தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

கோடை விடுமுறை பிள்ளைகளுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்

 

06-04 -2018

ரஜப்

 

بسم الله الرحمن الرحيم

கோடை விடுமுறை பிள்ளைகளுக்கு

பயனுள்ளதாக அமைய வேண்டும்

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

பள்ளித் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பிக்கும் நேரம் இது.பள்ளிகள் இயங்கும் நாட்களில் முழுக்க முழுக்க பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் அக்கறை காட்டும் பல  பெற்றோர்கள் இந்த விடுமுறை நாட்களிலேனும்  தீனுடைய கல்வியை கற்றுத்தருவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நாட்டின் பல பகுதிகளிலும் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருந்தன.அனைத்து சமுதாயத்து மாணவர்களும் அங்கிருந்து அறிவை கற்றனர்.இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், உலகத் தலைவர்களால் போற்றப்பட்டவருமான லால்பகதூர் சாஸ்திரி மதரஸாவில் கல்வி பெற்றவராவார்.  இவர் போல் சுதந்திர இந்தியாவின் பல தலைவர்கள், குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப் பகுதியைச் சார்ந்த பலரும் மதரஸாக்களில் கல்வி பெற்றவர்களாவர். நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளை கடந்து விட்ட இன்றையை சூழ்நிலையிலும் கூட உத்தர பிரதேசம் பீகார் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் மதரஸாக்கள் தான் தொடக்கப் பள்ளிகளாக இருக்கின்றன. அதனால் தான் அங்கு மதரஸா கல்வி தொடக்க கல்விக்கு ஈடாக அரசாங்கத்தால் கருதப் படுகிறது.ஆனால் இன்று ஸ்கூல், மதரஸா இரண்டையும் தனித்தனியாக பிரித்து விட்ட காரணத்தாலும், மதரஸாவுடைய கல்வியை கற்க முடியாத அளவுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் நேரங்கள் அதைத் தொடர்ந்து வீட்டுப் பாடங்கள் என துன்யாவின் தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதால் பாவம்.. நம் பிள்ளைகளில் எத்தனையோ பேருக்கு முறையாக தீனுடைய கல்வி கிடைக்காமலேயே இருக்கிறது. அத்தகையவர்கள் இந்த கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்தி தீனுடைய கல்வியை கற்க முயற்சிக்க வேண்டும்

ஒரு ஹதீஸைத் தேடி மதீனாவில் இருந்து சிரியாவுக்குச் சென்ற காலம் இருந்தது. ஆனால் இன்று பள்ளிவாசல் தோறும் மதரஸாக்கள் இருந்தும்  மாரக்க க் கல்வியைக் கற்கும் ஆர்வம் இல்லை

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَكُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ (ابوداود) باب الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ- كتاب العلم

நபி ஸல் காலத்தில் மாரக்கக் கல்வியை கற்பதில் பெண்களுக்கு இருந்த ஆர்வம்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَتْ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلَاثَةً مِنْ وَلَدِهَا إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنْ النَّارِ فَقَالَتْ امْرَأَةٌ وَاثْنَتَيْنِ فَقَالَ وَاثْنَتَيْنِ (بخاري) بَاب هَلْ يُجْعَلُ لِلنِّسَاءِ يَوْمٌ عَلَى حِدَةٍ فِي الْعِلْمِ- كِتَاب الْعِلْمِ

முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் அவர்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. சிறந்த பக்தியாளர். அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்யாதவர். ஆனால் அவருடைய தந்தை ஷாஜஹான். மூத்த சகோதரர் தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய அனைவரும்அரசாங்கப் பணத்தை ஆடம்பரமாக செலவு  செய்பவர்கள்.  தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் அதற்குப் பதிலாக ஒரு மஸ்ஜிதை கட்டியிருந்தால் இன்று வரை அவருக்கு நன்மை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் இதுவே அவர் ஒரு ஆடம்பரப் பிரியர் என்பதற்கு உதாரணம். . தாராஷிகோ. இளையவர் முராத் ஆகிய இருவரும் குடிகாரர்கள். அரசுப் பணத்தை குடித்தே அழித்தவர்கள். இந்த இருவருக்கும் உடந்தையாக ஷாஜஹான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒளரங்கசீப் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் வளர்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவருக்குக் கிடைத்தமார்க்கக் கல்வி தான். ம்கதப் மதரஸாக்களில் ஆசிரியர்களின் போதனையால் தன்னுடைய தந்தையும், சகோதரர்களும் செய்வது தவறு என்று புரிந்து கொண்டார். மேலும் முந்தைய ஆட்சியின் அனைத்து ஆடம்பரங்களையும் ஒழித்தார். உதாரணமாக முந்தைய ஆட்சியில் கவிஞர் வாரியம் என்று இருந்தது. இவர்களின் முழு வேலை அரசரைப் புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது. அதைப் படித்து பொற்காசுகளைப் பெறுவது.  இதற்காக அரசுப் பணம் வீணாக்கப்பட்டது ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாரியத்தை கலைத்தார். மன்னரை இசையெழுப்பி தூங்க வைக்க இசைவாணர் குழு என்றிருந்தது அதையும் கலைத்தார். தன் கையால் தொப்பி தயாரித்து அந்தப் பணத்தில் செலவு செய்தார். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படையில் அவர் ஆட்சியை அமையக் காரணம்அவர் பெற்ற மார்க்கக்கல்வியாகும்.

இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுடைய தாய் ஆரம்பத்தில் இவர்களை துணி துவைக்கும் வண்ணானிடம் அனுப்பி வைத்தார்கள். அங்கே போனாலும் நாலு காசு சம்பாதிக்கலாம் என்று. ஆனால் இமாம் அவர்களோ அந்தக் காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கிய இமாமுல் அஃழம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் கல்வி கற்கச் சென்றார்கள்.  மகன் காசு இல்லாமல் வெறுங்கையோடு வருவதைக் கண்ட அந்தத் தாய் நேராக இமாமுல் அஃழம் ரஹ் அவர்களிடம் சென்று “ என்ன... என் மகனின் மனதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா ? வண்ணானிடம் சென்றாலும் நாலு காசு சம்பாதிப்பான். நீங்கள் அவனுடைய மனதை மாற்றி உங்களுடன் அமர வைத்துக் கொண்டீர்.. என்று கோபப்பட, இமாமுல் அஃழம் பொறுமையுடன் தாயே! நீங்கள் உங்களுடைய மகனை துணி துவைக்கும் வண்ணானாக பார்க்கிறீர்கள் ஆனால் நானோ இவரை இந்த நாட்டு மன்னருடன் சரி சமமாக உட்கார்ந்து ஃபாலூதா என்னும் உயர்வகை பானத்தை அருந்துபவராக பார்க்கிறேன் பிற்காலத்தில் இவர் அப்படி வருவார் என்று நினைக்கிறேன் என்றார்கள். அதன்பின்பு அந்தத் தாய் மகனுடைய விருப்பத்தில் தலையிடுவதில்லை. இமாம் அபூயூசுப் ரஹ் அவர்கள் பிற்காலத்தில் இமாமுல் அஃழம் அவர்களிடம் கல்வி பயின்று அவருடைய திறமையின் காரணமாக அந்த நாட்டின் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களால் உயர்ந்த நீதிபதி பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் ஒரு நேரத்தில் மன்னர் விருந்துக்கு அழைத்த போது, அங்கே சென்று மன்னருக்கு அருகில் அமர்ந்து ஃபாலூதாவை அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் அபூயூசுஃப் ரஹ் அவர்களுக்கு பழைய நினைவு வருகிறது அன்று என் தாய் என்னை வண்ணானிடம் அனுப்ப, நான் இமாமுல் அஃழம் அவர்களிடம் சென்று கல்வி பயின்றேனே அப்போது அவர்கள் கூறியது இப்போது நிஜமாகி இருக்கிறதே என்று சந்தோஷத்தால் கண்கலங்கினார்கள்

மார்க்கக்கல்வியால் உயர்ந்த மற்றொரு மாமேதை இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களைப் பற்றி...

