தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

மாற்று மதத்தவர்களுடன் நட்புறவு

بسم الله الرحمن الرحيم

மாற்று மதத்தவர்களுடன் நட்புறவு

கடந்த வாரத் தொடர்

SHAWWAL-26     -     21-07-2017

அல்லாஹ் அவ்வப்போது ஆட்சியாள்ரகள் மூலமாகவும் நம்மை சோதிப்பான். ஃபிர்அவ்னிடம் எத்தகைய கொடுமைகள் இருந்ததோ அத்தகைய அனைத்து கொடுமைகளும் தற்போதைய ஆட்சியில்

إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ -  وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ - - وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (4)القصص

1, ஃபிர்அவ்ன் கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். இந்த ஆட்சியும் அதையே செய்கிறது

2, ஃபிர்அவ்ன் தனது சமூகத்தை உயர்த்தி, மற்றொரு சமூகத்தை தாழ்வடையச் செய்து கொண்டிருந்தான். இந்த ஆட்சியும் தம் சமூகத்தையும், தம் சமூக ஆராதணைகளையும் உயர்த்தி, அதை சட்டமாக்கி, முஸ்லிம்களை தாழ்த்துவதுடன் நாம் வணங்குவதையும் தடுக்கிறது 3,ஃபிர்அவ்ன் பனூ இஸ்ராயீல் சமூகத்துப் பெண்களை மானபங்கப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது இந்த ஆட்சியும் முஸ்லிம் பெண்களின் கற்புகளை சூறையாட ஆணழகர்களை தயார் செய்து அவர்கள் மூலமாக முஸ்லிம் பெண்களை மயக்கி,  கர்ப்பமாக்கி பின்பு அவர்களை குப்பைத் தொட்டியிலோ வீசி விடுவதற்கோ அல்லது விபச்சார விடுதியில் சேர்த்து விடுவதற்கோ பயிற்சி தருகிறது

இப்படிப்பட்ட கொடுமைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தாலும் முஸ்லிம்கள் பழிக்கப்பழி வாங்கும்படி ஏவப்படவில்லை. எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் அநீதமாக நடந்து கொள்ளக்கூடாது என்று தான் போதிக்கும் இஸ்லாம்

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8)المائدة

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது காஃபிர்கள் நடந்து கொண்ட விதம் நமக்குத் தெரியும். அடுத்த வருடம் பெரும் படையோடு முஸ்லிம்கள் உம்ராவுக்காக மக்காவை நோக்கி வந்த போது காஃபிர்களின் ஒரு கூட்டம் தம் ஒட்டகங்களோடு உம்ராவுக்காக மக்கா நோக்கி சென்றனர். (காஃபிர்களிடமும் ஹஜ், உம்ரா ஏதோ ஒரு வகையில் இருந்தது.) அதில் ஒரு காஃபிர் வைத்திருந்த  ஒட்டகங்கள் உண்மையில் மதீனாவில் இருந்த முஸ்லிம்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டவை. மதீனாவுக்கு அந்த காஃபிர் வந்த போது  அதை பறித்தார். இப்போது அதை மக்காவுக்கு கொண்டு செல்கிறார். அப்போது சஹாபிகள் தங்களின் மனதில் இவரைத் தடுக்க வேண்டும். கடந்த வருடம் நாம் உம்ராவுக்கு வந்த போது இவர்கள் தடுத்தார்கள். அதேபோல் அவர்களை நாம் தடுக்க வேண்டும். அந்த ஒட்டகங்களை பறிக்க வேண்டும் என்றெண்ணிய போது நபி ஸல் அவர்கள் தோழர்களிடம் அவர்களை விட்டு விடுங்கள். அவர்களின் உம்ரா ஏற்கப்படாத ஒன்று தான். உம்ராவை முறையாக அவர்கள் செய்வதில்லை இருந்தாலும் அவர்களை நாம் தடுக்கக்கூடாது என்று கூறினார்கள். அப்போது தான் மேற்காணும் வசனம் இறங்கியது

