தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

குடியரசுக் கொள்கைக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தம் உண்டா?

26 -01 -2018

 

 

بسم الله الرحمن الرحيم

குடியரசுக் கொள்கைக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தம் உண்டா?

 

 

  1. என்ற முகவரியிலும் BAYAN NOTES  எடுக்கலாம்

قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً وَكَذَلِكَ يَفْعَلُونَ(34

அல்லாஹ்வின்கிருபையால்69வதுகுடியரசுதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது. குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தத்துவத்திற்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தம் உண்டா?

குடியரசு தத்துவம்என்பது நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் ஆட்சிக்குத் தான் முழுமையாகப் பொருந்தும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் நிலை அப்படியல்ல. உண்மையாகவே பதவிக்கு தகுதியுள்ளவர்கள் இன்றைய அரசியலின் மோசமான நிலையக் கண்டு பதவிக்கு ஆசைப்படுவதில்லை. எனவே பதவிக்கு ஆசைப் படுபவர்கள் தான் பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்தகையவர்களிடம் சுயநலம் தான் மிஞ்சியிருக்குமே தவிர மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் இருக்காது. மக்களுக்கும் இது தெரியும். தேர்தலில் போட்டியிடுபவர்களின் பல ரகங்களும் மக்களுக்குத் தெரியும். மோசமானவர், மிக மோசமானவர், மிக மிக மோசமானவர்  ஆகியோர் தான் போட்டியிடுகின்றனர். இவர்களில் மிக மிக மோசமானவர் வென்று விடக் கூடாது என்பதற்காக ஒரு மோசமானவருக்கு ஓட்டளித்து ஜெயிக்க வைப்பார்களே தவிர இதை நூறு சதவீதம் மக்களாட்சி மக்கள் விரும்பும் ஆட்சி என்று கூற  தகுதியில்லை

19 ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப்ப சுழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் உலகத்திலும் தேர்தல் அரசியல் வௌப்படத்தொடங்கியது.இப்போது  துருக்கி இரான் எகிப்து ஜோடான் லெபனான் மெராக்கோ குவைத் எமன் பாகிஸ்தான் பங்களாதேஷ் மலேஷயா செனகல் நைஜீயா போன்ற நாடுகளில் தோதல் பானி ஜனநாக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தொன்னாப்பிரிக்கா ஐரோப்பா வடஅமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தோதல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறாகள.

உண்மையான மக்களாட்சியை மக்களுக்கு தந்த சிறந்த ஆட்சியாளர்கள்

மக்கள் பிரதிநிதிகள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையைக் கடைபிடிக்க அறிவுரை கூறிய உமர் ரழியல்லாஹு அன்ஹு

عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِرضي الله عنه كَانَ إِذَا بَعَثَ عُمَّالًا اشْتَرَطَ عَلَيْهِمْ: أَلَا تَرْكَبُوا بِرْذَوْنَا وَلَا تَأْكُلُوا نَقِيًّا وَلَا تَلْبَسُوا رَقِيقًا وَلَا تُغْلِقُوا أَبْوَابَكُمْ دُونَ حَوَائِجِ النَّاسِ فَإِنْ فَعَلْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَقَدْ حَلَّتْ بِكُمُ الْعُقُوبَةُ ثُمَّ يُشَيِّعُهُمْ (بيهقي في شعب الايمان)

இஸ்லாத்தில் கலீபா(பிரதிநிதி) எனும் சொல்லே குடியாட்சியை பிரதிபலிக்கக் கூடியதுதான்

அபூபக்கர் (ரலி)  மக்களின் பிரதிநிதியாக கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் மக்களிடம் ஆற்றிய உரை மிகவும் பிரபலமானதாகும் அதாவது மக்களே.. வற்புறுத்தலின் பேரில் நான் இங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளேன். என்னை விட சிறந்தவர்கள் எத்தனையோ பேர் உங்களில் இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண மனிதன் தான். என்னிடம் நபி ஸல் அவர்கள் ஆ ட்சி செய்தது போன்ற ஒரு ஆட்சியை எதிர்பார்க்காதீர்கள். காரணம் அவர்களுக்கு வஹீ வந்து கொண்டிருந்தது. ஆனால் எனக்கு எந்த வஹீயும் வராது. நான் தவறு செய்யாத வரை என்னை பதவியில் வைத்திருங்கள். என்னிடம் ஒரு தவறைக் கண்டால் உடனே என்னை பதவியிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். என்றார்கள். 

அதேபோல் உமர் ரழி அவர்கள்  கூறும்போது மக்களில் எனக்கு நெருக்கமானவர்  எனது ஆட்சியில் உள்ள நிறைகளை சொல்லிக் காட்டுபவரை விட எனது ஆட்சியின் குறைகளை சொல்லிக் காட்டுபவரே எனக்குப் பிரியமானவர் என்றார்கள்.

