தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

ரமழானும், குர்ஆனும்

ரமழானும், குர்ஆனும்

09-6-2017  ரமழான்-13

ரமழானுக்கும் குர்ஆனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு

أن رمضان شهر له خصوصية بالقرآن. قال الله تعالى: ((شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس و بينات من الهدى والفرقان(البقرة:185)

ஒருவேளை ரமழான் அல்லாத வேறு மாதத்தில் குர்ஆன் இறங்கியிருந்தால் அம்மாதம் சிறப்புக்குரியதாக குர்ஆனில் கூறப்பட்டிருக்கும்

وكان النبي صلى الله عليه و سلم يعرض القرآن في رمضان على جبريل عليه السلام، فكان يدارسه القرآن.

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (بخاري) فكونه يخص ليالي رمضان بمدارسته، دليل على أهمية قراءة القرآن في رمضان.يستحب الإكثار من تلاوة القرآن في رمضان ، فهو شهر القرآن

நோன்பு வைத்திருந்த நிலையிலும், குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த நிலையிலும் கொல்லப்பட்ட உஸ்மான் ரழி

عن محمد بن حاطب قال سمعت عليا عليه السلام يقول يعني { إن الذين سبقت لهم منا الحسنى } منهم عثمان رضي الله عنه .-عن عبد الله بن الزبير قال قلت لعثمان يوم الدار قاتلهم . فو الله لقد أحل الله لك قتالهم . فقال لا والله لا أقاتلهم أبدا . قال فدخلوا عليه فقتلوه وهو صائم

ஹஸன் ரழி அவர்களின் மகள் நஃபீஸா ரஹ் அவர்களுக்கு மரண நேரம் நெருங்கிய போது நோன்பு வைத்திருந்த அவர்களை நோன்பை விடச் சொல்லி அவரின் மக்கள் வற்புறுத்தினர். அதை மறுத்த அந்த அம்மையார் நான் நோன்பாளியாகவே மரணிக்க வேண்டுமென அல்லாஹ்விடம் 30 ஆண்டுகள் துஆ செய்து வருகிறேன். நானா இப்போது நோன்பைத் திறப்பேன் தபீபை (மருத்துவரை) அனுப்பி விடுங்கள் நான் ஹபீபை (அல்லாஹ்வை) சந்திக்க வேண்டும் என்று கூறி சூரா அன்ஆமை ஓத ஆரம்பித்தார்கள். கீழ்கானும் வசனத்தை ஓதிய நிலையில் அவர்களின் உயிர் பிரிந்தது                                                        لهم دار السلام عند ربهم

ரமழானில் அதிகமாக குர்ஆனை ஓதிய மற்ற சஹாபாக்கள் மற்றும் தாபியீன்கள்

وقد كان من هدي السلف رضوان الله عليهم ،الحرص على ختم القرآن في رمضان ، اقتداءً بالنبي صلى الله عليه وسلم -عن إبراهيم النخعي قال: كان الأسود يختم القرآن في رمضان في كل ليلتين ("السير(4/51) كان قتادة يختم القرآن في سبع  فإذا جاء رمضان ختم في كل ثلاث ، فإذا جاء العشر ختم في كل ليلة  "السير" (5/276) .وعن مجاهد أنه كان يختم القرآن في رمضان في كل ليلة ("التبيان" للنووي (ص/74).وعن مجاهد قال: كان علي الأزدي يختم القرآن في رمضان كل ليلة ("تهذيب الكمال) (2/983)وقال الربيع بن سليمان : كان الشافعي يختم القرآن في رمضان ستين ختمة ("السير" (10/36) . وقال القاسم ابن الحافظ ابن عساكر : كان أبي مواظباً على صلاة الجماعة وتلاوة القرآن ، يختم كل جمعة ، ويختم في رمضان كل يوم  ("السير" (20/562) ." فكان قتادة رحمه الله يختم القرآن في كل سبع ليال دائما ، وفي رمضان في كل ثلاث ، وفي العشر الأخير منه في كل ليلة .-عن عبد الله بن مسعود انه كان يختم القران في رمضان في ثلاث وفي غير رمضان من الجمعة إلى الجمعة

