தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

மீண்டும் அடிமைத்தனத்தை நோக்கி இந்தியா..

               

بسم الله الرحمن الرحيم

மீண்டும் அடிமைத்தனத்தை  நோக்கி இந்தியா..

2017-08-11

படைத்த இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிமையாக இருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை

அதனால் தான் அக்காலத்தில் போரில் பிடிபட்ட கைதிகள் அடிமைகளாக நடத்தப்படும் சம்பிரதாயத்தை முற்றிலும் ஒழிக்க முடியா விட்டாலும் சிறிது சிறிதாக இஸ்லாம் ஒழித்தது. பல்வேறு பாவங்களுக்கான முதல் பரிகாரமாக  இஸ்லாம் கூறிய விஷயம் அடிமைப்பட்டுக் கிடப்பவர்களை விலைக்கு வாங்கி, அவர்களை சுதந்திரமான மனிதர்களாக ஆக்க வேண்டும் என்பதேயாகும்.

தவறுதலாக நடந்த கொலைக்கான முதல் பரிகாரம் அடிமைப்பட்டுக் கிடப்பவரை சுதந்திரமாக ஆக்குவது

وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ إِلَّا أَنْ يَصَّدَّقُوا (النساء)92

  சத்தியம் செய்ததற்கான  பரிகாரம் அடிமைப்பட்டுக் கிடப்பவரை சுதந்திரமாக ஆக்குவது

 وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُمُ الْأَيْمَانَ فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ (المائدة89

 ழிஹார் செய்ததற்கான முதல் பரிகாரம் அடிமைப்பட்டுக் கிடப்பவரை சுதந்திரமாக ஆக்குவது

وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا (المجادلة

  வேண்டுமென்றே நோன்பை முறித்ததற்கான முதல் பரிகாரம் அடிமைப்பட்டுக் கிடப்பவரை சுதந்திரமாக ஆக்குவது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ هَلَكْتُ قَالَ وَمَا شَأْنُكَ قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ قَالَ هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ لَا قَالَ فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا قَالَ لَا أَجِدُ فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ فَقَالَ خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ فَقَالَ أَعَلَى أَفْقَرَ مِنَّا مَا بَيْنَ لَابَتَيْهَا أَفْقَرُ مِنَّا ثُمَّ قَالَ خُذْهُ فَأَطْعِمْهُ أَهْلَكَ (بخاري)

ஃபிர்அவ்னிடம் அடிமைப்பட்டிருந்தவர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தர அல்லாஹ் மூஸா அலை அவர்களை அனுப்பினான்

وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ (49)البقرة

அடிமைப்பட்டு கிடப்பவர்களால் சுதந்திரமாக வணக்கங்களை நிறைவேற்ற முடியாது என்பதால் அவர்களுக்கு பல சலுகைகள்

إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ سَبِيلًا- فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا (99النساء)

هَذَا عُذْر مِنْ اللَّه لِهَؤُلَاءِ فِي تَرْك الْهِجْرَة وَذَلِكَ أَنَّهُمْ لَا يَقْدِرُونَ عَلَى التَّخَلُّص مِنْ أَيْدِي الْمُشْرِكِينَ وَلَوْ قَدَرُوا مَا عَرَفُوا يَسْلُكُونَ الطَّرِيق (تفسير ابن كثير

மனிதர்களிடம் அடிமைப்பட்டு கிடப்பவர்களை மீட்டு, படைத்த இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை போதிக்க வந்துள்ளோம் என்று பாரசீக மன்னர் முன்பு ஒரு சாதாரண சஹாபியின் கர்ஜனை

