தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

துன்பத்திற்குப் பின்னால் இன்பம் உண்டு

 

09-02-2018

جمادي الاولي -

 

بسم الله الرحمن الرحيم

துன்பத்திற்குப் பின்னால் இன்பம் உண்டு

فَاِنَّ مع العُسرِ يُسرا

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

ஒருவரிடம் மார்க்கப்பற்று எந்த அளவுக்கு இருக்குமோ அந்த அளவுக்கு அவர் சோதிக்கப்படுவார். ஆனால் மறுமையில் அவருக்கு சிறந்த நற்கூலி உண்டு

عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ ثُمَّ الصَّالِحُونَ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ مِنْ النَّاسِ يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ فِي دِينِهِ صَلَابَةٌ زِيدَ فِي بَلَائِهِ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ خُفِّفَ عَنْهُ وَمَا يَزَالُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى ظَهْرِ الْأَرْضِ لَيْسَ عَلَيْهِ خَطِيئَةٌ (مسند أحمد) عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا قَالَ أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلَانِ مِنْكُمْ قُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ قَالَ أَجَلْ ذَلِكَ كَذَلِكَ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى شَوْكَةٌ فَمَا فَوْقَهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا (بخاري) كتاب المرضى

நபி லூத் அலை அவர்களின் மகள் வழிப் பேரனும், நபி யஃகூப் அலை அவர்களின்   மருமகனுமான  நபிஅய்யூப்அலை அவர்கள் தம் வாழ்வில் அடைந்தமாபெரும்சிரமங்களுக்குப்பின்னால்அல்லாஹ்முன்புஇருந்ததைவிடஅதிகமானசெல்வங்களைஅல்லாஹ்தந்தான்

وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (83) يَذْكُر تَعَالَى عَنْ أَيُّوب " مَا كَانَ أَصَابَهُ مِنْ الْبَلَاء فِي مَاله وَوَلَده وَجَسَده وَذَلِكَ أَنَّهُ كَانَ لَهُ مِنْ الدَّوَابّ وَالْأَنْعَام وَالْحَرْث شَيْء كَثِير وَأَوْلَاد كَثِيرَة وَمَنَازِل مُرْضِيَة فَابْتُلِيَ فِي ذَلِكَ كُلّه وَذَهَبَ عَنْ آخِره ثُمَّ اُبْتُلِيَ فِي جَسَده يُقَال بِالْجُذَامِ فِي سَائِر بَدَنه وَلَمْ يَبْقَ مِنْهُ سَلِيم سِوَى قَلْبه وَلِسَانه يَذْكُر بِهِمَا اللَّه عَزَّ وَجَلَّ حَتَّى عَافَهُ2 الْجَلِيس وَأُفْرِدَ فِي نَاحِيَة مِنْ الْبَلَد وَلَمْ يَبْقَ أَحَد مِنْ النَّاس يَحْنُو عَلَيْهِ سِوَى زَوْجَته كَانَتْ تَقُوم بِأَمْرِهِ وَيُقَال إِنَّهَا اِحْتَاجَتْ فَصَارَتْ تَخْدُم1 النَّاس مِنْ أَجْله (تفسير ابن كثير) (وكان أيوب في زمن يعقوب وكانت أمه ابنة لوط. وقيل: كانت زوجة أيوب رحمة بنت إفرائيم بن يوسف بن يعقوب عليهم السلام. ذكر القولين الطبري رحمه الله (قرطبي)1 வீட்டு வேலை செய்து கணவருக்கு உணவு வாங்கி வருவார்  2ஒதுக்கி விடுவார்

இஸ்லாமிய வரலாற்றில்விடுகதை போன்று கேட்பார்கள். ஒரு பெண் இருந்தார். அப் பெண்ணின் கணவரும் ஒரு நபி.  தந்தையும் ஒரு நபி. அந்த பாக்கியமான பெண் யார் என்று கேட்டால் நபி அய்யூப் அலை அவர்களின் மனைவி ரஹ்மா அம்மையாரை உதாரணமாக சொல்வார்கள்)