அல்குர்ஆன் மனிதஉள்ளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள்.நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை உருவிய வாளோடு படுகொலை செய்யவந்த உமர்  (ரழி) அவர்களை இஸ்லாத்தின், நபிவர்களின்பாதுகாவலராக மாற்றியபெருமை அல்குர்ஆனைச் சாரும். பக்தாதில்அன்று மிகவும் பேர் போன ஒரு வழிப்பறிக்கொள்ளைக்காரராக இருந்த புழைல்இப்னு இயாழ் என்பவர் ஹரம் ஷரீபுடைய இமாமாகமாறினார் என்றால், அதற்குக்காரணம் ஓர் அல்குர்ஆனிய வசனம்தான்.أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ (سورة الحديد16)

குர்ஆனை ஓதி அதன் கருத்துக்களை விளங்கி அதற்கு மாற்றமாக நடந்துகொள்பவர்களை அல்குர்ஆன் சபிக்கிறது.பலர் அல்குர்ஆனை ஓதுகிறார்கள். ஆனால், அது அவர்களை சபித்துக் (லஃனத்) கொண்டிருக்கிறது.என நபி ஸல் கூறினார்கள்அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.” (ஸூரதுல் ஹூத்: 18) அநியாயம் இழைத்த நிலையில் மேற்சொன்ன இந்த வசனத்தை ஓதும் ஒருவர், தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார்.பொய்யர்களுக்கு அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும்” (ஆலு இம்ரான்: 61) என்ற வசனத்தை ஓதும் ஒருவர் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளவில்லை யாயின், அவரும் தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார்.

ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்ற சிறப்பம்சம் குர்ஆனுக்கு மட்டும் தான் தரப்பட்டுள்ளது.

عن عَبْد اللَّهِ بْنَ مَسْعُودٍ رضي الله عنه قال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ (ترمذي) عَنْ أَبِي سَعِيدٍ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ مَنْ شَغَلَهُ الْقُرْآنُ وَذِكْرِي عَنْ مَسْأَلَتِي أَعْطَيْتُهُ أَفْضَلَ مَا أُعْطِي السَّائِلِينَ وَفَضْلُ كَلَامِ اللَّهِ عَلَى سَائِرِ الْكَلَامِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ (ترمذي)

பொருள்-ஒருவர் குர்ஆனை ஓதிக் கொண்டே இருக்கிறார். அதனை ஓதி ஓதி அதன்மீதுஈடுபாடு கொண்டிருக்கின்றமையினால் என்னிடம் கேட்பதற்கு, என்னிடம்முறையிடுவதற்கு அவருக்கு நேரமில்லை. தனது தேவைகளைக்கூட என்னிடம் கேட்கமுடியாத அளவுக்கு அவர் அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறார். அத்தகையோருக்கு, என்னிடம் கேட்பவர்களுக்கு கொடுப்பதைவிட நான் நிரப்பமாகக் கொடுப்பேன்.” (ஹதீஸுல் குத்ஸி)