بعثَ سَعْدٌ رِبْعِيَّ بْنَ عَامِرٍ إِلَى رُسْتُمْ، فَدَخَلَ عَلَيْهِ وَقَدْ زَيَّنُوا مَجْلِسَهُ بِالنَّمَارِقِ الْمُذَهَّبَةِ...فَقَالُوا لَهُ: ضَعْ سِلَاحَكَفَقَالَ: إِنِّي لَمْ آتِكُمْ وَإِنَّمَا جِئْتُكُمْ حِينَ دَعَوْتُمُونِي، فَإِنْ تَرَكْتُمُونِي هَكَذَا وَإِلَّا رَجَعْتُ.فَقَالَ رُسْتُمْ: ائْذَنُوا لَهُ. فَأَقْبَلَ يَتَوَكَّأُ عَلَى رُمْحِهِ فَوْقَ النَّمَارِقِ فَخَرَقَ عَامَّتَهَا. فَقَالُوا لَهُ مَا جَاءَ بِكُمْ؟فَقَالَ: اللهُ ابْتَعَثَنَا لِنُخْرِجَ مَنْ شَاءَ مِنْ عِبَادَةِ الْعِبَادِ إِلَى عِبَادَةِ اللهِ وَمِنْ ضِيقِ الدُّنْيَا إِلَى سَعَتِهَا، وَمِنْ جَوْرِ الْأَدْيَانِ إِلَى عَدْلِ الْإِسْلَامِفَأَرْسَلَنَا بِدِينِهِ إِلَى خَلْقِهِ لِنَدْعُوَهُمْ إِلَيْهِ، فَمَنْ قَبِلَ ذَلِكَ قَبِلْنَا مِنْهُ وَرَجَعْنَا عَنْهُ، وَمَنْ أَبَى قَاتَلْنَاهُ أَبَدًا حَتَّى نُفْضِيَ إِلَى مَوْعُودِ اللهِ...(بداية الهداية

பாரஸீக தளபதி ருஸ்துமின் அரசபைக்கு நபித்தோழர் ஹழ்ரத் ரிப்ஈ இப்னு ஆமிர் ரலி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார்கள்.அரசவை தங்கம், முத்து பவளங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.தங்க ஆசனத்தில் ருஸ்தும் இருக்க மிக எளிமை உடையுடன் ரிப்ஈ ரலி அவர்களும்-பாரசிக அரசபையின் வழமைப்படி ஆயுதத்தை கொடுத்துவிடும்படி வாசல் காவலாளி கேட்க,நானாக வரவில்லை.நீங்கள் அழைத்து வந்துள்ளீர்கள் எனக்கு எந்த பிரச்சனையும் இன்றி விட்டு விட்டால் சரி.இல்லையானால் என்னை காப்பாற்ற இந்த வாள் எனக்கு தேவை எனக்கூறி கொடுக்க மறுத்து விடுகிறார்கள்.பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்.அன்றைய உலகின் சூப்பர் பவர் என்று போற்றப்படும் ஒரு வல்லரசு தர்பாரில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை: பாருங்கள் ருஸ்தும்: கேட்கிறார் உங்களின் விஷயம் என்ன? அதற்கு நபித்தோழரின் பதில்- படைப்புக்களுக்கு அடிமையாக இருப்பதை விட்டுவிட்டு படைத்தனுக்கு மட்டும் அடிமையாக இருந்து அவனை வணங்கச்சொல்லி அல்லாஹ் ஒரு நபியை அனுப்பினான்,அந்த நபியின் தூதர்களாக நாங்கள் வந்திருக்கிறோம்.இதை ஏற்றால் உங்களை நாங்கள் ஏற்போம்,இல்லாவிட்டால் யோசித்து முடிவெடுக்க கால அவகாசம் தருவோம். என்றவுடன் ருஸ்தும்:சரி,கால அவகாசம் தாருங்கள்.என்றார்

