தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

மூட நம்பிக்கைகள் அன்றும் இன்றும்

 

بسم الله الرحمن الرحيم

மூட நம்பிக்கைகள் அன்றும் இன்றும்

 Safar – 6    -    27-10-2017 

அறியாமைக் கால மூட நம்பிக்கைகள்.அடிப்படை இல்லாமல் ஒரு நிகழ்வை மற்றொரு நிகழ்வோடு சம்பந்தப்படுத்தி பேசுவது

عن الْمُغِيرَة بْن شُعْبَةَرضقالانْكَسَفَتْ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ فَقَالَ النَّاسُ انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَإِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ(وفي رواية وَلَكِنَّ اللَّهَ تَعَالَى يُخَوِّفُ بِهَا عِبَادَهُ) فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَادْعُوا اللَّهَ وَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ (بخاري)-كتاب الكسوف- عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَانْكَسَفَتْ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مَعَهُ فَقَامَ قِيَامًا طَوِيلًا قَدْرَ نَحْوِ سُورَةِ الْبَقَرَةِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ سَجَدَ ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ سَجَدَ ثُمَّ انْصَرَفَ وَقَدْ انْجَلَتْ الشَّمْسُ فَقَالَ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ هَذَا ثُمَّ رَأَيْنَاكَ كَفَفْتَ فَقَالَ إِنِّي رَأَيْتُ الْجَنَّةَ فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا وَلَوْ أَخَذْتُهُ لَأَكَلْتُمْمِنْهُ مَا بَقِيَتْ الدُّنْيَا وَرَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَ كَالْيَوْمِ مَنْظَرًا قَطُّ وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ قَالُوا بِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُفْرِهِنَّ قِيلَ أَيَكْفُرْنَ بِاللَّهِ قَالَ بِكُفْرِ الْعَشِيرِ وَبِكُفْرِ الْإِحْسَانِ لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا قَالَتْ مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ(مسلم)بَاب مَا عُرِضَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْكُسُوفِ-عُنْقُودًاதிராட்சைக்குலை

புறப்பட்ட பயணம் ரத்தாகி திரும்பி வந்தால் வீட்டின் முன்வாசல் வழியாக வரக்கூடாதாம்..

وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا (189البقرة)وَقَالَ الْحَسَن الْبَصْرِيّ:كَانَ أَقْوَام مِنْ أَهْل الْجَاهِلِيَّة إِذَا أَرَادَ أَحَدهمْ سَفَرًا وَخَرَجَ مِنْ بَيْته يُرِيد سَفَره الَّذِي خَرَجَ لَهُ ثُمَّ بَدَا لَهُ بَعْد خُرُوجه أَنْ يُقِيم وَيَدَع سَفَره لَمْ يَدْخُل الْبَيْت مِنْ بَابه وَلَكِنْ يَتَسَوَّرهُ مِنْ قِبَل ظَهْره فَقَالَ اللَّه تَعَالَىوَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوت مِنْ ظُهُورهَا(تفسير ابن كثير)عن الْبَرَاء رَض يَقُولُ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِينَا كَانَتْ الْأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ وَلَكِنْ مِنْ ظُهُورِهَا فَجَاءَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ فَنَزَلَتْ "وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنْ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا (بخاري- باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا) كتاب العمرة

இதற்கு ஒப்பான மூடநம்பிக்கைகள் இன்றும் உள்ளன. உதாரணமாக மய்யித்து வீட்டுக்குச் சென்றால் குளிக்காமல் வீட்டுக்குள் வரக் கூடாது என்ற மூடநம்பிக்கை சிலரிடம் குறிப்பாக பெண்களிடம் உள்ளது. இது மாற்றுமத கலாச்சாரமாகும். மய்யித்தை குளிப்பாட்டியவர் கூட அவர் மீது ஏதேனும் நஜீஸ் பட்டிருக்கலாம் என்பதால் குளிப்பது முஸ்தஹப் என கூறப்பட்டுள்ளது.

