தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

தியாகம் என்பதே குர்பான்

          بسم الله الرحمن الرحيم

தியாகம் என்பதே குர்பான்

 தியாகம் செய்யாமல் சுவனம் செல்ல முடியாது

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ (214)سورة البقرة

عن خَبَّاب رضي الله عنه أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً وَهُوَ فِي ظِلِّ الْكَعْبَةِ وَقَدْ لَقِينَا مِنْ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلَا تَدْعُو اللَّهَ فَقَعَدَ وَهُوَ مُحْمَرٌّ وَجْهُهُ فَقَالَ لَقَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ لَيُمْشَطُ بِمِشَاطِ الْحَدِيدِ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُوضَعُ الْمِنْشَارُ عَلَى مَفْرِقِ رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَيْنِ مَا يَصْرِفُهُ ذَلِكَ (بخاري)بَاب مَا لَقِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ- مناقب الأنصار

தியாகம் செய்ய முன்வராதவர்களை அன்று மக்கள் மத்தியில் கேவலப்படும் வகையில் அல்லாஹ் பகிரங்கப்படுத்தினான்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري)باب قَوْلِ النَّبِىِّ صلى الله عليه وسلم  أُحِلَّتْ لَكُمُ الْغَنَائِمُ–كتاب فرض الخمس

சுருக்கம்- ஒரு நபி போருக்குப் புறப்படும்போது சில நிபந்தனைகளை முன் வைத்து தன் உம்மத்தை அழைத்துச் சென்றார் தன் மனைவியுடன் இன்னும் சேராத புதிய மணமகன்கள், கட்டிடம் கட்டி விட்டு அதன் மேல்தளம் அமைக்காதவர்கள், கால்நடைகள் குட்டி போடும் நிலையில் அதை எதிர் பார்த்து காத்திருப்பவர் ஆகியோர்  எங்களோடு வரக்கூடாது.(இவர்களால் முழுமையாகப்போரில் கவனம் செலுத்த முடியாது.) என்று கூறி மற்றவர்களை அழைத்துச் சென்றார். அங்கு போய்ச் சேருவதற்குள் அசர் நெருங்கி விட்டது. சூரியன் மறைந்து விட்டால் போரிட முடியாது. ஆகவே அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் இந்த சூரியனை எங்களுக்காக மறையாமல் தடுத்து வை என துஆ செய்தார். அதன்படி போர் முடியும் வரை சூரியன் மறையாமல் இருந்தது. அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். அக்காலத்தில் குர்பானி கொடுப்பவர்களும் சரி, ஙனீமத் பொருளை அடைந்தவர்களும் சரி அவர்கள் தியாக உள்ளத்தோடு அவற்றை பயன்படுத்தாமல் ஒரு மலை மீது கொண்டு போய் வைத்து விட வேண்டும். நெருப்பு வந்து அதை கரித்துச் சென்று விட்டால் அவர்களின் குர்பானி ஏற்கப்பட்டது என்று பொருள். அதன்படி இப்போரில் கிடைத்த ஙனீமத் பொருட்களை அவ்வாறே வைத்த போது நெருப்பு வந்ததுஆனால் கரிக்காமல் சென்று விட்டது. அப்போது அந்த நபி தன் உம்மத்தினரிடம் இங்கு வந்து சேர வேண்டிய தியாகப் பொருட்களில் சிலதை யாரோ எடுத்து வைத்துள்ளீர்கள். அதை நேரடியாகவும் சொல்ல மாட்டீர்கள் ஆகவே அதை கண்டு பிடிக்க உங்களில் ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் வந்து கை கொடுக்க வேண்டும் என்ற போது, வரிசையாக வந்து அவர்கள் கை கொடுத்தனர். அதில் ஒரு குடும்பத் தலைவரின் கை நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது உடனே அந்த நபி உங்களின் குடும்பம் முழுவதும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்ற போது அவ்வாறே செய்தனர். அப்போது அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்களின் கைகள் நபியின் கையுடன் ஒட்டிய போது, உங்களிடம் தான் அப்பொருட்கள் உள்ளன. மரியாதையாக அதை கொண்டு வாருங்கள் என்ற போது ஒரு மாட்டின் தலை அளவுக்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொண்டு வந்தனர். அதை மலை மீது வைத்த பின்பே நெருப்பு வந்து அதை கரித்துச் சென்றது அவர்களின் தியாகம் ஏற்கப்பட்டது

