தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

வாட்ஸ்-அப் பும், வதந்திகளும் நவீன சாதனங்களை நன்மைகளுக்காக பயன்படுத்துவோம்

بسم الله الرحمن الرحيم

                                 வாட்ஸ்-அப் பும், வதந்திகளும்

நவீன சாதனங்களை நன்மைகளுக்காக பயன்படுத்துவோம்

2017-10-20     -      முஹர்ரம் - 29

 நவீன சாதனங்கள் பெருகி விட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். குறிப்பாகமீடியாக்கள்.இன்று மனிதர்களுக்கு மிக அவசியமான தேவைகளில் ஒன்றாக மீடியாக்கள் ஆகி விட்டன. அதிலும் குறிப்பாக வாட்ஸ்-அப் போன்ற தகவல் தொடர்புகள் இல்லாத வீடுகள் இல்லை என்கிற அளவுக்கு தற்போதைய நிலை உள்ளது. இதன் மூலம் பல நல்ல விஷயங்களும் பரிமாறப்படுகிறன. நாட்டு நடப்புகள் தெரிந்து கொள்ளப்படுகிறது. எத்தனையோ பேர் காலையில் எழுந்தவுடன் நியூஸ் படிக்கா விட்டால் அவர்களுக்கு எந்த உணவும் ஜீரணமாகாது. இது கடமையல்ல. எனினும் தவறில்லை

ஒவ்வொரு நாளும் மக்களின் செய்திகளை தெரிந்து கொள்வது நபி ஸல் அவர்களின் வழக்கமாக இருந்தது

قَالَ الْحَسَنُ بْنُ عَلِىٍّ : سَأَلْتُ خَالِى هِنْدَ بْنَ أَبِى هَالَةَ عَنْ حِلْيَةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَكَانَ وَصَّافًا فَذَكَرَ الْحَدِيثَ وَفِيهِ قَالَ : وَيَتَفَقَّدُ أَصْحَابَهُ وَيَسْأَلُ النَّاسَ عَمَّا فِى النَّاسِيُحَسِّنُ الْحَسَنَ وَيُصَوِّبُهُ وَيُقَبِّحُ الْقَبِيحَ وَيُوَهِّنُهُ ، وَفِى الرِّوَايَةِ الأُولَى وَيُقَوِّيهِ بَدَلَ يُصَوِّبُهُ.(طبراني)

 

நபித்தோழர்களில் யாரேனும் இல்லாவிட்டால் அவர்களைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்களைப் பற்றி நல்ல செய்தி சொல்லப்பட்டால் வாழ்த்துவார்கள். கெட்ட செய்தி கூறப்பட்டால் கவலையடைவார்கள்             

عن أنس رض قال : كان رسول الله صلى الله عليه و سلم إذا فقد الرجل من إخوانه ثلاثة أيام سأل عنه فإن كان غائبا دعا له وإن كان شاهدا زاره وإن كان مريضا عاده ففقد رجلا من الأنصار في اليوم الثالث فسأل عنه فقيل : يارسول الله تركناه مثل الفرخ لا يدخل في رأسه شيء إلا خرج من دبره قال رسول الله صلى الله عليه وسلم لبعض أصحابه : (عودوا أخاكم) قال : فخرجنا مع رسول الله صلى الله عليه وسلم نعوده وفي القوم أبو بكر و عمر فلما دخلنا عليه إذا هو كما وصف لنا فقال رسول الله صلى الله عليه وسلم : ( كيف تجدك ؟) قال : لا يدخل في رأسي شيء إلا خرج من دبري قال : (ومم ذاك ؟) قال: يارسول الله : مررت بك وأنت تصلي المغرب فصليت معك وأنت تقرأ هذه السورة { القارعة * ما القارعة } إلى آخرها { نار حامية } قال : فقلت : اللهم ما كان لي من ذنب أنت معذبي عليه في الآخرة فعجل لي عقوبته في الدنيا فنزل بي ما ترى قال رسول الله صلى الله عليه وسلم( بئس ما قلت ألا سألت الله أن يؤتيك في الدنيا حسنة وفي الآخرة حسنة ويقيك عذاب النار ؟) قال فأمره النبي صلى الله عليه وسلم فدعا بذلك ودعا له النبي صلى الله عليه وسلم قال : فقام كأنما نشط من عقال (مسند ابي يعلي)