குர்ஆனை அதிகம் ஓதுவதின் நன்மையைப் பற்றி மற்றொரு சம்பவம்

ஒரு தாத்தா எப்போதும் குர்ஆன் ஓதிக் கொண்டே இருப்பார். அவரிடம் ஒரு சிறுவன் என்ன தாத்தா எப்ப பாத்தாலும் இந்த புத்தகத்தையே கையில வச்சிக்கிட்டு இருக்கீங்களே எத்தனை வருஷமா இதை நீங்க இதை படிக்கிறீங்க அதற்கு தாத்தா சொன்னார் சுமார் 55 அல்லது 60 வருஷமா இதை நான் படிக்கிறேன். உடனே சிறுவன் கேட்டான் அப்படின்னா இந்த புத்தகம் இந்நேரம் உங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்குமே பிறகு ஏன் மீண்டும் மீண்டும் அத படிக்கிறீங்க என்றான் அதற்கு அந்த தாத்தா எந்த பதிலும் சொல்லாமல்  தம்பி... அதோ அந்த மூங்கில் கூடை இருக்குது அல்லவா அதுல தண்ணி பிடிச்சிட்டு வா.. தம்பி... என்றார்.. அந்த கூடை ஏற்கெனவே அடுப்புக்கரி வைக்கப்பட்டிருந்த கூடை அதிலே அதன் துகள்கள் அடியில் தேங்கியிருந்தது. தாத்தா இப்படிச் சொன்னதும் அவனுக்கு சிரிப்பு வந்தது. மூங்கில் கூடையிலே தண்ணி பிடிச்சா தண்ணி நிக்குமா கொஞ்ச நேரத்திலேயே முழுவதும் கீழே வழிந்து விடுமல்லவா.. என்று எண்ணினாலும் சரி தாத்தா சொன்னதற்காக தண்ணீர் பிடிப்போம் என்று பிடித்தான். அவருக்கு அருகில் கொண்டு வருவதற்குள் அனைத்தும் வழிந்து சிந்தி விட்டது. மறுபடியும் தாத்தா இன்னொரு தடவை தண்ணி பிடிச்சிட்டு வாப்பா.. என்றார். தாத்தா... இதுல தண்ணி பிடிச்சா நிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்றான் சிறுவன். எனக்காக இன்னொரு தடவை பிடிச்சிட்டு வா என்றார் தாத்தா.  வேண்டா வெறுப்போடு போய் தண்ணீர் பிடித்தான் முன்பு போலவே அவரிடம் கொண்டு வருவதற்குள் அனைத்தும் வழிந்து சிந்தி விட்டது.  எனக்காக இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் தண்ணி பிடிச்சிட்டு வா என்றார் தாத்தா... அந்த சிறுவனோ இந்த ஒரு தடவை மட்டும் இதை செய்து விட்டு இந்த இடத்தை விட்டும் ஓடியே போய் விட வேண்டும் என்றெண்ணி மூன்றாவது தடவையும் தண்ணீர் பிடித்தான். தாத்தாவிடம் கொண்டு வருவதற்குள் அனைத்தும் வழிந்து சிந்தி விட்டது. ஏன் இப்படி வீணான வேலை செய்யச் சொல்கிறீர்கள் என்றான் சிறுவன்.  இப்போது தாத்தா சொன்னார் தம்பி நீ கேட்ட கேள்விக்கு இது தான் பதில்... நீஎத்தனை தடவை தண்ணி பிடிச்சாலும் இந்தக் கூடை நிரம்பப் போவதில்லை. இருந்தாலும் அந்தக் கூடையைப் பார். ஒவ்வொரு தடவை நீ தண்ணீர் பிடிக்கும்போதும் அந்தக் கூடை எந்த அளவுக்கு சுத்தமாகி விட்டது என்று பார்.. அதேபோல் குர்ஆனை எத்தனை தடவை ஓதினாலும் அதன் விளக்கங்களை முழுவதுமாக விளங்க முடியாது ஆனாலும் ஒவ்வொரு முறை ஓதும்போதும் நம் உள்ளம் சுத்தமாகும் என்றார்..

 

குர்ஆன் ஓதியதால் ஏற்பட்ட வெளிச்சம்

உஸைத் இப்னு ஹூளைர் (ரலி) அறிவித்துள்ளார்கள்- நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) அல்பகராஎனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப்பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாகமிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை அமைதியாகிவிட்டது.பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதைநிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரைமிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப்பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்றுஅஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித்தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள்வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.காலை நேரமானதுபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் இப்னுஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)” என்று கேட்டார்கள். நான், என் மகன்யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே!அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப்பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோதுஅங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோதுஅதைக் காணவில்லைஎன்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘அது என்னவென்று நீஅறிவாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை (தெரியாது)என்று சொன்னேன்.நபி (ஸல்) அவர்கள் உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் தாம்அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப்பார்த்திருப்பார்கள். மக்களை விட்டும் அது மறைந்திருக்காதுஎன்றுகூறினார்கள்.புஹாரி:5018

குர்ஆனை அடிக்கடி ஓத முடியவில்லையே என்ற கவலையில் உயிர் துறந்த சஹாபி

காலித் இப்னு வலீத் ரழி அவர்கள் மாபெரும் படைத்தளபதி ஆவார். அவரின் கடைசி தருணத்தில் குர்ஆனை தம்மிடம் கொண்டு வரச் சொன்னார்கள். அவ்வாறே குர்ஆன் கொண்டு வரப்பட்டது. அதைப் பார்த்து ஏங்கியவாறு உன்னை அதிகம் வாசிக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டு விட்டதே.. அதிகமாக யுத்தங்களில் கலந்து கொண்டதால் உனக்காக நேரம் ஒதுக்க முடியாமல் போய் விட்டதே.. என்று அழுது, அழுது அந்த ஏக்கத்திலேயே அவர்களின் உயிர் பிரிந்தது

பெரும்பாலும்  குர்ஆனின் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடைபெற்ற ஆச்சரியங்கள்

