தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

பெண்களுக்கு மார்க்கத்தைபோதிப்போம்

 

02-02 -2018

ஜமாதுல் அவ்வல்-

 

بسم الله الرحمن الرحيم

பெண்களுக்கு மார்க்கத்தைபோதிப்போம்

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

முன்னுரை – முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வரும் பாசிசவாதிகள் சமீப காலமாக முஸ்லிம் பெண்கள் குறி வைத்துள்ளார்கள். முஸ்லிம் பெண்களுக்கு ஏதோ தங்களுடைய ஆட்சி தான் பாதுகாப்பான ஆட்சி என்பது போன்ற மாயையை உருவாக்க முயன்று முத்தலாக் சட்டம் கொண்டு வந்தனர். பெண்கள் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றனர். பாடப்புத்தகத்தில் கணிதவியல் பாடத்தில் கூட கலப்புத் திருமணத்தை உதாரணமாக காட்டி அதை ஊக்குவித்தனர். அடுத்த கட்டமாக தற்போது  பெண்களே நிர்வகிக்கும் பள்ளிவாசலை கட்டி அதை திறந்தும் வைத்தனர். முத்தலாக் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த பெண்களில் ஒருத்தி வட மாநிலத்தில் பெண்கள் நிர்வகிக்கும் பள்ளிவாசலை கட்டி அதை திறந்து வைக்க ஆர்.எஸ்.எஸ் தலைவர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரளாவில் ஒரு பெண் தனக்குப் பின்னால் நிற்கும் பல ஆண்களுக்கு தொழ வைத்தாள் என்ற செய்தி பிரபலமாகி வருகிறது. அவளைப் பார்த்தாலும் முஸ்லிம் போல தெரியவில்லை. அவள் பின்னால் நிற்கும் ஆண்களைப் பார்த்தாலும் முஸ்லிம் போல தெரியவில்லை.

 

ஆக இந்த அரசாங்கம் முஸ்லிம் பெண்களை குறிவைத்து ஏதே மிகப் பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நமது முஸ்லிம் பெண்களில் பலர் மார்க்கம் அறியாதவர்களாக இருப்பது எதிரிகளுக்கு  பெரிய பிளஸ் பாயின்ட். . கலப்புத் திருமணங்கள் சமீப காலமாக அதிகரிப்பதும் பல முஸ்லிம் பெண்கள் மாற்று மத ஆண்களுடன் மணம் புரிவதும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத கவலைக்குரிய விஷயம். இந்நிலையில் நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஒவ்வொரு மஹல்லாவிலும் பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வை மிக வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.மிக கவனமாக பேணி பாதுகாக்க வேண்டிய வந்த நம் பிள்ளைகளின் ஒழுக்கம் நாளுக்கு நாள் சிதைந்து கொண்டு வருகிறது படிக்கச் செல்லும் இடத்தில் அல்லது  வேலைக்குச் செல்லும் இடத்தில் காதல் என்ற வலையில் விழுந்து ஈமானையும் இழந்துவிடுகின்

 

பெண்கள் அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தை பெறுவது அவர்களின் வீட்டுக்குள் இருக்கும்போது தான்..

عَنْ عَبْد اللَّه رَضِيَ اللَّه عَنْهُ عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِنَّ الْمَرْأَة عَوْرَة فَإِذَا خَرَجَتْ اِسْتَشْرَفَهَا الشَّيْطَان وَأَقْرَب مَا تَكُون بِرَوْحَةِ رَبّهَا وَهِيَ فِي قَعْر بَيْتهَا (تفسير ابن كثير)عَنْ أَنَس رَضِيَ اللَّه عَنْهُ قَالَ:جِئْنَ النِّسَاء إِلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَ يَا رَسُول اللَّه ذَهَبَ الرِّجَال بِالْفَضْلِ وَالْجِهَاد فِي سَبِيل اللَّه تَعَالَى فَمَا لنَا عَمَل نُدْرِك بِهِ عَمَل الْمُجَاهِدِينَ فِي سَبِيل اللَّه تَعَالَى فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَعَدَتْ  مِنْكُنَّ فِي بَيْتهَا فَإِنَّهَا تُدْرِك عَمَل الْمُجَاهِدِينَ فِي سَبِيل اللَّه تَعَالَى(تفسير ابن كثير)-عَنْ عَبْدِ اللَّهِرضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا(ابوداود)

காதலுக்காக ஈமானை இழந்து மதம் மாறும் நம் பிள்ளைகள்.

பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும், அரசு கெஜட்டில் வெளியிட்டால் தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒருமுறை அரசிதழ்(gazette) ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதில் உள்ள விபரங்களில் ஒன்று - இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியோர் ஒரு வாரத்தில் மட்டும் 8 பேர். அவர்களின் பெயர் மற்றும் ஊர் முகவரிஅனைத்துமஇடம் பெற்றுள்ளது

 

அற்பமான காதலுக்காக விலை மதிக்க முடியாத ஈமானை இழந்து விடக் கூடாது என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்

عَنْ مُعَاذٍ رضي الله عنه قَالَأَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتَ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ وَلَا تَتْرُكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ وَلَا تَشْرَبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنْ الزَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ وَإِذَا أَصَابَ النَّاسَ مُوتَانٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا وَأَخِفْهُمْ فِي اللَّهِ (احمد)

ஈமான் இல்லாமல் இறந்து விடுபவர்களுக்கு நிரந்தர நரகம்என்பதையும் புரிய வைக்க வேண்டும்

وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ (217)البقرة

இஸ்லாமிய ஷரீஅத் தான் பெண்களுக்கு பாதுகாப்பானது என்பதையும் புரிய வைக்க வேண்டும்

ஃபர்தா பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை விளங்க லண்டனில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்

லண்டனில் பிரபலமான ஒரு தெருவின் ஓரத்தில் இரவு நேரத்தில் இரு காமுகர்கள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். முதலில் ஒரு முஸ்லிம் பெண் ஃபர்தாவுடன் தனியாகச் சென்றார். அப்பெண்ணை அவர்கள் எதுவும் செய்யவில்லை. இரண்டாவதாக ஒரு பெண் தனிமையில்  அரைகுறை ஆடையுடன் சென்றாள். அப்பெண்ணை இருவரும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விட்டனர். அந்தப் பெண்ணை கடத்தும்போது அந தெருவில் இருந்த கேமராவில் பதிவானதால் குற்றவாளிகள் விரைவில் பிடுபட்டு, தண்டிக்கப்பட்டனர் அதற்கு முன்பு அவர்களை கோர்ட்டில் விசாரிக்கும்போது நீதிபதி அவ்விருவரிடமும் உங்களுக்கு முன்னால் ஒரு முஸ்லிம் பெண்ணும் தனிமையில் தானே சென்றார். அவரை  நீங்கள் எதுவும் செய்யாமல் இந்தப் பெண்ணை மட்டும் பலாத்கார செய்ய என்ன காரணம் என்று கேட்க, உடனே அவ்விருவரும் அந்த முஸ்லிம் பெண் தனியாக நடந்து செல்லவில்லை. இருபுறமும் இரு ஆண்கள் துணைக்குச் சென்றார்கள். என்று கூற,  நீதிபதி அதை மறுக்கிறார். வீடியோவில் அந்த முஸ்லிம் பெண் தனியாக செல்வதாக பதிவாகியுள்ளது. என்று கூற,  அவ்விருவரும் அதை மறுத்து திடகாத்திரமான இரு ஆண்களின் துணையுடன் அப்பெண் சென்றதாக கூறினர். நீதிபதிக்கு இதுவித்தியாசமாக இருக்கவே அவர்களிடம் வீடியோவின் பதிவை காண்பிக்கிறார். அதில் அந்த பெண் தனிமையில் சென்றதாகவே பதிவாகியுள்ளதைக் கண்டு அந்த காமுகர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். உண்மையில் நடந்த விபரம் என்னவென்றால் முறையான ஃபர்தாவோடு  அந்த முஸ்லிம் பெண் சென்றதால் அந்த காமுகர்களின் கண்களுக்கு அல்லாஹ் இவ்வாறு காட்டியுள்ளான். 

ஒவ்வொரு மஹல்லாவிலும் செயல்படுத்தப் பட வேண்டிய  திட்டங்கள்

 

மக்தபை முறைப் படுத்துதல் மஸ்ஜித்கள் அனைத்திலும் முறைப்படுத்தப்பட்ட மக்தப்களை ஆரம்பித்தல். மக்தப்கள் தான் வருங்கால சந்ததிகளை இஸ்லாத்தின் அடிப்படையில் உருவாக்கும். மஸ்ஜித் சார்ந்த அனைத்து மக்களையும் முறைப்படி குர்ஆன் ஓத வைக்க முயற்சித்தல். வாரம் தோறும் மாணவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த பயிற்சி அளித்தல். மாணவர்களின் பெற்றோர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை  இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல்இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் மக்தப்களை உருவாக்குதல். மஹல்லாக்களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்காக இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு கூட்டம் தொடர்ந்து நடத்த வேண்டும்.