அன்று ஹாபீல் செய்த தியாகம் அவர் குர்பானி கொடுத்த ஆட்டை பலஆயிரம் வருடங்கள் சுவனத்த்தில் பாதுகாத்தது

عَنْ عَبْد اللَّه بْن عَمْرو قَالَ إِنَّ اِبْنَيْ آدَم اللَّذَيْنِ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدهمَا وَلَمْ يُتَقَبَّل مِنْ الْآخَر كَانَ أَحَدهمَا صَاحِب حَرْث وَالْآخَر صَاحِب غَنَم وَإِنَّهُمْ أُمِرَا أَنْ يُقَرِّبَا قُرْبَانًا وَإِنَّ صَاحِب الْغَنَم قَرَّبَ أَكْرَمَ غَنَمِهِ وَأَسْمَنَهَا وَأَحْسَنَهَا طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَإِنَّ صَاحِب الْحَرْث قَرَّبَ أَشَرَّ حَرْثِهِ الْكَوْدَن وَالزُّوَان غَيْرَ طَيِّبَةٍ بِهَا نَفْسُهُ وَأَنَّ اللَّه عَزَّ وَجَلَّ تَقَبَّلَ قُرْبَان صَاحِب الْغَنَم وَلَمْ يَتَقَبَّل قُرْبَان صَاحِب الْحَرْث(وفي رواية فَصَعِدَا الْجَبَل فَوَضَعَا قُرْبَانهمَا)فَقَبِلَ اللَّه الْكَبْش فَحَزَنَهُ فِي الْجَنَّة أَرْبَعِينَ خَرِيفًا3 وَهُوَ الْكَبْش الَّذِي ذَبَحَهُ إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام(تفسير ابن كثير)

முடிந்தால் குர்பானிப் பிராணியை முன்பே வாங்கி வளர்ப்பது சுன்னத்தாக்கப்பட்ட காரணங்களில் ஒன்று தியாக மனம் வருவதற்கு

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32)سورة الحج عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قال "تَعْظِيمهَا اِسْتِسْمَانهَا وَاسْتِحْسَانهَا

{تفسير القرطبي} وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ

ஏனெனில் நாம் தரப்போகும் குர்பானிப் பிராணியை முன்பே வாங்கி வளர்த்தும்போது அது நம்மிடம் பழகி விடும். நம் மனதை ஈர்த்து விடும். இத்தகைய சூழ்நிலையில் அதை நாம் குர்பானி கொடுக்கும்போது அங்கு தான் தியாகம் அதிகம் வெளிப்படும். எனக்குப் பிரியமான எதுவாக இருப்பினும் அதை அல்லாஹ்வுக்காக தியாகம் செய்வேன் என்ற மனோநிலை வரும். அன்று ஹாபீல் கொடுத்த குர்பானியும் அவ்வாறு தான். தனக்குப் பிரியமான ஆட்டையே அவர் தியாகம் செய்தார்

அல்லாஹ்வின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு  80 வயதிலும் கத்னா செய்து கொண்ட இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

عَنْ أَبِي هُرَيْرَةَرَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالْقَدُّومِ(بُخاري)قدومவெட்டும் கருவி

நடமாட்டமும் இல்லாத, தண்ணீரும் இல்லாத பாலைவனத்தில் இறை உத்தரவுப்படி தன் குடும்பத்தை விட்டுச் சென்ற தியாகம்

قَالَ ابْنُ عَبَّاسٍ أَوَّلَ مَا اتَّخَذَ النِّسَاءُ الْمِنْطَقَ مِنْ قِبَلِ أُمِّ إِسْمَاعِيلَ اتَّخَذَتْ مِنْطَقًا لَتُعَفِّيَ أَثَرَهَا عَلَى سَارَةَ ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ وَبِابْنِهَا إِسْمَاعِيلَ وَهِيَ تُرْضِعُهُ حَتَّى وَضَعَهُمَا عِنْدَ الْبَيْتِ عِنْدَ دَوْحَةٍ فَوْقَ زَمْزَمَ فِي أَعْلَى الْمَسْجِدِ وَلَيْسَ بِمَكَّةَ يَوْمَئِذٍ أَحَدٌ وَلَيْسَ بِهَا مَاءٌ فَوَضَعَهُمَا هُنَالِكَ وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابًا فِيهِ تَمْرٌ وَسِقَاءً فِيهِ مَاءٌ ثُمَّ قَفَّى إِبْرَاهِيمُ مُنْطَلِقًا فَتَبِعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ فَقَالَتْ يَا إِبْرَاهِيمُ أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الْوَادِي الَّذِي لَيْسَ فِيهِ إِنْسٌ وَلَا شَيْءٌ فَقَالَتْ لَهُ ذَلِكَ مِرَارًا وَجَعَلَ لَا يَلْتَفِتُ إِلَيْهَا فَقَالَتْ لَهُ أَاللَّهُ الَّذِي أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَتْ إِذَنْ لَا يُضَيِّعُنَا ثُمَّ رَجَعَتْ فَانْطَلَقَ إِبْرَاهِيمُ حَتَّى إِذَا كَانَ عِنْدَ الثَّنِيَّةِ حَيْثُ لَا يَرَوْنَهُ اسْتَقْبَلَ بِوَجْهِهِ الْبَيْتَ ثُمَّ دَعَا بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ وَرَفَعَ يَدَيْهِ فَقَالَ رَبِّ {إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ....(بخاري)كتاب أحاديث الأنبياء