எகிப்தைச் சார்ந்த அஷ்-ஷைகு முஹம்மது ஹஸ்ஸான் அவர்கள் கூறுகிறார்கள்- எனக்கு ஒரு ஆர்வம் அதாவது கோமா நிலையில் உள்ள ஒருவருக்கு அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் ஏதாவது தெரியுமா.. தெரியாதா என்று அறிந்து கொள்ள ஆசை.. இதைப் பற்றி விசாரிப்பதாக இருந்தால் கோமா நிலையில் இருந்து மீண்ட ஒருவரிடம் மட்டுமே விசாரிக்க முடியும். அத்தகையவர்களைப் பற்றி நான் ஆய்வு மேற்கொண்ட போது எனக்கு ஒரு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமைப் பற்றி தகவல் கிடைத்தது. அவர் கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளார் என்ற தகவல் கிடைத்து அவரைப் பார்க்க நான் சென்றேன். அவரிடம் நலம் விசாரித்த பின் அவரிடம் நான் கேட்டேன் நீங்கள் கோமாவில் இருந்த போது உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் ஏதேனும் உங்களுக்கு தெரிந்ததா..  என்று கேட்க அவர் இல்லை. என்னைச் சுற்றி நடந்த எதுவும் எனக்குதெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயம் எனக்கு அருகில் இருந்து கொண்டு யாராவது குர்ஆன் ஓதினால் அது மட்டும் எனக்கு கேட்கும் என்று கூறினார். சுப்ஹானல்லாஹ்...

மற்றொரு சம்பவம் மார்க்கப் பற்றுள்ள ஒரு முதியவர். அவருக்கு முக்கியமான ஆபரேஷன் நடைபெறவுள்ளது. அவர் அழுகிறார். அவரிடம் ஏன் அழுகிறீர்கள் மவ்த்தாகி விடுவோம் என்ற பயமா... என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை. அது பற்றி எனக்கு துளியும் பயம் இல்லை. அல்லாஹ்வைத் தானே நான் சந்திக்கப் போகிறேன். அதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்று கூறி விட்டு, எனக்கு எவ்வளவு நேரம் ஆபரேஷன் நடைபெறும். என்று கேட்டார். 5 அல்லது 6 மணி நேரம் ஆகலாம் என்று கூறப்பட்டது. அதற்கு அவர் அவ்வளவு நேரம் என்னால் குர்ஆன் ஓத முடியாமல் போய் விடுமே என்று அழுகிறேன். எனக்கு ஒரு அனுமதி கொடுங்கள் ஆபரேஷன் நடைபெறும் முன்பு ஒரு மணி நேரம் நான் குர்ஆன் ஓதிக் கொள்கிறேன் என்று வேண்டினார். அவ்வாறே அனுமதி தரப்பட்டது. அதன்பின் மயக்க மருந்து செலுத்தி ஆபரேஷன் நடந்தது. என்ன ஆச்சரியம்.. அந்த ஆபரேஷன் செய்த டாக்டர் கூறுகிறார்.. நான் என் வாழ்நாளில் எத்தனையோ ஆபரேஷன் செய்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு ஆச்சரியதை நான் கண்டதில்லை. இவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்ட இந்த 6 மணி நேரத்தில் ஒரு வினாடி கூட அவருடைய நாவு குர்ஆனை உச்சரிக்காமல் இருக்கவில்லை. சுப்ஹானல்லாஹ்..

முடிவுரை- நோன்பின் நோக்கம்தக்வாவைவளர்ப்பதாகும். அல்குர்ஆனின் நோக்கம் அத்தகைய தக்வாஉள்ள மனிதர்களுக்கு நேர்வழியைக் கொடுப்பதாகும்.எனவே, ரமழானில் தக்வாவைப் பெற்று அந்த தக்வாவுடன் அல்குர்ஆனின்நேர்வழியைப் (ஹிதாயத்) பெறக் கூடியவர்களாக நோன்பாளிகள் மாறுகின்றபோதுதான்இந்த ரமழான் அர்த்தமுள்ள ரமழானாக இருக்கும். வெறுமனே பசித்திருந்து, தாகித்திருப்பதில் எவ்வித பயனும் கிடையாது.

