தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

அமல்களில் இஸ்திகாமத் எப்போது வரும்?

بسم الله الرحمن الرحيم

 

அமல்களில் இஸ்திகாமத் எப்போது வரும்?

 

ஷவ்வால்-5     -     30-06-2017

நிரந்தரமாக அமல் செய்பவர்களுக்கு மலக்குகள் கூறும் சுபச்செய்தி ...

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30)حم السجدة

விளக்கம்- மலக்குகள் உலகில்  எப்போதும் நம்முடன் இருக்கிறார்கள். அதனால் தான் ஒரு தனி நபரைப் பார்த்து சலாம் கூறினாலும் பன்மையான வார்த்தையை பயன்படுத்துகிறோம். ஏனெனில் அவர் தனி நபர் அல்ல. அவருடன் மலக்குகள் உள்ளனர். இந்நிலையில் ஒரு முஃமின் ஈமானிலும், அமல்களிலும் இஸ்திகாமத் தை கடைபிடித்தால் அவர்கள் அந்த முஃமினின் சகராத் நிலையில் இவ்வாறு கூறுவார்கள். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் எவ்வாறு இம்மையில் உங்களுடனே இருந்தோமோ மறுமையிலும் உங்களுடன் இருப்போம்

சுருக்கமாகவும், அதே நேரத்தில் முழு தீனையும் கற்றுத் தரும் வசனம் எது என்று கேட்ட போது இப்னு அப்பாஸ் ரழி கூறிய பதில்

عَنْ عِكْرِمَة قَالَ سُئِلَ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا أَيّ آيَة فِي كِتَاب اللَّه تَبَارَكَ وَتَعَالَى أَرْخَص ؟ قَالَ قَوْله تَعَالَى " إِنَّ الَّذِينَ قَالُوا رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا" عَلَى شَهَادَة أَنْ لَا إِلَه إِلَّا اللَّه (تفسير ابن كثير)عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ قَالَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ قَالَ قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِمْ (مسلم)عَنْ سُفْيَان بْن عَبْد اللَّه الثَّقَفِيّ قَالَ : قُلْت يَا رَسُول اللَّه حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِم بِهِ قَالَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " قُلْ رَبِّي اللَّه ثُمَّ اِسْتَقِمْ " قُلْت يَا رَسُول اللَّه مَا أَكْثَر مَا تَخَاف عَلَيَّ ؟ فَأَخَذَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِطَرَفِ لِسَان نَفْسه ثُمَّ قَالَ " هَذَا"    (تِّرْمِذِيّ)

இந்த வசனத்திற்கு அபூபக்கர் ரழி அவர்கள் கூறிய விளக்கம்

رُوِيَ مِنْ حَدِيث الْأَسْوَد بْن هِلَال قَالَ : قَالَ أَبُو بَكْر الصِّدِّيق رَضِيَ اللَّه عَنْهُ مَا تَقُولُونَ فِي هَذِهِ الْآيَة " إِنَّ الَّذِينَ قَالُوا رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا " قَالَ فَقَالُوا " رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا" مِنْ ذَنْب فَقَالَ لَقَدْ حَمَلْتُمُوهُ عَلَى غَيْر الْمَحْمَل قَالُوا رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا فَلَمْ يَلْتَفِتُوا إِلَى إِلَه غَيْره .(ابن كثير

ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் இவ்வசனத்தை ஓதிக் காட்டி இதில் அல்லாஹ் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்க, மக்கள் பாவத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்பவர்களைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான் என்று கூற, அதற்கு அபூபக்கர் ரழி அவர்கள் இல்லை... எவர்கள் எந்நிலையிலும் அல்லாஹ்வின் சிந்தனையோடு, எல்லா இடங்களிலும் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தோடு, கட்டளைகளை நிரந்தரமாக  செய்வார்களோ அவர்களைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான் என்றார்கள்

கடமைகளை தொடர்படியாக நிறைவேற்றாதவர்களை  நழுவிச் செல்லும் குள்ள நரிகளோடு ஒப்பிட்ட உமர் ரழி அவர்கள்