ரிப்ஈ:எத்தனை நாள் அவகாசம் ?ஒரு நாள்,அல்லது இரண்டு நாள்.? என்று கேட்க, அதற்கு  ருஸ்தும்:குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றதும்-ரிப்ஈ அந்த மன்னரை நோக்கி எதிரிகளை களத்தில் சந்திக்கும்போது மூன்றுநாட்கள் மட்டுமே அவர்களுக்கு அவகாசம் தருவது எங்கள் பெருமானின் வழிமுறை,எனவே மூன்று வழிமுறைகள் உங்களுக்கு தரப்படுகிறது-ஒன்று: இந்த தீனை ஏற்பது.அல்லது சரணடைந்து எங்களின் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஜிஸ்யா வரி கட்டி வாழ்வது அல்லது போர் செய்வது என்றார்கள்.நீர் அவர்களின் தலைவரா? என பாரசீக தளபதி கேட்டபோது-இல்லை, முஸ்லிம்கள் ஓர் உடலை போன்றவர்கள்.அவர்களில் உயர்வு தாழ்வு பேதமில்லை.என்றார்கள்.பின்னர் ருஸ்தும் தன் அரசபை சஹாக்களிடம்-பார்த்தீர்களா?என்ன கண்ணியமான,துனிவான வார்த்தை,இதுவரை இவரைப்போல் யாரும் அரசபையில் தைரியமாக பேசியதில்லை, எத்துனை உறுதியான மன தைரியம் என ருஸ்தும் மெய்சிலிர்த்துப்போனார்.

 

இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன... மீண்டும் அடிமைத் தனத்தை நோக்கி இந்தியா...

இந்தியா சுதந்திர நாடு என்பதும், ஜனநாயக நாடு என்பதும் மெல்ல மெல்ல மறைந்து இந்த இந்தியா குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமே சொந்தம். அதுவும் குறிப்பிட்ட உயர் ஜாதியினருக்கு மட்டுமே சொந்தம். மற்றவர்கள் வாயில்லா ஜீவன்களைப் போல் இருந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலையை நோக்கி மிக வேகமாக காவிகள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடிக்கடி புதிய, புதிய சட்டங்களை உருவாக்கி நாட்டு மக்களை அடிமைத்தனத்திற்கு கொண்டு வந்து விட்ட இந்த ஆட்சியாளர்களை விட அந்த ஆங்கிலேயர்கள் எவ்வளவோ மேல். இனி வரும் காலங்களில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெறுமா.. அல்லது சர்வாதிகார ஆட்சியா.. என்று அஞ்சும் அளவுக்கு நாட்டின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களை இனி ஒருபோதும் தலை தூக்க விடக்கூடாது என்பதில்  காவிகள் முனைப்போடு செயல்படுகிறார்கள்

ஒரு சமூகத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த சமூகத்தின் கடந்த கால வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் மறைத்தால் போதும் அச்சமூகம் தானாக அழிந்து விடும் என்பதற்கொப்ப நமது வரலாறுகள் மறைக்கப்படுகிறது

நாடு விடுதலையான நேரத்தில் 1947  ஆகஸ்டு15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக 12 மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் தற்போதுள்ளஜனகனமணஅல்ல: தேசிய கீதமாக ஒலித்தது அல்லாமாஇக்பாலின்ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை இயற்றியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அந்தப் பாடல் ஓரம் கட்டப்பட்டது