 

அல்குர்ஆனை அணுகும் முறையில்சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا (4).அல்குர்ஆனைதிருத்தமாக ஓதினால்தான் சிந்தனையோடு ஓதலாம். உணர்வுப்பூர்வமாக, நிதானமாகஓதினால் அதன் அர்த்தத்தை உள்வாங்க முடியும். வெறுமனே குர் ஆனை அவசர அவசரமாக ஓதுவதனால் இத்தகையதாக்கத்தை எதிர்பார்க்க முடியாது.அல்குர்ஆனை திருத்தமாக ஓதுவது மாத்திரமல்ல, ராகமாகவும் அழகிய தொனியிலும் ஓத வேண்டும்.عن ابن عباس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : زَيِّنُوا أَصْوَاتَكُمْ بِالْقُرْآنِ(حاكم)عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَأْذَنْ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِلنَّبِيِّ أَنْ يَتَغَنَّى بِالْقُرْآنِ(بخاريகுர்ஆனை அணுகுகின்றபோது ஒவ்வாரு வசனத்தையும் அதன் கருத்தை, அதன் பொருளை விளங்க வேண்டும்.أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا (24)سورة محمد

விளக்கமின்றிச்செய்கின்ற இபாதத்களிலும் தெளிவில்லாத அறிவிலும் ஆய்வில்லாமல், சிந்தனையில்லாமல் ஓதுகின்ற அல்குர்ஆனிலும் எவ்வித பயனுமில்லை.என அலி (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்.தர்ஜுமானுல் குர்ஆன் எனவர்ணிக்கப்பட்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்கூறும்போதுZILZAL மற்றும் அல்காரிஆ ஆகிய இரு சிறிய ஸூராக்களின் கருத்தை விளங்கி, புரிந்துஓதுவது ஸூரத்துல் பகராவையும் ஸூரா ஆலுஇம்ரான் ஆகிய நீண்ட இரு ஸூராக்களைஓதுவதையும் விட எனக்கு விருப்பத்திற்குரியதாகும்.எனச் சொல்கிறார்கள்.

அல்குர்ஆனை அழுதழுது ஓதுங்கள்.அழுகை வரா விட்டால் அழுகையைவரவழைத்து ஒதுங்கள். அல்லது வலிந்து கண்ணீர் எடுத்து ஓதுங்கள். அல்லதுஅழுவது போன்று பாசாங்கு செய்யுங்கள்.அல்குர்ஆனை ஓதுகின்றபோது கண் அழவில்லையாயினும் அவனுடைய உள்ளமாவது அழட்டும்என்று சொன்னார்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்.குர்ஆனை ஓதும்போது அழுகையை வரவழைப்பது எப்படி என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறும் விளக்கம்அல்குர்ஆன்ஓதுகின்றபோது அழுகை வர வேண்டுமாயின் குர்ஆன் விடுக்கும் எச்சரிக்கைமற்றும் வாக்குறுதிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அல்லாஹ்சுவனவாசிகளுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள், நரகவாதிகளுக்குவிடுத்திருக் கும் எச்சரிக்கைகள் என்பவற்றைப் பார்த்து நான் அல்லாஹ்வுடையஏவல்களில் எந்தளவு பொடுபோக்காக இருக்கின்றேன், அல்லாஹ் தடுத்தவற்றை எந்தளவுசெய்து கொண்டிருக்கிறேன்? முதலான வினாக்களை எழுப்பி அல்குர் ஆனை பாராயணம்செய்கின்றபோது நிச்சயமாக கண்கள் கண்ணீர் சிந்தும். அந்த நிலையிலும்அவருக்கு கண்ணீர் வரவில்லையாயின் அவர், எனது உள்ளம் இறுகிப் போயிருக்கிறதே!அல்லாஹ்வின் கலாமை ஓதுகின்றபோதுகூட எனக்கு உணர்வு வரவில்லையே! நரகத்தின்வேதனை பற்றி செவிமடுக்கின்றபோதுகூட எனக்கு நடுக்கம் வரவில்லையே! என்றுஆதங்கப்பட்டு அதற்காக கண்ணீர் வடிக்கட்டும்.இக்ரிமா (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் ஓதுவதற்காக அல்குர்ஆனைத் திறந்தால் அல்குர்ஆனை அவரதுமுகத்தில் வைத்து அழுதவாறு இது எனது இரட்சகனின் வார்த்தை, இது எனதுஇரட்சகனின் வார்த்தை எனக் கூறியவராக மயக்கமடைந்து விழுந்து விடுவார்கள்.

