தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

இஸ்லாம் வலியுறுத்தும் சமுதாயப் பணிகள் ஒவ்வொருமஸ்ஜிதும் மஸ்ஜிதுன் நபவியைப் போல் சமுதாய சேவை மையங்களாக மாற வேண்டும்

 

 

بسم الله الرحمن الرحيم

 

இஸ்லாம் வலியுறுத்தும் சமுதாயப் பணிகள்

ஒவ்வொருமஸ்ஜிதும் மஸ்ஜிதுன் நபவியைப் போல்

சமுதாய சேவை மையங்களாக மாற வேண்டும்

 

                                                            முஹர்ரம் - 15           06-10-2017

 

நான், என் குடும்பம், என் தொழில்என்று மட்டும் வாழ்வது உண்மையான முஸ்லிமின் வாழ்க்கை அல்ல. நபி ஸல் கற்றுத்தந்த துஆக்கள் இதற்கு சான்று. எனக்குத் தா என்று கேட்காமல் எங்களுக்குத் தா என்றே கேட்கச் சொன்னார்கள்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (201)

மக்கள் சேவைக்காக நபி ஸல் அவர்களின் 20-ம் வயதின் போது உருவான ஹில்ஃபுல் ஃபுளூல் நற்பணிமன்றம்

நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களின்இருபதாவதுவயதில்மக்காவில்துவக்கப்பட்ட இந்த நற்பணிமன்றத்தில் நபி ஸல் அவர்களும் மாற்றார்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அநீதமிழைக்கபட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவது,  ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, அநாதைகளை அரவணைப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாக இருந்தன. வெளியூர்வாசி ஒருவரை மக்காவாசி ஏமாற்றி விட்டார். பாதிக்கபட்ட அந்த யமன் நாட்டவர் அபூகுபைஸ் மலை மீது ஏறி தனக்கான நியாயத்தை கேட்டார் அது இந்த மன்றம் உருவாக காரணமாக அமைந்தது பிற்காலத்தில் நபி ஸல் அவர்கள் இதுபற்றிக் கூறும்போது  எனக்கு அரபியர்களின் உயரந்த செல்வமான செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட இந்த ஒப்பந்த த்தில் கலந்து கொண்டது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது என்றும், இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னும்  இதுபோன்ற ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்ளவே செய்வேன் என்றார்கள். பொதுச் சேவைகளில் மதப் பாகுபாடு கிடையாது என்பதற்கு இது சான்று

 

முதன்முதலாக வஹீ வந்த போது பயந்து நடுங்கிய படி வீட்டுக்கு வந்த நபியவர்களிடம் கதீஜா ரழி கூறிய சொல்

فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ (بخاري-كتاب بدء الوحي

வாழ்க்கையில் நாம் எவ்வளவு நற்காரியங்கள் செய்திருந்தாலும் அதில் ஏதேனும் ஒரு செயலால் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக ஆகலாம். அது பெரும்பாலும் சமூக சேவையாக இருக்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَتَقَلَّبُ فِي الْجَنَّةِ فِي شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطَّرِيقِ كَانَتْ تُؤْذِي النَّاسَ(مسلمஇமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் 55 வயது வரை மட்டுமே வாழ்ந்தாலும் இந்த உம்மத்துக்கு எவ்வளவோ நற்காரியங்களை செய்து விட்டு சென்றார்கள் அவர்கள் எழுதிய பிதாயதுல் ஹிதாயா என்ற நூலைப் படித்து அமல் செய்தாலே போதும் மாபெரும் இறைநேசர் ஆகி விடலாம். அவ்வாறிருக்க அவர்களின் மறைவுக்குப் பின் கனவில் நண்பர் ஒருவர் அவர்களைக் கண்டு இமாம் அவர்களே அல்லாஹ் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்று கேட்க, அல்லாஹ் என் அந்தஸ்தை உயர்த்தினான் என்று கூற, எதை வைத்து என்று நண்பர் கேட்ட போது நான் ஒருமுறை கிதாபை எழுதும்போது எழுதுகோலின் முனையில்  ஒரு ஈ வந்து உட்கார்ந்தது. நான் எழுதுகோலை அசைத்தால் அந்த ஈ பறந்து விடும். எனவே அந்த ஜீவனுக்கு கிடைக்க வேண்டிய உணவு தடைபடக் கூடாது என்று எண்ணி நான் எழுதுகோலை அந்த ஈ தானாக பறந்து செல்லும் வரை அசைக்காமல் வைத்திருந்தேன். எனது இந்த செயல் தான் மற்ற எல்லா செயல்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக ஆகி விட்டது அதனால் என்னை அல்லாஹ் மன்னித்து கருணை காட்டினான் என்றார்கள்