 

பெண்களுக்கு ஒழுக்கம் கற்பித்தல் -சமூகத்தின் அச்சாணிகள் பெண்கள் – பெண்களின் தீனுடைய வளர்ச்சியே – சமூகத்தின் மேம்பாட்டு வளர்ச்சியாகும். மஸ்ஜித்கள் அனைத்திலும் முறைப்படுத்தப்பட்ட பெண்கள் மதரஸாக்களை ஆரம்பித்தல்.இஸ்லாத்தின் அடிப்படையில் குழுந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று வகுப்பெடுத்தல்.இன்றைய சூழ்நிலைகளை நம்முடைய பெண்களுக்கு சொல்லி இஸ்லாமிய வாழ்க்கை முறையை அவசியம் கற்றுக் கொடுக்க மாத பயான் ஏற்பாடு செய்தல்.ஷரீஅத் விளக்க முகாம்கள் நடத்துதல்.

 

ஒவ்வொரு மஸ்ஜிதிலும் ஸ்கூல் உருவாக்குதல்இஸ்லாம் ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை ஆங்கில கலச்சாரத்தை தான் எதிர்க்கிறது.நம் குழந்தைகளை டாக்டராக, இன்ஜினியராக கலெக்டராக, மருத்துவராக, வக்கீலாக , ஆசிரியராக உருவாக்கலாம் ஆனால் இஸ்லாம் தெரிந்த டாக்டராக, மார்க்கம் தெரிந்த கலெக்டராக, இஸ்லாமிய சட்டம் தெரிந்த வக்கீலாக உருவாக்க வேண்டும்.ஒவ்வொரு மஸ்ஜிதிலும் ஸ்கூல் ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டும்,குறைந்தது

25 மஸ்ஜிற்கு ஒரு ஸ்கூலை உருவாக்க வேண்டும்.100 மஸ்ஜித்களுக்கு ஒரு பெண்கள் காலேஜ் உருவாக்க வேண்டும்.250 மஸ்ஜித்களுக்கு ஒரு பல்கலைகழகத்தை உருவாக்க வேண்டும்

 

சமூக மேம்பாட்டுக்குழுவை கட்டமைத்தல் -மஸ்ஜித் மக்கள் தொகையை கணக்கெடுத்தல். இதற்காக இளைஞர்களை தயார் செய்தல். மஹல்லாவில் துறை வாரியாக உள்ளவர்களை கணக்கெடுத்தல். அவர்களை எவ்வாறு, யாருக்காக பயன்படுத்தலாம் என்று தயார்செய்தல். மருத்துவ வழிகாட்டுதல் செய்தல். கல்வி வழிகாட்டுதல் செய்தல். வியாபார வழிகாட்டுதல் செய்தல். ஷரீஅத் கவுன்ஸிலை ஆரம்பித்து முறையாக செயல் படுத்துதல். திருமணத்திற்கு முன் – குடும்ப வாழ்க்கை முறையை கற்க வகுப்பெடுத்தல். மஸ்ஜித் நோக்கி வரக்கூடியவர்களிடத்தில் அன்பாக நடந்து அவர்களுக்கு கண்ணியம் செய்தல். எந்த ஒரு பிரச்சினைகளையும் ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் எதிர் கொள்ளுதல் குறிப்பாக நமது வருங்கால சந்ததியினரை மார்க்கத்துடன் இந்திய நாட்டை நேசிக்கக் கூடிய பட்டதாரியாக ஆக்குவதோடு, நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பங்கு பெறச் செய்தல்.நமது வாக்குகளை முழுமையாக ஒருங்கினைத்து அதை பயனாக்குதல்

மாற்றார்களுக்கு இஸ்லாமிய நற்சிந்தனைகளை எடுத்துக் கூற முயற்சித்தல். குறைந்த பட்சம் பள்ளிவாசலில் ஓதிப் பார்க்க வருபவர்களுக்கு ஏதேனும் சிறிய நூல்கள் வழங்கலாம். தேவாலயங்களில் சுவர் முழுக்க எழுதி வைத்திருப்பர் நாம் முடிந்த வரை மஸ்ஜிதுக்கு வெளியே இரண்டு கரும்பலகைகள் வைத்து ஒவ்வொரு வாரமும் ஏதேனும் நல்ல வாசகங்களை எழுதலாம். மேற்படி முயற்சிகளை நாம் செயல் படுத்தினால் வருங்காலத்தில் இன்ஷா அல்லாஹ் நல்ல முன்னேற்றம் ஏற்படும்

© 2019 All Rights Reserved.
http://ulama.in/