தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

தற்காலத்தில் பெரும்பாலும்துஆக்கள் ஏற்கப்படாதது ஏன்?

 

 

 

 

தற்காலத்தில்

பெரும்பாலும்துஆக்கள் ஏற்கப்படாதது ஏன்?

2018-02-16

ஜமாதுல் அவ்வல்- 29

 

முஸ்லிம்களுக்கு எங்கு திரும்பினாலும் சோதனைகள்..... ஆங்காங்கே இதற்காக துஆ மஜ்லிஸ்கள் ஏற்பாடு செய்யப்படாமல் இருப்பதில்லை. பலவிதமான பாதுகாப்பு துஆக்கள் வாட்ஸ்-அப் தளங்களில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆலிம்களும் நிறைய நபிவழி துஆக்களை கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றனர் எனினும் முஸ்லிம்களுக்கு சோதனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்.

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

என்ற வசனம் ஒருபோதும் பொய்யாகி விடாது. அப்படியானால் துஆ கேட்கக்கூடியநம்மிடம் தான் ஏதோ சில குறைபாடுகள் உள்ளன. அந்த குறைபாடுகள் என்ன என்பதைக் காண்போம்

கேட்டவுடன் துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படும் காலம் முன்பு இருந்தது

 

قصة: عن أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قال  كان رجل من أصحاب رسول الله صلى الله عليه و سلم من الأنصار يُكنى : أبا معلق وكان تاجرا يتجر بمال له ولغيره يضرب به في الآفاق5 وكان ناسكا ورعا6فخرج مَرَّة فلقيه لُصٌّ7 مقنع في السلاح فقال له : ضَعْ ما معك فإني قاتلك قال : ما تريد إلى دمي ؟ شأنك بالمال قال: أما المال فلي ولست أريد إلا دمك قال: أما إذا أبيتَ فذَرْني أُصلي أربع ركعات قال : صَلِّي ما بدا لك فتوضأ ثم صلى أربع ركعات فكان من دعائه في آخر سجدة أن قال:يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد أسألك بِعِزِّك الذي لا يرام وملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك أن تكفيني شر هذا اللص يا مغيث أغثني يا مغيث أغثني ثلاث مرات قال : دَعَى بها ثلاث مرات فإذا هو بفارس قد أقبل بيده حِرْبة8 واضعها بين أذني فرسه فلما بصر به اللص أقبل نحوه فطعنه فقتله ثم أقبل إليه فقال:قُمْ قال:من أنت بأبي أنت وأمي؟ فقد أغاثني الله بك اليوم قال: أنا ملك من أهل السماء الرابعة دعوتَ بدعائك الأول فسمعتُ لأبواب السماء قعقعة9 ثم دعوت بدعائك الثاني فسمعت لأهل السماء ضجة ثم دعوت بدعائك الثالث فقيل لي :دعاء مكروب فسألتُ الله تعالى أن يوليني قتله قال أنس:فاعلم أنه من توضأ وصلى أربع ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروبا كان أو غير مكروب(مجابو الدعوة لإبن أبي الدنيا)

பல வெளிநாடுகளுக்கும் வியாபாரச் சரக்குகளை கொண்டு செல்லும் இவரை ஒரு கொள்ளையன் வழி மறித்தான். பணம் தானே உனக்கு வேண்டும் எடுத்துக் கொள். என்று இவர் கூறியும் அவன் பணமும் வேண்டும். உன் உயிரும் வேண்டும் என்றான். இறுதியில் இவர் நான்கு ரக்அத் தொழ என்னை விட்டு விடு. என்று கேட்க அவன் சம்மதித்தான். இவர் தொழுது விட்டு அந்த கொள்ளையனிடமிருந்து காப்பாற்றும்படி மூன்று முறை துஆ செய்த போது குதிரையில் ஒருவர் வேகமாக ஈட்டியுடன் வந்து திருடனை குத்திக் கொன்றார். அவரிடம் நீங்கள் யார் என்று இவர் கேட்க “ நான் நான்காவது வானத்தில் உள்ள மலக்குகளில் ஒருவர். நீர்  ஒவ்வொரு முறையும் துஆ செய்த போது விண்ணில் உள்ளவர்களிடையே பெரும் சப்தம் கொந்தளிப்பு உருவானது. இறுதியில் நான் அல்லாஹ்விடம் அந்தக் கொள்ளையனை கொன்று விட்டு வரும் பொறுப்பை என்னிடம் தரும்படி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான். நான் அவனை கொன்றேன். அனஸ் ரழி கூறும் போது எவர் இத்தகைய சூழ்நிலையில் இந்த துஆவை ஓதினால் ஈடேற்றம் கிடைக்கும்

தைத்துக் கொண்டிருந்த ஊசி கடலில் விழுந்த போதுஅதற்காக  துஆ செய்து அதைப் பெற்ற நல்லடியார்