 

قال عمر بن حفص الأشقر: كنا مع محمد بن إسماعيل (وهو البخاري) بالبصرة نكتب الحديث ففقدناه أياما فطلبناه فوجدناه في بيت وهو عريان وقد نفذ ما عنده ولم يبق معه شيء فاجتمعنا وجمعنا له الدراهم حتى اشترينا له ثوبا وكسوناه ثم اندفع معنا في كتابة الحديث ( تاريخ بغداد

அம்ருப்னு ஹஃப்ஸ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் பஸராவில் ஹதீஸ்களை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தோம் எங்களுடன் இமாம் புகாரீ அவர்களும் அதில் ஈடுபட்டிருந்தார்கள். இதற்கிடையில் சில நாட்கள் அவர்களைக் காணவில்லை. நாங்கள் விசாரித்து அவர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்கள் உடுத்துவதற்கு சரியான உடை இல்லாமல் தான் வீட்டை விட்டும் வெளியே வரவில்லை என்று தெரிந்தது. உடனே நாங்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்தோம் அதன்பின்பு அவர்கள் எங்களுடன் இணைந்து ஹதீஸ்களை எழுதும் பணியில் ஈடுபட்டார்கள்

முஸ்லிம் சமுதாயத்தில் வறுமையை ஒழிக்கவும், பள்ளிவாசல்தோறும் கையேந்தும் நிலைமையை மாற்றவும் பாடுபடுவது

வறுமையைஒழிப்பதற்குசிறந்தவழிகூட்டுமுயற்சியில் அதாவது பள்ளிவாசல் ஜமாஅத் ஒத்துழைப்புடன் ஜகாத் உதவிகள்செய்வதாகும்.மேலும்இவ்வாறுசெய்யும்போதுபோலிகள்பயனடையும்வாய்ப்புகுறையும்.

நபிஸல், மற்றும் கலீபாக்கள் காலத்தில்ஜகாத்மொத்தமாகவசூலிக்கப்பட்டுஏழைகளுக்குவழங்கப்பட்டது

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ [التوبة: 103

முஆத் ரளி அவர்களை நபி ஸல் அவர்கள் யமன் நாட்டின் ஆளுனராக அனுப்பியதிலிருந்து மிக சிறப்பாக தன் பொறுப்பை நிறைவேற்றினார்கள். குறிப்பாக ஜகாத்தை வசூலிப்பதில்,  வினியோகிப்பதில் நபி ஸல் இருக்கும் வரையிலும், பின்பு அபூபக்கர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலும், பின்பு உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டார்கள். ஒரு முறை யமன் நாட்டிலிருந்து ஜகாத் தொகையின் மூன்றில் ஒரு பகுதியை உமர் ரளி அவர்களுக்கு அதாவது மத்திய அரசுக்கு அனுப்புகிறார்கள். உமர் ரளி அவர்கள் அதை வாங்க மறுத்து நான் உங்களை ஜகாத், ஜிஸ்யா வசூலித்து இங்கு அனுப்பச் சொல்லவில்லை. அங்குள்ள ஏழை மக்களிடம் விநியோகம் செய்யவே கூறினேன் என்றார்கள். அதற்கு முஆத் (ரளி) அவர்கள் இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்தது போக மீதியைத் தான் அனுப்பினேன் என்றார்கள். அடுத்த ஆண்டு முஆத் (ரளி) அவர்கள் யமனில் வசூலான ஜகாத்தில் பாதியை உமர் ரளி அவர்களுக்கு அனுப்புகிறார்கள். மீண்டும் உமர் ரளி ஆட்சேபிக்க, முஆத் ரளி அவர்கள் முன்பு சொன்ன பதிலையே இப்போதும் கூறினார்கள். மூன்றாவது ஆண்டிலோ யமனில் வசூலான ஜகாத் முழுவதையும் உமர் ரளி அவர்களுக்கு அனுப்புகிறார்கள். இம்முறை உமர் ரளி ஆட்சேபித்த போது முஆத் ரளி அவர்கள் எழுதிய பதில் என்ன தெரியுமா இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் எவரும் இல்லை. ஆதாரம்-கிதாபுல் அம்வால்

