தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

சிரியா மக்களுக்காக குனூத் நாஜிலா ஓதுவோம் சிரியாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற தாக்குதலை முன்னிட்டு

 

09-03-2018

ஜமாதுல் ஆகிர்-20

 

بسم الله الرحمن الرحيم

சிரியா மக்களுக்காக குனூத் நாஜிலா  ஓதுவோம்

சிரியாவில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற தாக்குதலை முன்னிட்டு 

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

சிரியா பற்றி நபிமொழி முன்னறிவிப்புகள்  - எத்தனை எதிரிகள் சூழ்ந்தாலும் சிரியாவை முற்றிலுமாக அழிக்க முடியாது

நபிமொழிகளில், வரலாறுகளில் ஷாம் எனப்படுவது இன்றைய சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். ஷாமுக்காக நபி ஸல் அவர்களின் பிரத்தியேக துஆ உள்ளது

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضقَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ الْقُرْآنَ مِنْ الرِّقَاعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طُوبَى لِلشَّامِ فَقُلْنَا لِأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّ مَلَائِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا (ترمذي) بَاب فِي فَضْلِ الشَّامِ وَالْيَمَنِ- كِتَاب الْمَنَاقِبِ( باسطة أجنحتها عليها) أي على بقعة الشام وأهلها بالمحافظة عن الكفر وقال المناوي بَاسِطَةٌ أَجْنِحَتَهَا أي تحفها وتحولها بإنزال البركة ودفع المهالك والمؤذيات

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சத்தியத்தை நிலை நாட்டக் கூடிய ஒரு சாரார்  ஷாமில் இருப்பார்கள்

عن مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ )كتاب التوحيد

முஆவியா ரழி போன்ற  இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தலைமைப் பீடமாக இருந்தது அன்றைய ஷாம் தான்

கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கவிருப்பதும்சிரியாவில் தான்

பல நபிமார்களும் தங்களை இங்கு தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பினார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ(بخاري)باب مَنْ أَحَبَّ الدَّفْنَ فِى الأَرْضِ الْمُقَدَّسَةِ أَوْ نَحْوِهَا- كتاب الجنائز

நபி ஸல் அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு கிழவி ஆசைப்பட்டது போன்று நீங்கள் ஆசைப்படுங்கள் என்று கூறினார்கள் உடனே தோழர்கள் அப்படி அவர் என்ன ஆசைப்பட்டார் என்று கேட்க, நபி மூஸா அலை எகிப்தில் இருந்து தன் உம்மத்தை அழைத்துக் கொண்டு பாலஸ்தீனம் நோக்கி புறப்பட்ட போது  மூஸா நபியிடம் சிலர்கள்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்  இந்த எகிப்தில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் ஒரு வஸிய்யத் செய்துள்ளார்கள் நீங்கள் என்றாவது ஒருநாள் ஷாமுக்கு குடியேறுவீர்கள்  அன்று என்னுடைய உடலையும் அங்கு கொண்டு சென்று விடுங்கள்  என்று  வஸிய்யத் செய்துள்ளார்கள் என்று கூறிய போது அதை மூஸா அலை ஏற்றுக் கொண்ட பின் உங்களில் யாருக்கேனும் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் உடைய  கப்ரு தெரியுமா என்று கேட்க, எங்களில் யாருக்கும் தெரியாது ஆனால் ஒரே ஒரு மூதாட்டிக்கு மட்டும் தெரியும் என்றார்கள் உடனே  அந்த மூதாட்டியை சந்திப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் விரைந்தார்கள் அவரின் இருப்பிடத்தை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் கேட்ட போது அந்தப் பெண்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ரை காட்டுவதற்கு ஒரு மாபெரும் கோரிக்கையை முன்வைத்தார்.  மூஸா நபியே நான் உங்களோடு சுவனத்தில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிபாரிசு செய்தால் நான் கப்ரை காட்டுகிறேன் என்றார். மூஸா அலை  யோசித்தார்கள்.  கப்ரை காட்டுவதற்கு இவ்வளவு பெரிய நிபந்தனை விதிக்கிறாரே என்று  யோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு வஹீ அறிவித்தான் மூஸாவே அப்பெண்ணின் நிபந்தனையை ஏற்று நீங்கள் துஆ செய்யுங்கள் நான் அதை நிறைவேற்றுவேன். ஏனெனில் அந்தப் பெண் தனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து தினமும் என்னிடம் யாஅல்லாஹ் நபிமார்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தைத் தா! என துஆ செய்து வந்தார் ஆகவே அவரை நிச்சயம் நான் சுவனத்தில் புகுத்துவேன் என்றான் அதன் பின் நபி மூஸா அலை துஆ செய்தார்கள் அப்பெண் கப்ரை காட்டினார் நபி  யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ரு தோண்டப்பட்டு பின்பு ஜெரூஸலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது

ஈஸா அலை இறங்கும் முன் அங்குள்ள முஸ்லிம்களில் ஒரு சாரார் கிறிஸ்தவர்களை வெற்றி கொள்வது பற்றிய நீண்ட ஹதீஸ்

நபி ஸல் கூறினார்கள்-ரோம, பைஸாந்தியர்கள் சிரியாவில் உள்ள அஃமாக், தாபிக் ஆகிய இடங்களில் நிலை கொள்ளாத வரை கியாமத் வராது. அவர்களை நோக்கி மதீனாவில் இருந்து (இந்த மதீனா என்பதற்கு சிரியாவின் முக்கிய நகரம் எனவும் பொருள் உண்டு)  ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாக இருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்)  எங்களுக்கும், எங்களில் சிறைக் கைதிகளாக   பிடிக்கப்பட்டோருக்குமிடையில் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள் என்பார்கள். (அதாவது முஸ்லிம்களாகிய உங்களுடன் போர் புரிய வரவில்லை. மாறாக எங்கள் மதத்தில் இருந்து விட்டு உங்களால் சிறை பிடிக்கப்பட்டு மதம் மாறி உங்களுடன் சேர்ந்து கொண்டு எங்களைத் தாக்குவதற்கும் துணிந்து விட்ட எங்களுடைய பழைய பங்காளிகளுடனேயே போர் புரிய வந்துள்ளோம் என்பர். இவ்வாறு பேசி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்வர்) அப்போது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் சகோதரர்களின் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பர். ஆகவே ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோற்று விரண்டோடுவர். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் ரோமர்களை வெற்றி கொள்வார்கள். அவர்கள் அதன் பின் ஒரு போதும் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்க விட்டு  போர் செல்வங்களை பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் ஷைத்தான் வந்து நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடம் தஜ்ஜால் வந்து விட்டான் என்பான். உடனே அவர்கள் தம் குடும்பத்தாரிடம் புறப்படுவார்கள். அது பொய்யான செய்தியாக இருக்கும். அவர்கள் சிரியாவுக்கு வரும்போது தான் தஜ்ஜால் கிளம்புவான். பின்பு  அவர்கள்  போருக்கு ஆயத்தமாகி அணிகளை சீர் செய்து கொண்டிருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும். அப்போது தான் ஈஸா அலை வானில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு  தலைமையேற்பார்கள். அவர்களை தஜ்ஜால் காணும்போது தண்ணீரில் உப்பு கரைவது போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் கூட தானாக கரைந்து  அழிந்து விடுவான். ஆயினும் ஈஸா அலை அவர்களின் கரத்தால் அல்லாஹ் அவனை அழிப்பான். ஈஸா அலை தன் ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்கு காட்டுவார்கள்   முஸ்லிம் 5553

அனைத்து மனிதர்களும் எழுப்பி விசாரிக்கப்படும் மஹ்ஷர் மைதானமாக ஷாம் இருக்கலாம்

عَنْ حُذَيْفَةَ  رضي الله عنه اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَأَجُوجَ وَمَأْجُوجَ وَثَلَاثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ (مسلم)5558 كِتَاب الْفِتَنِ (تطرد الناس (إلى المحشر) وهو الشام (فيض القدير)قال مجاهد :في تفسير قوله تعالي "إلَى المَسْجِدِ الأقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ"  سمّاه مباركاً لأنه مَقَرّ الأنبياء ، وفيه مَهْبَطُ الملائكة والوحي ، وهو الصخرة ، ومنه يُحشر الناس يوم القيامة .(تفسير الخازن-تفسير الرازي   (قال الخطابي هذا قبل قيام الساعة يحشر الناس أحياء إلى الشام بدليل قوله (تبيت معهم حيث باتوا وتقيل معهم حيث قالوا) فيض القدير

முடிவுரை – கடந்ததினங்களுக்கு முன்பு சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் மீது சிரிய அதிபரான  ஷியா மதவெறியன் பஷார் அல் ஆஸாத் உடைய இராணுவமும் ஷியா நாடகிய ஈரானும் ரஷ்ய இராணுவமும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர் இராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து ஒரு பாதாளக் குகைக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து கொண்டு அவர்கள் அழுது கண்ணீர் விடும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது இங்கே ஒவ்வொரு குழந்தைகளாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் வெளியே வந்தால் நாங்கள் குண்டு வெடிப்பில் இறந்து விடுவோம் எல்லா முஸ்லிம் நாடுகளும் எங்களை கை விட்டு விட்டன என்று கூறும் காட்சி பரிதாபமாக உள்ளது நம்மால் வேறு எந்த வகையிலும் உதவி செய்ய முடியா விட்டாலும் துஆ செய்வோம்