பெண்களில் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது ஹாஜர் அலை அவர்கள் தான். தன்னால் சாரா அம்மையார் அவர்களின் மீது ஏற்பட்ட தனது பாதிப்பை நீக்குவதற்காக அவ்வாறு அணிந்தார்கள்(அதாவது சாரா அலை அவர்கள் தான் முதல் மனைவி. இந்த அன்னையுடன் இப்றாஹீம் அலை பயணம் ஒரு ஊரைக் கடந்த போது  அவ்வூர் அரசன் சாரா அன்னையை தவறுக்காக நெருங்க மூன்று தடவை முயன்று அவமானப்பட்டான். கடைசியில் அவன் சாரா அன்னையை பத்திரமாக அனுப்பி வைத்ததுடன், தனது பணிப் பெண்ணாகிய ஹாஜர் அன்னையை பரிசாக கொடுத்தான். ஹாஜர் அன்னையை மணந்த பின்பே நபி இப்றாஹீம் அலை அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. இதனால் சாரா அன்னைக்கு ஹாஜர் அன்னை மீது ஏற்பட்ட இயல்பான வருத்தம் நீங்குவதற்காக, தன்னை தாழ்த்திக் கொள்வதற்காக இடுப்புக் கச்சை அணிந்தார்கள்  புகாரீ3358)எனினும் அந்த மனஸ்தாபம் நீடிக்கக் கூடாது என்பதற்காகவும், ஹாஜர் அன்னை மூலம் மக்கா பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ் அந்த்த அன்னையையும், அவரின் மகனையும் ஃபலஸ்தீனில் இருந்து மக்காவில் கொண்டு விடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டான். அந்நேரம் மக்காவில் எவரும் இல்லை. ஒரு தோல் பையில் தண்ணீரும், மற்றொரு பையில் நீரும் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. இந்நிலையில் அவ்விருவரையும் விட்டு விட்டு திரும்பிய தன் கணவரிடம் ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்தில் எஙகளை விட்டு விட்டு நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க, நபியவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. கணவனுக்குப் பின்னாலேயே ஓடிச் சென்று ஹாஜர் அன்னை இவ்வாறு பல முறை கேட்டும் நபியவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. இறுதியில் அல்லாஹ் உங்களை இவ்வாறு விட்டு விடச் சொல்லி உத்தரவிட்டானா... என்று கேட்க, ஆம் என்று மட்டுமே நபியவர்கள் பதிலளித்தார்கள். உடனை அந்த அன்னை அப்படியானால் அல்லாஹ் எங்களை கை விட்டு விட மாட்டான் நீங்கள் செல்லுங்கள் என்று கூறி தன் குழந்தையிடம் திரும்பினார்கள். அதன் பின்பு நபி இப்றாஹீம் அலை மக்காவில் எல்லைக்குச் சென்று தம் குடும்பத்தினருக்காகவும், மக்காவிற்காகவும் துஆ செய்தார்கள் – புகாரீ 3364

இறைக் கட்டளையை விட குடும்பப்பாசம் பெரிதல்ல என்று தந்தையும், உயிர் பெரிதல்ல என்று மகனும் உணர்த்திய விதம்

فَلَمَّاأَسْلَمَاوَتَلَّهُلِلْجَبِينِ (103الصافات) أَيْصَرَعَهُعَلَىوَجْههلِيَذْبَحهُمِنْقَفَاهُوَلَايُشَاهِدوَجْههعِنْدذَبْحهلِيَكُونَأَهْوَنعَلَيْهِ