செல்வம்என்பதுசெல்வந்தர்களுக்கிடையில்மட்டுமேசுற்றிக்கொண்டிருக்கக்கூடாதுஎனக்கூறும்அல்-குர்ஆன்مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ7 الحشر

 

கல்வியில் நம் சமுதாயம் முன்னேற பாடுபடுவது

கல்விக்காகஉதவிசெய்தல்-2001 மக்கள்தொகைகணக்கெடுப்பின்படி6-வயதுமுதல்14-வயதுவரைஉள்ளமுஸ்லிம்குழந்தைகளில்25 சதவீதம்பேர்பள்ளிக்கூடங்களில்சேர்வதில்லை. அல்லதுபாதியில்படிப்பைவிட்டுவிட்டவர்களாகஇருக்கின்றனர். காரணம்வறுமைதான். [சச்சார்குழுஅறிக்கை] மேலும்ஏழைமாணவர்கள்தங்கிப்படிக்கும்மதரஸாக்களில்10 TO 12 வயதுமாணவர்கள்நிறையஉள்ளனர். இவர்களில்மார்க்கக்கல்வியில்மீதுஉள்ளஆர்வத்தால்வந்தவர்களும்உண்டு. பள்ளிப்படிப்பைத்தொடரமுடியாதஅளவுக்குவறுமையினால்இங்குகொண்டுவந்துவிடப்பட்டவர்களும்உண்டு.

ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ (1) قال ابن عباس يعني: وما يكتبون. (فيه تنبيه لخلقه على ما أنعم به عليهم من تعليم الكتابة التيبها تنال العلوم(تفسيرابن كثير)وَرَبُّكَ الْأَكْرَمُ -الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ- عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ عن قتادة:القلم نعمة من الله تعالى عظيمة لولا ذلك لم يقم دين ولم يصلح عيش(قرطبي

கல்விமேம்பாட்டுக்காக கைதிகள்தரவேண்டியலட்சம்ரூபாய்மதிப்புள்ளஅபராதத்தைதள்ளுபடிசெய்த நபி ஸல்...عن عامر: أسر رسول الله صلى الله عليه وسلم يوم بدر سبعين أسيراً، وكان يفادي بهم على قدر أموالهم، وكان أهل مكة يكتبون وأهل المدينة لا يكتبون، فمن لم يكن له فداء دفع إليه عشر غلمان من غلمان المدينة فعلمهم، فإذ حذقوا فهو فداؤه- عن عامر قال: كان فداء أهل بدر أربعين أوقية أربعين أوقية، فمن لم يكن عنده علم عشرة من المسلمين الكتابة فكان زيد بن ثابت ممن علم(غزوات الرسول وسراياه)ஒரு ஊகியா சுமார்4800கிராம்வெள்ளி