பத்ரில் எழுபது பேர் கைதிகளாக பிடிபட்டார்கள்.அவர்களிடம் முஸ்லிம்கள் நடந்த விதம் இன்றைய அனைத்து நாடுகளும் பின்பற்றப்பட வேண்டியதாகும். அவர்களை அடைத்து வைக்க சிறைகள் இல்லை. கைதி என்ற அடிப்படையில் மஸ்ஜிதில் தான் கட்டிப் போடப் பாட்டார்கள் எனினும் இரவில் அவர்கள் சிரமப்பட்டால் கட்டுகளை கொஞ்சம் தளர்த்தி விடும்படி நபி ஸல் கூறுவார்கள். அவர்களுக்கு ஆடை இல்லை விட்டால் ஆடை தந்து உதவ ஏவுவார்கள். முஸ்லிம்களுக்கே உணவுக்கு வழி இல்லாமல் இருந்தது ஆனால் அப்படி இருந்தாலும் அந்த கைதிகளுக்கு நல்ல உணவை வழங்கும்படி நபி ஸல் கூறுவார்கள் அவர்களுக்கு நல்ல உணவு வழங்குவது உங்கள் பொறுப்பு என்றும் கூறுவார்கள்.பத்ரில் முஸ்லிம்கள் தங்கியிருந்த இடம் நல்ல மழை பெய்து செழிப்பாக மாறி விட்டது. ஆனால் காஃபிர்கள் தங்கியிருந்த இடத்தில் தண்ணீருக்கு பஞ்சம் இருந்த து அந்த நேரத்தில் காஃபிர்களில் இருவர் முஸ்லிம்களின் இடத்திற்கு வந்து தண்ணீர் எடுக்க முற்பட்டபோது அதை தடுக்க நபித்தோழர்களில் சிலர் முனைந்தார்கள் ஆனால் நபி ஸல் அவர்கள் அவ்விருவரும் தண்ணீர் எடுத்துக் கொள்ளட்டும் விட்டு விடுங்கள். தண்ணீரை மறுப்பது நியாயம் அல்ல என்றார்கள்.காஃபிர்கள் நபி ஸல் அவர்களின் குடும்பத்தினரை பள்ளத்தாக்கில் ஒதுக்கி வைத்த போது உண்ண உணவில்லை. தண்ணீருக்கு வழியில்லை. இலை,தலைகளை சாப்பிட்டார்கள். கடும் பஞ்சம். அதையெல்லாம் கண்டும் மக்கா காஃபிர்களுக்கு இரக்கம் வரவில்லை. இது ஒரு தருணம். இதேபோல் மற்றொரு தருணம் வந்தது. மதீனாவுக்கு சென்ற பின் முஸ்லிம்களுக்கு ஓரளவுக்கு வசதி ஏற்பட்டது. ஆனால் அப்போது மக்காவில் கடும் பஞ்சம். எப்படி பள்ளதாக்கில் இருந்த போது நபி ஸல் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டதோ அது மாதிரி பஞ்சம் ஏற்பட்டது அப்போது நபி ஸல் இவர்கள் நம்மை கண்டு கொள்ளாதது போல் நாமும் இவர்களை கண்டு கொள்ள வேண்டாம் என்று இருந்து விடவில்லை மாறாக எனது நாட்டு மக்கள் சிரமப் படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். என்று மதீனாவில் இருந்து 500 தீனாரை மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள் 500 தீனார் என்பது நம் நாட்டு கணக்குப்படி இரண்டு கிலோ தங்கமாகும். இது இஸ்லாம் கற்றுத் தரும் சிறந்த பண்பாடாகும்

சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தாக்குதலின் போது அமர்நாத் யாத்திரீகர்கள் 50 பேர் பயணம் செய்த ஒரு பஸ்ஸை அதிலிருந்த பயணிகளை காப்பாற்ற மிக வேகமாக ஓட்டி, பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இன்றி சலீம் என்ற முஸ்லிம் தன்னுயிரை பணயம் வைத்து  காப்பாற்றினார் ஆனால் அதே நேரத்தில் கடந்த ரமழானில் டெல்லி-மதுரா ரயிலில் பயணம் செய்த ஜுனைத் என்ற ஹாஃபிழை ஈவு இரக்கமின்றி காவிக்கும்பல் கொலை செய்து இரயிலில் இருந்து தூக்கி வீசியது இத்தனைக்கும் அந்த இரயிலில் எத்தனையோ பேர் பயணம் செய்தார்கள் அத்தனை பேரும் சேர்ந்து கூட ஒரு ஜுனைதை காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால் 50  அமர்நாத் யாத்திரீகர்களை ஒரேயோரு சலீம் காப்பாற்றினார் இது தான் இஸ்லாம் கற்றுத் தரும் மனித நேயம். ஒரு சமூகம் நமக்கு எதிரிகளாக இருக்கலாம். அவர்கள் நமக்கு பல பல அநீதிகள் இழைத்திருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் மீது வரம்பு மீறக்கூடாது.

