்படிபாலியல்பலாத்காரத்தில்ஈடுபட்டவர்களுக்குஆயுள்தண்டனைஅல்லது 10 வருடசிறைதண்டனைவழங்கலாம்.

இஸ்லாத்தில்என்னதண்டனை- ஹிஜ்ரி 1401 –ஆண்டுதுல்கஃதா 11 அன்றுசவூதியின்மாபெரும்அறிஞர்கள், ஆட்சியாளர்கள்அனைவரும்ஒன்றுசேர்ந்துபாலியல்பலாத்காரத்திற்கானதண்டனைஎன்னஎன்றுகுர்ஆன்ஹதீஸ்ஃபிக்ஹ்அடிப்படையில்ஆலோசனைநடத்திஇறுதியாகஅல்-மாயிதாசூராவின் 33 வதுவசனத்தின்படிபாலியல்பலாத்காரத்திற்கானதண்டனைமரணதண்டனையைதீர்மானித்துஅதைஅன்றையதேதியிலேயேஅமுல்படுத்தவேண்டும்என்றுஃபத்வாவழங்கினார்கள். அந்தஃபத்வாவைஅனைத்துநாடுகளுக்கும்அனுப்பிவைத்தார்கள்இன்றுவரைஅரபுநாடுகளில்இச்சட்டம்பின்பற்றப்படுகிறது

குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருந்தாலும் அதற்கு முன்பு பல்வேறு சீர்திருத்தங்களையும் ஒழுக்கங்களையும் சொல்லித்தந்து அதிலும் திருந்தாத போது தான் தண்டனைகள் கடுமையாகும்

இஸ்லாம் சட்டங்களைப் பற்றிப் பேசுவதை விட  சீர்திருத்தங்களைப் பற்றியும்,  முன் நடவடிக்கைகளைப் பற்றியும் தான் அதிகமாக பேசுகிறது. 6666 வசங்களில் சட்டங்களைப் பற்றி பேசும் வசனங்கள் 500 மட்டும் தான். இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்கள் என்பது விசாலமான ஷரீஅத்தின் ஒரு பகுதி மட்டுமே. காரணம் சட்டங்களை விட சீர்திருத்தங்கள் தான் மனிதனை பண்படுத்தும். ஒரு தீமையை தடுக்கும்போது அந்த தீமைக்கான பாதைகள் அனைத்தையும் இஸ்லாம் தடுக்கும் அதுதான் இஸ்லாத்தின் தனித்தன்மையாகும்.

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ (2)سورة النور

 

விபச்சாரம் செய்யும் ஆணையும், பெண்ணையும் சாட்டையால் அடியுங்கள் என்று ஒரேயோரு வரியில் கூறும் குர்ஆன் மற்றொரு சூராவில்அடுத்தவர்களின் வீட்டுக்குச் செல்லும்போது கடை பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் தீய பார்வைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள், பெண்கள் தங்களை அந்நியர்களிடமிருந்து மறைவாக்கிக் கொள்ளும் முறைகள் பற்றி விரிவாக பேசுகிறது

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (27) فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ (28) لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ (29) قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ (30) وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فَرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِيأَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (31)سورة النور

இதே அடிப்படையில் விபச்சாரத்தை நெருங்க வேண்டாம் என்றும் குர்ஆன் பேசுகிறது

தேவைக்காக வெளியில் வரும் போது கூட  அந்நியர்கள் உங்களால் ஈர்க்கப்படும் எந்த செயல்பாடுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள வேண்டும் என மார்க்கம் வலியுறுத்துகிறது

وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (31)

ஆசிபாவின் சம்பவத்தைப் போல் அவரங்கசீப் ஆட்சியில் கோவிலுக்குள் இப்படி நடந்த போதுநி

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற ஒரு இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது. இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்தின் பின்னணியில் தான் அவுரங்கசீப் கோவிலை இடித்து விட்டு கட்டச் சொன்னார் என்பதை சுருக்கி, வரலாற்றை திரித்து கோவிலை இடித்தார் என்பது மட்டும் பிரபலமாக்கப்படுகிறது

 

முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே கொடுமைகள் நடைபெறும் நிலையில் இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

வேண்டுமென்றே நம்முடைய கோபத்தை தூண்டி விட்டு  அதன் மூலம் மதக் கலவரங்களை உருவாக்க வேண்டுமென்பது பாசிசவாதிகளின் திட்டம். கடந்த காலத்தில் எத்தனையோ கொடூர கொலைகளை வீடியோ எடுத்து அதை இணைய தளங்ளில் பரப்புவதின் மூலம் ஒரு பயத்தை உண்டாக்க நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான ஒரு முஃமின் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டான்

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173) فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ وَاتَّبَعُوا رِضْوَانَ اللَّهِ وَاللَّهُ ذُو فَضْلٍ عَظِيمٍ (174)ال عمران

