தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

இறைவனின் நெருக்கம் பெற்றவர்கள்

இறைவனின் நெருக்கம் பெற்றவர்கள்

29-12-2017 ஜுமுஆ உரை - ரபீஉல் ஆகிர்

அல்லாஹ்வுக்கு நாம் கட்டுப்பட்டால் அல்லாஹ்வின் படைப்புகள் நமக்கு கட்டுப்படும், நமக்கு உதவும்

உமர் ரழி அவர்களின் வாழ்வில் சில அற்புத சம்பவங்கள்- நைல் நதிக்கு உமர் ரழி அவர்கள் எழுதிய கடிதம்

عن عَبْد الْجَبَّارِ بْنُ كُلَيْبٍ قَالَ: كُنَّا مَعَ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ فِي سَفْرَةٍ  فَعَرَضَ لَنَا السَّبْعُ1  فَقَالَ إِبْرَاهِيمُ : قُولُوا : اللهُمَّ احْرُسْنَا بِعَيْنِكَ الَّتِي لَا تَنَامُ  وَاحْفَظْنَا فِي كَنَفِكَ الَّذِي لَا يُرَامُ ، وَارْحَمْنَا بِقُدْرَتِكَ عَلَيْنَا ، وَلَا تُهْلِكْنَا ، وَأَنْتَ رَجَاؤُنَا ؛ يَا اللهُ يَا اللهُ . قَالَ : فَوَلَّى السَّبْعُ عَنَّا . قَالَ خَلَفٌ : فَأَنَا مُنْذُ سَمِعْتُ هَذَا أَدْعُو بِهِ عِنْدَ كُلِّ شِدَّةٍ وَكَرْبٍ ؛ فَمَا رَأَيْتُ إِلَّا خَيْرًا (المجالسة وجواهر العلم)   -   روي أن نيل مصر كان في الجاهلية يقف في كل سنة مرة واحدة وكان لا يجري حتى يلقى فيه جارية واحدة حسناء ، فلما جاء الإسلام كتب عمرو بن العاص بهذه الواقعة إلى عمر ، فكتب عمر على خزفة 2: أيها النيل إن كنت تجري بأمر الله فاجر ، وإن كنت تجري بأمرك فلا حاجة بنا إليك! فألقِيِتْ تلك الخزفة في النيل فجرى ولم يقف بعد ذلك (تفسير الرازي

மதீனாவில் இருந்து  உமர் ரழி கூறிய எச்சரிக்கை வார்த்தையை இராக்கிலுள்ள ஸாரியா படையினருக்கு அலாஹ் கேட்க வைத்தான்

كان عمر يخطب يوم الجمعة فعرض فى خطبته أن قال:يا سارية الجبل من استرعى الذئب ظلم فالتفت الناس بعضهم إلى بعض فقال لهم علىٌّ ليخرجن مما قال فلما فرغ سألوه فقال: وقع فى خلدى أن المشركين هزموا إخواننا وأنهم يمرون بجبل ، فإن عدلوا إليه قاتلوا من وجه واحد  وإن جازوا هلكوا فخرج منى ما تزعمون أنكم سمعتموه فجاء البشير بعد شهر فذكر أنهم سمعوا صوت عمر فى ذلك اليوم  قال: فعدلنا إلى الجبل ففتح الله علينا(أبو نعيم فى الدلائل

மதீனாவில் ஒருமுறை பூகம்பம் ஏற்பட்ட போது தரையை சாட்டையால் அடித்து அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு நீ அடங்கு என்று உமர் ரழி அவர்கள் கூறிய போது பூகம்பம் நின்றது. அதன் பின் மதீனாவில் பூகம்பம் ஏற்படவேயில்லை

الثالث : وقعت الزلزلة في المدينة فضرب عمر الدرة على الأرض وقال : اسكني بإذن الله فسكنت وما حدثت الزلزلة بالمدينة بعد ذلك .