இந்திய மண்ணை ஆண்ட எத்தனையோ மன்னர்களிடம் கூட உண்மையான குடியாட்சித் தத்துவம் வெளிப்பட்டுள்ளது.  மொகலாய மன்னரான  ஜஹாங்கீர் தனது ஆக்ராவின் கோட்டையில் ஒரு சங்கிலியைத் தொங்க விட்டிருந்தார். அதன் மற்றொரு பகுதி வீதியில் தொங்க விடப்பட்டிருந்தது. எந்த மனிதருக்கு நீதி மன்றத்தில் நீதி கிடைக்கவில்லையோ அவர் இந்த சங்கிலியைப் பிடித்து இழுப்பார்.  அவ்வாறு இழுத்தால் அரண்மனையில் மணியோசை எழும். உடனே அரசர் வெளியில் வந்து அந்த நபரின் குறையைக் கேட்பார். அவுரங்கசீப் ரஹ் அவர்களும் மக்களாட்சியை மக்களுக்கு தந்தவர்களில் பிரபலமானவர்கள். யாராவது அரசின் மீது வழக்குத் தொடர நாடினால் தொடரலாம் என அறிவிப்புச் செய்தார். பிற மதத்தினர்களுக்கான பாடசாலை, மற்றும் அவர்களின் வணக்கஸ்தலங்களுக்கு நிறைய அரசு மானியங்களை வழங்கினார். அரசராக இருந்தும் அரசின் வருவாயிலிருந்து தன் சொந்த செலவுகளை செய்ய மாட்டார். இது மக்களின் பணம் மக்களுக்குத் தான் செலவிடப்பட வேண்டும் என்பார். இது தான் குடியாட்சி தத்துவம்

மக்களாட்சி த த்துவத்தை முறையாக  பின்பற்றிய மஹ்மூது கஜ்னவீ (கஜினி முஹம்மது)

மஹ்மூது கஜ்னவீ என்றொரு மாமன்னர்இருந்தார் . அவரையே கஜினி முஹம்மது என இந்திய வரலாறுகளில் கூறப்படுவதுண்டு. மிகவும் நீதியாகவும், நேர்மையாகவும் இருந்தவர்.  அவருடைய ஆட்சி உண்மையான மக்களாட்சியாக இருந்தது. ஒரு தடவை ஒரு வெளியூர் வியாபாரி  மஹ்மூது கஜ்னவீ மன்னரிடம் வந்து உங்களுடைய மகன் மஸ்ஊத்  என்னிடம் 60 ஆயிரம் தீனார்களுக்கு பொருள் வாங்கி விட்டு பணம் தராமல் ஏமாற்றி விட்டார். நான் வெளியூர் வாசி. நான் ஊர் திரும்ப வேண்டுமானால் பணம் இல்லாமல் செல்ல முடியாது என முறையிட்டார். உடனே மஹ்மூது கஜ்னவீ அவர்கள் தன் மகனுக்கு சொல்லியனுப்பினார்கள். உடனே  வியாபாரியின் கடனை கட்டு.. அல்லது நீதி மன்றத்திற்கு ஆஜராகு..! என கடுமையாக  கட்டளையிட்டார்.  தந்தை  இந்த விஷயத்தில் எந்த சமரசமும் செய்ய மாட்டார் என்று அறிந்த அவரது மகன்  தனது பொருளாளரிடம் என் சொந்தப் பணம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அவர் 20 ஆயிரம் தீனார் உள்ளது என பதில் கூறினார்.   தற்சமயம் இதை அந்த வியாபாரியிடம் கொடுத்து விட்டு மீதிப் பணத்தை மூன்று நாட்களுக்குள் தருவதாகச் சொல்லியனுப்பினார். அதற்கு அரசர்  மஹ்மூது கஜ்னவீ  அவர்கள் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எதுவரை அவரின் கடனை நீ கொடுக்க மாட்டாயோ அதுவரை உன் முகத்தைக் கூட பார்க்க மாட்டேன்.  என்றார். இந்த செய்தி இளவரசருக்கு கிடைத்தவுடன் இங்கும் அங்குமாக என கடன் வாங்கி உடனே கடனை நிறைவேற்றி விட்டார். இதுதான் உண்மையான குடியாட்சியின்  தத்துவமாகும்.

தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு குடும்பம் பசியோடு இருப்பது கண்டு மிகவும் கவலைப்பட்டு உமர் ரழியல்லாஹு அன்ஹு எடுத்த நடவடிக்கையும், அந்த ஏழைக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பைக் காணும் வரை அங்கிருந்து நகராமல் இருந்ததும்..