மவ்த்துடைய இத்தா விஷயத்தில் மூட நம்பிக்கை

عن أُمَّ سَلَمَةَ رضي الله عنهاتَقُولُ جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَقَدْ اشْتَكَتْ عَيْنَهَا أَفَتَكْحُلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا كُلَّ ذَلِكَ يَقُولُ لَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ وَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ (بخاري)كتاب الطلاق - قَالَ حُمَيْدٌ فَقُلْتُ لِزَيْنَبَ وَمَا تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِفَقَالَتْ زَيْنَبُ كَانَتْ الْمَرْأَةُ إِذَا تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا دَخَلَتْ حِفْشًا وَلَبِسَتْ شَرَّ ثِيَابِهَا وَلَمْ تَمَسَّ طِيبًا حَتَّى تَمُرَّ بِهَا سَنَةٌ ثُمَّ تُؤْتَى بِدَابَّةٍ حِمَارٍ أَوْ شَاةٍ أَوْ طَائِرٍ فَتَفْتَضُّ بِهِ فَقَلَّمَا تَفْتَضُّ بِشَيْءٍ إِلَّا مَاتَ ثُمَّ تَخْرُجُ فَتُعْطَى بَعَرَةً فَتَرْمِي ثُمَّ تُرَاجِعُ بَعْدُ مَا شَاءَتْ مِنْ طِيبٍ أَوْ غَيْرِهِ سُئِلَ مَالِكٌ مَا تَفْتَضُّ بِهِ قَالَ تَمْسَحُ بِهِ جِلْدَهَا (بخاري)باب تُحِدُّ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا-كتاب الطلاق

நபி ஸல் அவர்களிடம் ஒரு பெண் வந்து என் மகளுடைய கணவன் இறந்து விட்டார். அதற்காக அவள் இத்தா இருக்கிறாள். இந்நிலையில் அவள் கண்களில் ஒரு வலி  உள்ளது. அந்த வலி நீங்க சுர்மா இட்டுக்கொள்ளலாமா என்று கேட்க. நான்கு மாதம் பத்து நாள் இத்தா காலம் முடியும் வரை அவ்வாறு சுர்மா இட்டுக் கொள்ளக்கூடாது என்று மூன்று முறை கூறி, பின்பு அறியாமைக்காலத்தில் கணவன் இறந்த பின் ஒரு வருடம் இத்தா இருப்பாள். ஆண்டின் முடிவில் இத்தா முடிந்ததற்கான அடையாளமாக ஒட்டகச்சானத்தை எறிவாள். அதுபோன்ற சிரமமும், மூடநம்பிக்கையும் இப்போது இல்லை என விளக்கினார்கள். எனினும் சுர்மா இடுவதை தடுத்தார்கள். நபி ஸல் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்று சுருக்கமாக கூறியதை இரண்டாவது ஹதீஸில் ஜைனப் ரழி விளக்கிக் கூறியுள்ளார்கள். அதாவது கணவன் இறந்த பின் மூடநம்பிக்கை அடிப்படையில் மிகச் சிறிய ஒரு குடிசையில் சென்று தங்கிக் கொள்வாள். அவளுடைய ஆடைகளில் மிக மோசமான ஆடையை அணிந்து கொள்வாள். ஒரு வருடம் வரை நறுமணம் பூச மாட்டாள். (குளிக்கவும் மாட்டாள்) ஒரு வருடம்  கழிந்த பின் ஏதேனும் ஒரு கால்நடை அவளிடம் கொண்டு வரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலை)   கடுமையாக தேய்த்துக் கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும்போது அந்த கால்நடை (அவளது உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருக்காது. (பெரும்பாலும் செத்து விடும்) பின்பு அவள் குடிசையை விட்டு வெளியே வருவாள். அவளிடம் ஒட்டகச் சாணம் தரப்படும். அதை தனக்கு முன் பக்கத்தில் வீசி எறிந்து இத்தாவை முடித்துக் கொள்வாள். நூல்- புகாரீ 5337

அறியாமைக் காலத்தைப் போல் கணவனை இழந்த விதவைகள் விஷயத்தில் இன்றும் நிறைய மூட நம்பிக்கைகள் உள்ளன

சஃபர் மாதம் பீடை என்ற மூட நம்பிக்கை

عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ وَفِرَّ مِنْ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنْ الْأَسَدِ (بخاري) باب الْجُذَامِ .-كتاب الطب وَلاَ صَفَرَ :قال البيضاوي : ويحتمل أن يكون نفيا لما يتوهم أن شهر صفر تكثر فيه الدواهي والفتن (مرقاة)