வாட்ஸ்-அப் மூலம் பரப்பப் படும் செய்திகளில் பல பொய்யானதாகவும் உள்ளன. நமக்கு பிறர் அனுப்பும் செய்திகள் அனைத்தையும் அதன் உண்மை நிலை தெரியாமல் பிறருக்கு அனுப்புவது பாவமாகும்

عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ (مسلم) بَاب النَّهْيِ عَنْ الْحَدِيثِ بِكُلِّ مَا سَمِعَ–مُقَدِّمة

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ (الحجرات6)عن الْحَارِث بْن أَبِي ضِرَارٍ الْخُزَاعِيِّ قَالَقَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَانِي إِلَى الْإِسْلَامِ فَدَخَلْتُ فِيهِ وَأَقْرَرْتُ بِهِ فَدَعَانِي إِلَى الزَّكَاةِ فَأَقْرَرْتُ بِهَا وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرْجِعُ إِلَى قَوْمِي فَأَدْعُوهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَدَاءِ الزَّكَاةِ فَمَنْ اسْتَجَابَ لِي جَمَعْتُ زَكَاتَهُ فَيُرْسِلُ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَسُولًا لِإِبَّانِ كَذَا وَكَذَا لِيَأْتِيَكَ مَا جَمَعْتُ مِنْ الزَّكَاةِ فَلَمَّا جَمَعَ الْحَارِثُ الزَّكَاةَ مِمَّنْ اسْتَجَابَ لَهُ وَبَلَغَ الْإِبَّانَ الَّذِي أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْعَثَ إِلَيْهِ احْتَبَسَ عَلَيْهِ الرَّسُولُ فَلَمْ يَأْتِهِ فَظَنَّ الْحَارِثُ أَنَّهُ قَدْ حَدَثَ فِيهِ سَخْطَةٌ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ وَرَسُولِهِ فَدَعَا بِسَرَوَاتِ قَوْمِهِ فَقَالَ لَهُمْ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ وَقَّتَ لِي وَقْتًا يُرْسِلُ إِلَيَّ رَسُولَهُ لِيَقْبِضَ مَا كَانَ عِنْدِي مِنْ الزَّكَاةِ وَلَيْسَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخُلْفُ وَلَا أَرَى حَبْسَ رَسُولِهِ إِلَّا مِنْ سَخْطَةٍ كَانَتْ فَانْطَلِقُوا فَنَأْتِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَلِيدَ بْنَ عُقْبَةَ إِلَى الْحَارِثِ لِيَقْبِضَ مَا كَانَ عِنْدَهُ مِمَّا جَمَعَ مِنْ الزَّكَاةِ فَلَمَّاأَنْ سَارَ الْوَلِيدُ حَتَّى بَلَغَ بَعْضَ الطَّرِيقِ فَرِقَ فَرَجَعَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْحَارِثَ مَنَعَنِي الزَّكَاةَ وَأَرَادَ قَتْلِي فَضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَعْثَ إِلَى الْحَارِثِ فَأَقْبَلَ الْحَارِثُ بِأَصْحَابِهِ إِذْ اسْتَقْبَلَ الْبَعْثَ وَفَصَلَ مِنْ الْمَدِينَةِ لَقِيَهُمْ الْحَارِثُ فَقَالُوا هَذَا الْحَارِثُ فَلَمَّا غَشِيَهُمْ قَالَ لَهُمْ إِلَى مَنْ بُعِثْتُمْ قَالُوا إِلَيْكَ قَالَ وَلِمَ قَالُوا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ بَعَثَ إِلَيْكَ الْوَلِيدَ بْنَ عُقْبَةَ فَزَعَمَ أَنَّكَ مَنَعْتَهُ الزَّكَاةَ وَأَرَدْتَ قَتْلَهُ قَالَ لَا وَالَّذِي بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ مَا رَأَيْتُهُ بَتَّةً وَلَا أَتَانِي فَلَمَّا دَخَلَ الْحَارِثُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنَعْتَ الزَّكَاةَ وَأَرَدْتَ قَتْلَ رَسُولِي قَالَ لَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا رَأَيْتُهُ وَلَا أَتَانِي وَمَا أَقْبَلْتُ إِلَّا حِينَ احْتَبَسَ عَلَيَّ رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَشِيتُ أَنْ تَكُونَ كَانَتْ سَخْطَةً مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ وَرَسُولِهِ قَالَ فَنَزَلَتْ الْحُجُرَاتُ{ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ... }(مسند أحمد)حديث الحارث بن ضرار