வீட்டு வேலை செய்தும் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஒரு நேரத்தில் தன் கூந்தலை வெட்டி அதை விற்று உணவு வாங்கி வந்தார். அதனால் நபி அய்யூப் அலை கோபப்பட்டார்கள்

 أَنَّ أَيُّوب عَلَيْهِ السَّلَام كَانَ قَدْ غَضِبَ عَلَى زَوْجَته وَوَجَدَ عَلَيْهَا فِي أَمْر فَعَلَتْهُ قِيلَ بَاعَتْ ضَفِيرَتهَا بِخُبْزٍ فَأَطْعَمَتْهُ إِيَّاهُ فَلَامَهَا عَلَى ذَلِكَ وَحَلَفَ إِنْ شَفَاهُ اللَّه تَعَالَى لَيَضْرِبَنهَا مِائَة جَلْدَة وَقِيلَ لِغَيْرِ ذَلِكَ مِنْ الْأَسْبَاب فَلَمَّا شَفَاهُ اللَّه عَزَّ وَجَلَّ وَعَافَاهُ مَا كَانَ جَزَاؤُهَا مَعَ هَذِهِ الْخِدْمَة التَّامَّة وَالرَّحْمَة وَالشَّفَقَة وَالْإِحْسَان أَنْ تُقَابَلَ بِالضَّرْبِ فَأَفْتَاهُ اللَّه عَزَّ وَجَلَّ أَنْ يَأْخُذَ ضِغْثًا وَهُوَ الشِّمْرَاخ فِيهِ مِائَة قَضِيب فَيَضْرِبهَا بِهِ ضَرْبَة وَاحِدَة وَقَدْ بَرَّتْ يَمِينه وَخَرَجَ مِنْ حِنْثه وَوَفَّى بِنَذْرِهِ وَهَذَا لِمَنْ اِتَّقَى اللَّه تَعَالَى وَأَنَابَ إِلَيْهِ وَلِهَذَا قَالَ جَلَّ وَعَلَا " إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْد إِنَّهُ أَوَّاب "

தனக்காக கூந்தலை வெட்டி உணவு வாங்கி வந்த தை அறிந்த அய்யூப் அலை எனக்கு உடல் நிலை சரியான பின் உன்னை நூறு கசையடி அடிப்பேன் என்று சத்தியம் செய்தார்கள் வறுமையாக இருந்தாலும் அதற்காக ஹராமை செய்யக் கூடாது என்பதற்காக அவ்வாறு கோபமடைந்தார்கள். உடல் நிலை சரியான பின் அந்த அம்மையாரின் கணவருக்கான பணிவிடைக்கு மதிப்பளித்து இலகுவான வழிமுறையில் அந்த சத்தியத்தை நிறைவேற்ற ஆலோசனை வழங்கினான். நூறு சிறிய குச்சிகளை ஒரு கற்றையாக சேர்த்து வைத்துக் கொண்டு ஒரே அடியாக அடித்தால் போதும் என அல்லாஹ்  ஆலோசனை வழங்கினான்-  தஃப்ஸீர் இப்னு கஸீர்

நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவ்வாறு சத்தியம் செய்ததற்கு மற்றொரு காரணம் கூறப்பட்டு..

إِنَّ إِبْلِيس أَتَاهَا فِي صُورَة طَبِيب فَقَالَ لَهَا إِنَّ زَوْجك قَدْ طَالَ سَقَمه فَإِنْ أَرَادَ أَنْ يَبْرَأ فَلْيَأْخُذْ ذُبَابًا فَلْيَذْبَحْهُ بِاسْمِ صَنَم بَنِي فُلَان فَإِنَّهُ يَبْرَأ وَيَتُوب بَعْد ذَلِكَ فَقَالَتْ ذَلِكَ لِأَيُّوبَ فَقَالَ قَدْ أَتَاك الْخَبِيث .لِلَّهِ عَلَيَّ إِنْ بَرَأْت أَنْ أَجْلِدك مِائَة جَلْدَة (تفسير ابن كثير)