عن فروة الأعمى مولى سعد بن أبي أمية المقرئ قال : ركب أبو ريحانة البحر فكان يخيط فيه بإبرة معه فسقطتْ إِبْرَتُه في البحر فقال : (عزمتُ عليك يا رب إلا رددت عليَّ إِبْرَتي ) فظهرتْ حتى أخذها (مجابو الدعوة من كتب إبن أبي الدنيا)

கடும் குளிரை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியதால் அருகில் இருந்த மரமே கதகதப்பாக மாறியது

عن أبي المثنى المليكي:أن سرية خرجتْ في سبيل الله فأصابهم بَرْدٌ شديد كادوا أن يهلكوا فدعوا الله وإلى جانبهم شجرة عظيمة فإذا هي تلتهب فقاموا إليها فما زالوا عندها حتى جففوا ثيابهم ودفئوا10 وطلعت عليهم الشمس ثم انصرفوا وردَّ الله عزوجل الشجرة على هيئتها

மழை வேண்டும் என அல்லாஹ்விடம் ஒருவர் துஆ செய்ய மற்றவர் ஆமீன் சொல்ல உடனே மழை பெய்தது

عن الأعمش قال جيئ بحبيب بن أبي ثابت و سعيد بن حبيب و طلق بن حبيب قال: فأصابهم عطش وخوف فقال سعيد لحبيب: ادعو الله فقال له حبيب:إني أراك أوجه مني قال: فدعا سعيد وأمَّنَ صاحبه فرفعت سحابة فمطروا فتشربوا وسقوا وإستسقوا (مجابو الدعوة لإبن أبي الدنيا

யஜீத் உடைய காலத்தில் வறட்சி ஏற்பட்ட போது மக்கள் சார்பில் மழைக்காக துஆ செய்தவர்

عن أبي زرعة الشيباني قال : قُحِطَ المطر في زمن يزيد بن معاوية فخرجوا يستسقوا فلم يصيبهم سحاب ولا مطر فقال يزيد للضحاك بن الأسود : قُمْ فاستسقِ لنا فقام وكشف عن ذراعيه وألقى برأسه وقال : ( اللهم أن هؤلاء يستشفعون بي إليك فإسقهما

மன்னர் வரும்போது ஒதுங்க முடியாத மூதாட்டியை காவலன் அடிக்க, யாஅல்லாஹ் அவன் கையை துண்டாக்கி விடு  என துஆ செய்த இறை நேசர்

عن الحسن بن أبي جعفر قال:مرَّ الأمير يوما فصاحوا: "الطريق"ففرج الناس وبقيت عجوز كبيرة لا تقدر أن تمشي فجاء بعض الجلاوذة فضربها بسوط ضربة فقال حبيب أبو محمد ( اللهم اقطع يده ) فما لبث إلا ثلاثا حتى مرَّ بالرجل قد أُخذ في سرقة فقُطِعت يدُه

ஸயீத் இப்னு முஸய்யப் ரழி ஒருமுறை அபுல் ஹசன் என்பவரிடம் நீர் உம்முடைய நபரை அனுப்பி நான் சொல்லும் ஒரு மனிதனைப் போய் பார்க்கச் சொல்லுங்கள் என்றார். அவ்வாறே அவர் போய் பார்த்த போது அம்மனிதனின் உடல் முழுவதும் வெண்மையாகவும், முகம் மட்டும் மிகவும் கறுப்பாகவும் இருந்தது. அதிர்ச்சியுடன் அவர் திரும்பிய போது ஸயீத் ரழி கூறினார்கள். நான் ஒருமுறை இவனை சந்தித்த போது இவன் சஹாபாக்களை திட்டினான். நான் தடுத்தும் அவன் கேட்கவில்லை. அப்போது நான் யாஅல்லாஹ் இவன் பொய்யனாக இருந்தால்  இவன் முகத்தை கறுப்பாக்கி விடு என்றேன். அவ்வாறே நடந்து விட்டது

தற்காலத்தில் துஆக்கள் ஏற்கப்படாத காரணங்களில் மிக முக்கியமானது ஹராமான சம்பாத்தியங்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ{ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ}وَقَالَ{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ }ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ (مسلم

