தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

யூத பயங்கரவாதம் இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலம் அறிவிக்கப்பட்டதையொட்டி..

بسم الله الرحمن الرحيم

 

 

 

ரபீஉல் அவ்வல் 25               

2017-12-15

 

 

யூத பயங்கரவாதம்

 

 

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலம் அறிவிக்கப்பட்டதையொட்டி..

                                                                                          

உலகின் எந்த மூலையில் முஸ்லிம்களுக்கு தாக்குதல் நடைபெற்றாலும் அதற்காக கலைபடுவதும், நம்மால் இயன்ற வரை அவர்களுக்கு உதவ முயற்சிப்பதும் ஈமானின் அம்சம்

عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ (بخاري)

இதுவரை இஸ்ரேல் தலைநகரமாக டெல் அவிவ் நகரம் இருந்து வந்தது.  இந்நிலையில்  கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இனி இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலம் இருக்கும் என அறிவித்துள்ளார். முஸ்லிம்களின்  மூன்று புனிதத் தளங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் அமைந்திருக்கும் ஜெரூசலம்  இஸ்ரேல் தலைநகரமாக  அறிவிக்கப்பட்டது உலக அளவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா கூட இதை அங்கீகரிக்கவில்லை. ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  அமெரிக்காவுடன் நட்புறவு கொண்ட சவூதி போன்ற நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

பைத்துல் முகத்தஸ் என்பது இறுதி வரை முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் அதாவது யார் நபி ஸல் அவர்களை இறுதி நபியாக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களிடம் இருக்க வேண்டும் என்பதும் இஸ்லாத்திற்கு எதிரானவர்களின் கட்டுப்பாட்டில் அது இருக்கக்கூடாது என்பதும்  அல்லாஹ்வும், அவனது தூதரும் வலியுறுத்தும் விஷயமாகும்.ஆனால் துரதிஷ்டவசமாக இன்று யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்பதற்காக  எப்போதும் முஸ்லிம்களில் ஒரு சாரார் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற இஸ்லாமிய அறிவுரைக்கேற்ப  இன்று அங்கு முஸ்லிம்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்  டிரம்பின் இந்த அறிவிப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது                                 

ஜெரூசலம் என்பது முஸ்லிம்களின் புனித இடம் என்பதற்கான  ஆதாரங்களில் சில....

நபிமொழிகளில், வரலாறுகளில் ஷாம் எனப்படுவது இன்றைய சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். ஷாமுக்காக நபி ஸல் அவர்களின் பிரத்தியேக துஆ உள்ளது

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضقَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُؤَلِّفُ الْقُرْآنَ مِنْ الرِّقَاعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طُوبَى لِلشَّامِ فَقُلْنَا لِأَيٍّ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّ مَلَائِكَةَ الرَّحْمَنِ بَاسِطَةٌ أَجْنِحَتَهَا عَلَيْهَا (ترمذي) بَاب فِي فَضْلِ الشَّامِ وَالْيَمَنِ- كِتَاب الْمَنَاقِبِ( باسطة أجنحتها عليها) أي على بقعة الشام وأهلها بالمحافظة عن الكفر وقال المناوي بَاسِطَةٌ أَجْنِحَتَهَا أي تحفها وتحولها بإنزال البركة ودفع المهالك والمؤذيات

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சத்தியத்தை நிலை நாட்டக் கூடிய ஒரு சாரார்  ஷாமில் இருப்பார்கள்

عن مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ (بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ )كتاب التوحيد

முஆவியா ரழி போன்ற  இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தலைமைப் பீடமாக இருந்தது அன்றைய ஷாம் தான்

கடைசி காலத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கவிருப்பதும் அன்றைய ஷாமின் ஒரு அங்கமான சிரியாவில் தான்

عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْكِلَابِيِّ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ فَقَالَ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ1 دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ فَإِنَّهَا جِوَارُكُمْ مِنْ فِتْنَتِهِ قُلْنَا وَمَا لُبْثُهُ فِي الْأَرْضِ قَالَ أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَذَا الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلَاةُ يَوْمٍ وَلَيْلَةٍ قَالَ لَا اقْدُرُوا لَهُ قَدْرَهُ ثُمَّ يَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ فَيُدْرِكُهُ عِنْدَ بَابِ لُدٍّ فَيَقْتُلُهُ(ابوداود)عَنْ أَبِي هُرَيْرَةَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ يَعْنِي عِيسَى وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ2 إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ3 بَيْنَ مُمَصَّرَتَيْنِ4 كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ5 فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الْإِسْلَامِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ (ابوداود) خُرُوجِ الدَّجَّالِ-كتاب الْمَلَاحِمِ

பல நபிமார்களும் தங்களை இங்கு தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பினார்கள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ(بخاري)باب مَنْ أَحَبَّ الدَّفْنَ فِى الأَرْضِ الْمُقَدَّسَةِ أَوْ نَحْوِهَا-كتاب الجنائز

