தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

ஃபித்ராவின் சட்டங்கள்& ரமழான் எனும் மதரஸாவில் நாம் பயின்ற பாடம்

               

بسم الله الرحمن الرحيم

 

ஃபித்ராவின் சட்டங்கள்& ரமழான் எனும் மதரஸாவில் நாம் பயின்ற பாடம்

RAMZAN-27         -        23-06-2017

 

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில்நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இப் பெருநாளை அரபியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஈத்துவக்கும் இன்பத்தை கடமையாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள். பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும் ; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக்  குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை  மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி. ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம். 

ஈகைத் திருநாள் தர்மமாகிய ஃபித்ராவைப் பற்றி...

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ .(بخاري)

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவுகோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்., நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.நபி ஸல் அவர்களின் காலத்தில் வழமையில் இருந்த ஸாஃ என்பதை நம்முடைய நாட்டின் கிலோ, கிராம் கணக்கோடு ஒப்பிடும்போது தான் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் தான் ஹனஃபீ, ஷாஃபீ வித்தியாசம் வருகிறது. ஹனஃபீ மத்ஹபில் பணமாகவும் கொடுக்கலாம். ஏனெனில் அதைப் பெற்றுக் கொள்ளும் ஏழைகள் தமக்குப் பிரியமான உணவை வாங்கிக்  கொள்ளலாம்.

ஃபித்ராவின் நோக்கம்- இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِىَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِىَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ.(ابوداود)

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

ஃபித்ராகொடுக்கும்நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.), நூல்: புகாரி 1503, 1509இந்த ஹதீஸ் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது

ஃபித்ராவை பெருநாள் வருவதற்கு முன்பும் கொடுக்கலாம். ரமழான் ஆரம்பிக்கும்போதே ஃபித்ராவுடைய காலம் ஆரம்பித்து விடுகிறது -

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَبِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنْ الطَّعَامِ....................ذَاكَ شَيْطَانٌ (بخاري

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ரமளான் ஜகாத்என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும். மேலும் ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

 

ஜகாத், ஃபித்ரா வேறுபாடு

ஜகாத் கடமையாகுவதற்கு அதற்குரிய நிஸாபை அடைந்திருக்க வேண்டும். ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரையும் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் ஃபித்ரா அப்படியல்ல. அன்றைய அவசியமான செலவுகள் போக கையிருப்பு வைத்திருப்பவர் தனக்காகவும், தன் குடும்ப நபர்களுக்காகவும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அன்று அதிகாலையில் பிறந்த குழந்தையையும் கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.

ரமழான் எனும் மதரஸாவில் நாம் பயின்ற பாடம்

நோன்பின் நோக்கம் இறையச்சம் ஏற்பட வேண்டும். அது தொடர வேண்டும் என்பது தான்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)البقرة

அமல்களில் சிறந்தது தொடர்படியாக செய்யப்படும் அமல்கள் தான்

عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها قَالَتْوَالَّذِي ذَهَبَ بِنَفْسِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَاتَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ وَهُوَ جَالِسٌ وَكَانَ أَحَبُّ الْأَعْمَالِ إِلَيْهِ الْعَمَلَ الصَّالِحَ الَّذِي يَدُومُ عَلَيْهِ الْعَبْدُ وَإِنْ كَانَ يَسِيرًا (ابن ماجة)

இந்த சீசன் தொழுகையாளிகள் சீசனில் மட்டுமே தொழுகிறார்கள். வியாபாரிகளுக்குக் கூட சீசன் இருக்கிறது. அவர்களுக்கு மற்ற நேரங்களில் சாதாரணமாக வியாபாரம் நடைபெறும். சீசன் நேரங்களில் அதிகமாக வியாபாரம் நடைபெறும்

ஆனால் இங்கே ஒரு கேள்வி  ஒரு வியாபாரி சீசன் நேரத்தில் மட்டுமே கடையை திறக்கிறார். மற்ற நேரங்களில் அவர் கடையை மூடியே வைத்திருக்கிறார். கடையை திறப்பதில்லை. இவருக்கு சீசன் வியாபாரம் கை கொடுக்குமா ?  நிச்சயமாக கை கொடுக்காது

மற்ற நேரங்களில் வியாபாரம் செய்து பழகியவர் சீசனிலும் வியாபாரம் செய்தால் அதிக பலனைப் பெறலாம்

அதேபோல ரமழான் அல்லாத நேரங்களிலும் வணங்கியவர், ரமழானிலும் வணங்கினால் அதிக நன்மைகளைப் பெறலாமே தவிர, ரமழானில் மட்டும் அதிகம் வணங்கி, ரமழான் முடிந்தவுடன் பள்ளியின் பக்கம் எட்டிப் பார்க்காதவர் நன்மைகளைப் பெற முடியாது

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري) باب الْقَصْدِ وَالْمُدَاوَمَةِ عَلَى الْعَمَلِ- كتاب الرقاق

ஒரு முதலாளியாக நாம் இருந்து கற்பனை செய்து பார்க்கிறோம் - நம்மிடம் ஒரு தொழிலாளி வேலை செய்கிறான் மாதத்தில் எல்லா வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக வர வேண்டும் என்று நாம் கட்டளையிட்டிருக்கும் நிலையில்,  ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அவன் வரா விட்டால் பொறுத்துக் கொள்வோம். ஆனால் அவன் வருவதே மாதத்தில் மூன்று நாட்கள் தான். அல்லது வாரத்தில் ஒரு நாள் தான் என்றால் நாம் அவனை என்ன செய்வோம். அவனை மிரட்டுவோம்  வாரத்தில் ஒரு நாள் வந்து கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்வதற்கு நீ என்ன பெரிய அதிகாரியா ?  ஒழுங்காக வேலைக்கு வரா விட்டால் நீ நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்வோம் அல்லவா?  சம்பளம் மட்டுமே கொடுக்கும் நமக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கும்போது நம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுடைய கட்டளை தினமும் ஐந்து வேளை என்றிருக்க, POINT  to POINT  மாதிரி ஜும்ஆ to ஜும்ஆ என்ற நிலையை அல்லாஹ் பொறுத்துக் கொள்வானா ?

ரமழானில் மட்டும் ஐவேளை தொழுது, ரமழான் முடிந்தவுடன் தொழுகையை விட்டு விடுபவர்களுக்கு உதாரணங்கள்

 

உதாரணம் 1- ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி,  இரவும், பகலும் விழித்திருந்து,  ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

உதாரணம் 2-ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும் அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப் பற்றி என்ன நினைப்போம்

 

உதாரணம்- 3-ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து,  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

 

உதாரணம்- 4-ஒருவர் நடந்து செல்லும் போது சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, தம்பி... பார்த்துப் போ ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே !  என்று எச்சரித்து அனுப்ப, அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

ஆக மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் அனைத்தும் ரமழானில் தொழுகையாளிகளாக இருந்து பின்பு ரமழான் முடிந்த பின்பு மஸ்ஜிதை மறந்து விடுபவர்களுடைய நிலையைப் போன்று தான்.

நபி ஸல் அவர்களின் காலத்தில் தொழ நேரமில்லை என்று கூறியவர்கள் முனாஃபிக்கீன்கள் மட்டும் தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)

தொழுகையை விட தொழிலை பெரிதாக கருதினால்...

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)سورة التوبة

© 2017 All Rights Reserved.
http://ulama.in/