الرابع : وقعت النار في بعض دور المدينة فكتب عمر على خزفة : يا نار اُسكني بإذنِ الله فألقوها في النار فانطفأت في الحال (الرازي)

உமர் ரழி அவர்கள் தனிமையில் இருப்பதைக் கண்டு சந்தர்ப்பம் பார்த்து ரோம் நாட்டின் தூதுவன் உமர் ரழி அவர்களைக் கொல்ல முற்பட்ட போது பூமியைப் பிளந்து இரண்டு சிங்கங்கள் தோன்றிய போது அவன் பயந்து உருவிய வாளை கீழே போட்ட பின் அவைகள் மறைந்தன. அதற்குள் உமர் ரழி எழுந்த போது அவர்களிடம் நடந்ததைக் கூறி இஸ்லாத்தையும் தழுவினான்

الخامس:روى أن رسول ملك الروم جاء إلى عمر فطلب داره فظن أن داره مثل قصور الملوك فقالوا ليس له ذلك وإنما هو في الصحراء يضرب اللبن فلما ذهب إلى الصحراء رأى عمر رضي الله عنه وضع درته تحت رأسه ونام على التراب فعجب الرسول من ذلك وقال: إن أهل الشرق والغرب يخافون من هذا الإنسان وهو على هذه الصفة ثم قال في نفسه: إني وجدته خالياً فأقتله وأخلص الناس منه فلما رفع السيف أخرج الله من الأرض أَسدين فقصداه فخاف وألقى السيف من يده وانتبه عمر ولم ير شيئاً فسأله عن الحال فذكر له الواقعة وأسلم (الرازي

நபி ஸல் அவர்களிடம் இரவில் நீண்ட நேரம் பேசி விட்டு வந்த நபித்தோழர்கள் இருவரின் கைகளில் இருந்த குச்சி இருள் நீக்கும் டார்ச் லைட் ஆக மாறிய  சம்பவம்.

عن أَنَس رض أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِىِّ صلى الله عليه وسلمخَرَجَا مِنْ عِنْدِ النَّبِىِّ  صلى الله عليه وسلم  فِى لَيْلَةٍ مُظْلِمَةٍ وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَافَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ- عَنْ أَنَسٍ كَانَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ عِنْدَ النَّبِىِّ  صلى الله عليهوسلم (بخاري),465 , 3805كتاب الصلاةقصة1:عَنْ أَنَسٍرضي الله عنهأَنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ وَرَجُلًا آخَرَ مِنْ الْأَنْصَارِ تَحَدَّثَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فِي حَاجَةٍ لَهُمَا حَتَّى ذَهَبَ مِنْ اللَّيْلِ سَاعَةٌ وَلَيْلَةٌ شَدِيدَةُ الظُّلْمَةِ ثُمَّ خَرَجَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقَلِبَانِ وَبِيَدِ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا عُصَيَّةٌ فَأَضَاءَتْ عَصَا أَحَدِهِمَا لَهُمَا حَتَّى مَشَيَا فِي ضَوْئِهَا حَتَّى إِذَا افْتَرَقَ بِهِمَا الطَّرِيقُ أَضَاءَتْ لِلْآخَرِ عَصَاهُ فَمَشَى كُلُّ وَاحِدٍ مِنْهُمَا فِي ضَوْءِ عَصَاهُ حَتَّى بَلَغَ إِلَى أَهْلِهِ (مسند أحمد) مُسْنَدُ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ(مشكاة-باب الكرامات

இரு சஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு வீடு திரும்பும்போது கடும் இருட்டாக இருந்தது அப்போது ஒருவர் கையில் வைத்திருந்த குச்சி பிரகாசித்தது. அதன் வெளிச்சத்தில் நடந்தனர். பிறகு அவ்விருவரும் அவரவர் வீட்டுக்குச் செல்ல பிரிந்த போது இருவரின் கையிலும் இருந்த குச்சிகள் தனித்தனியே பிரகாசித்தன. அந்த வெளிச்சத்தில் வீடு போய் சேர்ந்தனர்.

அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் இறை நேசர்களை அல்லாஹ் மற்ற ஜீவராசிகளைக் கொண்டு பாதுகாக்கும் விதம்

சுருக்கம்- துன்னூனுல் மிஸ் ரீ ரஹ் கூறுகிறார்கள் நான் ஒரு நாள் வீட்டில் இருந்தபோது என் மனம் ஒரு நிலையில் இல்லாமல் எதையோ தேடி புறப்பட நாடியது. நான் வீட்டிலிருந்து புறப்பட்டு நைல் நதி ஓரம் நடந்து சென்றேன். அப்போது ஒரு பெரிய தேள் மிக வேகமாக ஊர்ந்து செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதனைப் பின் தொடர்ந்து சென்றேன். நீரின் அருகே தேள் சென்றவுடன் அங்கே ஒரு தவளை காத்திருந்தது அதன் முகுகின் மீது இந்தத் தேள் ஏறிக் கொண்டது.அதனை தன் முதுகில் சுமந்தவாறு  அந்த தவளை நீரில் பாய்ந்தது நானும் பின் தொடர்ந்து சென்றேன் நதியின் மற்றொரு கரையை அடைந்ததும் அந்தத் தேள் தவளையில் முதுகில் இருந்து இறங்கி பாய்ந்து ஓடியது. அங்கே கண்ட காட்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது அங்கு ஒரு நல்லடியார் உறங்கிக் கொண்டிருக்கிறார் அவரைத் தீண்டுவதற்காக ஒரு கருநாகம் அருகில் வருகிறது அந்தப் பாம்பை அவரருகில் நெருங்க விடாமல் இந்தத் தேள் ஓடி வந்து அதைத் தடுக்கிறது இரண்டும் சண்டை போடுகின்றன. தேள் தன் கொடுக்குகளால் கருநாகத்தை முடிந்த வரை காயப்படுத்த கடைசியில் இரண்டும் இறந்தன. அந்த நல்லடியார் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார் -தஃப்ஸீர் ராஜீ 

படிப்பினை - இறைநேசர்கள் நஃப்ஸை பரிசுத்தப்படுத்தியதால் தான் மற்ற படைப்புகள் அவர்களுக்கு உதவி செய்தன

இறை நேசரிடம் மாணவராக இருந்த ஒருவர் சுமார் 12 வருடங்கள் கழித்து ஊருக்குப் புறப்பட்டார் அப்போது அவர் ஷைகு அவர்களிடம் பயணம் கூறும்போது நான் இத்தனை வருடங்களாக என் மனதில் வைத்துள்ள ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.இத்தனை வருடத்தில் நான் உங்களிடம் எந்த கராமத்தையும் நான் கண்டதில்லையே என்று கூற ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதாவது ஒரு நேரம் இமாம் ஜமாஅத்தை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார்கள் இல்லை என்று இவர் பதில் கூறினார் மீண்டும் ஷைகு அவர்கள் இந்த 12 வருடங்களில் ஏதேனும் ஒரு நேரம் தக்பீர் தஹ்ரீமாவை நான் தவற விட்டதை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்க இல்லை என்று இவர் பதில் கூறினார் அதற்கு ஷைகு அவர்கள் இதை விட என்ன அற்புதம் உமக்கு வேண்டும் என்றார்கள்... உடனே அந்த சீடர் ஷைகு அவர்களை தவறாக எண்ணி விட்டோமே என்று வருந்தியவராக  உங்களுடைய நிலையை நானும் அடைய வேண்டும் நான் ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்ப உங்களிடம் எப்போது வரட்டும் என்று கேட்டார் அதற்கு ஷைகு அவர்கள் "நான்" இறந்த பிறகு வா என்றார்கள் உடனே அந்த சீடர் ஷைகு அவர்களே நீங்கள் இறந்த பின்பு வருவதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நான் இறந்த பிறகு என்று என்னுடைய மவ்த்தை நான் குறிப்பிடவில்லை மாறாக "நான்" என்ற அகம்பாவம் எப்போது உன் உள்ளத்தில் அழியுமோ, இறந்து விடுமோ அப்போது என்னிடம் வா என்ற பொருளில் தான் நான் கூறினேன் என்றார்கள்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் தன் மனதை பக்குவப்படுத்தியதால் ஷைத்தானின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்கள்