படிப்பினை- ஆண்களை வழிகெடுக்க பெண்கள் மூலமாகவே ஷைத்தான் தூது அனுப்ப முயற்சிப்பான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.  நபி ஆதம் அலை அவர்களின் விஷயத்தில் கூட  நேரடியாக அவர்களிடம் வராமல் ஹவ்வா அம்மையாரின் மனதை முதலில் மாற்றி அதன் மூலம் ஆதம் அலை அவர்களையும் சருக வைத்தான். ஏனெனில் பெண்கள் போதுவாகவே எதையும் எளிதில் நம்பி விடுவார்கள். எனவே

பெண்களுக்கு மார்க்க கல்வியை போதிப்பது மிக மிக அவசியமான கடமையாகும்                                    

உணவுக்காக தமது மனைவியின் கூந்தலையே விற்கும் நிலை ஏற்பட்டதை அறிந்த பின்பு தான் நபி அய்யூப் அலைஅவர்கள் தமது நோய் நீங்க துஆ செய்தார்கள் அதுவரை அவர்கள் துஆசெய்யவில்லை

وَخَافَتْ عَلَى أَيُّوب الْجُوع حَلَقَتْ مِنْ شَعْرهَا قَرْنًا فَبَاعَتْهُ مِنْ صَبِيَّة مِنْ بَنَات الْأَشْرَاف فَأَعْطَوْهَا طَعَامًا طَيِّبًا كَثِيرًا فَأَتَتْ بِهِ أَيُّوب فَلَمَّا رَآهُ أَنْكَرَهُ وَقَالَ مِنْ أَيْنَ لَك هَذَا قَالَتْ عَمِنلْت لِأُنَاسٍ فَأَطْعَمُونِي فَأَكَلَ مِنْهُ فَلَمَّا كَانَ الْغَد خَرَجَتْ فَطَلَبَتْ أَنْ تَعْمَل فَلَمْ تَجِد فَحَلَقَتْ أَيْضًا قَرْنًا فَبَاعَتْهُ مِنْ تِلْكَ الْجَارِيَة فَأَعْطَوْهَا أَيْضًا مِنْ ذَلِكَ الطَّعَام فَأَتَتْ بِهِ أَيُّوب فَقَالَ وَاَللَّه لَا أَطْعَمهُ حَتَّى أَعْلَم مِنْ أَيْنَ هُوَ فَوَضَعَتْ خِمَارهَا فَلَمَّا رَأَى رَأْسهَا مَحْلُوقًا جَزِعَ جَزَعًا شَدِيدًا فَعِنْد ذَلِكَ دَعَا اللَّه عَزَّ وَجَلَّ فَقَالَ " رَبّ إِنِّي مَسَّنِيَ الضُّرّ وَأَنْتَ أَرْحَم الرَّاحِمِين (تفسير ابن كثير

அவ்வளவு பெரிய துன்பம் வந்த பிறகும் நபி அய்யூப் அலை அவர்கள் ஏன் துஆ செய்யவில்லை

وَقَالَ السُّدِّيّ : " تَسَاقَطَ لَحْم أَيُّوب حَتَّى لَمْ يَبْقَ إِلَّا الْعَصَب وَالْعِظَام فَكَانَتْ اِمْرَأَته تَقُوم عَلَيْهِ وَتَأْتِيه بِالرَّمَادِ يَكُون فِيهِ فَقَالَتْ لَهُ اِمْرَأَته لَمَّا طَالَ وَجَعه يَا أَيُّوب لَوْ دَعَوْت رَبّك يُفَرِّج عَنْك فَقَالَ قَدْ عِشْت سَبْعِينَ سَنَة صَحِيحًا فَهُوَ قَلِيل لِلَّهِ أَنْ أَصْبِر لَهُ سَبْعِينَ سَنَة فَجَزِعَتْ مِنْ ذَلِكَ فَخَرَجَتْ فَكَانَتْ تَعْمَل لِلنَّاسِ بِالْأَجْرِ وَتَأْتِيه بِمَا تُصِيب فَتُطْعِمهُ