ஹாரிஸ் ரழி கூறுகிறார்கள்- நான் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்தேன். என்னை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள்.நான் ஏற்றுக்கொண்டேன். என்னை ஜகாத் தரும்படி ஏவினார்கள் அதற்கும் சம்மதித்தேன். பிறகு நான் நபியவர்களிடம் யாரஸூலல்லாஹ் நான் என் சமூகத்தாரிடம் சென்று இஸ்லாத்தைக் கூறி,ஜகாத்தையும் தூண்டுவேன். அவர்களிடம் நான் ஜகாத்தை சேமித்த பின் நீங்கள் ஒரு தூதரை அனுப்புங்கள். அவரிடம் அவற்றை ஒப்படைத்துவிடுகிறேன் என்றேன்  அதற்கு நபி ஸல் சம்மதித்தார்கள் அதன்படி ஹாரிஸ் ரழி ஜகாத் பொருளை சேகரித்து தூதரின் வருகைக்காக காத்திருந்தார். நபி ஸல் வலீத் இப்னு உக்பாவை ஹாரிஸிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த வலீத் பாதி தூரம் வந்தவர் (ஹாரிஸ் சமூகத்தவருக்கும் இவருக்கும் உள்ள பழைய பகையால் தம்மை ஏதேனும் செய்து விடுவார்களோஎன பயந்து) அங்கு செல்லாமல் திரும்பி வந்து யாரஸூலல்லாஹ் நான் ஹாரிஸிடம் சென்று ஜகாத்தை கேட்க அதை அவர் கொடுக்க மறுத்து என்னைக் கொல்லவும் துணிந்தார். என்று பொய்யான தகவலைநபி ஸல் அவர்களிடம் கூற நபி ஸல்  அவர்கள் அந்த சமூகத்தை நோக்கி ஒரு படையை அனுப்புகிறார்கள். இதற்கிடையில் தூதர் வருவார் என்று முடிந்த வரை காத்திருந்த ஹாரிஸ் அவர்கள் தன் சமூக மக்களிடம் வாருங்கள் நாம் மதீனாவுக்குச்  செல்வோம். நபி ஸல் அவர்களுக்கு நம் மீது ஏதேனும்  கோபம் இருக்கலாம் அதனால் தான் தூதரை அனுப்பவில்லை ஆகவே நாம் செல்வோம் எனக்கூறி முக்கியமானவர்களை அழைத்துக் கொண்டு மதீனா நோக்கி வருகிறார். இதற்கிடையில் நபி ஸல் அனுப்பிய படை மதீனாவை தாண்டிய உடனே எதிரில் ஹாரிஸையும், அவரது சமூகத்தினரையும் சந்திக்கிறார்கள்உடனே அவரை சூழ்ந்து கொண்டு  எதற்காக நபி ஸல் அனுப்பிய தூதரிடம் ஜகாத் கொடுக்க மறுத்து அவரையும் கொலை செய்ய முயன்றீர்கள் என்று கேட்க அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் எங்களிடம் வரவேயில்லை என்று நடந்ததை கூறினார் பிறகு நபி ஸல் அவர்களிடம் வந்தார். அவர்கள் கேட்ட போதும்அவ்வாறே உண்மையை கூறினார். அப்போது தான் மேற்படி வசனம் இறங்கியது 