مما اشتهر عن الشيخ عبد القادر رحمه الله مما يدل على فقهه وثبات قدمه في العلم ما حكاه عنه ابنه موسى كما قال ابن رجب الحنبلي رحمه الله: (سمعتُ والدي يقول: خرجتُ في بعض سياحاتي إلى البرية9، ومكثْتُ أياماً لا أجدُ ماءً، فاشتد بي العطش، فأَظَلَّتْنِي سحابةٌ نزلَ عليَّ منها شيء يشبه الندى10 فترويتُ منه، ثم رأيتُ نوراً أضاء به الأفق، وبَدَتْ لي صورة، ونوديتُ منها: يا عبد القادر أنا ربُّك، وقد أحللتُ لك المحرمات، أوقال: ما حرمتُ على غيرك؛ فقلت: أعوذُ بالله من الشيطان الرجيماِخْسَأْ11 يا لَعِيْنْ؛ فإذا ذلك النور ظلامٌ، وتلك الصورة دخانٌ، ثم خاطبني وقال: يا عبد القادر نجوتَ مِنِّي بعلمك بحكم ربك وفِقْهِك في أحوال منازلاتك، ولقد أضللتُ بمثل هذه الواقعة سبعين من أهل الطريق؛ فقلتُ: لربي الفضل والمنة؛ قال: فقيل له: كيف علمتَ أنه شيطان؟ قال: بقوله: وقد أحللتُ لك المحرمات) (من كتب ابن تَيْمِيَّة) (من اعتقد أن شيخاً يحلُّ له ما حرَّم الله، أويرفع عنه ما أوجبه على خلقه كالصلاة مثلاً فقد كفر.) موسوعة الرد على الصوفية

உள்ளத்தை பக்குவப்படுத்தாமல் நம்முடைய அமல்களை சீர் செய்வது கடினம்

ஒரு மனிதர் நான் இறைவனை தியானம் செய்யப் போகிறேன். அதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று சொல்லி ஓரிடத்தில் தனிமையில் அமர்ந்து தியானம்  செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஒரு அழகிய பெண் நடந்து வரும் சப்தம் கேட்டது. அந்தப் பெண்ணைப் பார்த்தார். அன்றைக்கு அவருடைய தியானம் கலைந்தது. அடுத்த நாளும் அவர் முயற்சியை கை விடாமல் என் கண்கள் திறந்திருந்தால் தானே யாரையும் பார்க்க முடியும். என்று கூறி தன் கண்களை துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார். அப்போதும் அதே பெண் நடந்து வர, அவளின் கொலுசு சப்தம் கேட்டது. உடனே அவருடயை தியானம் கலைந்தது. அடுத்த நாள் அவர் என் காதுகளையும் மூடிக் கொண்டால் எந்த சப்தமும் இடையூறு செய்யாது  என்று கூறி தன் காதுகளையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார் அப்போதும் அதே பெண் தலை நிறைய மல்லிகைப்பூவுடன் வர, அந்த நறுமணம் இவருடைய தவத்தை கலைத்து விட்டது. அடுத்த நாள் அவர் தன் மூக்கையும் மூடியவாறு தியானத்தில் அமர்ந்தார். இப்போது அந்தப் பெண்ணும் வரவேயில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்த நேரம் வந்தவுடன் இவர் மனதில் நேற்று இதே நேரம் அந்தப் பெண் வந்தாள். என்ற சிந்தனை ஏற்பட்டது. உடனே அவருடயை தவம் கலைந்தது. – படிப்பினை – மனதை பக்குவப்படுத்தாமல் எத்தனை வேறு எதை மூடினாலும் பலனில்லை