மார்க்கக் கல்வியில் மேற்படிப்பை கற்றுக் கொள்வதற்காக இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்களை அவர்களின் தாய் மக்காவுக்கு அனுப்பி வைக்கும்போது மகனே!  நீ கல்வியைப் பெற்ற அறிஞனாக மட்டும் திரும்பி வர வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள்.  இமாம் ஷாஃபியீ ரஹ் மக்காவுக்குச் சென்று இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் கல்வி பயின்று நன்கு தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்களின் உயர்ந்த பண்பும், திறமையும் மாலிக் ரஹ் அவர்களைக் கவர்ந்து விட சிறிது காலத்தில் இவர்களே ஒரு தனிப்பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் விருதுகளை சுமந்தவர்களாக தன் ஆசிரியரால் தரப்பட்ட அன்பளிப்புகளுடன் சொந்த ஊர் வருகிறார்கள். அவர்கள் வருவதையும், எவ்வாறு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட அந்தத் தாய்  “ என் மகனை இங்கிருந்து புறப்பட்ட கோலத்திலேயே பார்க்க விரும்புகிறேன். கல்வியினால் பிரதிபலன் பெற்றவராக அல்ல “ என்று செய்தி அனுப்பினார்கள். இதைக் கேள்விப்பட்ட இமாம் ஷாஃபியீ ரஹ் அவர்கள் தங்களிடமுள்ள பரிசுகளை அனைவருக்கும் தந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பி அந்தத் தாயின் மனதை குளிர வைத்தார்கள். தமது பிள்ளைகளின் மார்க்கக் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கருதும் அன்றைய பெற்றோர்களின் நிலை அவ்வாறிருந்தது

இளம் வயதிலேயே கல்வியை கற்பது சிறந்தது

عن موسى بن علي عن أبيه:أن لقمان الحكيم قال لابنه :يا بني اِبتغ العلم صغيرا فإن ابتغاء العلم يشق على الكبير يا بني إن الموعظة تشق على السفيه كما يشق الوعث الصعود على الشيخ الكبير (الفقيه والمتفقه للخطيب البغدادي)عن ابن عباس رضي الله عنه قال:قال رسول الله صلى الله عليه وسلم حِفظُ الغلامِ كالوَشم في الحَجر عن الحسن البصري  قال:التعلم في الصغر كالنقش في الحجر-قال ابن بشران وحفظ الرجل بعدما كبر كالكتاب على الماء-قال علقمة :ما حفظتُ وأنا شاب فكأني أنظر إليه في قرطاس أو ورقة- عن معمر قال :جالست قتادة وأنا ابن أربع عشرة سنة فما سمعت منه شيئا وأنا في , ذلك السن إلا وكأنه مكتوب في صدري (الفقيه والمتفقه للخطيب البغدادي)

நம்முடைய வாழ்க்கையின் எந்த ஒரு நொடியும் வீணாக கழிந்து விடக் கூடாது குறிப்பாக இளமைப் பருவத்தில்..

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِقَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري) اول الحديث مِنْ باب ما جاء في الصحة والفراغ وأن لا عيش إلا عيش الآخر-كتاب الرقاقوقال الحسن البصري  رحمه الله (يا ابن آدم إنما أنت أيام فإذا ذهب يومك ذهب بعضك)وقال (أدركت أقواما كانوا على أوقاتهم أشد منكم حرصا على دراهمكم ودنانيركم)والنفس البشرية جُبلت على أن الإنسان إن لم يشغلها بالخير شغلته بالشر.وروي عن الإمام الشافعي في هذا المعني (الكتاب:الوقت وأهميته في حياة المسلم)

ஆடு, மாடுகளைப் போல் உண்பதும், உறங்குவதும், உறவு கொள்வதும், கேளிக்கைகளில் ஈடுபடுவதும் தான் நம்முடைய வேலை என்று இருந்து விடக் கூடாது

وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ (12سورة محمد) وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (الاعراف179)

முடிவுரை - எந்தப் பொருளை வாங்கினாலும் எதில் பயன்பாடு அதிகம் என்று பார்க்கிறோம். ஒன்றுக்கு ஒன்றுக்கு free  என்றால் கியூவில் நின்று வாங்குவோம். அப்படியானால் உலகக் கல்வி உலக வாழ்வின் நன்மைக்கு மட்டுமே பயன்படும். தீன் கல்வி ஈருலகிலும் பயன்படும்

مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ (20الشوري)

© 2019 All Rights Reserved.
http://ulama.in/