 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், மாற்று மதத்தவர்கள் சிறுபான்மையாகவும் இருந்த அந்த நேரத்தில் நேர்மையாகவும், நியாயமாகவும் சட்டங்களை இஸ்லாம் வகுத்துத் தந்தது

عن أنس بن مالك ،رضي الله عنهعن النبي صلى الله عليه وسلم : " لا تقتلوا شيخا فانيا ، ولا طفلا صغيرا ، ولا امرأة " (السنن الصغير للبيهقي)

عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ، قَالَ : حدِّثْتُ أَنَّ أَبَا بَكْرٍ بَعَثَ جُيُوشًا إلَى الشَّامِ فَخَرَجَ يَتْبَعُ يَزِيدَ بْنَ أَبِي سُفْيَانَ ، فَقَالَ : إنِّي أُوصِيك بِعَشْرٍ : لاَ تَقْتُلَنَّ صَبِيًّا ، وَلاَ امْرَأَةً ، وَلاَ كَبِيرًا هَرِمًا ، وَلاَ تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا ، وَلاَ تُخَرِّبَنَّ عَامِرًا ، وَلاَ تَعْقِرَنَّ شَاةً ، وَلاَ بقرة إِلاَّ لِمَأْكَلَةٍ ، وَلاَ تُغْرِقَنَّ نَخْلاً ، وَلاَ تَحْرِقَنَّهُ وَلاَ تَغُلّ ، وَلاَ تَجْبُنْ.عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ ، قَالَ : أَتَانَا كِتَابُ عُمَرَ : لاَ تَغُلُّوا ، وَلاَ تَغْدِرُوا ، وَلاَ تَقْتُلُوا وَلَيَدًا وَاتَّقُوا اللَّهَ فِي الْفَلاَّحِينَ.(مُصنف ابن أبي شيبة)

ஜெரூஸலத்தை வெற்றி கொண்டபின் அங்குள்ள ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கி உமர் [ரழி)எழுதிக் கொடுத்த பத்திரம்

لَمَّا دَخَلَ عمرُ رضي الله عنه الجَابِية جاء رؤساء بيت المقدس الي عمررضي الله عنه فوقع الصلح بينه وبينهم علي جزية معلومة وكتب باالصلح وثيقتين وثيقةظلت عند العرب ووثيقة ظَلَّتْ عند الروم خلاصةُ هذه الوثيقة اطلاقُ حُرِّية الدين للمسيحيين واِبْقاؤهم علي ما كانوا عليه من امر دينهموطُقٌوْسِهِمْ وكَنَا ئِسِهم (دروس التاريخ الاسلامي) وفي روايةلاتُسَكَّنكنائسُهمولاتُهْدَمُولايُنقَضُمنهاولامنصلبانهمولاشيءمنأموالهمولايُكْرَهونعلىدينهمولايُضَارّأحدمنهم(اطلاقُ حُرِّية الدينமத சுதந்திரத்தை பொதுவாக்குவது)طقوس மத கோட்பாடுகள்

யாருக்கும் தொந்தரவு தராமல் அவர்களின் ஆலயங்களில் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மாற்று மதத் துறவிகளைக் கொல்லக்கூடாது என இஸ்லாமிய அரசாங்கத்தின் உத்தரவு இருந்தது ஆனால் இன்று பள்ளிவாசல் இமாமை வெளியே இழுத்து பாரத் மாதா கீ ஜே சொல்லச் சொல்லி அடிப்பதும் அதை அவர் சொன்ன பிறகும் கூட, சப்தமாக கூறும்படி கண்ணத்தில் அறைவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

عن ابْنِ أَبِى أُوَيْسٍ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا بَعَثَ جُيُوشَهُ قَالَ :« اخْرُجُوا بِاسْمِ اللَّهِ تُقَاتِلُونَ فِى سَبِيلِ اللَّهِ مَنْ كَفَرَ بِاللَّهِ لاَ تَغْدِرُوا وَلاَ تُمَثِّلُوا وَلاَ تَغُلُّوا وَلاَ تَقْتُلُوا الْوِلْدَانَ وَلاَ أَصْحَابَ الصَّوَامِعِ »(السنن الكبرى)عن ثَابِت بْن الْحَجَّاجِ الْكِلاَبِيُّ ، قَالَ : قَامَ أَبُو بَكْرٍ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ، ثُمَّ قَالَ : أَلاَ لاَ يُقْتَلُ الرَّاهِبُ فِي الصَّوْمَعَةِ.( مُصنف ابن أبي شيبة

 

முடிவுரை- முஸ்லிம்களின் கோபத்தை தூண்டுகிற மாதிரி ஆங்காங்கே சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே மாட்டின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். விவேகானந்தரிடம் இதேபோல மாட்டின் அடிமைகள் வந்து படுவதைக்கு எதிராக நாங்கள் களம இறங்கியிருக்கிறோம் என்ற போது அவர்களிடம் விவேகானந்தர் கேட்டார். மனிதர்கள் ஆங்காங்கே கொல்லப்படுகிறார்களே அதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா.. மாட்டுக்காக புறப்பட்டு விட்டீர்கள் என்ற போது, வந்தவர்கள் கூறினார்களாம் மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஆனால் மாட்டைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லை என்று தான் நாங்கள் கிளம்பியுள்ளோம் என்ற போது விவேகானந்தர் சொன்னாராம் சரி.. சரி.. நான் மனிதனுக்குப் பிறந்தேன் அதனால் நான் மனிதனைப் பற்றிக் கவலைப்படுகிறேன் என்றாராம்.