முஸ்லிம்களுக்கு ஆபத்துகள் அதிகரிக்கும்போது தொழுகைக்கு உள்ளேயும் துஆ செய்யலாம். அது குனூத்தே நாஜிலா எனப்படும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَقُولُ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ (بخاري) باب دُعَاءِ النَّبِىِّ صلى الله عليه وسلم اِجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ- كتاب الاستسقاء - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ وَذَكْوَانُ وَعُصَيَّةُ وَبَنُو لَحْيَانَ فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ فَأَمَدَّهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنْ الْأَنْصَارِ قَالَ أَنَسٌ كُنَّا نُسَمِّيهِمْ الْقُرَّاءَ يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ فَانْطَلَقُوا بِهِمْ حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ (بخاري) بَاب الْعَوْنِ بِالْمَدَدِ-كتاب الجهاد

மேற்கூறப்பட்ட நான்கு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றது போல நடித்து தங்களுக்கு மார்க்கத்தை சொல்லித் தர நபித் தோழர்களை தங்கள் ஊருக்கு அனுப்புமாறு கூறினர். அதன்படி நபி ஸல் எழுபது  ஹாஃபிழ்களை அனுப்பி வைத்த போது அவர்களை திட்டமிட்டு கொன்றனர். இதனால் பெரும் கவலை அடைந்த நபி ஸல் கொலை செய்தவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் சுமார் ஒரு மாதம் ஃபஜ்ரில் இரண்டாவது ரக்அத்தின் ருகூவிலிருந்து எழுந்து துஆ செய்தார்கள். சில அறிவிப்புகளில் ஐந்து நேரத் தொழுகையிலும் இவ்வாறு செய்தார்கள் என உள்ளது. அதேபோல் முந்திய ஹதீஸில் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வர விடாமல் தடுக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்காக அவர்களை விடுதலை செய்யப்படும்வரை இவ்வாறு துஆ செய்தார்கள் 

சிரியா மக்களுக்காகவும், உலகெங்கும் பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்காகவும் பின்வரும் வகையில் துஆ செய்யலாம்

اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ والمسلمين في بلاد الشام وفي مشارق الارض ومغاربِها –ياارحم الراحمين واجعل لهم فرَجًا ومَخْرَجًا –انصُرِ المجاهدين في سبيلك – واَلِّف بين قلوبهم – ووَحِّدْ صُفوفهم , ووفقهم لاتباع كتابك وسنة نبيك ويسر لهم اسباب النصر وفتح بيت المقدس واقامة شريعتك     - اللَّهُمَّ انت ربنا والهنا وخالقنا قصدناك ورجوناك فلا تخيب رجاءنا ودعوناك فاستجب دعاءنا -  اللَّهُمَّ انصر اهلنا في سوريا واليمن وفلسطين ولبيا والعراق ومصر وتونس والسودان وكافة بلاد المسلمين نصرا عزيزا من عندك علي من يحاربونك ويحاربون سنة نبيك ودينك ويقتلون عبادك

اللَّهُمَّ كن سلاحهم واضرب وجوههم ومزقهم وفتتهم واجعل امرهم شتا شتا

" اللهم انصر اخواننا المستضعفين في دينهم في سائر الأوطان ، إلهنا عظم الكرب واشتد الخطب وتفاقم الأمرعلى إخوتنا المسلمين في فلسطين وبلاد الشام وسوريا والعراق واليمن وبورما ، اللهم عجل بنصرهم يا قوي يا عزيز، اللهم انقذ المسجد الاقصى من الصهاينة المعتدين ، اللهم عجل بالنصر والعز لإخواننا في اليمن وتعز، اللهم اكتب النصر والعزة لإخواننا في فلسطين وغزة

اللهم اصلح احوال المسلمين في كل مكان، اللهم انصر اخواننا المستضعفين في دينهم في سائر الأوطاناللهم انصر على اخوتنا المسلمين في فلسطين وفي بلاد الشام وفي سوريا وفي العراق وفي اليمن وفي بورما ، اللهم عجل بنصرهم يا قوي يا عزيز، الهنا ان اخواننا في بلاد الشام حفاة فاحملهم وعراة فاكسهم وضعافا فقوهم ومظلومون فانصرهم يا ناصر المستضعفين، اللهم عجل بالنصر والعز لاخواننا في اليمن وتعز ، اللهم اجمع كلمة المسلمين في العراق على الكتاب والسنة وفي ليبيا".اللهم الطف بأهل سوريا .. اللهم احفظهم بحفظك واكلأهم برعايتك اللهم انصر المسلمين في أرض سوريا وحكم فيهم شرعك واكفهم شر كل طاغية جبار ربِ انصر إخواننا وأهلنا في سوريا و لا تنصر عليهم، ربِ ثبت أقدامهم وارحمهم.. ربِ رد كيد كل من أراد بهم السوء يا عزيز يا جبار.. اللهم تول أهل سوريا برعايتك..اللهم احقن دمائهم ...اللهم ول عليهم خيارهم اللهم احقن دماءهم واحفظ أعراضهم و ذراريهم و أموالهم

© 2019 All Rights Reserved.
http://ulama.in/