لاَ عَدْوَىவிளக்கம்

தொற்று நோய் கிடையாது என்ற ஹதீஸுக்கும், தொழுநோயாளியை விட்டும் விரண்டோடு என்ற ஹதீஸுக்கும் இணைப்பு – அன்று அறியாமைக் கால மக்கள் நோய் உண்டாக காரணமே தொற்று தான் என்றும் இறைவனுக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் கருதினர். அதை களையும் விதமாக நபி ஸல் இவ்வாறு கூறினார்கள். அதாவது நோயாளியுடன் கலந்திருப்பதால் மட்டுமே நோய் வருவதில்லை. அல்லாஹ்வின் நாட்டமும் இருந்தால் தான் நோய் ஏற்படும். நோயாளியை தாக்கியுள்ள வைரஸ் கிருமிகள் காற்று வாயிலாகவும், நீர் வாயிலாகவும் இடம் பெயர்ந்து மற்றவர்களுக்கும் நோய் பரவ இடமுண்டு. இவ்வாறு பரவ வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஆணையாக இருக்கும். எனவே தான் தொழு நோயாளிகளிடமிருந்து விலகி இருங்கள். என்றார்கள். மற்றொரு விளக்கம்- இறை நம்பிக்கையாளர் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை சார்ந்திருப்பார். மற்ற காரணங்களை நம்ப மாட்டார். இத்தகையவருக்கு சொல்லப்பட்டதே தொற்று நோய் கிடையாது என்ற வார்த்தை. அதே நேரத்தில் வெளிக்காரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இறைசக்தியின் மீது பலவீனமான நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்களின் இறை நம்பிக்கை மேலும் பலவீனமாக ஆகக் கூடாது என்பதற்காக சொல்லப்பட்டதே  தொழுநோயாளியை விட்டும் விரண்டோடுஎன்பதாகும். ஆக நோய் உண்டாக காரணமாகலாம் என அறிவியல் ரீதியாகவோ, அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்டால் அதிலிருந்து விலகி இருக்கலாம். அதே நேரத்தில் அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் ஏற்படுவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்( ஃபத்ஹுல் பாரீ )

لاَ طِيَرَةவிளக்கம்

பறவை சகுனம் என்பது அறியாமைக் காலப் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். அன்று ஒருவர் ஒரு காரியத்திற்காக வெளியே புறப்படும்போது அவருக்கு வலப்பக்கமாக பறவை ஏதேனும் பறந்து சென்றால் அதை நல்ல சகுனமாக கருதி காரியத்தை தொடர்வார். இடப்பக்கமாக பறந்து சென்றதைப் பார்த்து விட்டால் அதை கெட்ட சகுனமாக கருதி திரும்பி விடுவார். சிலர் இதற்காக பறவையை பறக்க விட்டு சகுனம் பார்த்ததும் உண்டு. இந்த மூட நம்பிக்கையை ஒழித்து பறவைகள் பறப்பதற்கும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நடக்கப்போவதை தெரிவிக்கும் ஆற்றல் பறவைக்கு கிடையாது என விளக்கினார்கள்-   அறியாமைக் காலத்தைப் போல் இன்றும் நம்மில் சிலர் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்றும், வெளியில் புறப்படும்போது எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் போகிற காரியம் உருப்படாது என்றும் கருதுகின்றனர்.(ஃபத்ஹுல் பாரி)

துற்குறி என்பது இல்லை. ஆனால் நற்குறி உண்டு. அதாவது வெளியில் புறப்படும்போது செவியேற்கும் நல்ல வார்த்தைகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَلَا طِيَرَةَ وَخَيْرُهَا الْفَأْلُ قَالَ وَمَا الْفَأْلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ(بخاري)كتاب الطب-عَنْ أَنَسِ رضأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ إِذَا خَرَجَ لِحَاجَةٍ أَنْ يَسْمَعَ يَا رَاشِدُ يَا نَجِيحُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي الطِّيَرَةِ-كِتَاب السِّيَرِ

وَلاَ هَامَةَ என்பதன் விளக்கம்(ஃபத்ஹுல் பாரி)

ஆந்தை சகுனம் குறித்து அன்றைய அரபுகளிடம் இரு விதமான மூடநம்பிக்கை இருந்தது. ஒரு வீட்டில் ஆந்தை வந்து உட்கார்ந்தால் அந்த வீட்டில் யாரேனும் இறந்து விடுவார்கள் என்று நம்பினர். இதை மறுக்கும் விதமாக ஆந்தை சகுனம் கிடையாது என்றார்கள்மற்றொரு விளக்கம்- இறந்து போனவரின் எலும்புகள் ஆந்தையாக உருமாறி சுற்றிக் கொண்டிருக்கும என நம்பினர். இதை மறுக்கும் விதமாக லா ஹாம்மத்த இறந்தவர் ஆந்தையாக உருமாறுவதில்லை என்றார்கள். மற்றொரு விளக்கம்- அறியாமைக்கால அரபுகளிடம் மற்றொரு மூடநம்பிக்கையும் இருந்தது. ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது கொலைக்கு பழி வாங்கப்படா விட்ட்டால் கொலையுண்டவரின் தலையிலிருந்து ஒரு புழு வெளியேறி அவரது கப்ரை சுற்றிக் கொண்டே இருக்கும். எனக்கு நீர் புகட்டுங்கள் எனக்கு நீர் புகட்டுங்கள் என அது கூறும். பழி வாங்கப்பட்டு விட்டால் அது போய் விடும். இல்லையேல் அங்கேயே தங்கி விடும். இந்தப்புழுவுக்கும் ஹாமத் என்றே கூறுவர். இதன்படி இந்த ஹதீஸின் அர்த்தம் புழு குறித்த நம்பிக்கை கூடாது என்பதாகும்