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் ஒரு கொடுங்கோலர் என்பதை நாம் அறிவோம். அவர் கொல்லப்பட்ட நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தார்கள். காரணம் அவருடைய கப்ரு எங்கே என்று தெரிந்தால் மக்கள் தோண்டி எடுத்து அந்த உடலை சித்ரவதை செய்வார்கள் என்னும் அளவுக்கு அவருடைய ஆட்சியில் கொடுமைகள் அதிகம் இருந்தன. அவர் ஆட்சிக்கு வந்த புதிதில் ஒரு சிலர் ஹஜ்ஜாஜிடம் உங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கையேந்தி துஆ செய்தால் உங்களுடைய ஆட்சி உடனே அகற்றப்பட்டு விடும் என்றனர். உடனே ஹஜ்ஜாஜ் ஒருவேளை செய்தார். ஒரு மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். முக்கியமாக எவர்களுடைய துஆக்கள் உடனே ஏற்கப்படும் என்று கூறப்பட்டதோ அவர்களும் அழைக்கப்பட்டனர். அனைவரும் விருந்து உண்டனர். விருந்து முடிந்தவுடன் ஹஜ்ஜாஜ் மக்களை நோக்கி இனிமேல் உங்களில் யாருடைய துஆவைப் பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில்  நான் கொடுத்த உணவு ஹராமான உணவாகும். அது உங்களின் வயிற்றுக்குள் சென்று விட்டது எனவே எனக்கு எதிராக யார் துஆ செய்தாலும் அது ஏற்கப்படாது என்றார்.தங்களை அறியாமல் வயிற்றுக்குள் சென்று விட்ட ஹராமான உணவுக்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிப்பான் என்பது ஒருபுறம் இருந்தாலும் இங்கே ஹஜ்ஜாஜ் சொன்ன வார்த்தை கவனிக்க வேண்டிய ஒன்றாகும்

 

அன்று ஹஜ்ஜாஜ் செய்த வேலையைஇன்றைய முஸ்லிம் உலகிற்கு எதிராக யூத பயங்கரவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரும்பிச் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள் பலவற்றில் பன்றியின் உதிரி பாகங்களை கலந்து விற்கப்படுகின்றன. இது போதாதா?நமது துஆக்களின் பவர் குறைவதற்கு...?

பன்றியை எவ்வளவு தான் ஆரோக்கியமான சூழலில் வளர்த்தினாலும் பன்றி பன்றி தான். அதன் இயற்கை குணம் மாறப் போவதில்லை. இன்று பெரும்பாலும் மக்களிடம் வெட்கம் எடுபட்டுப் போனதற்கு பன்றி இறைச்சியின் உலக மயமாக்கலும் ஒரு காரணம். ஹராமை ஹராம் என்று தெரியாமல் உண்ணும் நிலைக்கு  தள்ளப் பட்டுள்ளோம்.

நம்முடைய துஆக்கள் ஏற்கப்படாததற்கு மற்றொரு காரணம் உறவுகளை துண்டித்து வாழ்வது

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ (مسلم)

நபி மூஸா அலை அவர்கள் ஒருமுறை மழைக்காக துஆ செய்ய மக்களை ஒன்று கூட்டியபோது அல்லாஹ்  மூஸா நபியவர்களிடம்  மூஸாவே..இந்தக் கூட்டத்தில் ஒருவன் தன் நெருங்கிய உறவினரோடு பகைமை கொண்ட நிலையில் வந்துள்ளான் அவன் இருக்கும் வரை நான் உமது துஆவை ஏற்க மாட்டேன் ஆகவே ஒரு பொது அறிவிப்புச் செய்து இந்தக் கூட்டத்தினரை கலைந்து போகச் செய்யுங்கள் அதாவது “உங்களில் யாரேனும் உறவைத் துண்டித்தவர் இருந்தால் உடனே சென்று பேசி விட்டு வாருங்கள் என்று அறிவிக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். அவ்வாறே மூஸா அலை அறிவிக்க, கூட்டம் கலைந்தது. சம்பந்தப்பட்ட நபர் தன் தவறை உணர்நது உடனே சென்று நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த தனது சிறிய தாயாரிடம் பேசி உறவை புதுப்பித்தார். பிறகு மீண்டும் மக்களை ஒன்று கூட்டி நபி மூஸா அலை துஆ செய்ய மழை பெய்தது. அந்த நபர் யார் என்பதை தனக்கு அறிவிக்கும்படி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் கேட்டதற்கு நான் எனது அடியானின் இரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்று அல்லாஹ் கூறி விட்டான்.

முடிவுரை – நாம் செய்யும் துஆக்கள் ஏற்கப்பட வேண்டுமானால் நாம் ஹராமான அல்லது அதன் சாயல் கொண்ட அனைத்தையும் விட்டு ஒதுங்க வேண்டும். நொறுக்குத் தீனிகள், மற்றும் பல உணவுப் பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்ற உண்மை நிலையை அறிந்து கொள்ள முயற்சி எடுக்கப்பட வேண்டும். எல்லோரிடமும் இணங்கி வாழ வேண்டும். யாரையும் ஒதுக்கக்கூடாது. மேலும் கீழ்காணும் துஆவை அடிக்கடி தொழுகைக்குப் பின்னால் ஓதி வர வேண்டும்

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا (مسلم)

© 2019 All Rights Reserved.
http://ulama.in/