எழுபது வருடங்கள் அல்லாஹ் என்னை சகல வசதிகளோடு நல்ல படியாக வைத்திருந்தான் அவ்வாறிருக்க சில வருடங்கள் மட்டும் அல்லாஹ்வின் சோதனையை பொருந்திக் கொண்டால் என்ன?  என்று கேட்பார்கள்

நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோய் நீங்கி,  இழந்ததை யெல்லாம் திரும்பப் பெற்ற விதம்

فعند ذَلِكَ اِسْتَجَابَ لَهُ أَرْحَمُ الرَّاحِمِينَ وَأَمَرَهُ أَنْ يَقُوم مِنْ مَقَامه وَأَنْ يَرْكُض الْأَرْض بِرِجْلِهِ فَفَعَلَ فَأَنْبَعَ اللَّه تَعَالَى عَيْنًا وَأَمَرَهُ أَنْ يَغْتَسِل مِنْهَا فَأَذْهَبَتْ جَمِيع مَا كَانَ فِي بَدَنه مِنْ الْأَذَى ثُمَّ أَمَرَهُ فَضَرَبَ الْأَرْض فِي مَكَان آخَر فَأَنْبَعَ لَهُ عَيْنًا أُخْرَى وَأَمَرَهُ أَنْ يَشْرَب مِنْهَا فَأَذْهَبَتْ جَمِيع مَا كَانَ فِي بَاطِنه مِنْ السُّوء وَتَكَامَلَتْ الْعَافِيَة ظَاهِرًا وَبَاطِنًا وَلِهَذَا قَالَتَعَالَى " اُرْكُضْ بِرِجْلِك هَذَا مُغْتَسَل بَارِد وَشَرَاب

மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில்அல்லாஹ் நபியவர்களின் காலை தரையில் அடிக்கும்படி கூறினான். அவ்வாறு அவர்கள் செய்தபோது ஒரு ஊற்று உருவானது. அதில் குளிக்க உத்தரவிட்டான், குளித்தார்கள். உடனே அவர்களின் அத்தனை நோய்களும் உடனே சரியாகி விட்டது. பின்பு மற்றொரு பகுதியிலும் அவ்வாறே காலால் உதைக்கும்படி அல்லாஹ் கூற, அவ்வாறே நபியவர்கள் செய்ய, அங்கேயும் மற்றொரு ஊற்று உருவானது. அதை குடிக்கும்படி அல்லாஹ் உத்தரவிட்டான். இவ்வாறு நோய் முற்றிலும் நீங்கியது

வெளியே சென்று திரும்பி வந்த மனைவிக்கு கணவரை அடையாளம் தெரியவில்லை. பயந்தார்கள்

 

عَنْ اِبْن عَبَّاس قَالَ : وَأَلْبَسَهُ اللَّه حُلَّة مِنْ الْجَنَّة فَتَنَحَّى أَيُّوب فَجَلَسَ فِي نَاحِيَة وَجَاءَتْ اِمْرَأَته فَلَمْ تَعْرِفهُ فَقَالَتْ يَا عَبْد اللَّه أَيْنَ ذَهَبَ هَذَا الْمُبْتَلَى الَّذِي كَانَ هَهُنَا لَعَلَّ الْكِلَاب ذَهَبَتْ بِهِ أَوْ الذِّئَاب فَجَعَلَتْ تُكَلِّمهُ سَاعَة .فَقَالَ وَيْحك أَنَا أَيُّوب قَالَتْ أَتَسْخَرُ مِنِّي يَا عَبْد اللَّه ؟ فَقَالَ وَيْحك أَنَا أَيُّوب قَدْ رَدَّ اللَّه عَلَيَّ جَسَدِي (تفسير ابن كثير