 

நபி ஸல் அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் பனூ இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு கிழவி ஆசைப்பட்டது போன்று நீங்கள் ஆசைப்படுங்கள் என்று கூறினார்கள் உடனே தோழர்கள் அப்படி அவர் என்ன ஆசைப்பட்டார் என்று கேட்க, நபி மூஸா அலை எகிப்தில் இருந்து தன் உம்மத்தை அழைத்துக் கொண்டு பாலஸ்தீனம் நோக்கி புறப்பட்ட போது  மூஸா நபியிடம் சிலர்கள்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்  இந்த எகிப்தில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் ஒரு வஸிய்யத் செய்துள்ளார்கள் நீங்கள் என்றாவது ஒருநாள் ஷாமுக்கு குடியேறுவீர்கள்  அன்று என்னுடைய உடலையும் அங்கு கொண்டு சென்று விடுங்கள்  என்று  வஸிய்யத் செய்துள்ளார்கள் என்று கூறிய போது அதை மூஸா அலை ஏற்றுக் கொண்ட பின் உங்களில் யாருக்கேனும் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் உடைய  கப்ரு தெரியுமா என்று கேட்க, எங்களில் யாருக்கும் தெரியாது ஆனால் ஒரே ஒரு மூதாட்டிக்கு மட்டும் தெரியும் என்றார்கள் உடனே  அந்த மூதாட்டியை சந்திப்பதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் விரைந்தார்கள் அவரின் இருப்பிடத்தை தேடிக் கண்டு பிடித்து அவரிடம் கேட்ட போது அந்தப் பெண்  நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ரை காட்டுவதற்கு ஒரு மாபெரும் கோரிக்கையை முன்வைத்தார்.  மூஸா நபியே நான் உங்களோடு சுவனத்தில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சிபாரிசு செய்தால் நான் கப்ரை காட்டுகிறேன் என்றார். மூஸா அலை  யோசித்தார்கள்.  கப்ரை காட்டுவதற்கு இவ்வளவு பெரிய நிபந்தனை விதிக்கிறாரே என்று  யோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு வஹீ அறிவித்தான் மூஸாவே அப்பெண்ணின் நிபந்தனையை ஏற்று நீங்கள் துஆ செய்யுங்கள் நான் அதை நிறைவேற்றுவேன். ஏனெனில் அந்தப் பெண் தனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து தினமும் என்னிடம் யாஅல்லாஹ் நபிமார்களோடு சுவனத்தில் இருக்கும் பாக்கியத்தைத் தா! என துஆ செய்து வந்தார் ஆகவே அவரை நிச்சயம் நான் சுவனத்தில் புகுத்துவேன் என்றான் அதன் பின் நபி மூஸா அலை துஆ செய்தார்கள் அப்பெண் கப்ரை காட்டினார் நபி  யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்  கப்ருதோண்டப்பட்டு பின்பு ஜெரூஸலம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது                                                                                                  

ஈஸா அலை இறங்கும் முன் அங்குள்ள முஸ்லிம்களில் ஒரு சாரார் கிறிஸ்தவர்களை வெற்றி கொள்வது பற்றிய நீண்ட ஹதீஸ்

நபி ஸல் கூறினார்கள்-ரோம, பைஸாந்தியர்கள் சிரியாவில் உள்ள அஃமாக், தாபிக் ஆகிய இடங்களில் நிலை கொள்ளாத வரை கியாமத் வராது. அவர்களை நோக்கி மதீனாவில் இருந்து (இந்த மதீனா என்பதற்கு சிரியாவின் முக்கிய நகரம் எனவும் பொருள் உண்டு)  ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாக இருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்)  எங்களுக்கும், எங்களில் சிறைக் கைதிகளாக   பிடிக்கப்பட்டோருக்குமிடையில் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள் என்பார்கள். (அதாவது முஸ்லிம்களாகிய உங்களுடன் போர் புரிய வரவில்லை. மாறாக எங்கள் மதத்தில் இருந்து விட்டு உங்களால் சிறை பிடிக்கப்பட்டு மதம் மாறி உங்களுடன் சேர்ந்து கொண்டு எங்களைத் தாக்குவதற்கும் துணிந்து விட்ட எங்களுடைய பழைய பங்காளிகளுடனேயே போர் புரிய வந்துள்ளோம் என்பர். இவ்வாறு பேசி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முயல்வர்) அப்போது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் சகோதரர்களின் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்பர். ஆகவே ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோற்று விரண்டோடுவர். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் ரோமர்களை வெற்றி கொள்வார்கள். அவர்கள் அதன் பின் ஒரு போதும் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்க விட்டு  போர் செல்வங்களை பங்கிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் ஷைத்தான் வந்து நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடம் தஜ்ஜால் வந்து விட்டான் என்பான். உடனே அவர்கள் தம் குடும்பத்தாரிடம் புறப்படுவார்கள். அது பொய்யான செய்தியாக இருக்கும். அவர்கள் சிரியாவுக்கு வரும்போது தான் தஜ்ஜால் கிளம்புவான். பின்பு  அவர்கள்  போருக்கு ஆயத்தமாகி அணிகளை சீர் செய்து கொண்டிருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும். அப்போது தான் ஈஸா அலை வானில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு  தலைமையேற்பார்கள். அவர்களை தஜ்ஜால் காணும்போது தண்ணீரில் உப்பு கரைவது போன்று கரைந்து போவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் கூட தானாக கரைந்து  அழிந்து விடுவான். ஆயினும் ஈஸா அலை அவர்களின் கரத்தால் அல்லாஹ் அவனை அழிப்பான். ஈஸா அலை தன் ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்கு காட்டுவார்கள்   முஸ்லிம் 5553