உலகம் முழுவதும் பரவும் வகையில் பொய்களை பரப்பும் பொய்யர்களுக்கு ஆன்மா உலகில் தண்டனை

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ... قَالالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ....رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخَذَا بِيَدِي فَأَخْرَجَانِي إِلَى الْأَرْضِ الْمُقَدَّسَةِ فَإِذَا رَجُلٌ جَالِسٌ وَرَجُلٌ قَائِمٌ بِيَدِهِ كَلُّوبٌ مِنْ حَدِيدٍ إِنَّهُ يُدْخِلُ ذَلِكَ الْكَلُّوبَ فِي شِدْقِهِ حَتَّى يَبْلُغَ قَفَاهُ ثُمَّ يَفْعَلُ بِشِدْقِهِ الْآخَرِ مِثْلَ ذَلِكَ وَيَلْتَئِمُ شِدْقُهُ هَذَا فَيَعُودُ فَيَصْنَعُ مِثْلَهُ قُلْتُ مَا هَذَا... قَالَا نَعَمْ أَمَّا الَّذِي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ فَكَذَّابٌ يُحَدِّثُ بِالْكَذْبَةِ فَتُحْمَلُ عَنْهُ حَتَّى تَبْلُغَ الْآفَاقَ فَيُصْنَعُ بِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ (بخاري)- باب مَا قِيلَ فِى أَوْلاَدِ الْمُشْرِكِينَ–كتاب الجنائزபுகாரி1386

கனவில் இரு மலக்குகள் என்னை அழைத்துச்சென்றார்கள். அதில்...ஒரு இடத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்திருக்க அருகில் ஒருவர் நிற்கிறார். அவரது கையில் இரும்புக் கொக்கிகள் உள்ளது. அந்த கொக்கிகளை உட்கார்ந்திருப்பவருடைய தொண்டையில்  குத்த அது தொண்டையைக் கிழித்து பிடரி வழியாக வெளியே வர, மீண்டும் தொண்டையின் மற்றொரு பகுதியில் இரும்புக் கொக்கியால் குத்துகிறார். அதுவும் பிடரி வழியாக வெளியே வருகிறது. இரண்டாம் முறை குத்துவதற்குள் முதல் தடவையில் குத்தப்பட்ட இடம் சரியாகி விட, இப்படியே தொடர்ந்து வேதனை செய்யப்படும் இவர் யார் என நான்  கேட்க இவர் பொய்யர். இவர் சொல்லும் பொய் உலகம் முழுவதும் பரவும் என கூறப்பட்டது 

கஃபாவுக்கு அருகில் நடந்த சம்பவத்தை அதன் உண்மையை மறைத்து உலகெங்கும் பரப்பிய ஷியாக்கள்

கடந்த மாதம் கஃபாவுக்கு அருகில் நடந்த சம்பவம்.  தவாஃப் செய்யும்போது ஒரு ஹாஜி கொண்டு வந்த பாட்டில் உடைந்து கீழே விழுந்து அது பலருடைய கால்களில் பட்டு அதனால் ஏற்பட்ட இரத்தம் பல இடங்களுக்கும் பரவியது. அதை பலரும் பல மாதிரி கற்பனை கலந்து வாட்ஸ்-அப், மற்றும் இணையதளத்தில் பதிவிட்டனர். இதில் ஷியாக்கள் பரப்பிய பொய் தான் மிக அபத்தம். அதாவது கஃபாவுக்கு அருகில் பூமியில் இருந்து இரத்தம் பீறிட்டு வருகிறது. வீரர் ஹுஸைன் ரழி அவர்களின் இரத்தம் இன்னும் காயவில்லை என்று செய்தி பரப்பி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தினர்

தக்க காரணமின்றிஒரு முஸ்லிமின் தனிப்பட்ட குறைகளை பகிரங்கப்படுத்தி அவமானப்படுத்தும் விதமாக பதியக்கூடாது)

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ اسْتِطَالَةَ الْمَرْءِ فِي عِرْضِ رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ وَمِنْ الْكَبَائِرِ السَّبَّتَانِ بِالسَّبَّةِ (ابوداود) بَاب فِي الْغِيبَةِ- كِتَاب الْأَدَبِதக்க காரணங்கள் என்பது ஹதீஸ் விரிவுரைகளில் கூறப்பட்டுள்ளன.