وذلك أن أبا سفيان حين رجع من أحد نادى فقال يا محمد إن الموعد بيننا وبينك بدر الصغرى فقال صلى الله عليه وسلم لغمر قل له ذلك بيننا وبينك إن شاء الله ثم ندم أبو سفيان فقال لنعيم بن مسعود وكان يخرج إلى المدينة للتجارة إذا أتيت المدينة فخوفهم لكيلا يخرجوا فلما قدم نعيم المدينة قال إن أبا سفيان قد جمع خلقا كثيرا فكره أصحاب رسول الله صلى الله عليه وسلم الخروج إليهم وتثاقلوافلما رأى ذلك رسول الله صلى الله عليه وسلم منهم قال والذي نفسي بيده لأخرجن إليهم وإن لم يخرج معي منكم أحد قال فمضى رسول الله صلى الله عليه وسلم للميعاد ومعه نحوا من سبعين رجلا حتى انتهوا إلى ذلك الموضع وكان هنالك سوق فلم يخرج أحد من أهل مكة فتسوقوا من السوق حاجتهم وانصرفوا فنزل قوله تعالى (بحر العلوم

2019 பாராளுமன்ற தேர்தல்முஸ்லிம்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போதே நாட்டின் பல பகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம்களின்  பெயர்கள் பல்லாயிரக்கணக்கில்  நீக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் 2019 தேர்தலில் மிகப்பெரும் சவாலை முஸ்லிம்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே ஒவ்வொரு ஜமாஅத்தும் அந்தந்த பள்ளிவாசல்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என பரிசோதித்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். அரசு இயந்திரங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களின் ஜால்ராக்களாக மாறி விட்ட சூழ்நிலையில், மிகப்பெரும் குண்டு வெடிப்புகளை நடத்திய பாசிசவாதிகளையும் அரசு விடுதலை செய்து விட்ட சூழ்நிலையில் முடிந்த வரை நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

ஆசிஃபா மரணம் தொடர்பாக மாநில ஜ.உலமா சபை செயலாளர் அவர்களின் கண்டன அறிக்கை

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் முஹம்மது யூசுஃப் புஜ்வாலா- நசீமா பீவி  தம்பதியினரின் எட்டு வயது மகள் ஆசிஃபா இந்துத்துவ பயங்கரவாதிகளால் கோவில் வளாகத்தில் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது. இந்திய நாடு எந்த அளவுக்கு மததீவிர வாதத்தின் கொடும்போக்கிற்கு ஆளாகியுள்ளது என்பதை இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசு இப்பாதகத்தை கண்டிப்பதில் மென்மையான போக்கை கடை  பிடிப்பது அநாகரீகமானது. இக்கொடூரமான செயலுக்குரிய மனித மிருகங்களுக்கு இந்த அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பரிந்து பேசுவது கொடுமையிலும் கொடுமையானது என்பதுடன் சர்வதேச அளவில் நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.  இக்குற்றத்தை வெளியே கொண்டு வருவதற்கே அரசியல் தலைவர்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும் தற்போதைய இந்தியாவின் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது

 

மேலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றச் செயல்கள் உ.பி குஜராத் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கொண்டிருப்பது மனிதர்கள் வசிக்கும் நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  ஆசிஃபா நிகழ்வால் அதிர்ச்சியடைந்த இந்தியாவின் முன்னால் உயர் அதிகாரிகள் இணைந்து சுதந்திரத்திற்குப் பின் இப்போது தான் இந்தியா நெருக்கடி நிலையில் இருக்கிறது என்றும் இந்தியா இருண்ட காலத்தில் இருக்கிறது என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது தற்போது இந்தியாவில் சட்ட ஆட்சி இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது. இக்கொடூர செயலை தமிழ் மாநில ஜ.உலமா சபை மிக மிக வன்மையாக கண்டிக்கிறது குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனைகளை உடனடியாக வழங்குவதோடு இக்குற்றத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட வேண்டும் என்றும் ஆசிபாவின் வழக்கை காஷ்மீரில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றுவதுடன் CBI வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

 

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் இவ்வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பெண்களின் உரிமையை பாதுகாப்பதாக கூறிக் கொள்ளும் மத்திய வெறும் வாய்ச் சவடாலில் ஈடுபடாமல் இந்துத்துவ பயங்கரவாதிகளிடமிருந்து  நாட்டு மக்களை பாதுகாப்பதில் உண்மையான அக்கறை செலுத்த வேண்டுமெனவும் இச்சபை வலியுறுத்துகிறது  இனியும் இது போன்ற நிகழ்வுகள் தொடருமானால் மத்திய அரசு ஒட்டு மொத்த இந்திய மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என இச்சபை எச்சரிக்கிறது

 

இப்படிக்கு

  1. அன்வர் பாதுஷாஹ் உலவீ

(மாநில பொதுச் செயலாளர்)

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை

 

© 2019 All Rights Reserved.
http://ulama.in/