தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

முஸ்லிம்கள் வந்தேமாதரம் பாடலாமா?

بسم الله الرحمن الرحيم

முஸ்லிம்கள்

வந்தேமாதரம் பாடலாமா?

2017-08-04

முன்னுரை-மாட்டின் பெயரால் ஆங்காங்கே முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்து ஒரு புயல் கிளம்பியுள்ளது அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்,அரசு மற்றும் தனியார் நிறுவன்ங்களிலும் வாரம் ஒரு முறை வந்தே மாதரம் பாட வேண்டும் என கடந்த வாரத்தில் சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஒரு தேசிய கீதம் தானே என்ற குருட்டு வாதம் முன் வைக்கப்படுகின்றது இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடலாமா..  எந்த அளவுக்கு இதில் ஷிர்க் இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மஹாராஷ்டிராவிலும் இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று  பாஜக தலைவர் ஒருவர் கோரிக்கை வைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ  வரீஸ் பதான்  நான் வந்தே மாதரம் பாடலை பாட மாட்டேன்.  என்னுடைய மதமும், சட்டமும் இவற்றை பாட என்னை அனுமதிக்காது.  என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும் நான் அதை பாட மாட்டேன் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஒரு போதும் உங்கள் தெய்வத்தை நாங்கள் வணங்க மாட்டோம் என்று கூறும்படி அல்லாஹ்வின் உத்தரவு

மக்கா காஃபிர்கள் முஸ்லிம்களே நோக்கி ஒரு வருடம் எங்களின் கடவுளை நீங்கள் வணங்குங்கள் மறு வருடம் உங்களின் இறைவனை நாங்கள் வணங்குகிறோம் என்று கூறிய போது பின்வரும் சூரா இற்ங்கியது

فَقَوْله " قُلْ يَا أَيّهَا الْكَافِرُونَ " يَشْمَل كُلّ كَافِر عَلَى وَجْه الْأَرْض وَلَكِنْ الْمُوَاجَهُونَ بِهَذَا الْخِطَاب هُمْ كُفَّار قُرَيْش وَقِيلَ إِنَّهُمْ مِنْ جَهْلهمْ دَعَوْا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عِبَادَة أَوْثَانهمْ سَنَة وَيَعْبُدُونَ مَعْبُوده سَنَة فَأَنْزَلَ اللَّه هَذِهِ السُّورَة وَأَمَرَ رَسُوله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا أَنْ يَتَبَرَّأ مِنْ دِينهمْ بِالْكُلِّيَّةِ .(تفسير ابن كثير

ஒரு முஃமினின் உள்ளத்தில் ஈமான் எந்த அளவுக்கு ஆழமாக பதிந்திருக்க வேண்டும் என்பது பற்றி..

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا (48)النساء

عَنْ أَبِى وَائِلٍ عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ « أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ ». قَالَ ثُمَّ أَىٌّ قَالَ « أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ ». قَالَ ثُمَّ أَىٌّ قَالَ « أَنْ تُزَانِىَ حَلِيلَةَ جَارِكَ » فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا (وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِى حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا)(بخاري)

عَنْ مُعَاذٍ، قَالَ: أَوْصَانِى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَشْرِ كَلِمَاتٍ، قَالَ: "لاَ تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا، وَإِنْ قُتِلْتَ، وَحُرِّقْتَ، وَلاَ تَعُقَّنَّ وَالِدَيْكَ، وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ، وَلاَ تَتْرُكَنَّ صَلاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا، فَإِنَّ مَنْ تَرَكَ صَلاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا، فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ، وَلاَ تَشْرَبَنَّ خَمْرًا، فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ، وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ، فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الزَّحْفِ، وَإِنْ هَلَكَ النَّاسُ، وَإِذَا أَصَابَ النَّاسَ مُوتَانٌ، وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ، وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ، وَلاَ تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا، وَأَخِفْهُمْ فِى اللَّهِ.[ المعجم الكبير

عن أَنَس بْن مَالِكٍ قَالَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ وَلَا أُبَالِي يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الْأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً (ترمذي)