وَقَالَ الزُّهْرِيّ : تَلَا عُمَر رَضِيَ اللَّه عَنْهُ هَذِهِ الْآيَة عَلَى الْمِنْبَر ثُمَّ قَالَ اِسْتَقَامُوا وَاَللَّه لِلَّهِ بِطَاعَتِهِ وَلَمْ يَرُوغُوا رَوَغَان الثَّعَالِب وَقَالَ عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا " قَالُوا رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا" عَلَى أَدَاء فَرَائِضه وَكَذَا قَالَ قَتَادَة قَالَ وَكَانَ الْحَسَن يَقُول اللَّهُمَّ أَنْتَ رَبّنَا فَارْزُقْنَا الِاسْتِقَامَة.(ابن كثير

இஸ்திகாமத் எப்போது வரும்.  நபித் தோழர்களின் பல்வேறு விளக்கங்கள்

1,எந்த அமலையும் முகஸ்துதி இல்லாமல் செய்தால் தான் இஸ்திகாமத் வரும்

" إِنَّ الَّذِينَ قَالُوا رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا " أَيْ أَخْلَصُوا الْعَمَل لِلَّهِ وَعَمِلُوا بِطَاعَةِ اللَّه تَعَالَى عَلَى مَا شَرَعَ اللَّه لَهُمْ.(تفسير ابن كثير

தன்னை அலங்கரித்துக் கொண்ட ஒரு மணப்பெண்ணை  தோழிகள் எல்லோரும் நீ அழகாக இருக்கிறாய் என்று கூறினாலும் அப்பெண்ணுக்கு திருப்தி இருக்காது. நீங்கள் எல்லோரும் நான் அழகாக இருப்பதாக கூறினாலும் என் கணவர் கூற வேண்டும் அப்போது தான் எனக்கு திருப்தி என்பார். அதேபோல் அமல்களில் அல்லாஹ்வின் திருப்தி தான் முக்கியம்

2,எல்லா ஃபர்ளுகளையும் நிறைவேற்றினால் தான் இஸ்திகாமத் சாத்தியமாகும்

وعن علي رضي الله عنه " إِنَّ الَّذِينَ قَالُوا رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا ":أيأدّوا الفرائض ..(تفسير ابن كثير)

சிலர் குறிப்பிட்ட ஃபர்ளுகளை நிறைவேற்றுவதில் கவனமாக இருப்பர். ஆனால் வேறு சில ஃபர்ளுகள் விஷயத்தில் மிக மோசம். உதாரணமாக ஹஜ் என்ற கடமையை நிறைவேற்றுவதில் கவனமாக இருப்பவர் ஜகாத் தருவதில்லை. காரணம் ஹஜ்ஜில் இதுவரை பார்க்காத பல இடங்களையும் பார்க்கலாம் என்ற கவர்ச்சியும் கூடவே இருக்கிறது ஆனால் ஜகாத்தில் அது இல்லை.  சிலர் நோன்பை நிறைவேற்றுவதில் கவனம். ஆனால் தொழுவதில் கவனமில்லை. உதாரணமாக காலேஜ் படிக்கும் இளைஞன் ஒருநாள் ரமழானில் தாமதமாக எழுந்து சஹர் சாப்பிடாமல் நோன்பு வைத்தால் அன்று முழுவதும் அனைவரிடமும் அதை கூறுவார். அதைக் கேட்கும் சிலர் தெரிந்திருந்தால் நான் கூட உங்களை எழுப்பியிருப்பேனே... என்பர். அதை அம்மாவிடம் போன் போட்டு கூறுவார். உடனே அம்மா கவலைப்பட்டு மகனே நாளை கண்டிப்பாக உன்னை  நான் போன் செய்து  எழுப்பி விடுவேன். என்று கூறுவதுடன் அடுத்த நாள் சஹரில் மகன் போனை எடுக்கும் வரை ஓய மாட்டார். இதே அக்கறை தொழுகை விஷயத்தில் இருக்குமா.. என்றாவது அந்த இளைஞன் நான் தொழாமல் தூங்கி விட்டேன் அம்மாவிடமும், அனைவரிடமும் கூறுவாரா.. அப்படியே கூறினாலும் அடுத்த நாள் ஓயாமல் போன் செய்து மகனை எழுப்புவாரா... பெரும்பாலும் இல்லை.. பல பெற்றோர்கள் பிள்ளைகளை தொழுகைக்கு எழுப்பும் விஷயத்தில் சொல்லும் பதில் நான் ஒரு சில தடவைகள் எழுப்பியும் அவன் எழுந்திருக்கவில்லை.அதனால் விட்டு வந்து விட்டேன். அவர்களிடம் உங்கள் வீட்டில் நெருப்பு பிடித்து விட்டது. பிள்ளைகள் தூங்குகிறார்கள். ஒரு சில தடவை எழுப்பி எழுந்திருக்கா விட்டால் விட்டு விடுவீர்களா.. என்று கேட்டால் அய்யோ.. அது எப்படி முடியும். அடித்தாவது அவர்களை எழுப்பித் தான் தீருவேன் என்பார். அதேபோல் தான் தொழுகையும்.... இந்த நெருப்புக்கு மகன் இரையாகி விடக்கூடாது என்று கவலைப்படும் பலர், அந்த நெருப்புக்கு இரையாகி விடக்கூடாது என்று கவலைப்படுவதில்லை

அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமைகளில் குறை வைக்காத பலர் பிற மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் நிறைய தவறு செய்கின்றனர் இதுவும் இஸ்திகாமத் அல்ல...

ஒரு முஸ்லிமை தொழுகையாளியாக ஆக்குவது சுலபம். ஆனால் நற்குணமுள்ளவராக ஆக்குவது கடினம். இன்றைக்கு எத்தனையோ பேரிடம் தொழுகை இருக்கிறது. தாடியும், தொப்பியும் இருக்கிறது ஆனால் நேர்மை இல்லை. கொடுக்கல், வாங்கலில் நாணயம் இல்லை. உமர் ரழி அவர்கள் கூறனார்கள் ஒருவரின் தொழுகையைக் கண்டு மட்டும் அவர் நல்லவர் என்று முடிவு செய்யாதீர்கள். அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றுகிறாரா என்பதையும் பார்த்தே அவர் நல்லவர் என முடிவெடுங்கள்

மற்றொரு தடவை உமர் ரழி அவர்கள் ஒருவரை சாட்சி கூறுவதற்காக அழைக்க எண்ணியிருந்தார்கள். அவரை அழைக்கும் முன்பு அவரைப்பற்றி ஒரு மனிதரிடம் அவர் நல்லவரா.. என விசாரித்த போது ஆம் அவர் நல்லவர் தான் என அம்மனிதர் பதில் கூறினார்

உடனே உமர் ரழி அவர்கள் எதை வைத்து அவரை நல்லவர் என்று கூறுகிறீர்.. அவரோடு பிரயாணம் செய்திருக்கிறீரா.. என்று கேட்க.. அவர் இல்லை என்றார். அவரோடு கொடுக்கல், வாங்கல் செய்திருக்கிறீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவருக்கு நீங்கள் பக்கத்து வீட்டுக்காரரா.. என்று கேட்க, அவர் இல்லை என்றார். அதற்கு உமர் ரழி அவர்கள் அப்படியானால் அவரைப் பற்றி நல்லவர் என நீர் கூறுவதை நான் ஏற்க மாட்டேன். அவர் தொழுது விட்டு வெளியே வருவதைக் கண்டு, அல்லது அவர் குர்ஆன் ஓதுவதைப் பார்த்து நல்லவர் என நீர் முடிவு செய்திருப்பீர் அதை நான் ஏற்க மாட்டேன். என்றார்கள்       

தொழுபவராக இருந்தும் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்றாதவரிடம் இஸ்திகாமத் இராது

فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا (23)الاسراء

மேற்படி வசனத்திற்கான விளக்கங்களில் பெற்றோரின் குரலை விட நம் குரல் உயர்ந்து விடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது ஹழ்ரத் அபூஹுரைரா ரழி அவர்களை ஒரு முறை அவரது தாயார் அழைத்த போது லப்பைக் இதோ வருகிறேன் என்று கூறினார்கள். ஆனால் அதன் பிறகு இஸ்திஃபார் செய்த படி அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடம் என்ன தவறு செய்தீர்கள். லப்பைக் என்று தானே கூறினீர்கள். அதற்காக ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட போது, அவர்கள் கூறினார்கள் நான் கூறிய லப்பைக் என்ற சப்தம் என் தாயார் அழைத்த சப்தத்தை விட அதிகமாகி விட்டது என்றார்கள்                   

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا (36)النساء

அல்லாஹ் தன்னை வணங்க வேண்டும் என்பதோடு சேர்த்துக் கூறும் விஷயம் பெற்றோரிடம் உபகாரம் என்பதாகும், ஏனெனில் நாம் இந்த உலகுக்கு வர முதல் காரணம் அல்லாஹ்.. அதற்கடுத்து இரண்டாம் காரணம் பெற்றோர்கள் தான்.

நம் நாவினாலும், கரத்தினாலும், பிறருக்கு தொந்தரவு தருபவரிடம் இஸ்திகாமத் சாத்தியமில்லை

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ (بخاري

மேற்படி ஹதீஸின் விளக்கமாக சில சட்ட நூல்களில் நாவு, கரம், மர்மஸ்தானம் ஆகியவற்றால் பிறருக்கு தொந்தரவு தராமல் இருப்பது என்ன என்பதற்கு பின்வரும் உதாரணங்கள் கூறப்பட்டுள்ளது, 1,நாவு – இரு முஸ்லிம்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒருவர் வருகிறார். அவர் வந்தவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் இவ்விருவரும் உண்மையில் அவரைப் பற்றியோ, அல்லது வேறு யாரையும் பற்றியோ புறம் பேசவில்லை. எனினும் அவர் வரும்போது பேசுவதை நிறுத்திக் கொண்டால் இது கூட அந்த மூன்றாவது நபருக்கு நாவினால் தொந்தரவு கொடுத்தது போலாகும். 2,கரம் – உங்களின் பக்கத்து வீட்டாரிடம் உங்கள் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டப் போவதாக நீங்கள் கூறும்போது அவர் பாய்.. என்றைக்கு கட்டப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள் என்பதுடன் அந்த நாளில் அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு அங்கே இருந்தால் என்ன அர்த்தம்.. உங்கள் மீது அவருக்கு முழு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். இதற்கு முன் உங்களால் ஏதேனும் அவருக்கு தொந்தரவு இருந்திருக்கலாம் என்று அர்த்தம். அதற்கு மாற்றமாகஅதைப் பற்றி பெரிதாக கவனம் எடுத்துக் கொள்ளாமல் பாய் எக்காரணத்தைக் கொண்டும் நம் இடத்தில் கை வைக்க மாட்டார். என்றெண்ணி நிம்மதியாக அவர் வேலையை அவர் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் மூலமாக அவருக்கு எந்த தொந்தரவும் இதற்கு முன் இருக்கவில்லை என்று அர்த்தம். 3,மறைவிடம் –  உங்களுக்கு தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு ஏதேனும் அவசியத்திற்காக நீங்கள் செல்லும்போது அவர் இல்லை. அவர் மனைவி இருக்கிறார். நீங்கள் உடனே திரும்பி விடுகிறீர்கள் இப்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப் படும்போது பாய் நான் இருக்கும்போது வந்திருந்தால் உங்களை நன்கு நான் உபசரித்து அனுப்பி இருப்பேனே நான் இல்லாத போது வந்து வந்து சென்றிருக்கிறீர்களே என்று கவலைப் பட்டால் உங்கள் மீது அவருக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று அர்த்தம். அதற்கு மாற்றமாக நீங்கள் வந்ததை கேள்விப்படும் போது பாய் வந்து போனாரா... இவர் எதற்காக நான் இல்லாத போது வந்தார்.. என்று ஒருவித நிம்மதியற்ற நிலைக்கு அவர் சென்றால் இது கூட ஒரு வகையில் உங்களுடைய மர்மஸ்தானம் மூலமாக அதாவது தவறான பார்வை போன்றவற்றின் மூலமாக அவருக்கு தொந்தரவு கொடுத்ததாக ஆகி விடும் என்று கூறப்பட்டுள்ளது