கூலிவேலைசெய்பவர்கள்சுயதொழில்தொடங்கநிதியுதவிசெய்வது

உலகில்500 பன்னாட்டுநிறுவனங்கள்உள்ளன.ஒன்றுகூடமுஸ்லிம்களுடையதாகஇல்லை. முஸ்லிம்என்றால்டெய்லர், டீக்கடைக்காரர், கறிக்கடைக்காரர், பெட்டிக்கடைக்காரர்எனகுறுகியவட்டத்தில்பிறர்பார்க்கும்நிலையில்நம்சமுதாயம்உள்ளது. 2007-ல்டாக்டர்அர்ஜுன்சென்குப்தாவெளியிட்டஅறிக்கையில்முஸ்லிம்களில்84 சதவீதம்பேர்வறுமைக்கோட்டுக்குகீழேவாடிக்கொண்டிருப்பதாகதெரிவித்துள்ளார். இந்நிலைமாற்றமுடியும். மேலும்இலவசகத்னா,இலவசமருத்துவஉதவி, விதவைகளுக்குமறுமணம். மார்க்கவிழிப்புணர்வுஉண்டாக்குதல், தனியார்துறைகளில்வேலைவாங்கித்தருதல்ஆகியபணிகளைசெய்யலாம். நம்சமுதாயத்தின்வறுமைநிலைநம்மில்சிலரைகுஃப்ரில்கொண்டுபோய்விட்டுவிடாதிருக்கபொதுநிதியம்அவசியம். நபி ஸல் அவர்களுடைய இந்த சுன்னத்தான நடைமுறைகளை நாம் செய்யத் தவறி விட்டோம். ஆனால் கிறிஸ்தவ சமுதாயம் அதை கச்சிதமாக செய்கிறார்கள் இறுதியில் தமது மதத்தின் பால் ஈர்த்துக் கொள்கிறார்கள். சென்னையின்புறநகர்பகுதிஒன்றில்வறுமையின்காரணமாகஒருமுஸ்லிம்குடும்பமேகிறிஸ்தவமதத்துக்குமாறியது. அவர்களிடம்காரணம்கேட்டபோதுநாங்கள்பட்டினியால்வாடினோம்.அப்போதுஎங்களைஆதரிக்கஎந்தமுஸ்லிம்களும்முன்வரவில்லை. எங்களுக்குவாழ்க்கைஅமைத்துக்கொடுத்ததுகிறிஸ்தவஅமைப்புகள்தான். என்றுபதில்கூறியுள்ளனர். சென்னை பெரம்பூரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் சிலர் கிறிஸ்தவர்களாக மாறி விட்டனர். இத்தனைக்கும் அந்த வீட்டின் மாடியில் மதரஸா நடைபெறுகிறது. அவ்வாறிருந்தும் அவர்கள் வழி தவற காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட  குடும்ப பிரச்சினைகளுக்கான ஆறுதல் சர்ச்சில் தான் கிடைத்தது. என நம்புகிறார்கள்

மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளை நலம் விசாரிப்பது

மருத்துவமனையில் நோயுற்று படுத்திருப்பவர்கள் ஆறுதலான வார்த்தைகளை எதிர்பார்ப்பார்கள். அவர்களை நலம் விசாரித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அப்படியே அவர்களுக்கு இஸ்லாமிய நூல்களை வழங்கலாம். கிறிஸ்தவ மதம் பெரும்பாலும் பரவியது இந்த ரீதியில் தான். ஆனால் இந்த முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான். யூதச் சிறுவரை நபி ஸல் அவர்கள் சென்று நலம் விசாரித்த சம்பவம் பிரபலமானதாகும்

கல்வியில்கிறிஸ்தவர்கள்காட்டும்அக்கறைஇன்றையமுஸ்லிம்களிடம்இல்லை.