வந்தே மாதரம் ஏன் பாடக்கூடாது

வந்தே மாதரம் பாடலில் ஷிர்க் உடைய வார்த்தைகள் உள்ளன. பாரத மாதா என்பது முன்பு நாட்டின் பெயராக இருந்தாலும் சுவாமி விவேகானந்தனரின் அறிவுரையின் படி தற்போது அதற்கு உருவம் கற்பித்து இந்துக்களால் வணங்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு உ;’ண்மை முஃமின் இவ்விரண்டையும் ஒருபோதும் கூற மாட்டான். அவ்வாறு கூறினால் அவன் முஷ்ரிக் என்பதோடு, பாசிசவாதிகளுக்கு துணை போகும் துரோகியாவான். ஆனால் பாசிசவாதிகள் இவற்றைக் கூறாதவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் மதரஸா மாணவர்கள் இருவரை வந்தே மாதரம் பாடும்படி ஒரு பாசிசக் கும்பல் வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர்கள் மறுத்ததால் அவ்விருவரையும் கடுமையாக தாக்கியதாகவும் செய்திகள் வந்தன. தற்போது நீதி மன்றமே வந்தே மாதரம் பாடும்படி கட்டளையிட்டிருக்கிறது.

வந்தே மாதரம் உருவான பின்னணி

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1882 ல் ஒரு நாவல் எழுதப்பட்டு வங்காள மொழியில் ஆனந்த மடம் என்ற நாவல் வெளியானது.  இந்த நாவல் கல்கத்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டதாகும். அந்த நாவலில் இடம் பெற்ற பாடல் தான் வந்தே மாதரம். இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காள பார்ப்பனர். அன்றைய ஆங்கில அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்திரேட்டாக மிகவும் விசுவாசமாக வேலை செய்த சாட்டர்ஜி, 18-ம் நூற்றாண்டில் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இதை எழுதினார். 1773 ம் ஆண்டு வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்தில் இருந்து நாவல் தொடங்குகிறது. வங்காள நவாப் மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். அவ்வாறு கொள்ளையடிக்கும்போதும், செல்லும் வழியில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களை இடிக்கும்போதும் வந்தே மாதரம் பாடலை பாடிய படியே மக்களை திரட்டுவதாக நாவல் செல்கிறது

அந்த நாவலில் இடம் பெற்றுள்ள இன்னும் சில வரிகள்

“இந்த துன்மார்க்கர்கள் முஸ்லிம்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நம் தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்

நமது ஆலயங்களை இடுத்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களை மறுபடியும் ராதா மாதவர்களுக்கு கோயில் கட்டுவோம்

இத்தாடிப் பயல்களை தேசத்தை விட்டு துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்கு சேமமில்லை. இம்முஹம்மதியர் எனும்  குருவிக்கூட்டை பிரித்தெறிய வேண்டும்.  இப்பன்றிகளின் கிடையை சாம்பலாக்கி  பூமாதேவியின் துன்பத்தை துடைத்தெறிய வேண்டும் அதற்கான காலம் வந்து விட்டது வாருங்கள் நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம்.  அக்குருவிக் கூட்டை கலைத்து குச்சிகளை காற்றில் பறக்க விடுவோம்”

இப்படிப்பட்ட விஷமக் கருத்துக்கள் நிறைந்த அந்த நாவலில் இடம் பெற்ற பாடல் தான் வந்தே மாதரம் இதன்படி பார்க்கும்போதுகலவரம் நடந்தால் ஒருவரை ஒருவர் இனம் கண்டு தாக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வந்தே மாதரம் என்பதை தங்களின் அடையாளமாக ஏற்படுத்திக் கொண்டார்கள்.  வந்தே மாதரம் சொன்னால் அவன் இந்து அறிந்து தாக்காமல் விட்டு விடுவதற்காகவும், அதைச் சொல்ல மறுப்பவர் முஸ்லிம் என கண்டறிந்து கொன்று விடுவதற்காகவும் வந்தே மாதரம் உருவாக்கப்பட்டதாக அந்தக் கதையில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இந்த நாவலுக்கு முன்பு வந்தே மாதரம் என்பது தேசப்பற்றின் அடையாளமாக கருதப்பட்டதில்லை. வந்தே மாதரம் என்பதை உயிர் போனாலும் சொல்ல மாட்டார்கள் என்பதை அந்த கதையில் வரும் இந்துக்கள் விளங்கி வைத்திருந்தனர். ஏனெனில் வந்தே மாதரம் என்பதின் பொருள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்பதால் முஸ்லிம்கள் இதை சொல்லவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது.