அனைத்து மனிதர்களும் எழுப்பி விசாரிக்கப்படும் மஹ்ஷர் மைதானமாக ஷாம் இருக்கலாம்

عَنْ حُذَيْفَةَ  رضي الله عنه اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَأَجُوجَ وَمَأْجُوجَ وَثَلَاثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ (مسلم)5558 كِتَاب الْفِتَنِ (تطرد الناس (إلى المحشر) وهو الشام (فيض القدير)قال مجاهد :في تفسير قوله تعالي "إلَى المَسْجِدِ الأقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ"  سمّاه مباركاً لأنه مَقَرّ الأنبياء ، وفيه مَهْبَطُ الملائكة والوحي ، وهو الصخرة ، ومنه يُحشر الناس يوم القيامة .(تفسير الخازن-تفسير الرازي   (قال الخطابي هذا قبل قيام الساعة يحشر الناس أحياء إلى الشام بدليل قوله (تبيت معهم حيث باتوا وتقيل معهم حيث قالوا) فيض القدير

முஸ்லிம்களிடமிருந்து அநியாயமாக கைப்பற்றப்பட பகுதிகளில் தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது

1960 வரை யூதர்களுக்கென்று சொந்த நாடு கிடையாது அல்லாஹ்வின் பாதுகாப்போ, அலது மனிதர்களின் பாதுகாப்போ இல்லா விட்டால் யூதர்களுக்கு என்றும் இழிவு தான் என்று குர்ஆன் கூறுவதைப் போல

நாடோடிகளாக இருந்த யூதர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு நாட்டை உருவாக்கித் தந்தன. ஆனால் முஸ்லிம்களின் பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. அப்போதே மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் இதை கண்டித்தார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கு யூதர்கள் மீது உண்மையான் அக்கறை இருந்தால் அவர்கள் தங்களுடைய பகுதிகளில் ஒன்றை விட்டுத் தரலாமே..  அதை விட்டு விட்டு முஸ்லிம்களின் குடியிருப்புகளை ஏன் ஆக்கிரமிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார்கள். அது மட்டுமல்ல  முஸ்லிம்களின் பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போதே அப்போதைய ஐ.நா. சபை  ஒரு நிபந்தனை விதித்தது. அதாவது உலகின் எந்த ஒரு நாடும் ஜெரூஸலத்தில் தங்கள் தூதரகத்தை அமைக்க க்கூடாது என்று. இந்நிலையில் 1964 ல் முஸ்லிம்களிடம் போரிட்டு இஸ்ரேல் ஜெரூஸலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. அதை ஐ.நா. சபை  இன்று வரை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றே கூறி வருகிறது அதை முஸ்லிம்களிடம் திரும்ப ஒப்படைக்கும்படி கூறியும் இன்று வரை இஸ்ரேல் அதை ஒப்படைக்கவில்லை. அந்தப் பகுதியைத் தான் இஸ்ரேலின் தலைநகராக டிரம்ப் அறிவித்து அங்கு ஒரு  தூதரகத்தை  அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்   

பைத்துல் முகத்தஸ் பற்றி உலக முஸ்லிம்களின் அக்கறை மிக குறைவாக இருப்பதும் இந்நிலைக்குக் காரணம்

பைத்துல் முகத்தஸை மீட்க போராடிக் கொண்டிருக்கும்  பாலஸ்தீன முஸ்லிம்களின் மனக்குமுறல்கள் என்னவென்றால் நாங்கள் எங்களால் முடிந்த வரை நாங்கள் இம்மண்ணுக்காக போராடுகிறோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டிய உதவி எங்களுக்காக துஆ செய்யுங்கள் மேலும் எங்களுடைய இந்த மண்ணுக்கு அடிக்கடி வந்து செல்லுங்கள். முஸ்லிம்கள் வருகை மிக குறைவாக இருப்பதாலும் யூதர்களின் உள்ளத்தில் தைரியத்தை உண்டாக்கியுள்ளது 

© 2019 All Rights Reserved.
http://ulama.in/