உள்ளம் என்பது ஒரு கண்ணாடி என்பார்கள் அந்தக் கண்ணாடி எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிரில் உள்ள உருவம் மங்கலாகவே தெரியும். அதேபோல் ஒருவரின் உள்ளம் மாசு பட்டிருந்தால் அவர் தன்னைப் போலவே மற்றவர்களையும் பார்ப்பார். எவர் மீதும் நல்லெண்ணம் கொள்ள மாட்டார். ஆகவே கல்பு என்ற கண்ணாடியை சிறுவயதில் இருந்தே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு கண்ணாடியை சுமார் 10 வருடங்களாக துடைக்காமல் இருந்து அதன் பின்பு அதை எடுத்து ஒரே நாளில் எப்படியாவது துடைத்து சுத்தமாக்கி விட வேண்டும் என்று நினைத்து, என்ன தான் கஷ்டப்பட்டு துடைத்தாலும் அந்த மங்கலான நிறம் மாறுவது கடினம். அதேபோல் இன்றைக்கு சிலர் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்பு முழு இபாதத்தில் ஈடுபடலாம் என்று எண்ணுவர்.  அது பலர்களுக்கு முழுமையான பலனை தருவதில்லை

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் எழுதிய ஃபுதூஹுல் ஙைப் என்ற நூலில் இருந்து ஒரு உபதேசம்.. 

قَالَ "الشَّيْخُ عَبْدُ الْقَادِررح"اِفْن عَنْ الْخَلْقِ بِحُكْمِ اللَّهِ وَعَنْ هَوَاك بِأَمْرِهِ وَعَنْ إرَادَتِك بِفِعْلِهِ لِحِينَئِذٍ يَصْلُحُ أَنْ تَكُونَ وِعَاءً لِعِلْمِ اللَّهِ" فَعَلَامَةُ فَنَائِك عَنْ خَلْقِ اللَّهِ انْقِطَاعُك عَنْهُمْ وَعَنْ التَّرَدُّدِ إلَيْهِمْ وَالْيَأْسِ مِمَّا فِي أَيْدِيهِمْ فَإِذَا كَانَ الْقَلْبُ لَا يَرْجُوهُمْ وَلَا يَخَافُهُمْ لَمْ يَتَرَدَّدْ إلَيْهِمْ لِطَلَبِ شَيْءٍ مِنْهُمْ (فتوح الغيب) شرح :افْنَ عَنْ عِبَادَةِ الْخَلْقِ وَالتَّوَكُّلِ عَلَيْهِمْ بِعِبَادَةِ اللَّهِ وَالتَّوَكُّلِ عَلَيْهِ فَلَا تُطِعْهُمْ فِي مَعْصِيَةِ اللَّهِ تَعَالَى وَلَا تَتَعَلَّقْ بِهِمْ فِي جَلْبِ مَنْفَعَةٍ وَلَا دَفْعِ مَضَرَّةٍ وَأَمَّا الْفَنَاءُ عَنْ الْهَوَى بِالْأَمْرِ وَعَنْ الْإِرَادَةِ بِالْفِعْلِ بِأَنْ يَكُونَ فِعْلُهُ مُوَافِقًا لِلْأَمْرِ الشَّرْعِيِّ لَا لِهَوَاهُ وَأَنْ تَكُونَ إرَادَتُهُ لِمَا يَخْلُقُ تَابِعَةً لِفِعْلِ اللَّهِ لَا لِإِرَادَةِ نَفْسِهِ

கருத்து- அல்லாஹ்வின் படைப்புகளிடம் (பணக்காரர்களிடம்) தன் தேவையை  நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களுடன் உறவாடுவதை விட்டும் விலகி  இரு.. ஞானம் உனக்கு கிடைக்கும்

பொருள்- 1, விலங்கு. 2,பழைய துணி 3,நைல் நதி ஓரம் 4,தவளை 5,தேள் 6,நீந்த ஆரம்பித்தது. 7,வேகமாக ஓடத்தொடங்கியது  9,கடற்கரை 10,மழையைப்போல் 11,சாபத்திற்குரியவனே!  இழிவடைந்து விடு

© 2019 All Rights Reserved.
http://ulama.in/