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திப்பு இருந்தார். இந்திய அரசர்களும், மன்னர்களும் திப்புவுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தால் ஆங்கிலேய ஆட்சி சுமார் 100 வருடம் முன்பே முடிவுக்கு வந்திருக்கும்.ஆனால் நம் நாட்டு குறுநில மன்னர்கள் வெள்ளையர்களின் வரவேற்பாளர்களாக இருந்தார்கள் திப்புவின் சுதந்திர உணர்வுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சதியில் சிக்கி இருந்தார்கள். ஆங்கிலேயர்களையும், ஆங்கில மொழியையும், அவர்களின் அரசில் பணிபுரிவதையும் அதிகம் வெறுத்து ஒதுக்கியவர்கள் முஸ்லிம்கள் தான். அந்த ஆங்கிலேய வெறுப்பு சுதந்திரத்திற்குப் பின்பும் தொடர்ந்ததால் தான் படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். எந்த ஆலயங்களிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரம் நடைபெறவில்லை. ஆனால் ஒவ்வொரு மஸ்ஜிதிலும்  ஆங்கிலேயர்களுக்கு எதிரானபிரச்சாரங்கள் நடைபெற்றன. ஆலிம்கள் ஜும்ஆ மேடைகளில் மார்க்கத்தை மட்டும் பேசாமல் சுதந்திரத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினர். அதனால் தான் ஆங்கிலேயர்கள் பெருமளவில் ஆலிம்களைக் கொன்றனர். மூவாயிரம் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. மஸ்ஜிதில் தொழுகை நடைபெறும்போதே ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டதில்மஸ்ஜிதின்சுவர்களையும்துளைத்துக்கொண்டுஉள்ளேஇருந்தவர்களைகுண்டுகள்பதம்பார்த்தவரலாறும்உண்டுஇப்படிப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்களை பின்வரும் சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பாசிச சக்திகளும், பாசிச ஊடகங்களும் மறைத்து வருகின்றன. வெள்ளையர்களுக்கு ஏவலாளிகளாக இருந்தவர்கள் இன்று தேசியவாதிகளாக வேடமிடுகிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அன்று அடிபணிந்து போகாமல் சுதந்திர உணர்வுக்கு முன்னோடிகளாக இருந்த முஸ்லிம்கள் இன்று சுதந்திரத்திற்குப் பிறகு நிமிர்ந்து நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பெற்றோர்களை, மனைவி மக்களைப் பிரிந்து வியர்வை சிந்தி உழைத்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்

மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவு படுத்த வேண்டிய சில வரலாறுகள் அடிமைத் தனத்தை நோக்கி இந்தியா...

ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் தன் கையை தொட்டு விட்டால் அந்தக் கையைக் கழுவாமல் எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள் எனவே தான் ஒரு ஆங்கிலேயன் கூறுவான் மஹ்மூதுல் ஹஸன் அவர்ளை மால்டா சிறையில் எந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் வஃபாத்தான பின் குளிப்பாட்டும்போது தான் உணர முடிந்தது.  அதாவது அவர்களை குளிப்பாட்டும்போது இடுப்பில் சதையே இல்லை அது பற்றி அவருடன் சிறையில் இருந்த ஹுஸைன் அஹ்மத் மதனீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவரது இடுப்பில் சூடு வைப்பார்கள் அதனால் தான் அவரது இடுப்பில் சதையே இல்லை என்றார்கள் 

காந்தியை பிரபலப்படுத்தியது இந்த மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் தான் ,

காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தது மெளலானா அப்துல் பாரீ ரஹ் அவர்கள்  தான்

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த நால்வரையும் 1920 ஜூன் 20- ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் மால்டா விலிருந்து மும்பை துறைமுகத்திற்கு அழைத்து  வரப்பட்டனர். அப்போது  ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களை வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்திஜியும் ஒருவர்.

பிறகு மும்பையில் ஒரு அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே ?  என்று கேட்டு அவரையே அதாவது காந்தியையே தலைவராக நியமிக்கச் சொன்னார்கள்.  அதன் பின்பு  காந்தியை தலைவராக அறிமுகப்படுத்தவும் மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ ரஹ் அவர்கள் தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது. காந்தியை உருவாக்கிய சமூகத்தினர் இன்று தேச துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். காந்தியை சுட்டுக்  கொன்ற சமூகத்தினர் தேச பக்தர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். 

சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி உதவி செய்ததில் முஸ்லிம் பிரமுகர்களின் மாபெரும் பங்களிப்பு.

போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடிரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையைவாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது  பங்களிப்பும் இருந்தால்தான் அதுசிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமேதிருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள்என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் 

இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார்.ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார்.  இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை - தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம்கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் 'கப்பல் வாங்கித்தந்த தமிழன்'ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)