துன்பம் வரும்போது பள்ளிக்கு வருவது, மற்ற நேரங்களில் அல்லாஹ்வை மறப்பது இஸ்திகாமத் அல்ல

கஞ்சி வாங்க வருவதோடு அசர் தொழுவது, குடும்பத்தில் யாரேனும் இறந்தால் மட்டும் பள்ளிக்கு வருவது இஸ்திகாமத் அல்ல.

وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآَخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ (11)سورة الحج

எல்லா வகையிலும் இஸ்திகாமத் தை கடைபிடிப்பவர்களுக்கு அல்லாஹ் தரும் பரிசு

تَتَنَزَّل عَلَيْهِمْ الْمَلَائِكَة " (30)حم السجدة)قَالَ مُجَاهِد وَالسُّدِّيّ وَزَيْد بْن أَسْلَمَ وَابْنه يَعْنِي عِنْد الْمَوْت قَائِلِينَ " أَنْ لَا تَخَافُوا "قَالَ مُجَاهِد وَعِكْرِمَة وَزَيْد بْن أَسْلَمَ أَيْ مِمَّا تَقْدَمُونَ عَلَيْهِ مِنْ أَمْر الْآخِرَة " وَلَا تَحْزَنُوا" عَلَى مَا خَلَفْتُمُوهُ مِنْ أَمْر الدُّنْيَا مِنْ وَلَد وَأَهْل وَمَال أَوْ دَيْن فَإِنَّا نَخْلُفكُمْ فِيهِ " وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ "فَيُبَشِّرُونَهُمْ بِذَهَابِ الشَّرّ وَحُصُول الْخَيْر وَهَذَا كَمَا جَاءَ فِي حَدِيث الْبَرَاء رَضِيَ اللَّه عَنْهُ قَالَ " إِنَّ الْمَلَائِكَة تَقُول لِرُوحِ الْمُؤْمِن اُخْرُجِي أَيَّتهَا الرُّوح الطَّيِّبَة فِي الْجَسَد الطَّيِّب كُنْت تَعْمُرِينَهُ اُخْرُجِي إِلَى رَوْح وَرَيْحَان وَرَبّ غَيْر غَضْبَان" وَقِيلَ إِنَّ الْمَلَائِكَة تَتَنَزَّل عَلَيْهِمْ يَوْم خُرُوجهمْ مِنْ قُبُورهمْ (ابن كثير

பெரும்பாலும் மனிதர்கள் இந்த உலகத்தை விட்டு பிரியும்போது பயமும் இருக்கும், கவலையும் இருக்கும் பயம் என்பது தன்னுடைய மறுமை வாழ்வைப் பற்றி... தான் செய்த தவறுகளை அப்போது தான் நினைத்துப் பார்ப்பார். தனக்கு சுவனமா.. நரகமா.. என்ற பயம்.இருக்கும். கவலை என்பது இந்த உலகத்தைப் பற்றியது. அதாவது தனக்குப் பின் தன் குடும்பத்தின் நிலை என்னவாகும். இதை செய்யலாம். அதைச் செய்யலாம்.. என்றெல்லாம் எண்ணியிருந்தேனே.. ஆனால் இப்போது உயிர் பிரிந்து விடும் போலிருக்கிறதே.. என்ற கவலையும் இருக்கும். அப்போது எவரிடம் இஸ்திகாமத்இருந்ததோ அவரிடம் மலக்குகள் ஆறுதல் கூறுவார்கள். உன் குடும்பத்தைப் பற்றி கவலை வேண்டாம். அதற்கு நாங்கள் பொறுப்புதாரிகள். மறுமை பற்றிய கவலை வேண்டாம் உனக்கு சுவனத்தில் இருக்கை சீட் Conform உறுதியாகி விட்டதுஎன்று கூறுவர்

 

 

© 2019 All Rights Reserved.
http://ulama.in/