வந்தே மாதரம் என்பதில் மூன்று சொற்கள் உள்ளன. வந்தே என்றால் வந்தனம் செய்கிறோம்- வணங்குகிறோம் –வழிபடுகிறோம் என்பது பொருளாகும். மா என்றால் தாய் என்று பொருள். தரம் என்றால் மண் என்று பொருள். அதாவது தாய் மண்ணாக இருக்கிற இந்த நிலத்தை கடவுளாக கருதி வணங்குகிறோம் வங்காள மொழிச் சொல்லான இந்த வார்த்தையின் பொருளை நாம் தெரிந்து கொள்ள அகராதியை தேடி செல்லத் தேவையில்லை. பாரதியார் தனது பாட்டில் இதன் பொருளை சொல்லித் தந்து விடுகிறார். வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதுமென்போம் இது பாரதியாரின் பாட்டின் முதல் வரிகளாகும். எங்கள் மாநிலத் தாயை வணங்குகிறோம் என்பது தான் வந்தே மாதரத்தின் பொருள் என்று பாரதியார் கூறி விட்டார்

பராசக்தியையும், கற்சிலைகளையும் கடவுளாக கருதிய பாரதியார் மண்ணை வணங்கினால் நமக்கொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அவரைப் போல நம்மையும மண்ணை கடவுளாக்குமாறு சொன்னால் நாம் எப்படி அதை ஏற்க முடியும்.

சரி.. அது ஒரு புறமிருக்கட்டும். பாரதியார் போலவே தாய் மண்ணே வணக்கம் என்று உரத்த குரலில் பாடி, அதற்கு இசையும் அமைத்த சில முஸ்லிம் சினிமாக்காரர்களை நாம் என்னவென்று சொல்வது.. முஸ்லிம்களும் மண்ணை கடவுளாக வணங்குவார்கள் என்று பிறர் தவறாக எண்ணுவதற்கு இது ஒரு காரணமாக அமைந்து விட்டதல்லவா... ஆனால் உண்மையில் இஸ்லாம் அப்படியா கூறுகிறது. பெற்ற தாயைக் கூட மதிக்கும்படி கூறும் இஸ்லாம் வணங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இது மட்டுமா.. நம் உயிரினும் மேலான கண்மனி நாயகம் ஸல் அவர்களை மிகவும் மதிக்கிறோம் ஆனால் அவர்களை ஒருபோதும் வணங்க மாட்டோம். எங்கள் நபிக்கு அது அறவே பிடிக்கவும் பிடிக்காது. எங்கள் நபியைக் கூட வணங்காத நாங்கள் தாய் மண்ணை எவ்வாறு வணங்குவோம். தாய மண்ணை நாங்கள் மதிக்கிறோம். தாய் மண்ணுக்காக எங்களது முன்னோர்களும் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம். இதை உறுதிமொழியாக கூறி இஸ்லாதை ஏற்ற முஸ்லிம்கள் இதை எப்படி ஏற்க முடியும்.

 

வந்த மாதரம் பாடலின் தமிழாக்கம்

தாயே வணங்குகிறோம்- இனிய நீர்- இன்சுவைக்கனிகள்-தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை- மரகதப் பச்சை --வயல்களின் மாட்சிமை - எங்கள் தாய் - தாயே வணங்குகிறோம் - வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்- எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள் - எங்கள் தாய், சுகமளிப்பவளே, வரமருள்பவளே,தாயே வணங்குகிறோம்கோடிக் கோடிக் குரல்கள், உன் திருப்பெயர் முழங்கவும், கோடிக் கோடிக் கரங்கள்,உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்- அம்மாஎன்று உன்னை அழைப்பவர் எவர் ?- பேராற்றல் பெற்றவள் - பேறு தருபவள்-

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள் - எங்கள் தாய் - தாயே வணங்குகிறோம்-அறிவு நீ-அறம் நீ- இதயம் நீஉணர்வும் நீ- எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ- எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ- எம் ஆலயம் எங்கும்-ஆராதனை பெறும்தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீதாயே வணங்குகிறோம்- ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்- அன்னை துர்க்கை நீயே- செங்கமல மலர் இதழ்களில் உறையும்- செல்வத் திருமகள் நீயே-

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே- தாயே வணங்குகிறோம்- திருமகளே- மாசற்ற பண்புகளின் மனையகமேஒப்புயர்வற்ற எம் தாயகமே- இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமேகருமை அழகியேஎளிமை இலங்கும் ஏந்திழையே- புன்முறுவல் பூத்தவளே- பொன் அணிகள் பூண்டவளே- பெற்று வளர்த்தவளேபெருமைகள் அனைத்தும் அளித்தவளே- தாயே வணங்குகிறோம்.

 

© 2018 All Rights Reserved.
http://ulama.in/