வள்ளல்ஹபீப்-1943 ஜுலை2 - ஆம்தேதிசிங்கப்பூரில்ஆஸாத்ஹிந்த்சர்க்கார்(Azad Hind Government) என்றஇந்தியதேசியதற்காலிகசுதந்திரஅரசைநிறுவியநேதாஜிசுபாஸ்சந்திரபோஸ்அவ்வரசின்நிர்வாகசெலவிற்காகவும்: ஆசாத்ஹிந்த்பவ்ச்என்றஇந்தியதேசியராணுவத்தைநடத்துவதற்காகவும்பேங்க்ஒன்றைநிறுவினார். அவ்வங்கிக்கானநிதியைசிங்கப்பூர்மலேசியாபர்மாபோன்றகீழைநாடுகளில்திரட்டினார்அவ்வாறுநிதிதிரட்டும்கூட்டம்ஒன்றைபர்மாவின்தலைநகரானஇரங்கூனில்கூட்டினார். கூடிஇருந்தஅந்நகரத்துவியாபாரபிரமுகர்களிடம்நேதாஜிபேசும்போதுதேசவிடுதலைக்காகப்போராடும்நம்இந்தியதேசியராணுவத்திற்குஅள்ளிவழங்குங்கள்  - என்றுவேண்டுகோள்விடுத்தார். வருகைதந்தவியாபாரப்பெருமக்கள்அனைவரும்ஒன்றுகூடிப்பேசிஎங்கள்வருமாணத்தில்10சதவிகிதத்தைஇந்தியதேசியராணுவத்திற்குதொடர்ந்துவழங்குகிறோம்என்றுஅறிவித்தனர். இவ்வறிவிப்பைக்கேட்டநேதாஜிசற்றுகோபத்துடன்தாய்நாட்டின்விடுதலைக்காகரத்தம்சிந்தும்எங்கள்வீரர்கள்ஐந்துசதவிகிதம்10சதவிகிதம்என்றுகணக்குப்பார்த்தாசிந்துகின்றனர்? நீங்கள்கணக்குப்பார்த்துநிதிவழங்கபார்க்கின்றீர்களே !- என்று பேச கூட்டத்திலிருந்து தலையில் தொப்பி தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார்.  வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்  என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றிருந்தன.  அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்று பெருமிதத்துடன் அறிவித்தார்.(ஜெயமணி சுப்பிரமணியம் நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம் பக்கம்

ஹழ்ரத் மொஹானி1929 ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு புரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார்.

1921 - இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர். இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தினை அதாவது பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். டோமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கருதினர்.மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத் தலைவர்களுள் ஒருவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆங்கிலயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வௌயேற்றி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.பூரண சுயராஜ்யம் (Complete Indepedence Nation) தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத் மொஹானி ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் பூரண சுயராஜ்ய கோஷம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.(Young India, May 4 , 1992; Ref; Shan Muhammad, Freedom Movement in India- The Role of Ali Brothers, PP.159-60, 164-65.)

பின்னால் என்ன நடந்த்து? 1931 ல் பூரண சுதந்திர தீர்மாணத்தை மறுத்த காந்திஜி1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே பூரண சுயராஜ்யம் கோரிக்கையை முன் வைத்தார்.காந்தியின் இந்த முடிவுக்குப்பிறகு ஹஜ்ரத் மொஹானி மேலும் தீவிரமாக பங்காற்றினார்.பூரண சுதந்திரம் கோரிக்கையை 1937 -இல் லக்னோவில்நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டிலிம் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்.

மிகச் சிறந்த எழுத்தாளராள்ரான, உருது முஹல்லா என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டது..ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான கடும்வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை ஏழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த கேட்ட்து. அவரைகாட்டிக்கொடுக்க  ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.''யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?''- என்று அன்னாரிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. - என்று பதிலளித்தார்ஹஜ்ரத்மொஹானி.ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணியாகஇருந்தர். குழந்தையை பிரசவித்த்தும்கணவரிடம்தன்னுடையவாரிசைக்காட்ட குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அவரதுமனைவிஅலைந்தார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விட்ட்து. மூன்று நாட்கள் பல சிறைகளுக்கும் அலைந்த பிறகு இறுதியில் அவர்  தன் கணவனைச் சந்தித்தார்..தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள், சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிட்டார்.. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கில அரசு.(B.lGrover,S.grover,A New Look At  Modern Indian History, P.426.

© 2018 All Rights Reserved.
http://ulama.in/