உலகம்முழுவதும்சுற்றுப்பயணம்செய்துஅனைத்துமதத்தவரைப்பற்றியும்ஆய்வுசெய்ததிருமதிஸ்மித்இன்அறிக்கை:கிறிஸ்துவர்கள்-கல்வி, பொருளாதாரத்தில்வலுவானஅடித்தளம்அமைத்துசக்திவாய்ந்தவர்களாகவளரும்சமூகம்.. 3,முஸ்லிம்கள்-பாரம்பரியமாகநின்றுவந்தசெல்வம், செல்வாக்கு, கலாச்சாரச்சுவடுகள்அனைத்தையும்இழந்துஅவற்றின்நஷ்டக்கணக்குகளைமட்டும்கைவசம்வைத்திருப்பவர்கள்.சமுதாயஅக்கறைஇல்லாததலைமைதான்இவர்களின்சாபம்

ஒவ்வொரு மஸ்ஜித் நிரவாகமும் தமது மஹல்லாவை ஒருங்கிணைத்து என்னென்னநற்பணிகளைச்செய்யலாம்?

ஒவ்வொரு ஜமாஅத்தும் அந்தந்த மஹல்லாவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களிடமும் ஒரு சர்வே எடுக்க வேண்டும். இதில் அந்த முஸ்லிம் குடும்பங்களின் தற்போதைய நிலை, வருமானம், தொழில், அவர்களுக்கான தேவைகள் என்ன. ஆகிய அனைத்தும் அதில் இருக்கும். அல்லது தேவையற்றவர்களாக, பிறருக்கு உதவும் குணம் உள்ளவர்களாக இருப்பின் அவர்களால் அந்த மஹல்லாவாசிகளில் தேவையுள்ளவர்களுக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்ய முடியும். இது பண ரீதியாக மட்டுமல்ல. உதாரணமாக படித்து விட்டு வேலையில்லாமல் இருப்பவர்கள் அந்த மஹல்லாவில் பலர் இருக்கலாம். அதே மஹல்லாவில் படித்தவர்களுக்கு வேலை வாங்கித் தரும் நிலையில் அல்லது அதற்கான வழியை காண்பிக்கும் நிலையில் சிலர் இருக்கலாம் இந்த இரு சாராருக்கு மத்தியில் இணைப்பு இருந்திருக்காது. இவ்விரு சாராருக்கிடையில் இணைப்புப் பாலமாக பள்ளிவாசல் நிர்வாகம் இருக்கும். இதுதான் மஸ்ஜிதுன் நபவியின் மாடல். அதேபோல் அந்த மஹல்லாவில் உண்மையாகவே மிகவும் வறுமையில் உள்ளவர்கள் யார்..யார். அவர்களுக்கு யாரேனும் உதவி செய்தால் வாழ்வில் முன்னேறுவார்களா அதற்கான ஆர்வம் உண்டா- என்பதை ஆய்வு செய்து அப்படி ஒரு வருடத்திற்கு ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதை அவர்கள் சரியாக செய்கிறார்களா என்பதை கண்காணிக்க குழுவையும் ஏற்படுத்தி அவர்கள் முன்னேற வழி வகுக்கலாம். ஆனால் உதவி செய்பவர்கள் யார் என்பது உதவி பெறுபவர்களுக்கும், உதவி பெறுபவர்கள் யார் என்பது உதவி செய்பவர்களுக்கும் முடிந்த வரை தெரியாமல் இருப்பது நல்லது. அப்போது தான் இதை தொடர்ந்து நடத்திட முடியும். இவ்வாறு பத்து வருடத்தில் 50 குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இவ்வாறு ஒவ்வொரு மஹல்லாவும் செயல்பட்டால் முஸ்லிம் சமுதாயத்தில் வறுமையை பெரும்பாலும் ஒழிக்க முடியும்.இதற்கு முதலில் அந்த மஹல்லாவாசிகள் அனைவரின் முழு விபரமும் பள்ளி நிர்வாகத்திடம் இருக்க வேண்டும். இத்தகைய முயற்சிகளால் பல்வேறு சீர்திருத்தங்களும் ஏற்பட்டு, பலபேர் திருந்த வாய்ப்பு உண்டு. இவ்வாறே அன்றைய இஸ்லாமிய அரசில் வறுமை ஒழிக்கப்பட்டது

© 2017 All Rights Reserved.
http://ulama.in/