அவர்களுடைய மதத்தலைவரின் சொற்களைக் கூட மறந்து மாட்டின் பெயரால் பல மனிதர்களை வேட்டையாடுகிறார்கள். இது போன்ற பல கொடுமைகள் வட மாநிலங்களிலும் அதிகம் நடைபெற்றாலும் இங்கே எதுவும் நடைபெறவில்லை என்ற இறுமாப்போடு நாம் இருந்து விடக்கூடாது. அமைதிப் பூங்காவான தமிழகத்தையும் கலவர பூமியாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் அதற்கு சற்றும் இடம் தந்து விடாமல் தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்கா தான் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். அதற்காக கீழ்காணும் விஷயங்களை நடைமுறைப் படுத்தலாம்

1,நம் அண்டை வீடுகளில் உள்ள மாற்றார்கள், அல்லது மாற்று மத நண்பர்களுக்கு அடிக்கடி அன்பளிப்புகள் தந்து மனித நேயத்தை வெளிப்படுத்த வேண்டும். நபி ஸல் தம் பக்கத்து வீட்டு யூதருக்கு அடிக்கடி அன்பளிப்பு தருவார்கள். மதீனாவில் வாழும் யூதர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்திருந்தார்கள். மதீனாவை தாக்க யார் வந்தாலும் நாம் இணைந்து போராட வேண்டும் என்பது அதில் முக்க்கிய அம்சமாகும். பின்பு யூதர்கள் அந்த உடன்படிக்கையை அவர்களாக முறித்த போது தான் அவர்களின் மீது நபி ஸல் அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள்                                 

2, அவர்கள் தரும் பூஜை செய்யப்படாத அன்பளிப்புகளை மனமுவந்து ஏற்க வேண்டும்

3,அவர்களுடன் கொடுக்கல், வாங்கல் வைத்திருந்தால் அதில் மிகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்

4,இஸ்லாம் தொடர்பான நல்ல கருத்துக்கள் அடங்கிய நூல்களை அன்பளிப்பாக தர வேண்டும்

5, அவர்கள் நோயுற்றால் நலம் விசாரிக்க வேண்டும்.

6,கஷ்டப்பட்டால் கடன் தந்து உதவ வேண்டும்

7,துக்கத்தின் போது ஆறுதல் கூற வேண்டும்

இன்னும் இது போன்றவைகளை நாம் கடை பிடிக்கும்போது எத்தகைய பாசிசவாதிகள் வந்து என்ன விஷமக் கருத்துக்களை விதைத்தாலும் பொது மக்கள் அதை நம்ப மாட்டார்கள் இது பற்றிய மேலும் விபரங்களுக்கு கடந்த வார பயான் குறிப்பையும் பார்க்கலாம்

சம்பவம் -நபி இப்றாஹீம் அலை அவர்கள் எப்போதும் விருந்தாளி இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். ஒருமுறை விருந்தாளியை எதிர்பார்த்து காத்திருந்த போது ஒரு மாற்று மத முதியவர் கடும் மழையில் அவ்வழியாக சென்றார். உடனே இப்றாஹீம் அலை அவர்கள் முதியவரே.. இந்த மழையில் எங்கே செல்கிறீர். சற்று நேரம் இங்கு ஓய்வெடுத்துச் செல்லுங்கள். என்று வீட்டுக்குள் வரவழைத்தார்கள். அவருக்கு உணவும் வழங்கினார்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும்போது நபி இப்றாஹீம் அலை அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுங்கள் என்றார்கள். அவர் அதை ஏற்கவில்லை. எனக்கு இத்தனை வயதாகி விட்டது. இதுவரை நான் சாப்பிடும் முன்பு நான் யாருடைய பெயரையும் சொன்னதில்லை இப்போது நீங்கள் சொல்வதற்காக யாரோ ஒருவரின் பெயரை நான் சொல்லவேண்டுமா.. அது என்னால் முடியாது என்று மறுத்தார். உடனே நபி இப்றாஹீம் அலை  அவர்கள் இறைவனின் பெயர் கூறித் தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்ற போது அவர் கோபித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார் உடனே அல்லாஹ் நபி இப்றாஹீம் அலை அவர்களுக்கு வஹீ அறிவித்தான் இப்றாஹீமே இத்தனை வருட காலங்கள் அவர் எனக்கு கட்டுப்பட்டதில்லை. எனினும் நான் அவரை பட்டினியில் விடவில்லை ஆனால் ஒருமுறை அவர் உங்களின் பேச்சை கேட்கவில்லை என்பதற்காக அவரை பட்டினியோடு அனுப்பி விட்டீர்களே.. என அல்லாஹ் கண்டித்தான்

© 2018 All Rights Reserved.
http://ulama.in/