وَلاَ صَفَرَஎன்பதன் விளக்கம்(ஃபத்ஹுல் பாரி)

வயிற்றிலுள்ள ஒரு புழுவால் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கும் ஒரு வகை நோய் தான் ஸஃபர் என்று இமாம் புகாரீ ரஹ் அவர்கள்  விளக்கமளித்துள்ளார்கள். சொறி, சிரங்கை விட வேகமாய் பரவும் ஒரு தொற்று நோய் என இதை அரபுகள் கருதினர். இதை மறுக்கும் விதமாக லா ஸஃபர ஸஃபர் என்பது ஒரு தொற்று நோய் கிடையாது என நபி ஸல் அவர்கள் விபரித்தார்கள். இன்னொரு விளக்கம்- வயிற்றில் ஸஃபர் என்னும் புழு இருப்பதாகவும், மனிதனுக்கு பசி வரும்போது அப்புழு வயிற்றைக் கடித்து தொல்லை தரும் என்றும் அரபுகள் நம்பினர் அப்படி ஒரு புழுவே கிடையாது என உணர்த்த நபி ஸல்  இவ்வாறு கூறினார்கள். மற்றொரு விளக்கம் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள புனித மாதங்கள் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் என்றிருக்க, அரபுகள் முஹர்ரம் மாதத்தை போர் செய்ய அனுமதிக்கப்பட்ட மாதமாகவும், அதற்கு பதிலாக ஸஃபர் மாதத்தை புனித மாதமாகவும் தங்களின் சுய இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தனர். இதை தடுக்கும் விதமாக...லா ஸஃபர... ஸஃபர் மாதம் போர் செய்ய தடுக்கப்பட்ட புனித மாதம் அல்ல என விளக்கினார்கள். மற்றொரு விளக்கம் ஸஃபர் மாதம் வந்து விட்டால் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகி விடும் என நம்பி அதை பீடை மாதமாக கருதினார்கள் அதை தடுக்கும் விதமாக “லா ஸஃபர” ஸஃபர் பீடை மாதம் அல்ல என நபி ஸல் விளக்கினார்கள் 

முடிவுரை- மூடநம்பிக்கைகள் ஈமானை பாதிக்கும். மூட நம்பிக்கைகளை விட்டால் தான் ஈமான் முழுமை பெறும். இந்த உம்மத்தில் 70 ஆயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் செல்வர். அவர்களில் சகுனம் பார்க்காதவர்களும் அடங்குவர் புகாரீ5752

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَجَعَلَ يَمُرُّ النَّبِيُّ مَعَهُ الرَّجُلُ وَالنَّبِيُّ مَعَهُ الرَّجُلَانِ وَالنَّبِيُّ مَعَهُ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَرَجَوْتُ أَنْ تَكُونَ أُمَّتِي فَقِيلَ هَذَا مُوسَى وَقَوْمُهُ ثُمَّ قِيلَ لِي انْظُرْ فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ لِي انْظُرْ هَكَذَا وَهَكَذَا فَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الْأُفُقَ فَقِيلَ هَؤُلَاءِ أُمَّتُكَ وَمَعَ هَؤُلَاءِ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ فَتَفَرَّقَ النَّاسُ وَلَمْ يُبَيَّنْ لَهُمْ فَتَذَاكَرَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا أَمَّا نَحْنُ فَوُلِدْنَا فِي الشِّرْكِ وَلَكِنَّا آمَنَّا بِاللَّهِ وَرَسُولِهِ وَلَكِنْ هَؤُلَاءِ هُمْ أَبْنَاؤُنَا فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَتَطَيَّرُونَ وَلَا يَسْتَرْقُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ نَعَمْ فَقَامَ آخَرُ فَقَالَ أَمِنْهُمْ أَنَا فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَاشَة (بخاري)

© 2018 All Rights Reserved.
http://ulama.in/