عن أسلم أن عمر رضي الله عنهطاف ليلة فإذا هو بامرأة في جوف دار لها وحولها صبيان يبكون وإذا قدر على النار قد ملأتها ماء فدنا عمر من الباب فقال: يا أمة الله! ما بكاء هؤلاء الصبيان؟ قالت: بكاؤهم من الجوع، قال: فما هذه القِدر التي على النار؟ قالت: قد جعلت فيها ماء هو ذا أعللهم به حتى يناموا وأوهمهم أن فيها شيئا دقيقا فبكى عمر ثم جاء إلى دار الصدقةوأخذ غرارة  وجعل فيها شيئا من دقيق وشحم وسمن وتمر وثياب ودراهم حتى ملأ الغرارة ثم قال: يا أسلم! اِحْمِل علي، فقلتُ: يا أمير المؤمنين! أنا أحمله عنك؟ فقال لي: لا أم لك يا أسلم! أنا أحمله لأني أنا المسؤول عنهم في الآخرة، فحمله حتى أتى به منزل المرأة، فأخذ القدر فجعل فيها دقيقا وشيئا من شحم وتمر وجعل يحركه بيده وينفخ تحت القدر، فرأيت الدخان يخرج من خلل لحيته حتى طبخ لهم، ثم جعل يغرف بيده ويطعمهم حتى شبعوا! ثم خرج وربض بحذائهم حتى كأنه سبع، وخفت أن أكلمه، فلم يزل كذلك حتى لعب الصبيان وضحكوا، ثم قام فقال: يا أسلم! تدري لم ربضت بحذائهم؟ قلت لا، قال: رأيتهم يبكون فكرهت أن أذهب وأدعهم حتى أراهم يضحكون، فلما ضحكوا طابت نفسي (كنز العمال)

உதவிக்கு ஆளில்லாமல் பிரசவ வலியில் ஒரு பெண் துடித்த போது உமர் ரழியல்லாஹு அன்ஹு உடனே தன் மனைவியை அழைத்து வந்த சம்பவமும்,  அச்சமயத்திலும் தன்னை யார் என்றே காட்டிக் கொள்ளாத எளிமையும்

عن أنس بن مالك بينما أمير المؤمنين عمر يعس ذات ليلة إذ مر بأعرابي جالس بفناء خيمة فجلس إليه يحدثه ويسأله ويقول له: ما أقدمك هذه البلاد؟ فبينما هو كذلك إذ سمع أنيناً من الخيمة فقال: من هذا الذي أسمع أنينه؟ فقال: أمر ليس من شأنك، امرأة تمخض، فرجع عمر إلى منزله وقال: يا أم كلثوم شدي عليك ثيابك واتبعيني، قال: ثم انطلق حتى انتهى إلى الرجل فقال له: هل لك أن تأذن لهذه المرأة أن تدخل عليها فتؤنسها، فأذن لها فدخلت فلم يلبث أن قالت يا أمير المؤمنين بشر صاحبك             

மக்களில் ஒரு சமூகத்திற்கு தலைமை ஏற்பவர் அந்த சமூகத்தின் பணியாளரைப் போன்றாவார்

أن الأحنف بن قيس قدم على عمر في وفد من العراق قدموا عليه في يوم صائف شديد الحر وهو متحجز بعباءة يهنأ بعيرا من إبل الصدقة فقال: يا أحنف ضع ثيابك وهلم وأعن أمير المؤمنين على هذا البعير فإنه من إبل الصدقة فيه حق اليتيم والأرملة والمسكين فقال رجل يغفر الله لك يا أمير المؤمنين فهلا تأمر عبدا من عبيد الصدقة فيكفيك هذا؟ فقال عمر: يا ابن فلانة وأي عبد هو أعبد مني ومن الأحنف بن قيس هذا إنه من ولي أمر المسلمين فهو عبد للمسلمين يجب عليه لهم ما يجب على العبد لسيده من النصيحة وأداء الأمانة.

நாம் அக்கறையுடன் இருந்தால் நமக்கு அக்கறையானவர்கள் கிடைப்பார்கள்.

عن عوف بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم ويصلون عليكم وتصلون عليهم وشرار أئمتكم الذين تبغضونهم ويبغضونكم وتلعنونهم ويلعنونكم قيل يا رسول الله أفلا ننابذهم بالسيف فقال لا ما أقاموا فيكم الصلاة وإذا رأيتم من ولاتكم شيئا تكرهونه فاكرهوا عمله ولا تنزعوا يدا من طاعة   مسلم

© 2019 All Rights Reserved.
http://ulama.in/