நோயினால் சிறிய உருவமாக மாறியிருந்த நபி அய்யூப் அலை அவர்களுக்கு ஏதேனும் பிராணிகள் மூலமாக பாதிப்பு வந்து விடுமோ என்று அவர்களின் மனைவி பயப்படும் அளவுக்கு நோய் இருந்தது அவர்கள் பூரண சுகம் பெற்றவுடன் அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தின் ஆடையை அணிவித்து அழகான தோற்றம் கொண்டவராக ஆக்கினான். இங்கு நடந்த எதுவுமே தெரியாத நிலையில் அவர்களுடைய மனைவி அங்கே வந்தார். அங்கே தன் கணவர் இல்லை என்பதாகவும், அதற்குப் பதிலாக வேறு ஒருவர்இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு அழுகையுடன் இங்கே நோயாளியாக இருந்த என் கணவர் எங்கே?  அவரை  ஏதேனும் நாய்கள் கொண்டு சென்று விட்டதா?  இனி நான் என்ன செய்வேன். என் கணவர் எங்கே? என்று நீங்களாவது சொல்லுங்கள் என அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமே கேட்க, சிறிது நேரம் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டு அமைதியாகவே இருந்த அய்யூப் அலைஹிஸ்ஸலாம்நான் தான் உன் கணவர் தெரியவில்லையா என்று கேட்ட போது அதை நம்பாத அந்த அம்மையார் நீங்கள் யார் என்றே தெரியவில்லை ஆனால் என்னை கேலி செய்கிறீர்கள் என்றார்கள்.அதன் பின்பு நடந்த விபரத்தை தன் மனைவியிடம் கூற இருவரும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

முடிவுரை- நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம அவர்களின் வரலாறு இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு முக்கிய படிப்பினையாகும். அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நாம் போராட வேண்டும். அதே நேரத்தில் சில பலவீனமான ஈமான் உடையவர்களின் மனதில் “முஸ்லிமாக இருப்பதால் தானே இத்தனை பிரச்சினைகள்...நாம் ஏன் மற்றவர்களாக நாம் மாறி விட்டால் எந்தப் பிரச்சினையும் நமக்கு வராதே... என்ற எண்ணம் (நஊது பில்லாஹ்) வரலாம். அதைத் தான் பாசிச வாதிகளும் நம்மிடம் எதிர் பார்க்கிறார்கள். ஆகவே இத்தகைய சிந்தனைகள் நம்மில் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக மஸ்ஜிதுடைய தொடர்பு இல்லாமல் வாழும் முஸ்லிம்களை மஸ்ஜிதோடு இணைப்பதுடன் இஸ்லாம் உண்மை என்பதற்கு இத்தகைய சோதனைகள் தான் சாட்சி என்பதையும், சோதனைகள் இன்றி சுவனம் இல்லை என்பதையும் விளக்க வேண்டும். 

முஸ்லிமாக மரணிக்காதவர்களுக்கு மறுஉலகில் நிரந்தமான துன்பம் என்பதால் அவர்களுக்கு இவ்வுலகில் நிறைய தருவேன் என்பதை அல்லாஹ் பல இடங்களில் கூறிநாலும் ஒரு வசனத்தில் அதை மிகைப்படுத்தி அல்லாஹ் கூறும்போது முஸ்லிம்களின் மனம் துவண்டு விடக்கூடாது என்று மட்டும் நான் கருதியிருக்கா விட்டால் ஒவொரு காஃபிருடைய வீட்டையும், வீட்டு முகடுகளையும், படிக்கட்டுகளையும் தங்கமாகவும், வெள்ளியாகவும் மாற்றியிருப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்

وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُونَ (33) وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ (34) وَزُخْرُفًا وَإِنْكُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ (35) الزخرف

© 2019 All Rights Reserved.
http://ulama.in/