நபித் தோழர்கள் அல்குர்ஆனுடன் எத்தகைய உறவைக் கொண்டிருந்தார்கள்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் விவரிக்கிறார்கள்.நபித் தோழர்களாகிய நாம், முதலில் பத்து வசனங்களைஓதுவோம். பின்னர் அப் பத்து வசனங்களையும் விளங்குவோம். அவை எமது வாழ்வில்எதனை எதிர்பார்க்கின்றன என்பதைப் பார்த்து அவ் விடயங்களை எமது வாழ்வில்கடைப் பிடிப்போம். அதன் பிறகுதான் அல்குர்ஆடைய ஏனைய வசனங்களைக் கற்றுக்கொள்வோம்.யுத்த களத்தில் படைத் தளபதியின் கட்டளை வரும் வரைகாத்திருக்கின்ற படைச் சிப்பாய் எப்படி தயார் நிலையில் இருப்பாரோ அவ்வாறேஸஹா பாக்கள் அல்குர்ஆனைக் கற்று  நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருந்தார்கள். ஓர்  அல்குர்ஆன் வசனம் இறங்கி விட்டால் அடுத்த கணப்பொழுதே அதனைஅமுல்படுத்தினார்கள். மதுபானம் தடைசெய்யப்பட்ட வசனம் இறங்கியபோது மதுப்பீப்பாய்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார்கள். மதுபானம் பாதையில் ஆறாகஓடியது.ஹிஜாப் பற்றிய வசனம் இறங்கியபோது ஸஹாபா பெண்மணிகள் மறுகணமேதாம் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தலையையும் மார்பகங்களையும் மறைத்துக்கொண்டார்கள்.இவ்வாறுதான் ஸஹாபாக்கள் அல்குர்ஆனை அணுகினார்கள்.

உள்ளங்களிலும், இல்லங்களிலும் அமைதி நிலவ குர்ஆனை அடிக்கடி ஓத வேண்டும்

عن أَبُي أُمَامَة الْبَاهِلِيّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ وَتَرْكَهَا حَسْرَةٌ وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ (مسلم) البطلة : السحرة

விளக்கம்-குர்ஆன் ஓதப்படும் வீடுகளில் மலக்குகள் நுழைகிறார்கள்.அங்கிருந்து ஷைத்தான் வெளியேறி விடுகிறான் குடும்பத்தின் பரகத்விசாலப்படுத்தப்படுகிறது நலவுகள் அதிகரிக்கின்றன. அல்குர்ஆன் ஓதப்படாதவீடுகளில் ஷைத்தான்கள் நுழைந்து விடுகின்றன. அங்கிருந்து மலக்குகள்வெளியேறி, குடும்பம் நெருக்கடிக்கு உட்படுத்தப்படுகிறது. அங்குநலவுகள் குறைவடைகின்றன.நபி ஸல் கூறும்போது எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் சொற்ப வசனங்கள் கூட மனனம் இல்லையோஅவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும்என்றார்கள் (திர்மிதி- பாழடைந்தவீட்டில் ஜின்களும் ஷைத்தான்களுமே குடிகொண்டிருக்கும். அங்கு குழப்பமும்குழறுபடியும்தான் தாண்டவமாடும். அங்கு அமைதியும் நிம்மதியும் இருக்காது.குர்ஆன் ஓதப்படாத வீடு வெளித் தோற்றத்தில் அழகான, வசதியான, வளமான வீடாகஇருக்கலாம். ஆனால்பிரச்சினைகள், இன்னல்கள், கவலைகள், துன்பங்கள், சர்ச்சைகள், குழப்பங்களால் அந்த வீடு நிம்மதியை இழந்துவிடும்.  அல்குர்ஆனுடன் எவ்வித உறவுமில்லாதவரிடம் நிறைய பணமிருக்கிறது உயர் ரகவாகனம் இருக்கிறது நல்ல வருமானமும் இருக்கிறது. ஆனால், அந்த வீட்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.

பிரிட்டானிய கலைக் களஞ்சியம் அல்குர்ஆனுடன் தொடர்பான இரு பெரும் உண்மைகளைப் பதிவு செய்திருக்கிறது.01. உலகில் அதிகமானோர் வாசிக்கும் நூல் குர்ஆன்02. பெருந்தொகையாக மக்கள் மனனமிடுகின்ற ஒரு நூல் குர்ஆன்.எனவே, குர்ஆனை ஓதுவது கஷ்டம் என்று எவரும் வாதிட முடியாது.ஏழு வயது குழந்தைகள்கூட குர்ஆனை மனனமிட்டிருக்கிறார்கள்.எண்பது வயது மூதாட்டிகூட அல்குர்ஆனை மனனம்செய்து முடித்திருக்கிறார்.

 

 

 

© 2017 All Rights Reserved.
http://ulama.in/