கடன் வாங்கியவன் அதை திருப்பித்தர முடிந்தும் தரா விட்டால்.. சாட்சிகளை துன்புறுத்தினால்.. இது போன்றவை

(بغير حق) على حل استباحة العرض في مواضع مخصوصة كجرح الشاهد وذكر مساوئ الخاطب وقول الدائن في المماطل مطلني حقي ونحو ذلك مما هو مبين في الفروع قال البيضاوي والاستطالة في عرض المسلم أن يتناول منه أكثر مما يستحقه على ما قال له أو أكثر مما رخص له فيه ولذلك مثل الربا وعده من عداده ثم فضله على أفراده لأنه أكثر مضرة وأشد فسادا فإن العرض شرعا وعقلا أعز على النفس من المال وأعظم منه خطرا ولذلك أوجب الشرع بالمجاهرة بهتك الأعراض ما لم يوجب بنهب الأموال قال التوربشتي وفي قوله بغير حق تنبيه على أن العرض ربما يجوز استباحته في بعض الأحوال كحديث لي الواجد يحل عرضه

ஒருவரின் குறைகளை துருவி ஆராய்ந்து அதை பரப்புவோர் மீது அல்லாஹ் கோபமடைகிறான். அதன் பின்பு அல்லாஹ்வே இவருடைய குறைகளை துருவி அதை பகிரங்கப்படுத்தி அவன் வீட்டுக்குள்ளேயே அவனை கேவலப்படுத்துவான்

عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلْ الْإِيمَانُ قَلْبَهُ لَا تَغْتَابُوا الْمُسْلِمِينَ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنْ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعُ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعْ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ(ابوداود)

இமாம் ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் சில நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் குறையே இல்லாமல் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறருடைய குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இறுதியில் அவர்களிடமும் அல்லாஹ் அந்த குறையை உருவாக்கி விட்டான்

 

அருவருப்பான, அசிங்கமான வார்த்தைகளை பதிவிடுவதோ, அல்லது பிடிக்காதவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதோ கூடாது.

عَنْ أَنَسٍ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا لَعَّانًا وَلَا سَبَّابًا كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُهُ (بخاري)كتاب الادب

யூதனைக் கூட கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை அனுமதிக்காத நபி ஸல் அவர்கள்

عَنْ عَائِشَةَ رَضِ أَنَّ يَهُودَ أَتَوْا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ فَقَالَتْ عَائِشَةُ عَلَيْكُمْ وَلَعَنَكُمْ اللَّهُ وَغَضِبَ اللَّهُ عَلَيْكُمْ قَالَ مَهْلًا يَا عَائِشَةُ عَلَيْكِ بِالرِّفْقِ وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَقَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ فَيُسْتَجَابُ لِي فِيهِمْ وَلَا يُسْتَجَابُ لَهُمْ فِيَّ(بخاري

அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை பதிவிடும்போது கவனம் தேவை

தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களின் வாட்ஸ்-அப் தளங்கள் மிக தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வரம்பு மீறிய அரசியல் விமர்சனங்கள் இருந்தால் வாரண்ட் இல்லாமலேயே கைது செய்யப்படலாம் என்று அரசு எச்சரித்துள்ளது

முஸ்லிம்களைஒற்றுமைப்படுத்தவும், நன்மையை ஏவி, தீமையை தடுப்பதற்கும் இனி இச்சாதனங்களை பயன்படுத்துவோம்

© 2018 All Rights Reserved.
http://ulama.in/