عَنْاِبْنعَبَّاسرَضِيَاللَّهعَنْهُمَاقال...تَلَّهُلِلْجَبِينِوَعَلَىإِسْمَاعِيلعَلَيْهِالصَّلَاةوَالسَّلَامقَمِيصأَبْيَضفَقَالَلَهُيَاأَبَتِإِنَّهُلَيْسَلِيثَوْبتُكَفِّنُنِيفِيهِغَيْرهفَاخْلَعْهُحَتَّىتُكَفِّنَنِيفِيهِفَعَالَجَهُلِيَخْلَعَهُفَنُودِيَمِنْخَلْفه " أَنْيَاإِبْرَاهِيمقَدْصَدَّقْتالرُّؤْيَا " فَالْتَفَتَإِبْرَاهِيمعَلَيْهِالصَّلَاةوَالسَّلَامفَإِذَابِكَبْشٍأَبْيَضأَقْرَنأَعْيَنقَالَاِبْنعَبَّاسلَقَدْرَأَيْتنَانَتَتَبَّعذَلِكَالضَّرْبمِنْالْكِبَاش (تفسير ابن كثير)             மேற்காணும் ஆயத்தின் பொருள் மகனை முகம் குப்புற படுக்க வைத்தார்கள் என்பதாகும். ஏனெனில் முகம் பார்க்கும்படியாக இருந்தால் ஏதேனும் பாசம் ஏற்பட்டு இறைக்கட்டளையை நிறைவேற்ற முடியாமல் ஆகி விடுமோ என்று அஞ்சினார்கள்.

தஃப்ஸீர் இப்னு அபீ ஹாதம் போன்ற சில தஃப்ஸீர்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற தன் மகனாரை அழைத்துச் சென்ற போது ஷைத்தான் முதலில் மகனாரிடம் உம் தந்தை உம்மை அறுப்பதற்காக அழைத்துச் செல்கிறார் என்ற போது, உடனே மகனார் எதற்காக என்னை என் தந்தை அறுக்கிறார் என்று கேட்க, ஏதோ அல்லாஹ்வின் உத்தரவாம். என்ன இருந்தாலும் யாராவது மகனை பலியிட முன் வருவார்களா.. என்று கூறி கெடுக்க முயற்சித்த போது மகனார் நான் அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுவதாக இருந்தால் எனக்கு முழு சம்மதம் என்றவுடன் ஷைத்தானுக்கு ஏமாற்றம். அடுத்து ஹாஜரா அன்னையிடமும் சென்று அவ்வாறே கூறினான். அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது. பிறகு மீண்டும் இன்று முதல் ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அந்த பள்ளத்தாக்கையே அடைக்கும் விதமாக பெரிய உருவத்துடன் வந்து நின்றான். உடன் இருந்த ஜிப்ரயீல் அலை அவர்கள் அவனை கல்லால் எறியுங்கள் என்றார்கள். அவ்வாறே நபியவர்கள் ஏழு கற்களால் அவனை எறிய அவன் சென்று விட்டான். திரும்பவும் வந்தான்இன்று இரண்டாம் ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அவ்வாறே பெரிய உருவத்துடன் வந்து நிற்க, அப்போதும் வானவர் நபியிடம் மீண்டும் அவனை எறியுங்கள் என்றவுடன் நபியவர்கள் ஏழு கற்களால் மீண்டும் அவனை எறிய அவன் சென்று விட்டு, திரும்பவும் இன்று மூன்றாம் ஜம்ரா இருக்கும் இடத்திற்கு வந்து அவ்வாறே நிற்க, அப்போதும் வானவர் எறியும்படி கூற, மீண்டும் கற்களால் அவனை எறிந்தார்கள். அவன் சென்று விட்டான்.அதன் பின்பே மகனாரை அந்த மலைக்கு அழைத்துச் சென்றார்கள்

நீண்ட காலம் குழந்தையே இல்லாத நிலையில் தள்ளாத வயதில் பெற்றெடுத்த பாசமான பிள்ளை தான். எனினும் அதை விட அல்லாஹ்வின் பாசம் பெரியது. இப்றாஹீம் நபியின் 99 வயதில் இஸ்மாயில் அலை பிறந்தார்கள்

وروي أنه ولد له إسماعيل وهو ابن تسع وتسعين سنة ، ووملد له إسحاق وهو ابن مائة وثنتي عشرة سنة.

© 2018 All Rights Reserved.
http://ulama.in/